Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

இடியாப்பச் சிக்கல்

ராஜபாளையம், அக்.23- 2009

ராஜபாளையம் அருகே முகவூர் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மாடசாமி (வயது22). இவரும் சங்கரன் கோவில் தாலுகா பந்தல்குடி கிராமத்தை சேர்ந்த கடல்கனியும்(20) காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடல்கனிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆனாலும் கடல்கனிக்கும், மாடசாமிக்கும் இடையே தொடர்பு இருந்தது.

பின்னர் சில ஆண்டுகளில் கடல்கனி தனது கணவரை பிரிந்து விட்டார். இதன்பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாடசாமியை திருமணம் செய்து கொண்டார்.

அப்போது கடல்கனி கர்ப்பமாக இருந்ததாக தெரிகிறது. மாடசாமியும், கடல்கனியும் தனிக்குடித் தனமாக வசித்து வந்தனர். இந்தநிலையில் கடல்கனிக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தான் தந்தை இல்லை என மாடசாமி கருதினார்.

இதனால் கடல்கனியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிரிந்துவிட முடிவு செய்தார். ஆனால் கடல்கனி மாடசாமிக்கு தான் குழந்தை பிறந்தது என கூறினார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மாடசாமி முகவூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அங்கு அவருக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி மேற்கொண்டனர்.

இந்த திருமணம் அவருக்கு நேற்று நடப்பதாக இருந்தது. இதையறிந்த கடல்கனி முகவூருக்கு தனது கைக்குழந்தையுடன் வந்தார். பின்னர் கணவர் மாடசாமி 2-வது திருமணம் செய்தால் கைக்குழந்தையுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கடல்கனியை தளவாய்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவதும்!

ஆகா! இதுவல்லவோ, தெய்வீகக் காதல்!

காதலனிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, பெற்றோருடன் சென்ற பெண். சென்னையில் ருசிகர சம்பவம்

ராயபுரம், அக். 3- 2009 - தினத்தந்தி

"எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை'' என்று கூறிய பெண், காதலன் கட்டிய தாலியை அவரிடமே கழற்றி கொடுத்துவிட்டு, பெற்றோருடன் சென்று விட்டாள்.
சென்னையில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் திலகா(வயது22), ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேவூபார்த்து வந்தார். தொலை தூர கல்வி மூலமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் படித்து வந்தார்.

திலகா வேலை பார்த்த கம்பெனியில், வியாசர்பாடியை சேர்ந்த ஹாரி டிசல்வா (25) என்ற வாலிபரும் வேலை பார்த்தார். அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் பற்றி, திலகாவின் தந்தை சிதம்பரத்துக்கு தெரிய வந்தது. அவர் தனது மகளை கண்டித்தார்.

தாலி கட்டினார்

கடந்த 29-ந் தேதி வேலைக்கு சென்ற திலகா, வீடு திரும்ப வில்லை. அவர், தனது காதலனோடு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார். அங்கு திலகா கழுத்தில் ஹாரி டிசல்வா தாலி கட்டினார். பின்னர் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள்.
இதற்கிடையில் சிதம்பரம் தனது மகளை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கோரி, தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சவரிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

தாலியை கழற்றி விட்டேன்

நேற்று திடீர் என்று திலகா, தண்டையார் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

"நானும் ஹாரி டிசில்வாவும் காதலித்தது உண்மை. அவர் எனக்கு தாலி கட்டினார். ஆனால் எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை.

எனக்கு காதல் பிடிக்க வில்லை. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் தவறு செய்து விட்டேன். எனவே, ஹாரி டிசில்வா கட்டிய தாலியை கழற்றி அவரிடமே கொடுத்து விட்டேன். இனி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.''

இவ்வாறு திலகா கூறினார்.

பின்னர் திலகாவை, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

பசை இருந்தால்தானே காதல் ஒட்டும்!

அயனாவரம் : காதலுக்கு, "குட்பை' சொல்லியும், ஏற்க மறுத்து தகராறு செய்த காதலனை போலீசார் ஈவ்-டீசிங் வழக்கில் கைது செய்தனர். (செய்தி: தினமலர் - 2009 ஆகஸ்டு 25)

சென்னை ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த டேரிக் யூட்டஸ் மகன் லியாநாத் யூட்டஸ்(27); ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்தவர் எட்வர்டின் மகள் ஷெரீல்(26). கடந்த ஓராண்டாக இருவரும் காலித்தனர். லியாநாத் சம்பாதிக்கும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், பாதி பணம் காதலிக்கு செலவழித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் லியாநாத் வேலை இழந்தார். இதையறிந்த ஷெரீல், வீட்டை அண்ணா நகருக்கு மாற்றிவிட்டார். அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று காதலை ஏற்கும்படி லியாநாத் கூறினார்.

இதற்கிடையே, அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உறவினர் வீட்டிற்கு வந்த ஷெரீலை, லியாநாத், நடுரோட்டில் கையை பிடித்து இழுத்தார். இதனால், காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டது. ஷெரீல் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் எட்வர்டு, ஈவ்-டீசிங் வழக்கில் லியாநாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தார்.

--------------- ------------------

சுத்த விவரம் புரியாத ஆளய்யா, இவரு! இன்னொரு இலவச ஏ.டி.எம் மெஷினைத் தேடிப் போயிருப்பாள்(ர்) அந்தக் காதல் இளவரசி என்பது அறியாமல் பழைய டயலாகையெல்லாம் நம்பிப் போய் கையைப் பிடித்திருக்கிறார். சட்டம் தெரியாதவங்க!!

விட்டில் பூச்சிகள் பிழைப்பது எங்கே!!

பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!

அனைத்து பென்ணியவாதிகளும், "பெண்களே, கற்பு, பண்பாடு, பாரம்பரியம், நன்னடத்தை என்ற சிறைகளில் உங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவைகளை உடைத்துக் கொண்டு புறப்படுங்கள் புவியாள!" என்று ஓயாமல் முழக்கமிடுவதின் பலனாகத் தோன்றும் மனப் பிறழ்வு, பலவித சமூகக் கேடுகளுக்குக் காரணியாக அமைகின்றது. அவை கட்டிய புருஷனையும், அவனது பெற்றோரையும் மட்டும்தான் பாதிக்கும் என்று இதுகாறும் அந்தப் பெண்ணியவாதிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அத்தகைய கட்டுப்பாடில்லா மனவெழுச்சி மனப்பான்மை அப்பெண்ணின் பெற்றோர் மீதும் பாயும் என்பதை நாள் தோறும் பல இளம் பெண்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-


"எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார் 17 வயதுப் பெண்.

மதுரை, ஜுலை.24- 2007 (தினத்தந்தி)

பெற்றோருக்கு தெரியாமல் காதலருடன் 17 வயது இளம்பெண்ணுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் 18 வயது வரை அந்த பெண்ணை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருச்சி, லால்குடியை அடுத்த சிறுகாலப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

என் மகள் பவளராணிக்கு தற்போது 17 வயது நடந்து வருகிறது. நான் விவசாய வேலை பார்த்து வருகிறேன். எங்கள் ஊரைச்சேர்ந்த லாலா முத்துச்சாமி என்பவரது மகன் கமலேஷ். நான் கடந்த 23.6.2009 அன்று வேலை காரணமாக வெளினிர் சென்று விட்டேன். அப்போது என் மகளை கமலேஷ் கடத்தி சென்று விட்டார்.

இதற்கு அவரது தந்தையும், உறவினர் அப்பாத்துரை என்பவரும் உதவி செய்துள்ளனர். என் மகளுடன் கமலேஷ் சென்னையில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்தேன். இதுகுறித்து நான் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

- இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பெற்றோருடன் செல்ல மறுப்பு

இந்த மனுவை விசாரித்து கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் பவளராணியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்பாக அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லால்குடி போலீசார் பவளராணியை நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். கடத்தப்பட்டது குறித்து அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் "என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. என் விருப்பத்தின்பேரில் நான் காதலிக்கும் ஒரு வாலிபருடன் எனக்கு நாளை (இன்று) திருமணம் நடக்க உள்ளது. அதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து கோர்ட்டில் இருந்த அந்த பெண்ணின் பெற்றோருடன் இந்த பிரச்சினை குறித்து பேசும்படி நீதிபதிகள் கூறியபோது, "எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார்.

