Showing posts with label vijayakanth. Show all posts
Showing posts with label vijayakanth. Show all posts

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை

வன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்!

சேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்

பெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.

பெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.

கண்டித்தார்

இந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.

செல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.

கூலிப்படையை ஏவி கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், "எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.

இதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.

இந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

3 ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

லேட்டஸ்ட் கள்ளக்காதல் கொலை

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலத்தில், "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்ததாக' செல்வி தெரிவித்துள்ளார். அதே போல சக்திவேலுவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்:

சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

==============

கள்ளக்காதல் கொலைக்கு வக்காலத்து வாங்கும் ஆச்சி மனோரமாவும், கள்ளக் காதல் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டு பிறகு கணவன் மீது 498A, DVAct போன்ற வழக்குகளைப் போட்டு ரவுசு பண்ணும் பெண்ணைத் தூண்டி விட்டு பாலிடிக்ஸ் செய்யும் விஜயகாந்த் போன்றவர்களும் தங்கள் குறுகிய சுயநலனுக்காக முனைந்து நின்று நம் நாட்டில் திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலன், பண்பாடு போன்ற அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.