கள்ளக்காதல்களும் அவற்றின் விளைவால் நம் பெண்குலத்திலகங்கள் செயலாக்கும் கணவன் கொலை, பெற்ற குழந்தைகள் படுகொலை, பெற்றோர் கொலை, தற்கொலை போன்றவை நாள்தோறும் பொங்கிப் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால் அனைத்து தினசரி நாளேடுகளும் "கள்ளக்காதல் சிறப்பு மலர்" வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று தோன்றுகிறது. தவிர, கள்ளக்காதல்களைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக ஒரு தனி நாளேடு மற்றும் வாரப்பத்திரிக்கை வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது. நாமும் ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாம்!
இந்தக் கள்ளக்காதல் சமாசாரத்தின் வீச்சையும், தாக்கத்தையும் நன்கு அறிந்ததால்தான் ஆச்சி மனோரமா அவர்கள் இதைக் கையிலெடுத்து கணவர்களின் "ஆண்மைக் குறைவு" என்னும் கோஷத்துடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்!
மேலும் தேசிய பெண்கள் வாரியமும் (National Commission for Women) கள்ளக்காதலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை உணர்ந்து, அதை நாட்டின் தலையாய பிரச்னையாகக் கருதி, கள்ளக்காதல் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் (illegitimate children) சேர்த்து அந்தக் குழந்தைகளுக்கு சிறிதும் தொடர்பில்லாத கணவன்தான் படியளக்கவேண்டும்; அது அவனுடைய அடிப்படை கடமைகளில் ஒன்று என்று வரையறுத்து சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. (Link)
அதேபோல் கள்ளக்காதலைக் காரணம் காட்டி கணவன் விவாகரத்து கேட்டாலும் அவனுக்கு கிட்டுவதில்லை. ஆனால் மனைவி மட்டும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ் என்று பல வகைகளில் பல சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பணம் கேட்டால் உடனே அதை கணவன் கொடுத்தே தீரவேண்டும், இல்லாவிட்டால் சிறைவாசம்; பணம் கைவசம் இல்லாவிட்டால் கிட்னியை விற்றாவது கொடு என்று ஆணையிட்டு விடுவார்கள். திருமணம் என்னும் ஒன்றைச் செய்துகொண்டு விட்டால் ஆணுக்கு கடமைகளும், மனைவிக்கு உரிமைகளும் சுமார் 46 வகை சட்டப் பிரிவுகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா:
கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டங்களில் இடமேயில்லை என்பது!
Women cannot be punished for adultery
இனி, ஒரு புதுவித கள்ளக் காதல் லீலையைப் பற்றிப் படியுங்கள்:-
கள்ளக்காதலால் வந்தவினை - கணவனிடமே ரூ.10 லட்சம் மோசடி
இன்ஜினியர் மனைவி- போலீஸ் ஏட்டு கைது
ஆலந்தூர், அக். 16, 2009. (தினகரன்)
கத்தார் நாட்டில் வேலை செய்யும் இன்ஜினியரின் மனைவிக்கு, போலீஸ் ஏட்டுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கணவரிடமே ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பெண்ணும், போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.
பரங்கிமலை கணபதி காலனியை சேர்ந்தவர் சிவஞானம் (50). கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்கிறார். இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என் மனைவி மல்லிகா (46). நான் கத்தாரில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்கிவிட்டுச் செல்வேன். காரம்பாக்கத்தில் வசிக்கும் முரளிதரன் (46) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சத்துக்கு ஒரு இடத்தை வாங்கலாம் என்று என் மனைவி கூறினார். அதனால் முரளிதரனிடம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அதன்பின் 2007ல் ஊருக்கு மீண்டும் வந்தேன். அப்போது, முரளிதரனை சந்தித்து இடத்தை என் பெயருக்கு பதிவு செய்து தருமாறு கேட்டேன். அதற்கு அவர் தான் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக இருப்பதாகவும், விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சாக்குப்போக்கு கூறினார்.