கண்ணீருடன் சென்றார்

பவளராணிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை அந்த பெண்ணை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த 2 மாத காலத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களோ, அந்த வாலிபர் தரப்பில் இருந்தோ யாரும் காப்பகத்தில் அவரை சந்திக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அந்த பெண்ணின் பெற்றோர் வேதனை அடைந்து கண்ணீருடன் அந்த பெண்ணிடம் அவர்களது கோபத்தினை வெளிப்படுத்தினர். அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

கண்டவனோடு ஓடுவதற்கு வழி காட்டிய நல்லாசிரியை

கணவர்களுடன் வாழப்பிடிக்காததால் ஆசிரியை-மாணவி தப்பி ஓட்டம். சென்னை சென்று வேறு நபர்களை திருமணம் செய்தது அம்பலம்

அந்தியூர், ஜுலை.9- 2009. செய்தி: தினத்தந்தி

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளைகளுடன் வாழப்பிடிக்காததால், அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவி, சென்னைக்குச் சென்று தங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்து கொண்ட விவரம் அவர்களை போலீசார் மீட்டபோது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மருப்பூரான். லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 27). படிப்பை பாதியில் விட்டவர்களுக்காக அந்தியூர் அருகே நகலூர் முனியப்பன்பாளையத்தில் செயல்படும் அன்னை இந்திரா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இதுபோல் அந்தியூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி கவிதா (17). இவரும் அதே இந்திரா பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். இதனால் ஆசிரியை சரஸ்வதியும், மாணவி கவிதாவும் தோழிகள்போல் பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-5-09 அன்று பள்ளிக்கூடம் சென்ற சரஸ்வதியும், கவிதாவும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் 2 பெண்களின் வீட்டாரும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சரஸ்வதியைக் காணவில்லை என்று அவரது கணவர் மருப்பூரான் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாணவி கவிதாவைக் காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உத்தரவின் பேரில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலும், பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஆசிரியை சரஸ்வதியையும், கவிதாவையும் தேடி வந்தார்கள்.

இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சரஸ்வதி சென்னையிலும், கவிதா திருவாரூரிலும் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்கள்.

"மிஸ்டுகாலால்'' வந்த பழக்கம்

இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தீவிர விசாரணை நடத்தினார்.

சரஸ்வதிக்கும், மருப்பூரானுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு அவரது செல்போனில் ஒரு "மிஸ்டுகால்" வந்தது. சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அந்த மிஸ்டு காலில் பேசியிருக்கிறார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகிக்கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதல்மொழி பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.

கணவனை பிடிக்கவில்லை

இதுபோல் மாணவி கவிதாவும் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர். இதை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலனிடம் இருந்து கவிதாவை பிரித்து வந்து முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அவர்களும் தங்களுக்குள் பிரியம் இல்லாமல் இருந்தனர்.
இதுபற்றி சரஸ்வதியும், கவிதாவும் அடிக்கடி பேசி வந்தனர்.

இதில் தங்களுக்கு பிடிக்காத கணவர்களுடன் ஏன் வாழவேண்டும் என்று அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அப்போது சரஸ்வதி, தனக்கு சென்னையில் பாலாஜி என்ற காதலர் இருக்கிறார், நாம் இருவரும் சென்னை செல்வோம். நான், பாலாஜியை திருமணம் செய்துகொள்கிறேன். உனக்கும் பாலாஜி மூலமாக வேறு ஒரு நல்ல பிடித்தமான வாலிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறேன் என்று கவிதாவிடம் கூறினார்.

இதை கவிதாவும் ஏற்றுக்கொண்டார். அதன்படி கடந்த 23-5-09 அன்று வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்வதாக இருவரும் அவரவர்கள் வீட்டில் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் சென்னைக்கு சென்றனர். அங்கு சென்றதும் கவிதாவை சரஸ்வதி, தனது காதலன் பாலாஜிக்கு அறி முகப்படுத்திவைத்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி சரஸ்வதியும், பாலாஜியும் திருமணம் செய்து கொண்டார்கள். பாலாஜி, திருவாரூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கவிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களும் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேற்கண்ட விவரங்களை சரஸ்வதியும், கவிதாவும் போலீசாரிடம் தெரிவித்தர்கள்.

இதன்பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து அவர்களையும் வரவழைத்து பேசினார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியையும், கவிதாவையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

மாணவி கவிதாவை தனது நண்பர் பாலாஜி மூலம் திருமணம் செய்த வாலிபர் பிரபாகரன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். (கற்பே இல்லாத கேசு இது. “கற்பழிப்பு எங்கேயிருந்து வந்தது! இருந்தால் தானே அழிக்க முடியும்!) அவரை நேற்று மாலையில் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

--------------

பார்த்தீர்களா கொடுமையை!

1. மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டால் உடனே அவன் கைது செய்யப்படுவான். ஆனால் மனைவி “கணவனைப் பிடிக்கவில்லை” என்று சொல்லி இன்னொருவனை இழுத்துக்கொண்டு போகலம். அவள் கைது செய்யப்படமட்டாள்

2. அந்தப் பெண் இன்னொருவனோடு ஓடிவிட்டாள். ஆனால் கைது செய்வது அந்த ஆணைத்தான். அதுவும் “கற்பழிப்பாம்”! கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கண்டவனோடு ஓடியவளுக்கு “கற்பு” எங்கிருந்து வந்தது? அதை எப்படி ஒருவன் “அழித்தானாம்”!

விந்தையான சட்டங்கள், நடைமுறைகள்!

மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு முழுமையாக நடந்து முடிந்து விட்டது!

ஆகையால் ஆண்களே, திருமணம் என்னும் பாம்புப் புற்றில் கை வைக்காதீர்கள்!

பெண்ணைக் கண்டிக்கலாகுமோ!

ஒரே நாளில் (ஜூலை 6, 2009) மூன்று தற்கொலைச் செய்திகள். மூவரும் இளம் பெண்கள். காரணம், பெற்றோர் கண்டித்தது.

இதுபோன்ற பெண்கள் திருமணமானபின் கணவனோ கண்வனின் பெற்றோரோ கண்டித்தால் இதைத் தவிர வேறு என்ன செய்வார்கள்!

ஆனால் ஒரு வித்தியாசம். மணமானபின் அவள் தற்கொலை செய்துகொண்டால் கணவனையும் அவனது பெற்றோரையும் கைது செய்து உள்ளெ தள்ளிவிடுவார்கள். இதற்கென்றே தனிச் சட்டங்கள் இருக்கின்றன!

இப்போது செய்திகள். நன்றி - தினத்தந்தி
-------------------------

1.
டி.வி.பார்ப்பதை தாய் கண்டித்ததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை. ஆவடி, ஜுலை.6- 2009

ஆவடியை அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் தேவன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு கவுசல்யா (வயது 16) மற்றும் நந்தினி (13) என்று 2 மகள்கள் உள்ளனர். கவுசல்யா ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நந்தினி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1-ந் தேதி மாலை இருவரும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு சென்றனர்.

கவுசல்யா சீருடையை கழற்றாமல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை கவுசல்யாவின் தாய் கண்டித்தார். தாய் கண்டித்ததால் வருத்தம் அடைந்த கவுசல்யா அறைக்குள் சென்று விட்டார். வெகு நேரமாக கவுசல்யா வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்த போது கவுசல்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா நேற்று காலை மரணம் அடைந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
=======================
2.
சேத்தியாத்தோப்பு அருகேஇளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை. தாய் கண்டித்ததால் மனமுடைந்தார்

சேத்தியாத்தோப்பு, ஜுலை.6- 2009

சேத்தியாத்தோப்பு அருகே தாய் கண்டித்த தால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் சேத் தியாத்தோப்பு அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குண சேகரன்.இவரது மகள் குண பாரதி (வயது 25).இவர் சிதம் பரத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் குணபாரதி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சகஜமாக சிரித்து பேசிவந்ததாக தெரிகிறது.இதை பார்த்த அவரது தாய் ராஜகுமாரி, திருமண வயதாகும் நீ இப்படி எல்லோரிடம் சிரித்து பேசாதே என்று குண பாரதியை கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த குணபாரதி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணா மலைநகர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நேற்று முன்தினம் குண பாரதிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது பற்றி ராஜகுமாரி ஒரத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
==============
3.

