நிர்க்கதியான குழந்தைகள்

முதலில் பரிதாபமான குழந்தைகள் பற்றிய ஒரு செய்தி:

மனைவி அடித்து கொலை: கணவன் கைது

மேடவாக்கம் : 14-10-2009. செய்தி: தினமலர்

பெரும்பாக்கத்தில், குடும்பத் தகராறு காரணமாக, மனைவியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.

பெரும்பாக்கம், கலைஞர் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வம்(38) கொத்தனார். இவரின் மனைவி ஜோதி(35). இவர்களுக்கு ஸ்ரீதர்(12), சீதாராமன் (9) மற்றும் ஸ்ரீராம்(5) ஆகிய மகன்கள் உள்ளனர். செல்வத்திற்கு குடி பழக்கம் உண்டு. வேலை பார்த்து சம்பாதிக்கும் பணத்தை குடித்து செலவழிப்பதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுப் பத்திரத்தைக் கேட்டு மனைவியிடம் செல்வம் தகராறு செய்தார். பத்திரத்தை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த செல்வம், அருகில் இருந்த கட்டையால் ஜோதியின் தலையில் பலமாக தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே ஜோதி இறந்தார். இதையடுத்து, செல்வம் தலைமறைவானர்.

தகவலறிந்த போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், செல்வம் கொலை செய்தது தெரியவந்ததும், அவரை பெரும் பாக்கம் ஏரியின் அருகே சுற்றி வளைத்துப் பிடித்து, விசாரணை நடத்தினர். இதில், ஜோதியை கட்டையால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, செல்வம் கைது செய்யப் பட்டு, கோர்ட் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்க்கதியான குழந்தைகள்:

தாய் கொலை செய்யப்பட்டார்; தந்தை சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்ற நிலையில் குழந்தைகள் மூவரும் ஆதரவற்றவர்களாகிவிட்டனர். நேற்று முன் தினம் முதல் அவர்கள் சாப்பாட்டிற்கு வழியின்றி தவித்தனர். இரக்கப்பட்ட போலீசார் கடந்த இரண்டு நாட்களாக அவர்களுக்கு உணவு வழங்கினர். தற்காலிகமாக அவர்களின் உறவினரான தாயம்மாள் என்பவரிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
======================

உங்கள் சிந்தனைக்கு:

வசதி படித்த பெண்கள் தங்கள் கணவர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கு எந்தெந்த முறைகளில் சட்டமியற்றலாம் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கும் தேசிய பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. கிரிஜா வியாஸ் அவர்கள் சிறிதளவேனும் உணமையிலேயே எப்போதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஏழைப் பெண்களின் நலனைக் கவனித்தால் என்ன?

"கணவனை அடி" என்னும் தாரக மந்திரத்தை மணமான பெண்களுக்கு போதித்து வரும் தமிழக பெண்கள் நல வாரியத் தலைவர் திருமதி. ராமாத்தாள் அவர்கள் அடிமட்டத்திலிருக்கும் ஏழைப் பெண்கள் குடிகார புருஷனிடம் தினம் அடி வாங்கி நிற்கும் நிலையை மாற்ற அந்த ஆண்களுக்கு de-addiction மற்றும் அறிவுரைகளை வழங்கி அந்தப் பெண்களுக்கு உதவினால் என்ன?
ஆனால் ஒரு பிரச்னை. இது போன்ற இயக்கங்களுக்குத் தெரிந்ததெல்லாம் கைது, வழக்கு, வக்கீல், ஃபீஸ், ஜீவனாம்சம், சிறை வாசம் - இவைதானே!

ஆனால் இதுபோன்ற ஏழைகள் கையில் பணமும் இருக்காதே, என்ன செய்வது?

அதனால்தான் இவர்கள் யாரும் இந்த அடிமட்ட பெண்களைப் பற்றி கவலைப் படுவதில்லை! எந்தச் சட்டமும் இவர்களுக்கு உதவுவதும் இல்லை.