போலீஸ் என்பதால் ஏமாற்ற மாட்டார் என்று நம்பி நான் மீண்டும் கத்தார் நாட்டுக்கு சென்றுவிட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்தேன். அப்போது என் மனைவி மல்லிகாவுக்கும் முரளிதரனுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தியதை நேரில் பார்த்து திடுக்கிட்டேன்.
கத்தாரில் இருந்து நான் அனுப்பிய பணத்தையெல்லாம், முரளிதரனுடன் சேர்ந்து செலவழித்து உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அந்த இடத்தை மல்லிகா பெயருக்கே அவர் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
இப்படி எனக்கு துரோகம் செய்த மனைவி மல்லிகா, போலீஸ் ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் சிவஞானம் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மல்லிகாவின் சகோதரர்களும் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கிய பிரகாசம், மணி, சப் இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முரளிதரனையும் மல்லிகாவையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி!
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, CrPC, dv act, ncw, கள்ளக்காதல், பொய் வழக்கு, மனோரமா, ராமாத்தாள்
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்
பெண்கள் பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கெடுபிடி
புதுடில்லி: செப்டம்பர் 20,2009
"பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தவிர்க்க, பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
வடமாநிலங்களில் நடக்கும் கட்டாயத் திருமணத்தைத் தடுத்தால், அங்கு பெண்கள் தற்கொலையும், கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் கொலைகளையும் தவிர்க்க முடியும். பெண்களைப் பாதுகாக்க, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், தற்போதைய நிலைமை மோசமாகவே உள்ளது. கற்பழிப்பு மற்றும் வன்முறையால் பெண்கள் உயிரிழக்கையில், அதற்கான முதல் தகவல் அறிக்கையை, காவல் நிலையங்கள் பதிவு செய்வதே இல்லை என, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பெண்களுக்கு எதிரான எந்தக் குற்றத்திற்கும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல் நிலையங்கள் தயங்கக் கூடாது.
குற்றம் நடந்த மூன்று மாதங்களுக்குள், பாரபட்சமற்ற புலனாய்வின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். புலனாய்வுக்கான தகவல்களைப் பெறுவதில் எந்தக் குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது, காவல் துறை மற்றும் நிர்வாகத்தினரின் கடமை. காவல் துறையில் பெண்களை அமர்த்துவதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவியரைப் பாதுகாக்கும் வகையில், குற்றம் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
மாணவியர் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க, விரைவு மற்றும் குடும்ப நல கோர்ட்டுகளை அமைக்க வேண்டும். பெண் குழந்தைகள் இறப்பைத் தடுக்க, காவல் துறையினர், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கற்பழிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்களுக்கு அறிவுரை வழங்க, உளவியல் படித்தவர்களைப் பணியமர்த்த வேண்டும். இவை உட்பட, மேலும் 31 நடவடிக்கைகளை, விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் ஒரு கிராமத்தில், ஒரே கோத்திரம் கொண்ட பெண்ணை மணந்ததற்காக, கட்டப் பஞ்சாயத்து நடத்தப்பட்டு, அந்த உத்தரவின் பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்தே, பெண்கள் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
http://www.dinamalar.com/new/General_detail.asp?news_id=17154
கருத்து யுத்தம் வீடியோ
காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
கோவை கூட்டத்தைப் பற்றிய செய்திகள்
தினகரன் - கோவை பதிப்பு - பக்கம் - 13 (5-09-2009)
தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்
கோவை, செப். 5: பிரிவில் இருந்து தம்பதிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளியில் இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் செயல்படுகிறது. இதன், மாநில அமைப்பாளர் சுரேஷ்ராம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன. ஒரு வழக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை நடக்கிறது. குடும்பம் சிதைந்து விடுகிறது. இந்திய அளவில் கடந்த 2005-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 52 ஆயிரத்து 483 கணவன்களும், 28 ஆயிரத்து 188 மனைவிகளும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2006ல் 55 ஆயிரத்து 452 கணவன்களும், 29 ஆயிரத்து 869 மனைவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப வழக்குகள், குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட அளவிலும் இந்த இயக்கம் விரிவு படுத்தப்படுகிறது.