வேலகவுண்டம்பட்டி அருகே மாணவி தூக்கு போட்டு தற்கொலை. தந்தை கண்டித்ததால்

பரமத்திவேலூர்,ஜுலை.6- 2009

வேலகவுண்டம்பட்டி அருகே டியூசனுக்கு போகவில்லையே என மகளை கண்டித்ததால் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செட்டிப்பாளையம் புள்ளக்கவுண்டம் பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம்(வயது 50). இவரது மனைவி நல்லம்மாள்(38). இவர்களது மகள் மனிஷா(வயது 14). இவள் மாணிக்கம் பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் சம்பவத் தன்று மனிஷா பள்ளிக்கு சென்று டினிசனுக்கு செல்லாமல் வீட்டிற்கு வந்து விட்டதாக தெரிகிறது. இதைதொடர்ந்து அவளது தந்தை மகாலிங்கம் தனது மகளை டினிசனுக்கு செல்லாததை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவி மனிஷா மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவள் தனது துப்பட்டாவால் கழுத்தில் சுருக்கு போட்டு கொண்டு வீட்டில் இருந்த மின்விசிறியில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிகிறது.
மாணவியின் தாய் நல்லம்மாள் கூலிவேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் தனது கணவர் மகாலிங்கத்திடம் மகள் எங்கே? என கேட்டுள்ளார். மகள் வீட்டிற்குள் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து நல்லம்மாள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தனது மகள் மின்விசிறியில் தூக்கு போட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை பார்த்து அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு மாணவியின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தூக்கில் தொங்கி கொண்டு இருந்த மனிஷாவை துப்பட்டாவை அறுத்து உடனடியாக அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டாள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக செத்தாள்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிஸ்டு கால் விளையாட்டு!

3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?

செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்

சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி

3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.

கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.

சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.

மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.

`மிஸ்டுகால்' விட்ட உமா

மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.

வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

”பெண்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள். வன்முறை என்றால் அதை ஆண்தான் செய்வான். அதனால் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்கள்தான் குற்றவாளிகள். கணவனுக்கு எதிராக மனைவி தொடுக்கும் புகார் ஒன்றே போதும், வேறு சாட்சியங்கள் தேவையில்லை.” - இதுதான் இந்திய சட்டங்களின் மற்றும் அளிக்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படைக் கருத்தாக்கம்.

இந்தச் செய்தியை வாசித்து விட்டு அனைத்து பெண்களும் எவ்வளவு மென்மையானவர்கள்; அன்பே உருவானவர்கள், அவர்கள் எவ்வித வன்முறையையும் செய்யவே முனைய மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:-
-----------------

பத்தனம்திட்டை,ஜுன்.24- 2009 . செய்தி - தினத்தந்தி

பச்சிளம் குழந்தைக்கு வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.

தாய்மையின் பெருமையை பறைசாற்றுவதற்காக `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று சொல்வது உண்டு. ஆனால் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் சுமையாக நினைக்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.

அன்னையின் அரவணைப்பு இருக்க, எந்தவித அச்சமுமின்றி துள்ளி விளையாடிய ஒரு பச்சிளம் குழந்தைக்கு, பெற்ற தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பத்தனம்திட்டை மாவட்டம் பீருமேடு அருகே உள்ள ராஜமுடி காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி பாக்கியம் (வயது34). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

4-வதாக பிறந்த கார்த்திகா என்ற பெண் குழந்தைக்கு தற்போது 11/2 வயது ஆகிறது. படுசுட்டியான இந்தக்குழந்தை, நேற்று முன் தினம் இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாயில் இருந்து திடீரென நுரை- நுரையாக வெளிவந்தது.
இதனால் பாக்கியம் கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக் காரர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்களின் துணையுடன் தனது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பீருமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம் தான் தனது குழந்தைக்கு பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, நாடக மாடியது தெரியவந்தது.

இதையடுத்து பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப வறுமை மற்றும் பெண் குழந்தை என்ற காரண த்தால் இந்த கொலைக்கு துணிந்ததாகவும், நாயை கொல்வதற்காக பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை வாழைப்பழத்தில் கலந்து குழந்தைக்கு கொடுத்து கொன்றதாகவும், பாக்கியம் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.

தந்தையர் தினப் போராட்டம்

குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் தேவை என்னும் உரிமையைப் பெறப் போராடும் அமைப்பான Children's Rights Initiative For Shared Parenting (CRISP) என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா பெற்றோர்களின் கூட்டமைப்பு வரும் ஜூன் 20, 2009 அன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தர்னா ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தந்தையர்கள் பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே கூடி குழந்தைகளின் வாழ்வில் தந்தையருக்கு இருக்கும் முக்கிய பங்கு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மணமுறிவுகள் பெருகிவரும் இன்னாளில் குழந்தைகளின் காப்புரிமையை நிதிமன்றங்கள் மனைவியின் கையில் மட்டுமே அளிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தந்தையின் பாசமும் அன்பும் அரவணைப்பும் கிட்டுவதேயில்லை. அனைத்து தந்தைமார்களுக்கும் தங்கள் குழந்தைகளின் மேல் பாசமேயில்லாதது போல் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான, பயங்கரமான மற்றும் முட்டாள்தனமான கருத்தாக்கம் இன்று சமுதாயத்தில் பல பென்ணியவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநலம் தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தலும் அதில் அவர்களுக்கு அக்கரையுமில்லை. தகப்பனிடமிருந்து குழந்தையைப் பிரித்து வைப்பதை ஏதோ ஒரு போரில் வெற்றி வாகை சூடியது போன்ற களிப்பில் போதை கொண்டு, தஙகள் ஈகோவை திருப்தி செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டமும், நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு தந்தை, தாய் இருவரின் அன்பும் அரவணைப்பும் பங்களிப்பும் தேவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது பற்றிய விரிவான செய்தி இங்கே.

பாவம் இந்தப் பெண்

நம் பாரம்பரிய மரபுகள் மீதும், நன்னடத்தை, பெற்றோர் மீது மதிப்பு போன்ற சிறப்பியல்புகள் மீதும் தற்காலப் பெண்களை நம்பிக்கை இழக்க வைத்து, மனம் போன போக்கில் வாழ்வதுதான் பெண்கள் முன்னேற்றம் என்று பெண்ணியவாதிகளும் ஊடகங்களும் ஓயாமல் செய்யும் மூளைச் சலவையால் நிகழ்ந்துள்ள அவலங்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட பெண்கள் அநேகம்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்கள். சென்னை விமான பணிப்பெண் கொலையில் மர்மம் நீடிக்கிறது. காதலன்-தோழிகளிடம் விசாரிக்க முடிவு

சென்னை, மே.26- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னையில் நடந்த விமான பணிப்பெண் கொலை வழக்கில் கொலையாளி யார்? என்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவரது காதலன் மற்றும் தோழிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை ஜெ.ஜெ.நகர் கோல்டன் ஜார்ஜ் நகரில் வசித்த விமான பணிப்பெண் நிதின்குமாரி பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது பிணம் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? என்பது இன்னும் கண்டுபிடிக்க முடியாத மர்மமாக உள்ளது.

இந்த கொலை வழக்கில் துப்பு துலக்க தனி போலீஸ் படை அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ரவிக்குமார், துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் ஸ்ரீதர்பாபு மற்றும் இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் தனி போலீஸ் படையினர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

விமான பணிப்பெண் நிதின்குமாரி கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதியாக நம்பும் வகையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. நிதின்குமாரியின் பிணம் தலைகுப்புற கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடந்துள்ளது. பிணத்தை மறைக்கும் வகையில் 2 சூட்கேஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.
நிதின்குமாரி தற்கொலை செய்திருந்தால் அவரது பிணம் கட்டிலுக்கும், சுவருக்கும் இடையே கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் பிணத்தை சூட்கேஸ்களை வைத்து மறைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

எனவே, பிணம் கிடந்த நிலையை வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று னிகிக்கமுடிகிறது. அவரை கொலை செய்து பிணத்தை கட்டிலுக்கு அடியில் போட்டு சூட்கேஸ் பெட்டிகளால் கொலையாளி மறைத்துள்ளான். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும்.

பிரேத பரிசோதனையை டாக்டர் அன்புசெல்வம் நடத்தியுள்ளார். விமான பணிப் பெண்ணின் உடலில் பெரிய அளவில் காயங்கள் இல்லை. அவரது கழுத்து எழும்பும் முறியவில்லை. எனவே கழுத்தை நெறித்தோ, கொடூரமாக தாக்கியோ அவரை கொன்றதற்கான தடயங்கள் பிரேத பரிசோதனையில் கிடைக்கவில்லை.