சரி, மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே! அதெப்படி? அவர் தற்போது கையிலெடுத்திருக்கும் சமுதாயத்தின் அதி முக்கியப் பிரச்னையான, 'ஆண்மைக் குறைவு' (அதாவது விறைப்புக் குறைவு மற்றும் 'துரித ஸ்கலிதம்') உள்ள ஆண்களை திருமணம் செய்து கொடுத்து இளம் பெண்களை வஞ்சிக்கும் அவலத்தை எதிர்த்து ஓலமிட்டுக் கொண்டிருக்கிறாரே! ஏதோ நம் தமிழ்ப் பெண்கள் திருமணம் செய்து கொள்வதே கலவி சுகத்திற்கு மட்டுமே என்பது போலவும், அவர்கள்தம் வாழ்வில் வேறு சிந்தனையோ குறிக்கோளோ இன்றி செக்ஸ் திருப்தியை மட்டுமே முக்கியமாகக் கொண்டு அலைவது போலவும் தோற்றமளிக்கும்படியாக பேட்டி கொடுத்துக்கொண்டு, நம் சமூகத்தின் குடும்ப வாழ்க்கை முறையையே கொச்சைப் படுத்தும் பேச்சுக்களை நிறுத்தி விட்டு, இது போன்ற ஆதரவற்ற சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உதவ அவர் முன் வந்தால் என்ன? ஆனால் அதில் ஒரே ஒரு பிரச்னை, பெண்கள், செக்ஸ், ஆண்மைக் குறைவு போன்ற கோஷங்கள் பெற்றுத்தரும் விளம்பரம் அதுபோல் உண்மையாக குழந்தைகளுக்கு உதவி செய்வதில் கிட்டாது!
=============

ஒரு கொசுறு செய்தி:

தமிழகத்தில் தீபாவளி அன்று, 150 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை செய்ய, "டாஸ்மாக்" நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 10 நாள் விற்பனை செய்யக்கூடிய வகையில், சரக்கு இருப்பு வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. தமிழகத்தில் 7,432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு, மதுபானங்கள் அதிகம் விற்கப்படும் திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட் டங்களுக்கு, வழக்கமான சரக்கு சப்ளையை விட, இரு மடங்கு சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. (தினமலர்)

3 மறுமொழிகள்:

Anonymous said...

/மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே/

actress is fit to talk about sex & you shouldn't expect them to talk about a subject different to their profession

')) said...

சமீபத்தில் வந்த திரைப்படத்தில் வந்த செய்தி "கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்தது, சாரயக்கடைகளை (ஒயின் ஷாப்) தனியார் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு அடகு வைத்துவிட்டு சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது."

இதற்குப் பெயர் தான் நல்லாட்சி! அப்படியிருக்கும்போது தவறான சட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்று தெரிந்தாலும் எப்படி நடவடிக்கை எடுத்து சட்டத்தைத் திருத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? சாராயமானாலும் சரி, 498A கேசானாலும் சரி யாரோ ஒருவரின் குடி தானே கெடுகிறது. அரசு கஜானா சாராய வியாபாரத்திலும், பொய் 498A கேசுகளில் வரும் ஜாமின் பணத்திலும் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அடுத்தவர் குடும்பத்தை அழித்து வாழும் கூட்டம் இருக்கும் வரை அப்பாவிகள் தினம் தினம் சாகவேண்டியது தான்.

')) said...

இது அப்பட்ட மான உண்மை.... பணபலம் ஆள்பலம் மிகுந்த வே---க்கூட்டத்துக்குத்தான் இந்த சட்டம் எல்லாம்... என்னுடைய கற்புக்கரசியின் புகாருக்கு (நான் தொலைபேசியல் திட்டிவிட்டென் என்பது புகாராம்) என்னை தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரனை செய்துகொண்டிருக்கும் பொழுது... ஒரு சகோதரிஅழுது முகம் வீங்கி கண்ணத்தில் அடித்த காயம் 4ன்கு வயது குழந்தையை துக்கிக்கொண்டு ஆய்வாளர் முன் அழுதுகொண்டு கணவன் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார் என்று அழுதுகொண்டெ கூறினார்... என்னை புலன் விசாரணை செய்வதில் குறியாய் இருந்த ஆய்வாளர் அவரை "நீ வெளிய போய் உட்காரும்மா" என்று ஒரு ஒரு மகளிர்(??) காவலர் வெளியே விரட்டி விடதாகுறையாக அவரை வெளியே உட்கார வைத்தார்... (இது கதையல்ல நிஜம்)...

இதுபோல் பல அப்பாவிப்பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் நம் நாட்டில் இதுபோல் பெண்களை பாதுகாக்க நாட்டில் ஒரு "நாதியும்" இல்லை ஆனால் பசையுல்ல பச்சை களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யவும் காசு புடுங்கி துதிபாடிவும் சில கறுப்பு பச்சை மஞ்சல் சிவப்பு போன்ற ஆடுகள் மனித உருவில் சுத்தி திருகின்றது..