Showing posts with label கொலைகாரி lust. Show all posts
Showing posts with label கொலைகாரி lust. Show all posts

மிஸ்டு கால் விளையாட்டு!

3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?

செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்

சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி

3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.

கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.

சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.

மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.

`மிஸ்டுகால்' விட்ட உமா

மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.

ஆசிரியை அடித்ததில் பள்ளி மாணவி சாவு

ஜெயராகினி ஜெயராகினி என்னும் ஒரு பள்ளி ஆசிரியை ஒரு மாணவியை தலையில் அடித்து சாகடித்துவிட்டு, பின் பிணத்தை தண்ணிர்த் தொட்டியில் வீசி விட்டதாக இந்த செய்தி கூறுகிறது.


ஆனால், இதை எப்படி நம்புவது? நம் இந்திய நாட்டு சட்டங்களின் படி வன்முறை என்றால் அதை ஆண்தானே செய்வான். பெண்கள் எந்தவித வன்முறையும் செய்ய இயலாதவர்கள். ஆண்கள் மட்டுமே கிரிமினல்கள். இப்படித்தானே இந்திய குடும்ப வன்முறைச் சட்டம் அறுதியிட்டுக் கூறி வரையறுத்து, ஆண்களின் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறது!

இப்போது முழுச் செய்தியையும் படியுங்கள்:

திருச்சி: தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மாணவி, ஆசிரியை அடித்ததில் இறந்தது தெரியவந்துள்ளது. ஆசிரியை மற்றும் அதை மறைக்க உதவிய பள்ளி அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:

மணப்பாறை புனித மரியன்னை துவக்கப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக்கு வந்த மாணவி ஸ்ரீரோகிணி மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். இந்த வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இறந்த மாணவியின் வகுப்பாசிரியை ஜெயராகினி (25) மேல் சந்தேகம் எழுந்தது. இறந்த மாணவி பள்ளிக்கே வரவில்லை என, அவர் கூறி வந்தது, எங்களுக்கு அவர் மேல் சந்தேகத்தை எழுப்பியது. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், மதிய உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்தில் தான் இறப்பு நிகழ்ந்துள்ளது; தண்ணீர் தொட்டியில் மூழ்கியதால் இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

ஆசிரியை ஜெயராகினியிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி விளையாடும் போது மற்றவர்களுடன் தகராறு செய்ததால், பிரம்பால் தலையில் அடித்ததாக கூறினார். அதில் ஸ்ரீரோகிணி மூர்ச்சையாகி இறந்துள்ளார். பின், வகுப்பறையிலேயே தூங்குவது போல் படுக்க வைத்து விட்டு, பள்ளி முடிந்த பின், அங்கு பணியாற்றும் அலுவலர்கள் ஆரோக்கியராஜ் மற்றும் சகாயராஜ் ஆகியோர் மூலம் மாணவியின் பிணத்தை, வேறு பள்ளிக்கு அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீசிவிட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.இதையடுத்து, மாணவி ஸ்ரீரோகிணியை கொலை செய்ததாக ஆசிரியை ஜெயராகினி, அவருக்கு உதவிய பள்ளி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சகாயராஜ் ஆகியயோர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.

(செய்தி: தினமலர். 28-03-2009)

14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா

இந்திய குடும்ப நல வாழ்வை பேணிக்காக்கும் அமைப்பினர் (Save Indian Family Foundation) வரும் 14-02-2009 அன்று பெங்களூரில் ஒரு தர்ணா நடத்த இருக்கிறார்கள்.

இடம்: எம்.ஜி சாலை - மகாத்மா காந்தி சிலை எதிரில்

நேரம்: காலை 10-00 மணீ முதல் பிற்பகல் 1-00 மணி வரை

பங்கு கொள்வோர்: சட்டபூர்வ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்தக் கொடுமையை எதிர்க்கும் நல்மனது படைத்தவர்கள்.

இவர்களில் பொறியாளர்கள், மென்பொருளாளர்கள், வக்கீல்கள், எழுத்தர்கள், டாக்டர்கள், அரசு பணியாளர்கள், என்.ஆர்.ஐ-க்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள், வணிகத்துறையினர், பெண்கள் இன்னும் பலர் அடங்குவர்

இந்த தர்ணா எவ்விதக் கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படுகிறது?