நிதின்குமாரி இறந்து 76 மணி நேரம் கழித்துத்தான் பிணம் எடுக்கப்பட்டுள்ளது. பிணம் மிகவும் அழுகிவிட்டதால் மேலோட்டமாக உடலில் இருந்த தடயங்கள் மூலம் அவரது இறப்பு எப்படி நடந்தது என்று டாக்டரால் உறுதி செய்ய முடியவில்லை. நிதின்குமாரியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதியான முடிவுக்கு வரமுடியும். தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

கொலையாளி யாராக இருக்கலாம் என்று விசாரிக்கும்போது ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளது. நிதின்குமாரியின் தனிப்பட்ட லேப்-டாப் கம்ப்னிட்டர் கருவி, அவரது 2 செல்போன்கள் போன்றவற்றை தீவிரமாக ஆய்வு செய்துள்ளோம். லேப்-டாப்பில் உள்ள படங்களில் நிதின்குமாரி குறிப்பிட்ட ஆண் ஒருவரோடு நெருக்கமாக உள்ள படங்கள் உள்ளன.

அந்த ஆண் யார்? என்று விசாரித்தபோது அவர் நிதின்குமாரியின் காதலர் என்று தெரிய வந்துள்ளது. காதலர் பெயர் ராஜாத்சிங் என்று தெரிய வந்துள்ளது. அவரும் நிதின்குமாரியின் சொந்த ஊரான பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ராஜாத்சிங் மும்பையில் `லிபர்ட்டி ஆயில் மில்' என்ற பெயரில் மிகப்பெரிய ஆயில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் பெரும் பணக்காரர் என்றும் தெரிய வந்துள்ளது. விமானத்தில் செல்லும்போது நிதின்குமாரியோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்துள்ளனர்.

ராஜாத்சிங் கடந்த 10 மாதத்துக்கு முன்பு சென்னை வந்து நிதின்குமாரியோடு ஒரு வாரம் தங்கியிருந்து சென்றுள்ளார். ராஜாத்சிங்கை காதலிப்பதற்கு நிதின்குமாரியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருக்கும் ராஜாத்சிங்கை சென்னை வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல, நிதின்குமாரியோடு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றும் அவரது தோழிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

நிதின்குமாரி வசித்த வாடகை வீட்டின் உரிமையாளர் பாஸ்கர் ராவையும் தீவிரமாக விசாரித்துள்ளோம். அவர் தனது வீட்டுக்கு கீழே மருந்து குடோன் வைத்துள்ளார். அங்கு நிறையபேர் பணிபுரிகிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடந்துள்ளது.
நிதின்குமாரி பயந்த சுபாவம் உள்ளவர். `எனக்கு தனியாக படுக்க பயமாக உள்ளது என்றும், நள்ளிரவில் யாரோ கதவை தட்டுகிறார்கள்' என்றும் வீட்டுக்காரர் பாஸ்கர் ராவிடம் நிதின்குமாரி கூறியுள்ளார்.

பல நாள் இரவில் பாஸ்கர் ராவ் வீட்டிலும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவரது வீட்டிலும் நிதின்குமாரி தூங்கியுள்ளார். அந்த பகுதியில் உள்ள சந்தேக நபர்கள் நிறையபேரை பிடித்து விசாரித்துவிட்டோம். நிதின்குமாரி பெரும்பாலும் பகலில் வீட்டில் இருப்பதில்லை. இரவில்தான் வீட்டுக்கு வருவார். வெளியிலும் அதிகமாக நடமாடமாட்டார். பெரும்பாலும் சாப்பாட்டை ஓட்டலிலேயே முடித்துவிடுவாராம். வீட்டில் நூடுல்ஸ் மட்டுமே சமைத்து சாப்பிடுவார் என்று சொல்லப்படுகிறது.

நிதின்குமாரியின் உடல் உறுப்புகளை ஆராய்ந்தபோது அவர் ஆண்களோடு செக்ஸ் உறவு வைத்ததற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் அவர் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் உடலில் இல்லை.

அவரது கர்ப்ப பையும் ஆராயப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்யும் பெரும் பணக்காரர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம். அந்த வகையில் யாருடனாவது நிதின்குமாரிக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி அவரது தோழிகளிடம் விசாரிக்க உள்ளோம்.

நிதின்குமாரி புகைப்பிடிக்கும் பழக்கமுடையவர். அவ்வப்போது மதுவும் அருந்துவார் என்று சொல்லப்படுகிறது. தவறான பழக்கவழக்கங்களால் அவருக்கு தவறான நபர்களோடு தொடர்பு இருந்ததா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நிதின்குமாரி மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நிதின்குமாரியின் தந்தை விஜயபிரசாத், தாயார் உஷா, தங்கை நிஸ்தா மற்றும் உறவினர்கள் சிலர் பீகாரிலிருந்து நேற்று சென்னை வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நிதின்குமாரி, ராஜாத்சிங்கை காதலித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

நிதின்குமாரியின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். நேற்று மாலையில் பிணம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் நிதின்குமாரியின் பிணம் தகனம் செய்யப்பட்டது.

எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிதின்குமாரியின் பெற்றோர் தங்கியுள்ளனர். நிதின்குமாரியின் தந்தை சொந்த ஊரில் சிறிய கடை நடத்தி வருவதாகவும், பெரிய அளவில் வசதி படைத்தவர் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. நிதின்குமாரி பி.ஏ. பட்டப்படிப்பு படித்துள்ளார். அழகாக இருந்ததால் அவருக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிப்பெண் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலை தற்காலிக வேலை என்றும் தெரிய வந்துள்ளது

தவறான கருத்தாக்கம்

அனைத்துப் பெண்களுமே மெனமையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள் என்றும், அனைத்து ஆண்களும் கிரிமினல்கள், வன்முறையாளர்கள் என்னும் நேர்கோட்டு அனுமானத்தில் குடும்பச் சட்டங்கள் இயற்றப்பட்டு, நீதிபதிகளும் இத்தகைய தவாறான கருத்தியலின் அடிப்படையிலேயே தீர்ப்புகளை வழங்குகிறார்கள். இரு பாலரிடையே பாகுபடுத்தி ஒரு தலைச் சார்பு மனப்பான்மையில் இவை செயல்படுவதால் தற்போது குடும்ப வாழ்வு முறையே ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

”கடனை திருப்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற பெண் கைது மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் சொந்த மகளையும் கொன்ற வெறிச்செயல் அம்பலம்”

கொல்லம், மே.5- 2009. செய்தி: தினத்தந்தி

கடனை திரும்பிக் கேட்ட பெண்ணின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த பக்கத்துவீட்டைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் அவர் தனது சொந்த மகளையும் கொலை செய்திருந்த சம்பவம் விசாரணையில் அம்பலமானது.

கொல்லம் குழியம் செருமூடு பகுதியைச் சேர்ந்தவர் சிவன் குட்டி. இவருடைய மனைவி பிந்து (வயது35). இவரும் இதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா என்பவரின் மகள் அனுபமா (9) என்பவரும் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். அவர்களின் பிணங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், கொலை செய்யப் பட்ட சிறுமி அனுபமாவின் தாய் ஸ்ரீஜா (33) தான் 2 கொலைகளையும் செய்து உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:-

பிந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் ஸ்ரீஜா ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடன் தொகையை பலமுறை திருப்பிக்கேட்டும் ஸ்ரீஜா கொடுக்க வில்லையாம். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஸ்ரீஜா, பிந்துவின் கழுத்தில் சுரிதார் ஷால் மூலம் இறுக்கினார். அப்போது அவர் பலத்த சத்தம் போடவே, ஸ்ரீஜா அங்கிருந்த கத்தியை எடுத்து பிந்துவை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதையடுத்து ஸ்ரீஜா, ரத்தக்கரையை கழுவுவதற்காக அங்கிருந்த குளத்திற்கு சென்றார். இந்த நேரத்தில் அவரது மகள் அனுபமாவும் தனது தாயை பார்த்து அவருடன் சென்றாள். இதற்கிடையில் பிந்து கொலை செய்யப்பட்ட செய்தி பரவி ஊர் மக்கள் பெருந்திரளமாக ஓடி வந்தனர். அவர்களின் பார்வையில் சிக்காமல் இருக்க ஸ்ரீஜா அந்தக்குளத்தின் மதில் சுவரின் பின்னால் ஒளிந்தார். அப்போது அனுபமா தனது தாயிடம் சத்தமாக பேசினார். அவளது சத்தம்கேட்டு பொதுமக்கள் தன்னை பிடித்து விடுவார்கள் என்று பயந்த ஸ்ரீஜா தனது மகளை அந்தக்குளத்தில் தள்ளினார். இதில் அந்தச்சிறுமி நீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து ஸ்ரீஜா அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீஜாவை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தைகள் ஜாக்கிறதை!