கோவை மாவட்ட அமைப்பாளராக பிரகாஷ், ஈரோடு மாவட்ட அமைப்பாளராக கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம். சட்டஉதவி மற்றும் ஆலோசனை இலவசமாக அளிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களுக்கு 99410-12958, 96294-50331 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.
=================
முக்கிய குறிப்பு:-
மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!
==================
-------------------
7-9-2009. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னைப் பதிப்பு - பக்கம்: 6
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, child custody, CrPC, dv act, harassment, lawyer, lust, misuse, protest-day, victims, ஆண்பாவம், பொய் வழக்கு
கோவையில் கோலாகலத் தொடக்கம்
இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் கோயம்புத்தூரில் நேற்று (04-09-2009) தன் கிளையைத் தொடங்கியுள்ளது. அந்த நிகழ்ச்சி பற்றி தினமணி வெளியிட்டுள்ள செய்தி இதோ:-
ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை
கோவை, செப். 4: ஆண்கள் உரிமையை பாதுகாக்க ஆண்கள் நலத்துறை அமைச்சகம் தேவை என்று இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்த அமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் சுரேஷ்ராம், கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பெயர்பெற்ற இந்தியாவில் குடும்ப பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
அமெரிக்காவில் வளர் இளம் பெண்கள் (டீன் ஏஜ்) கருத்தரிக்கும் சம்பவம் அதிகமாக உள்ளது.
இதனால், அங்கு தந்தை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதுபோல, இந்தியாவிலும் இப்போது தந்தை இல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆதரவாக 44 சட்டப்பிரிவுகள் இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம். வரதட்சிணை கொடுமை என பொய்யாக தகவல் கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள்தான் அதிகம் நடக்கின்றன.
வரதட்சிணை வழக்கில் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படுவதில்லை.
ஆனால், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிக்கப்படுகிறது.
குறிப்பாக படித்த, வசதி படைத்த ஆண்கள்தான் இவ் வழக்குகளால் பாதிக்கப்படுகின்றனர்.
சமுதாயத்தில் பெண்கள் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
ஆனால், அவர்களை தண்டிக்க சட்டம் இல்லை. இதனால், குடும்ப உறவுகள் பாதிக்கப்படுகின்றன.
வரதட்சிணை வழக்குகளால் நீதிபதிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். ஓராண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பெண்கள் (மாமியார், நாத்தனார் உள்ளிட்ட உறவுகள்) கைது செய்யப்படுகின்றனர்.
தந்தை, தாய், மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோரை உள்ளடக்கியதுதான் குடும்பம். ஆனால், இப்போது தந்தை, தாய், மகன் அல்லது மகள் ஆகியோரைக் கொண்டதுதான் குடும்பம் என்று மாறி வருகிறது.
இதனால், வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
குடும்ப பிரச்னைகள் காரணமாக 2006-ல் நாடு முழுவதும் 52 ஆயிரத்து 483 ஆண்களும், 2007-ல் 55 ஆயிரத்து 452 ஆண்களும் தற்கொலை செய்துள்ளனர். அதேநேரத்தில் 2006-ல் 28 ஆயிரத்து 188 பெண்களும், 2007-ல் 29 ஆயிரத்து 869 பெண்களும் தற்கொலை செய்துள்ளனர்.
இருதரப்பையும் ஒப்பிடும்போது பெண்களைவிட, ஆண்கள் தற்கொலை செய்யும் விகிதம் இரு மடங்கு அதிகமாக உள்ளது.
பெண் உரிமை என்ற பெயரில் ஆண்களை அடிமைத்தனம் செய்யும் நிலை பரவி வருகிறது. எனவே, ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தனிச் சட்டம், அமைச்சகம் தேவை என்றார்.
இந்த அமைப்பில் ஆலோசனை பெற விரும்புவோர் 9840587653 (சென்னை), 9894103539 (ஈரோடு), 9790019658, 9629450331 (கோவை) என்ற செல்போன்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், www.tamil498a.blogspot.com, www.savefamily.org, www.saveindianfamily.org என்ற இணையதள முகவரிகளில் தொடர்புகொள்ளலாம்.