  1. ஆண்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு (பெண்களுக்கு உள்ளது போலவே) ஒரு தேசிய ஆணையமும் ஆண்கள் நல்வாழ்வு அமைச்சகமும் வேண்டும்
  2. தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான குடும்ப வழக்குகளை மேலும் நிறைய நீதிபதிகளை நியமித்தும், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்தும் விரைவில் தீர்க்க வேண்டும்
  3. மக்களின் - முக்கியமாக இளைஞர்களின் - வாழ்வைப் பெருமளவில் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய் பங்களிப்பையும் பெறவேண்டும்.
  4. தற்போது பெண்ணிற்கு மட்டும் மேன்மை தந்து ஆண்களை ஒடுக்கும் சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக “மனைவி”, “கணவன்” போன்ற சொற்களை நீக்கிவிட்டு இருவருக்கும் பொருந்தும் “வாழ்க்கைத் துணை” அல்லது “துணைவர்” (spouse) என்றே குறிப்பிட வேண்டும்.
  5. மனைவி கணவனிடமிருந்து தற்போது பலவித சட்டப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம்/மானியம் பெறும் அமைப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்தி, ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்று வரும் மாறுபட்ட சமூக நிலையை கருத்தில் கொண்டு சட்டங்களில் முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
  6. ”குடும்ப வன்முறைச் சட்டம்” தற்போது ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. அதில் வன்முறை என்பது (மனத்தளவிலோ, உடலளவிலோ) கண்வன் தான் செய்வான் என்று எழுதப் பட்டிருக்கிறது. அதை நியாயமான முறையில் மாற்றி, மனைவி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார்க்குச் செய்யும் கொடுமைகளையும் அதில் உள்ளடக்கி, அத்தகைய கொடுமைகளுக்களுக்கான நிவாரணங்களையும் அச்சட்டத்தில் சேர்க்கவேண்டும்.
  7. குடும்ப விவகாரங்களில் போலீஸ் தலையிடுதலை நிறுத்தவேண்டும். அவர்கள் தற்போது செய்வதுபோல் குடும்பப் பிரச்னைகளில் நுழைந்து அறிவுரைகளோ, பரிந்துரைகளோ, பஞ்சாயத்தோ அளிக்கக்கூடாது
  8. பச்சிளங் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்கும் போது அக் குழந்தைகளை நேரிடையாக விசாரிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். இந்தச் செயல் அந்த பிஞ்சு மனங்களை நோகச் செய்யும் கொடூரமான ஒரு செயல். சூதறியா அக்குழந்தைக்கு தாயும் தந்தையும் சமம் தான். அந்த நிலையில் அக்குழந்தையிடம், “நீ தாயிடம் இருக்க விரும்புகிறாயா, தந்தையிடமா?” என்று விசாரிக்க முயலும் போது, அந்த நேரத்தில் காப்புரிமை பெற்றுள்ள பெற்றவர் மற்றவருக்கு எதிராக குழந்தையின் மனத்தைத் திருப்ப எத்தனிக்கும் அபாயம் உள்ளது.
  9. குற்றவியல் சட்டஙகளின் அடிப்படையில் வழக்கு நடக்கும்போது பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிரிமினல் வழக்குகளை சட்டப்படி புகார்கள் உணமையா பொய்யா என்று தீர விசாரித்து அதன்படி தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவற்றில் எவ்வித சமரச இணக்கமும் மேற்கொள்ளக் கூடாது.
  10. பலவித சூழல்களின் தாக்கத்தால் நம் நாட்டில் தற்போது குடும்பச் சச்சரவுகள் மிக அதிகமாகி விட்டன. அதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணவும், நம் நாட்டின் பண்பாட்டின் அடிப்படையில் இணக்கமான குடும்ப வாழ்வு முறையை வளப்படுத்தவும் ஒரு தேசிய அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
  11. வருமான வரி விதித்தலில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கவேண்டும்..
  12. தற்போது நீதிமன்றங்களும், காவல் துறையும், நடுவர்களும் ஆண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் என்றாலே கிரிமினல்கள் போலவும், பெண் என்றாலே ஆண்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்கள் போலவும் ஒரு கருத்தாக்கம் அவர்கள் மனத்தில் ஆழப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை நிலைக்கு மாறாக உள்ளது என்பதால், அத்துறைகளைச் சார்ந்தவர்களை ஆண்களுக்கும் இணக்கமான மனப்பான்மையையுடன் அவர்களின் பிரச்னைகளை அணுகும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் (sensitization of their minds towards the problems of men). தற்போதுள்ள ஆண்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
  13. மணமுறிவு நிகழும்போது ஜீவனாம்சம்/மானியம் போன்ற பணம் சார்ந்த ஈட்டுத் தொகை வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத சில கட்டங்களில்தான் இவை அளிக்கப்பட வேண்டும். அதுவும் மாறுபட்ட பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, கணவன், மனைவி இருவருடைய உண்மையான வருமானத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப நடுநிலையுடன் வழங்கப்பட வேண்டும்.