இதுநாள்வரை கணவன்மார்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள் மட்டும்தான் கண்ணியமற்ற இளம் பெண்களின் கைகளில் சிக்கி, பொய் வழக்குகளில் மாட்டி விடப்பட்டு சீழிந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தப் பிரச்னை தற்போது இந்த சாராருடன் நிற்காமல் அடுத்த பரிமாணம் எடுத்துவிட்டது!

”ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து” தற்போது இந்தப் பெண்கள் தங்களுடைய தந்தையர்கள் மேலும் பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யத் துணிந்து விட்டனர். இதற்கு செய்தித் தாள்களும், ஊடகங்களும், பெண்ணியவாதிகளும் துணை போகின்றனர்.

முந்தைய பதிவு ஒன்றில் தன்னுடைய ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்ததால் பெற்றோரைப் படுகொலை செய்த இளம் பெண்ணைப் பற்றிப் படித்தோம். இப்போது ஒருபடி மேலே போய், தான் கேட்டபோது பணம் கொடுக்க மறுத்தாலோ, அல்லது தன் உடன்பிறந்த சகோதரனுக்கு ஏதாவது உதவி செய்தாலோ, அல்லது தான் யாரையோ இழுத்துக் கொண்டு ஓடுவதற்கு மறுப்பு சொன்னாலோ, உடனே, “என் தந்தை என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பல ஆண்டுகள் என்னை அடைத்து வைத்து வன்புணர்ந்தான்” என்று வாய் கூசாமல் பொய் புகார் ஜோடிப்பதில் இந்தப் பெண்கள் இறங்கியிருக்கிறார்கள். உடனே பெண்ணியவாதிகள் “ஓ”வென்று காது கிழியக் கூச்சலிடுவார்கள். ஊடகங்கள் அந்தப் பெண்ணின் “கண்ணீர்க் கதையை” மீண்டும் மீண்டும் வெளியிட்டு மேலும் பல பெண்கள் இத்தகைய அட்வென்சரில் இறங்க ஊக்குவிக்கும்.

ஆகையால் பெண்ணைப் பெற்றவர்களே, ஜாக்கிறதை!

இதோ, இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

தாராபுரம், ஏப்.18- கொடைக்கானலில் சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி, தாராபுரம் போலீசில் சரணடைந்தார். "என்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து சாமியார் அசோகிஜியுடன் இருக்கிறேன்.'' என்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் புளியமரத்து செட் என்னும் இடத்தில் ஷீரடி சாய்பாபாவுக்கு ஒரு கோவில் கட்டி, அதன் அருகில் ஆசிரமம் வைத்து நடத்தி வருபவர் அசோக்ஜி. இவர் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் மந்திரம் மூலம் விபூதி வரவழைத்து ஜோதிடம் சொல்லி வந்தார். இந்தநிலையில், கொடைக்கானல் ஏரிச்சாலையில் பெட்டிக்கடை நடத்தி வரும் செல்வம் என்பவர் அசோக்ஜியின் சீடர் ஆனார். இளம்பெண் மாயம் அதனால் செல்வம் வீட்டுக்கு சாமியார் அசோக்ஜி அடிக்கடி வருவது வழக்கம். அப்போது, கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வரும் செல்வத்தின் மகள் ராகசுதா (வயது 19)வுடன் அசோக்ஜிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்,

``என் மகள் ராகசுதாவை சாமியார் அசோக்ஜி கடத்திச் சென்று விட்டார். என் மகளை கண்டுபிடித்து தர வேண்டும்'' என்று செல்வம் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். தனிப்படை போலீசார், தலைமறைவான அசோக்ஜி, மாணவி ராகசுதா இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், மாணவி ராகசுதா நேற்று முன்தினம் காலையில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். மாஜிஸ்திரேட்டு சந்திரனிடம் (பொறுப்பு) கோர்ட்டில் சரணடைவதாக கூறி மனு கொடுத்தார். மனுவை பெற்ற மாஜிஸ்திரேட்டு சந்திரன் (பொறுப்பு), இந்த சரண்டர் மனுவில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்த நகல் இணைக்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளதா, இல்லையா என்றும் தெரியவில்லை. எனவே இளம்பெண் ராகசுதாவின் சரண்டரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவி ராகசுதா, வக்கீல் சேகர் மூலம் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மறைமலை முன் சரணடைந்தார். "என் தந்தையால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால், எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை யாரும் கடத்தவில்லை. என் தந்தையின் தொந்தரவை தாங்க முடியாமல் தான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன்'' என்று, போலீஸ் துணை சூப்பிரண்டிடம் கூறினார்.

"இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கொடைக்கானல் போலீசில் உள்ளதாலும், கொடைக்கானல் சரக போலீஸ்தான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்பதாலும் நாங்கள் பாதுகாப்பு வழங்கமுடியாது'' என்று தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தெரிவித்தார்.

பின்னர் ராகசுதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் குடும்பத்துக்கும் அசோக்ஜிக்கும் கடந்த 16 வருடமாக பழக்கம் உண்டு. இதன் காரணமாக அவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். அதுபோன்று நாங்களும் அடிக்கடி அவரது வீட்டுக்கு செல்வோம்.

என் தந்தை, "பெண் பிள்ளைகள் படிக்கக் கூடாது; ஆண் பிள்ளைகள்தான் படிக்க வேண்டும்'' என்ற கொள்கை உடையவர். இதன் காரணமாக என்னை 10-ம் வகுப்புக்கு மேல் படிக்கக் கூடாது என்று கூறினார்.

இந்த நிலையில், அசோக்ஜி பலருக்கு உதவி செய்து வந்தார். அதனால் எனது படிப்புக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டேன். அதனால் அவர் என்னை படிக்க வைத்தார்.

நான் 12-ம் வகுப்பு முடித்த பின்பு பி.சி.ஏ. படிக்க விரும்பினேன். எனது விருப்பத்தை தந்தையிடம் கூறினேன். அவர் `நீ படிக்கவே கூடாது' என்று சொல்லி என்னை துன்புறுத்தினார்.

படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், நான் அசோக்ஜியிடம் சென்று என்னை பி.சி.ஏ. படிக்க வைக்குமாறு கூறினேன். அவரும் நான் பி.சி.ஏ. படிக்க அனைத்து உதவிகளும் செய்தார். தற்போது நான் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன்.

எனது படிப்புக்கு அசோக்ஜி உதவி செய்து வருவதும், நான் படித்து வருவதும் என் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் நான் படித்து வரும் கல்லூரிக்கு வந்து, மாணவிகள் முன் என்னை அடித்து உதைத்தார். இது எனக்கு பெரிய அவமானமாக இருந்தது.

வீட்டுக்கு சென்ற நான் பெற்றோரிடம் இருக்க பிடிக்காமல், வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன். என்னை அசோக்ஜி கடத்தி சென்று திருமணம் செய்துவிட்டதாக என் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். என்னை அசோக்ஜி கடத்தவும் இல்லை; திருமணம் செய்யவும் இல்லை. வீட்டில் என் தந்தை என்னை கொடுமை படுத்தியதால்தான் நான் வீட்டைவிட்டு வெளியே வந்து இருக்கிறேன்.

இனிமேல் நான் எனது வீட்டுக்கு செல்ல மாட்டேன். ஏதாவது ஒரு காப்பகத்தில் தங்கியிருந்து பி.சி.ஏ. படிப்பை முடித்து விட்டு, பின்னர் ஐ.ஏ.எஸ். படிக்க உள்ளேன். இவ்வாறு இளம்பெண் ராகசுதா கூறினார்.

இந்தநிலையில், தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த கொடைக்கானல் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரனிடம், மாணவி ராகசுதாவை கொடைக்கானல் அழைத்து செல்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் கூறியதாவது:-

"ராகசுதா மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வில்லை. எனவே நாங்கள் அவரை கொடைக்கானல் அழைத்து செல்லவில்லை. அவர் தாராபுரம் போலீசில் சரண் அடைந்துள்ளார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. ராகசுதாவை கடத்தி சென்ற சாமியார் அசோக்ஜி இங்கு வந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இங்கு வந்தோம். ஆனால் சாமியார் இங்கு இல்லை என்பதால் நாங்கள் அவரை தீவிரமாக தேடி வருகிறோம். இவ்வாறு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கூறினார்.

இளம்பெண் ராகசுதா, தாராபுரத்தில் உள்ள வக்கீல் மூலம் கொடைக்கானல் வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

சொன்னபடி கேளு!