-------
இந்தச் செய்திக் குறிப்பின் வலைச்சுட்டி இது.
================================
"தி ஹிந்து" ஆங்கில இதழில் வெளிவந்துள்ள செய்தி:
Movement protecting men’s rights launched
Staff Reporter
Coimbatore: Save Indian Family Movement, an organisation focusing on abuse of women-centric laws against men, advocating gender-neutral laws and amendments to the existing laws, has launched its Coimbatore Chapter.
Convenors of the Save Indian Family Movement, Suresh Ram and M.P. Kalaiselvan (Chennai), Manoj David (Bangalore) and G. Prakash (Coimbatore) addressed journalists at Coimbatore on Friday.
They pointed out that laws aimed at protecting women, such as Sec 498 A of Indian Penal Code, Dowry Prohibition Act and Prevention of Domestic Violence Act, had been largely misused against men and this had affected the Indian family system.
Adverting to the suicide statistics of 2005 and 2006, they pointed out that in 2005, 52,483 husbands committed suicide while the number was 28,188 for wives and in 2006, 55,452 husbands committed suicide as against 29,869 suicides by wives.
In the event of the death of a married woman, the husband and his family members were subjected to prolonged legal trails. Such laws could never be a remedy for the sufferings of women and arming them with ‘terrorising legal weapons’ only led to retribution.
They dubbed the cited legal provisions as ‘draconian women-centric laws’. More than 98 per cent of men faced domestic violence at the hands of their wives and in-laws in the form of verbal abuse, physical abuse, economic exploitation, cheating, infidelity and harassment, but there was no law to provide solace to them.
They said that laws needed to be gender neutral. Women-centric laws sought compensation for women in the event of a divorce even when the woman was a bread winner and saw fathers as incapable of bringing up children.
They demanded a separate Ministry for Men’s Welfare, gender equal laws, besides amendments to legal provisions to tone down these legislations.
For help or more information call 98403-24551/99410-12958 or visit www.saveindianfamily.org or ww.savefamily.org.
இதன் சுட்டி: http://www.hindu.com/2009/09/05/stories/2009090550920200.htm
குறிச்சொற்கள் 498a, anti-male, arrest, biased laws, child custody, CrPC, divorce, dv act, ஆண்பாவம், பொய் வழக்கு, வக்கீல், வரதட்சணை
ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!
சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். "ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்" என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.
"திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!" என்பாள். உடனே அவர்கள், "சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!" என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, "ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!" என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.
இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.
ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. "சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா" என்று கேட்டால், உடனே உங்களை "மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்" என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.
திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:
- குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) - இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் "பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்" என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி "உல்லாசமாக" வாழ்ந்து கொண்டிருக்கலாம்!
- Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)
- Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)
- Under Hindu Adoptions and Maintenance Act
ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.
இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!
குறிச்சொற்கள் 125, 498a, CrPC, divorce, dv act, harassment, maintenance, ஆண்பாவம், பொய் வழக்கு, ஜீவனாம்சம்
பூஜாவின் தெய்வீகக் காதல்
முன்பு ஜெயகாந்தன் எழுதிய கதையொன்றில் இது போன்ற பதிவிரதை சொல்வாள், “அவன் பூட்டான்; இவன் வண்ட்டான்” என்று. அதுபோல் உள்ளாடை மாற்றுவதுபோன்று கணவனை மாற்றும் காரிகைகள் நிறைந்த உலகமடா இது. அவள் இருந்தும் கெடுப்பாள்; செத்தும் கெடுப்பாள்!
இந்த உன்னதக் காதல் கதையைப் படியுங்கள். அந்தக் கணவன் கதை ஒரு பரிதாபம். இந்தக் காதலன் கதை ஒரு கந்தல். வாழ்க பெண்ணியம். வளர்க பெண்கள் விடுதலை! வீழ்க ஆண்குலம்!