அனைவரும் வருக!

இவர்களிடம்தான் மனைவிகள் தஞ்சமடைகின்றனர்!


மது குடித்து விட்டு கலாட்டா செய்த பெண் போலீஸ் அதிரடி சஸ்பெண்ட்

ஜனவரி 26,2009, தினமலர்

திருவனந்தபுரம்: கேரளாவில், மது குடித்து விட்டு போதையில் கலாட்டா செய்த பெண் போலீஸ் சஸ் பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளா, வயநாடு மாவட்டம் கல்பேட்டாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் வினயா. இதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய மற்றொரு தலைமைக் காவலருக்கு பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து, அவர் சக போலீசாருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.இதில், வினயா உள் ளிட்ட 19 போலீசார் கலந்து கொண்டனர். விருந்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் மது குடித்தனர். வினயா கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே குடித்தார். ஒரு வழியாக விருந்து முடிந்தது.

போதையில் மிதந்த அனைவரையும் பாதுகாப்பாக அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, கார் ரெடியாக இருந்தது. ஆனால், வினயா அந்த காரில் ஏற மறுத்து அடம் பிடித்தார். சக போலீசாருடன் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டார். அந்த வழியாகச் சென்ற பஸ் சில் ஓடிச் சென்று ஏறினார். இந்த விவகாரம் போலீஸ் உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. விசாரணைக்குபின் வினயா சஸ்பெண்ட் செய்யப் பட்டார்.

விருந்தில் பங்கேற்ற மற்ற போலீசாருக்கு எதிராக துறை ரீதியிலான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. விருந்துக்கு ஏற்பாடு செய்த தலைமைக் காவலருக்கு எதிராகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கள்ளக்காதலைக் கணவன் கண்டித்தான், மகனை எரித்துக் கொன்றாள் தாய்

பக்கத்து வீட்டுக்காரனோடு சல்லாபித்ததைக் கண்டித்த கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சிறுவன் (மகன்) உயிரோடு எரித்துக்கொலை - தாய் கைது

செய்யாறு, ஜன.16- 2009. - செய்தி - தினத்தந்தி


இந்த சம்பவம்பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு (வயது 32). சலவை தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி (26). திருமணமாகி 6 வருடம் ஆகிறது. இவர்களுக்கு முருகன் (5) என்ற மகன் இருந்தான்.

பக்கத்து வீட்டை சேர்ந்த மணி என்பவருடன் சுமதி அடிக்கடி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலையிலும் வேலு, சுமதி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் சுமதி தனது மகன் முருகன் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதில் முருகனின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து படுகாயம் அடைந்தான்.உடனடியாக அவனை காஞ்சி புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக செத்தான்.

இதுகுறித்து தூசி போலீசில் வேலு புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின் றனர்.
-----------------

இதே அந்த மனைவி செத்திருந்தால் கணவனும் மாமியாரும் தீவைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று முடிவு செய்து - எவ்வித சாட்சியமும் தேeவையில்லை - அவர்களை 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை தீட்டிவிடுவார்கள்.

ஏனெனில் இந்திய சட்டங்களை கட்டமைக்கும் பெரியமனிதர்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணப்ப்பாங்கின்படி மனைவி என்பவள் பண்பின் சிகரம்; பொறுமையின் சின்னம்; கணவனும் அவனுடைய பெற்றோரும், உடன்பிறந்த சகோதரிகளும் கிரிமினல்கள்.

இந்த நிலை மாறவேண்டுமானால் பெண்ணியவாதிகள் பேச்சை யாரும் பெரிதுபடுத்தக் கூடாது. ஊடகங்கள் நடுநிலையோடு செய்தி வெளியிடவேண்டும். மக்கள் தங்களை மூளைச்சலவைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உண்மையை உணரவேண்டும்.