சென்னையை அடுத்த பாடி சீனிவாச நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவருடைய மனைவி கோமதி (வயது 49) இவர்களுக்கு ராஜகுமாரி (19) என்ற மகளும், பெருமாள் (12) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோமதியின் தந்தை உடல் நலம் இல்லாமல் இறந்தார். அவருடைய தாய் மட்டும் திருமுல்லைவாயலில் தனியாக இருக்கிறார். திருமுல்லைவாயலில் தனியாக இருக்கும் தாயை பார்க்கவும், ஆறுதல் கூறவும் கோமதி கணவனை அழைத்தார். அவர், ``தேர்தல் வேலை தொடங்கி விட்டதால் பாதுகாப்பு வேலை உள்ளது. ஆகவே விடுமுறை தரமாட்டார்கள். தேர்தல் முடியட்டும் பார்க்கலாம்'' என்று கூறினார்.

இதனால் கோமதி சம்பவத்தன்று கணவனிடம் சண்டை போட்டார். அதற்கு ஆறுமுகம், ”எனக்கும் பாசம் உள்ளது, ஆனால் எங்கள் வேலை அப்படி'' என்று மனைவியிடம் கூறி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கோமதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

-----------------

புருஷனோ, பிள்ளைகளோ எப்படிப் போனால் என்ன, நான் சொன்னது நடக்கணும். இந்த மனப்பான்மையைத்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் காண்கிறோம்.

களவில் விளையும காதல்

கலாசாரக் கட்டுப் பெட்டிகளின் தாந்தோன்றித்தனத்தை முறியடித்து “விடுதலை பெற்ற” இளம் பெண்கள் தங்கள் பெண்ணுரிமையை நிலை நாட்டி காதலர் தினத்தன்று அடித்த கூத்துக்கள் இவை:-

1. இந்து முன்னணி, போலீசாரின் கெடுபிடி தாங்க முடியாமல் காதலர்கள் பெரும்பாலும் திண்டுக்கல் நகரில் உள்ள சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் தியேட்டர்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டரில் இருந்து சினிமா பார்த்து விட்டு ஜோடி, ஜோடியாக காதலர்கள் வெளியேறியதை நேற்று காணமுடிந்தது.

2. அப்போது அந்த பகுதியில் கண்ணில்பட்ட சில காதல் ஜோடிகளை போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர். வேலூர் கோட்டை பகுதியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்த காரணத்தால், காதல் ஜோடிகள், சினிமா தியேட்டர்கள், அமிர்தி வன உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

3. ஒவ்வொரு ஜோடியும் காதலின் சின்னமான சிவப்பு ரோஜா மலர்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். காதல் ஜோடிகள் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள அணைத்துக்கொண்டு மெய்மறந்து பரிமாறி கொண்டனர்.

-----------------------------------------

”தெய்வீகமான காதல்” களியாட்டங்களை கட்டுப்பாடின்றி, சினிமா தியேட்டர் அரையிருட்டின் துணையுடன் வெறி கொண்டு நிகழ்த்திவிட்டு பிறகு இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டால் அது இணக்கமான மணவாழ்க்கையாக இருக்க முடியுமா?

பிறகு நடப்பவை என்ன?

கீழ்க்கண்ட செய்திகளைப் படியுங்கள். இவை யாவும் காதலர் தினத்தன்று நிகழ்ந்தவைதான்!!

1. சூப்பர் மார்க்கெட்டில் பெண் விற்பனையாளர் கொலை : பட்டப் பகலில் வாலிபர் வெறிச்செயல். அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆனந்தியின் வலது நெஞ்சில் சராமரியாக குத்தி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் ஆனந்தி கீழே மயங்கி சாய்ந்தார்.

சில தினங்களுக்கு முன் ஆனந்தியை பெண் பார்க்க சிலர் வந்துவிட்டுச் சென்றனர். விசாரணையில் ஆனந்தி ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்தது தெரியவந்தது. இந்த நிலையில் தாக்குதல் நடந்துள்ளதால் காதல் விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2. சென்னையில் புதுமணத்தம்பதிகள் பரிதாப சாவுமனைவியை எரித்துக் கொன்று விட்டு, தீக்காயத்தால் கணவனும் இறந்தார்சென்னையில் புது மணத்தம்பதிகள் பரிதாபமாக இறந்து போனார்கள். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டதால் இருவர் உயிரையும் தீ குடித்து விட்டது.
---------------

காதல் எனும் மாயை!

சென்னை குடும்பநலக் கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் 9 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

காதலர் தினம் என்பது யாரிடமும் கேட்காமல் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட நவீன நாகரீகமாகும். காதலர்களுக்கு இந்த தினம் கொண்டாட்டமாக அமைந்தாலும், பெற்றோருக்கு இது கஷ்ட தினமாகத்தான் தோன்றும்.

காதல் பற்றிய தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை என்பதால், அதுபற்றி எடுக்கும் சினிமா படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன. பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும் காதல், அந்தந்த காலகட்டங்களில் அனைவரின் மனதிலும் புகுந்து குத்தாட்டம் போட்டுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேள்விப்பட்ட காதல், இன்று தெருவுக்கு தெரு மறைவில் நிற்கிறது.

மல்லுக்கட்டும் காதலர்கள்

பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிகின்றன. அப்படிப்பட்ட காதல் திருமணங்களும் பெரும்பாலும் கோர்ட்டுகளில் முடிந்து விடுகின்றன. தற்போது கோர்ட்டுகளில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, மிகுந்த ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்புகின்றன. இவைகளில் பெரும்பாலான வழக்குகளில், `முன்னாள்' காதலர்கள்தான் மல்லுக்கட்டுகின்றனர் என்பது இன்னும் வியப்பு.

சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கோர்ட்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது.

கடந்த ஆண்டில்...

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 412 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் காதல் திருமணங்கள் ஏராளமாக உள்ளன.

5-வது நாளில் வந்த மனு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்று, கோர்ட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் 23.1.09 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்த திருமணம் அது. 27-ந் தேதி காலையிலேயே மணமகன் தனது கையில் விவாகரத்து மனுவுடன் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். மனுவைப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி.

`திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகவில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்து விட்டீர்களே', என்று கேட்டு இருக்கிறார். அதற்கு மணமகன், `சீக்கிரமா? தாமதமாக கோர்ட்டுக்கு வந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை), 26 (குடியரசுத் தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை வந்துவிட்டதால் இவ்வளவு பிந்தி வரவேண்டியதாகி விட்டது. இல்லாவிட்டால் திருமணமான மறுநாளே மனுவோடு வந்து இருப்பேன்' என்று அந்த மணமகன் கூறி இருக்கிறார்.

மனைவிகளாகும் மாணவிகள்

மணமக்களின் மணமாலை கூட முழுவதுமாக வாடி முடிவதற்குள், இவர்களின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இதுபோல் பல கல்லூரி மாணவிகள் சிலர், `திடீர்' மனைவிகளாகவும், முன்னாள் மனைவிகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தையும், கடமையையும் மறந்து, அவர்களின் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனையின்படி, காதலனுடன் எங்காவது சென்று பதிவுத் திருமணம் செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற திருட்டுத் தாலிகளை பெற்றோர் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்து விடுவதால் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வரும் மாணவி (மனைவி)களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும்காலத்தில் பெற்றோருக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நடிகைகளும் விவாகரத்தும்

விவாகரத்துக்கு வயதும் ஒரு தடையல்ல. 50 வயதைத் தாண்டிய பிறகு விவாகரத்து செய்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருக்கின்றனர். சென்னை கோர்ட்டில் தற்போது வீடியோ கான்பரன்சிங் என்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் உள்ள மணமக்களுக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நடிகர்களும் விவாகரத்துக்கு தப்பவில்லை. ராமராஜன்-நளினி, பார்த்திபன்-சீதா இவர்களும் அடக்கம். ஸ்ரீவித்யா-ஜார்ஜ், ஊர்வசி-மனோஜ், ஹீரா-புஸ்கர்நட், சொர்ணமால்யா-அர்ஜுன், வனிதா-ஆனந்த் ஆகியோரும் மணவாழ்க்கையை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். சுகன்யா-ஸ்ரீதர், பிரசாந்த்-கிரகலட்சுமி, சரிதா-முகேஷ், மீராவாசுதேவன்-விஷால் ஆகிய ஜோடிகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். காதல் பரிமாணத்தை வளர்க்கும் சினிமா, டி.வி. தொடர்களால், இளம் உள்ளங்கள் கெட்டு, இறுதியில் கோர்ட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காதலர் தினத்துக்கு அர்ப்பணம்

இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை குடும்பநல கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. நேற்று மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளில் (வக்கீல் புறக்கணிப்புப் போராட்டம் இருந்தாலும்) பெரும்பாலான வழக்குகள், காதல் மணம்புரிந்தோரால் தாக்கல் செய்யப்பட்டன. காதலர் தினத்துக்காக இதை அர்ப்பணித்து இருப்பார்களோ, என்னவோ?