பூந்தமல்லி, ஏப்.19- 2009. காதலன் கை விட்டதால் துணை நடிகை பூஜா (தெனாவெட்டு, அதிசயமணல் மாதா உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.) தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையொட்டி அவருடைய காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த போரூர் காரம்பாக்கம் பொன்னி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஷேர்-ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி காமாட்சி (45). இவர்களுடைய மகள்தான் துணை நடிகை பூஜா (25).
இவருக்கும் திலீப் குமார் (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெயலட்சுமி (3) என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பூஜாவுக்கும், திலீப் குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு (இதற்க்குக் காரணம் மனைவியினுடைய பழைய காதலுடன் அவள் தொடர்ந்த கள்ளத் தொடர்பு) 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். மேலும் திலீப் குமார் மனைவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டார். (நெலைமைய்யா!)
இந்த நிலையில் பூஜாவின் பழைய காதலன் நீலாங்கரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (25) அடிக்கடி பூஜாவை சந்தித்து தனது காதலை புதுப்பித்தார்.
வக்கீல் இருக்கிறார், ஜாக்கிறதை!
தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது
மார்ச் 15,2009, தினமலர்
திருச்சி : சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதோடு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வக்கீலை தீர்த்துக் கட்ட முயன்ற வழக்கில் கைதான திருச்சி வக்கீல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதாவது தமிழகத்தில் இதுவே முதன்முறை.
திருச்சி எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:
திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ராஜேஷ்கண்ணா (35). அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்த இவரை, வக்கீல் ராஜேஷ்கண்ணா கூலிப்படை உதவியுடன் சில மாதம் முன் விஷம் கொடுத்து கொலை செய்தார். பின், அதே கூலிப்படையுடன் சோமரசம்பேட்டை வசந்தம் நகரில் வசிக்கும் கள்ளக்காதலி வித்யாவின்(30) கணவரான வக்கீல் வெங்கடேசனை வெட்டினார். அப்போது தப்பியோடிய தணிகாசலம் என்பவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட தணிகாசலத்திடம் நடத்திய விசாரணையில், "ரவிச்சந்திரன்(35) செல்வம்(27) குமார் (30) ராதாகிருஷ்ணன்(24) ஆகியோருடன் சேர்ந்து வக்கீல் ராஜேஷ்கண்ணா தூண்டுதலின் பேரில் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு விஷம் கொடுத்துக் கொன்றோம். வக்கீல் வெங்கடேசன் மனைவி வித்யா - வக்கீல் ராஜேஷ்கண்ணா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வெங்கடேசனை தீர்த்துக் கட்ட முயன்றதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதன் பேரில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், வக்கீல் ராஜேஷ்கண்ணா, அவரது கள்ளக்காதலி வித்யா, கூலிப்படையினர் ரவிச்சந்திரன், தணிகாசலம், செல்வம், குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., பரிந்துரைப்படி வக்கீல் ராஜேஷ்கண்ணா, ரவிச்சந்திரன் இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழக வரலாற்றில் வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
-------------
அன்றாடம் குடும்பங்களில் நிகழும் சண்டை, சச்சரவுகளுக்கு வக்கீல்களும், வழக்குகளும், கோர்ட்டுகளும்தான் தீர்வா? பெண்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். வழக்குப் போடுவதால் யாருக்கு நன்மை? வழக்குப் போடுபவர்களுக்கா, இல்லை வக்கீல்களுக்கா? சிந்தித்துப் பாருங்கள்!
அநாவசிய கைது நடவடிக்கைகளைக் குறைக்க ஒரு சட்டத்திருத்தம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் சட்ட நடைமுறைக்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்தி வருகிறது அரசு. ஏன்? வக்கில்களின் வருமானம் குறையுமே என்பதற்காக. மக்களின் துன்பம் இதனால் தீருமே என்பதைப் பற்றி யாருக்குக் கவலை. தடி எடுத்தவன் தண்டல்காரன்.
இந்த வக்கீல்களின் நடத்தையின் மூலம் ஒன்று தெளிவாகிறது. நாம் பழைய கற்காலத்தை நோக்கி வெகு வேகமாக முன்(பின்)னேறிக்கொண்டிருக்கிறோம்!