நன்றி - தினத்தந்தி 14-02-2009

ஒரு பெண்ணின் சோகக் கதை

நானும் பெண்தான். ஆனால் சட்டம் என்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சட்டங்களின் கண்களில் ஒரு ஆண்மகனின் தாயும் பெண்ணல்ல, சகோதரியும் பெண்ணல்ல.


நான் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணின் சகோதரியாகப் பிறந்ததுதான். ஒரு நெஞ்சில் ஈரமற்ற கொடுமைக்காரப் பெண்ணை என் அண்ணன் கைபிடித்த காரணத்தால் நான் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. அந்த அண்ணன் வாழ்ந்த 12 நாள் மணவாழ்க்கைக்குத் தண்டமாக அந்தப் பெண்ணிற்கு தன் சம்பளம் முழுவதையும் கொடுத்து அழுது கொண்டிருக்கிறான். சட்டம் பயின்ற அந்தப் பெண் எந்த ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் பார்க்காமல் என் அண்ணனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி பணம் பிடுங்கிக் கொட்டிருக்கிறாள். இதற்கு சட்டங்கள் துணை போகின்றன.


என்னவாயிற்று என் வாழ்க்கை? அவள் எங்கள்மேல் ஏவி விட்ட பொய்க் கேசுகளின் தாக்கத்தால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் போய், எங்கள் அண்னனும் சம்பாதிப்பது அனைத்தையும் அந்தப் பேயிடம் சமர்ப்பிக்கும் நிலையில் நான் ஏதோ சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்து என் பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன்.


எனக்கு திருமணம் ஆகும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
இப்போது சொல்லுங்கள் - 498A சட்டங்களும், பெண்கள் நல வாரியங்களும், என்.ஜி.ஓக்களும் , பெண்கள் நல அமைச்சர்களும் பெண்களுக்காகவா? இல்லை பொய் வழக்குபோட்டு அதனால் ஆதாயம் பார்க்கும் முதலைகளுக்காகவா?


ஒரு பெண்ணின் ஒலங்களைக் காண இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

ஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்!

கீழ்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்!

ரூ.10 லட்சம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார்
மகள் காதலனுடன் ஓடியதை மறைத்து தாயார் நடத்திய நாடகம் அம்பலம்

சென்னை கீழ்பாக்கத்தில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார் கொடுப்பட்டது. மகள் காதலனுடன் ஓடியதை மறைப்பதற்காக தாயார் நடத்திய நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

துணிகடை அதிபர் மகள் சென்னை கீழ்பாக்கம் பர்னபி ரோட்டைச் சேர்ந்தவர் பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பாரிமுனையில் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பார்வதி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் பார்வதி வாக்கிங் சென்றிருந்தார். காலை 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதியின் தாயார் தேட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பார்வதியின் தாயார் தனது கணவருக்கு ஒரு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலில் பார்வதி காலையில் வாக்கிங் சென்றவள் வீடு திரும்பவில்லை என்றும், வாலிபர் ஒருவர் போன் செய்து பார்வதியை கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான் பார்வதியை விடுவேன் என்றும் மிரட்டுவதாகவும் கூறினார். இதை கேட்டு பார்வதியின் தந்தை அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ராஜாமணி மேற்பார்வையில், தனிப்படை போலீசார் பார்வதியை தேடினார்கள். பார்வதியின் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

அப்போது பார்வதி தனது காதலனுடன் ஓடி வந்து விட்டதாகவும், மும்பைக்கு ரெயிலில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடனே போலீசார் உங்களை கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் திரும்பி வந்து விடுங்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை கேட்டு பார்வதி மனம் மாறினார். தனது காதலனோடு நடுவழியில் ரெயிலை விட்டு இறங்கி கார் மூலம் நேற்று பிற்பகலில் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நானே விரும்பி காதலனுடன் ஓடிப்போனேன் என்றும் பார்வதி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

தனது மகள் காதலனுடன் ஓடிப்போனதை மறைப்பதற்காக பார்வதியின் தாயார் அவரது தந்தையிடம் பொய்யான தகவல் சொல்லி போலீசிலும், பொய் புகார் கொடுக்க வைத்துவிட்டார்.

பார்வதியின் தாயார் நடத்திய நாடகத்தால் கீழ்பாக்கம் போலீசார் நேற்று கடும் அவதிக்குள்ளானார்கள்.

பார்வதியின் காதலன் பெயர் கான் அப்துல்லா. மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்து இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

காதலனுடன் ஓடிப்போன பார்வதி போலீஸ் விசாரணையில், திடீரென்று மாற்றி பேசினார். காதலனோடு செல்ல விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் போய் விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் பார்வதியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பொய்யான புகார் கொடுத்ததற்காக போலீசார் கடும் எச்சரிக்கையையும் விடுத்தனர். பார்வதியின் காதலரும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்தி - தினத்தந்தி - சென்னை, பிப்.4- 2009.

தந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள் தாய்

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்” - இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.
இப்போது செய்தி:

பள்ளிப்பாளையம், பிப்.3- 2009 - செய்தி - தினத்தந்தி

பள்ளிப்பாளையத்தில் தந்தையிடம் சென்று பேசியதற்காக குழந்தைகளுக்கு காலில் சூடு போட்டதாக தாய் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வெப்படையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 32) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனக்கோடி (30). இவர்களுக்கு தினேஷ் (10), மனோஜ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமியின் தாயார் சரசு தனது பேரக்குழந்தைகளை ஆவலுடன் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவர்கள் தங்கள் கால்களில் தாய் சூடு போட்டதாக இருவரும் தனது பாட்டி சரசுவிடம் காண்பித்தனர். இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு சிறுவர்கள் இருவரும் தனது தந்தையை பார்த்து பேசியதற்காக அம்மா சூடு போட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரசு தனது மருமகள் தனக்கோடியிடம் சென்று ”ஏன் இப்படி செய்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டார். உடனே தனக்கோடியும், அவரது அண்ணன் தமிழரசு (35) இருவரும் சேர்ந்து ”நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு?” எனக்கூறியதாக தெரிகிறது. ”மேலும் ஏதாவது கூறினால் கம்பியால் அடித்து தொலைத்து விடுவோம்” என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சரசு பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரசுவை மிரட்டியதற்காகவும், சிறுவர்களுக்கு சூடு போட்டதற்காகவும் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியையும், அவரது அண்ணன் தமிழரசுவையும் கைது செய்து மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
------------

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி அம்மையார் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அடடா, அவருக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? அவர்தான் மங்களூரில் Pub-ல் தண்ணி போட்டு ஆடுவதற்கு பணக்கார இளம் பெண்களுகளின் உரிமைகளை நிலை நாட்டுவதில் பிசியாக இருக்கிறாரே!

கள்ள உறவில் நல்லதா விளையும்!

பெண்கள் அனைவருமே கற்பைப் போற்றி, “கணவனையன்றி மாற்றானைக் கண்ணெடுத்தும் பார்ப்பேனோ” என்று விரதம் காப்பவர்கள் போலவும், ஆண்கள் அனைவருமே செக்ஸ் வெறி பிடித்து அலையும் கயவர்கள் போலவும் இந்த சமுதாயத்தில் பெண்ணியவாதிகளும், ஜொள்ளுவிடும் கிழங்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் உண்மையை அப்பட்டமாக மறைத்து ஒருதலைப் பட்சமாக சித்தரிப்பது இப்போது ஃபேஷனாகப் போய்விட்டது. கற்பு என்னும் சொல்லே இக்காலப் பெண்கள் மனத்தளவில் ஒரு கெட்ட வார்த்தையாக மாறிப்போய்விட்ட காலகட்டத்தில் இப்படி ஆண்களை மட்டமாகச் சித்தரிப்பதை அனைத்து ஆண்களும் ஏன் வாய்மூடி மௌனியாக சகித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள “ஆண்கள் எல்லோரும் ஏன் மனைவியை ஏமாற்றுகிறார்கள்?” என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் பாருங்கள். ஏன், பெண்கள் கணவனை ஏமாற்றி கள்ளக்காதலில் ஈடுபடுவதேயில்லையா? ஏனிந்த விஷமத்தனமான சித்தரிப்பு?

ஏன் உண்மையை மறைக்கிறார்கள்? பென்ணியவாதிகளுக்குப் பயந்தா? அல்லது, பெண்கள் அனைவரும் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று தொடர்ந்து சித்தரிப்பதால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுகிறதா?

இன்றைய பெண்களின் கற்பு நெறிக்கு இதோ சில சாம்பிள்கள்:-

1. பெண் கொலை வழக்கில் மருமகள்- கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை ஈரோடு விரைவு நீதிமன்றம் தீர்ப்பு - ஈரோடு, ஜன.22- 2009

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள எஸ்.பெரியபாளையம் வெள்ளியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யம்மாள் (வயது 63). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மகன் அய்யாசாமி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (37).

அய்யாசாமி வேலை பார்த்த கம்பெனியிலேயே வெள்ளியம்பாளையம் கே.டி.கே.தங்கமணி நகரை சேர்ந்த சிவராமன் (28) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அடிக்கடி அய்யாசாமி வீட்டுக்கு வந்து சென்றதால் ஜோதியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. யாருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்தனர்.

அய்யம்மாளின் சகோதரர்கள் தங்களின் பூர்வீக சொத்தில் 5 சென்ட் நிலத்தை அய்யமாளுக்கு கொடுத்தனர். அதை அவர் தனது மகள் கோவிந்தம்மாளுக்கு மட்டும் கொடுக்க இருந்தார். இதனால் அய்யம்மாள் மீது மருமகள் ஜோதிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதற்கிடையில் ஜோதி-சிவராமன் இருவரின் கள்ளத்தொடர்பு அய்யம்மாளுக்கு தெரியவந்தது. அவர் ஜோதியை கண்டித்தார். எனவே அய்யம்மாளை கொலை செய்ய திட்டமிட்டார்.

கடந்த 2-8-2007 அன்று மாலை அய்யம்மாள் வெளியே சென்றிருந்த போது சிவராமன் வீட்டுக்கு வந்து ஜோதியுடன் உல்லாசமாக இருந்தார். அப்போது திடீரென்று வந்த அய்யம்மாள் அவர்களை பார்த்து விட்டு கண்டித்தார். பின்னர் மாட்டை கொண்டு வர நல்லாறு ஓடை பக்கம் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஜோதி, சிவராமன் ஆகியோர் அய்யம்மாளை கழுத்தை நெரித்தும், கல்லால் முகத்தில் தாக்கியும் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் சிவராமன், ஜோதிக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயன்ற சிவராமனுக்கு மேலும் 3 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

2. வாணியம்பாடி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு பெண் படுகொலை. கள்ளக்காதலன் கைது - ஆம்பூர்,ஜன.22-2009

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மிட்டானங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அம்சா (வயது 45). இவர்களுக்கு மோகன் என்ற மகன் உள்ளார். அம்சா கூலி வேலைக்கு சென்றபோது பத்தாப்பேட்டையை சேர்ந்த குமரவேல் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி கோவிந்தனுக்கு தெரிந்ததும் அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அம்சா கணவனை விட்டு பிரிந்து சென்று பத்தாப்பேட்டையில் கள்ளக்காதலன் குமரவேலுவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

குமரவேல் பீடி தொழில் செய்து வந்தார். அவருக்கு போதுமான வருமானம் இல்லாததால் அம்சாவிடம் பணம் கேட்டார். அம்சா தனக்கு சொந்தமான நிலத்தை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை குமாரவேலுவிடம் கொடுத்தார். இதை குமரவேலு குடித்து அழித்துவிட்டார்.

இதனால் குமரவேலுவுக்கும், அம்சாவுக்கும் தகராறு ஏற்பட்டது. தினமும் அம்சா பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் அம்சா மீது குமரவேலுவுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு அம்சாவும், குமரவேலும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அம்சா மறுபடியும் பணத்தை கேட்க ஆரம்பித்தார். இதனால் ஆவேசம் அடைந்த குமரவேலு அருகில் இருந்த பலகையை எடுத்து அம்சாவின் தலையில் தாக்கினார். இதில் அவர் கீழே விழுந்தார். மேலும் ஆத்திரம் அடங்காத குமரவேலு அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அம்சாவின் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்து அம்சா ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

3. அடகு வைத்த தங்க நகைகளை திருப்பிக் கேட்டதால் கழுத்தை அறுத்து கொன்றேன். கள்ளக்காதலியை கொலை செய்த புதுமாப்பிள்ளை வாக்கு மூலம்

தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டி அருகே உள்ள வைகை அணைப் பூங்கா அருகே கடந்த 15-ந் தேதி ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த வேலையா என்பவரின் மனைவி கலாவதி (வயது32) என்று தெரிய வந்தது. கொலை செய்தது யார்? என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது.

இதற்கிடையே தேனி சிவராம் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(26), அல்லி நகரம் கிராம நிர்வாக அதிகாரி வனக்காமு மூலம் ஆண்டிப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். போலீ சாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

நான் தேனியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தேன். எனக்கும் கலாவதிக்கும் 3 வருடத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த தங்க நகைகளை வாங்கி அடகு வைத்தேன்.

இந்நிலையில் 4 மாதங் களுக்கு முன்பு எனக்கு திருமணம் நடந்தது. இதனால் கலாவதியுடன் அதிகமாக தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதற்கிடையே அவரை சந்தித்த போது உனக்கு திருமணம் ஆகி விட்டது. எனது தங்க நகைகளை மீட்டு என்னிடம் கொடுத்து விடு என்று என்னை வற்புறுத்தி வந்தார்.

அவளுடைய தொல்லை தாங்காமல் சம்பவத்தன்று அவளை வைகை அணைப் பூங்காவிற்கு மொபட்டில் அழைத்து வந்தேன். வரும் போது கத்தியை எடுத்து வந்தேன். பூங்காவில் மறை வான பகுதிக்கு அழைத்துச் சென்று அவளிடம் பேசினேன். அப்போது கழுத்தை அறுத்து கொலை செய்தேன். அவள் அணிந்து இருந்த தங்க சங்கிலி, அவளிடம் இருந்து செல் போன், கால் கொழுசு, கைக்கடிகாரம் ஆகிய வற்றை யும் எடுத்துச் சென்று விட்டேன். போலீஸ் என்னை தேடுவதை அறிந்ததும் நான் போலீசில் சரண் அடைந்தேன்.

4. ஏற்காடு ஓட்டலில் விஷம் குடித்தார் - 3 பேரை திருமணம் செய்த பெண் தற்கொலை - கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை

சேலம் வி.எம்.ஆர். தியேட்டர் அருகில் வசித்து வந்தவர் சங்கீதா (வயது 33). இவருக்கு சுனில் (4) என்ற மகனும், சிபானா (3) என்ற மகளும் உள்ளனர். சங்கீதா (சங்கீதா - என்ற பெயர் நினைவிருக்கிறதா!) 3 பேரை திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக அவர்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (27). இவர் சேலம் சொர்ணபுரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் அரிகிருஷ்ணனுக்கும், சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினர். இதனால் சங்கீதா வீட்டிலேயே அரிகிருஷ்ணன் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் ஏற்காட்டிற்கு வந்தனர். அங்குள்ள இயற்கை எழில்மிகு நிறைந்த இடங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள். நேற்று காலை அவர்கள் இருவரும் அறையிலேயே விஷம் குடித்து விட்டதாக தெரிகிறது. இதில் வாயிலில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சங்கீதா வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அரிகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சங்கீதாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், எதற்காக அவர்கள் விஷம் குடித்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனைக் கொல்லத் தூண்டும் செக்ஸ் வெறி

சமீப காலங்களில் வெறி பிடித்த பெண்கள் தங்கள் கணவன், பச்சிளம் மாறாத தன் குழந்தைகள் (வாழ்க தாய்மை!), தன் பெற்றோர் இதுபோன்ற தன்னைச் சார்ந்தவர் அனைவரையும் கள்ளக்காதலுக்காக கோடூரமாகக் கொலை செய்துவரும் செய்திகள் நிறைய வெளிவந்துகொண்டிருக்கின்றன.

என்னவோ ஆண்கள் அனைவரும் கிரிமினல்கள் போலவும், பெண்கள் எல்லோருமே ஒன்ரும் தெரியாத அப்பாவிகள் போலவும் சித்தரித்துவரும் ஊடகங்கள்கூட இப்போது அப்பட்டமான நிலையை உணர்ந்து வெளிப்படையாக உண்மைச் செய்தியை வெளியிடத் தொடங்கியிருக்கின்றனர்.

சீக்கிறமே பெண்ணியவாதிகளால் செய்யப்படும் மூளைச் சலவையிலிருந்து மீண்டு நம் சமூகத்தில் ஒரு விழிப்புணர்வு தோன்றும் என்று நம்பலாம்.

கீழே காணும் செய்திக்கு நன்றி: ஜூனியர் விகடன்.