பெருகிவரும் விவாக ரத்துக்கான காரணிகள் - பெண் வக்கீல்களின் கருத்து

தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் ஆண்களும், பெண்களும் சாதனை படைக்கும் நிலையில் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.


 • மாறி வரும் கலாசார சூழல், உயர் படிப்பு, தேவைக்கு அதிகமான சம்பளம் போன்றவைகளால் திருமணமான சில மாதங்களிலேயே பிரிய துடிக்கும் போக்கு, தம்பதிகளிடையே அதிகரித்து வருகிறது. பண்பாடு, கலாசாரம் மிக்க மதுரையிலும் விவாகரத்து கோரி கோர்ட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மதுரை குடும்ப நல கோர்ட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 600 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது 1600 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதவிர சப் கோர்ட், செஷன்ஸ் கோர்ட்டுகளில் குடும்ப நலம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. குடும்ப நல கோர்ட்டில் மட்டும் சராசரியாக ஒரு மாதத்திற்கு 60க்கு குறையாமல் விவாகரத்து, சேர்ந்து வாழ்தல், ஜீவனாம்சம், குழந்தை உரிமை கோரும் வழக்குகள் தாக்கலாகின்றன.

 • நடுத்தர, ஏழை வர்க்கத்தினரை விட படித்த, நன்கு வசதியுடைய குடும்பங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும் அதிகளவில் விவாகரத்து கோருகின்றனர். அவர்களில் பலர் பட்டதாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்களாக இருப்பதும் வேதனை அளிப்பதாகும். இன்றைய காலங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் சம்பாதிக்கும் நிலையுள்ளது.

 • சில இடங்களில் கணவனை விட மனைவி அதிகம் படித்தவராக, சம்பாதிப்பவராக இருக்கின்றனர். திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தாலும் கூட சுதந்திரமாக இருக்க வேண்டும் என கணவனும், மனைவியும் விரும்புகின்றனர். தேவைக்கு அதிகமாக பணம் சேரும் போது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடக்க முயலும் போது ஈகோ பிரச்னை தலைதுஷக்குகிறது. நாளடைவில் அவர்களிடையே இடைவெளியையும் ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க இரண்டு பேரும் விட்டு கொடுத்து சென்றால் பிரச்னை இருக்காது.

 • பெயர் சொல்ல விரும்பாத மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், "அதிக படிப்பு, கை நிறைய சம்பளம் ஆகியவற்றை எதிர்பார்த்து திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. குடும்ப நடத்த பணம் போதும், மகள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என பெற்றோர் கருதுவதே இறுதியில் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகி விடுகிறது. குடும்பம் என்றால் என்ன? தாம்பத்ய வாழ்க்கையின் தத்துவம் என்ன? நல்லது, கெட்டது எது? என்பதை புரிந்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்த செல்லும் போது பிரச்னை ஏற்படுகிறது. எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு எப்படி அவசியமோ அதுபோல செக்ஸ் கல்வியும் அவசியம். குறிப்பிட்ட வயதானதும் செக்ஸ் கல்வி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


 • வக்கீல் ஜெயா இந்திரா பட்டேல்:

  கணவனுக்கும், மனைவிக்கும் ஏற்படும் ஈகோ பிரச்னை தான் விவாகரத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன. இன்று தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர் வளர்ச்சி எதிரொலியாக இளம் ஆண்களும், பெண்களும் அளவுக்கு அதிகமாக சம்பாதிக்கும் நிலை உள்ளது. தேவைக்கும் அதிகமாக வருமானம் வரும் போது செலவழிக்கத் தெரியாமல் பணத்தை இறைக்கின்றனர். தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர்.
  நாளடைவில் குடும்பத் திற்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கோர்ட்டுகளுக்கு வருகின்றனர். ஆரம்பத்திலேயே யாராவது ஒருவர் விட்டு கொடுத்து பொறுமையாக போனால் எந்த பிரச்னையும் வராது. விட்டு கொடுக்காத பட்சத்தில் பிரச்னை தான். சில வழக்குகளில் பிரிந்து போகயிருந்த கணவனும், மனைவியும் ஒன்றாக சேர்ந்து வாழ விரும்பினாலும் கூட அவர்களது பெற்றோர்களுக்கு உள்ள ஈகோ காரணமாக சேர்ந்து வாழ முடியாமல் போய் விடுகிறது. • குடும்ப நல கோர்ட் ஆலோசகர் சித்ரா:

  திருமணமான தம்பதியரிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. கணவனும், மனைவியும் தனித்தனி நபர்கள். தன்னை போல இருக்க வேண்டும். தன்னை போல மாற வேண்டும் என ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர்.. அதற்கு மாறாக அமையும் போது பிரச்னை ஏற்படுகிறது.. ஏதாவது ஒரு கருத்து வேறுபாடு ஏற்படும் போது யாராவது ஒருவர் அமைதியானால் எந்த பிரச்னையும் ஏற்படாது. மேலும் இன்றைய இளம் பெண்களும், ஆண்களும் நிழலுக்கும், நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாகவுள்ளனர்.  அவர்களுக்கு பெற்றோர் நல்லது கெட்டதை விளக்க வேண்டும். சிறு வயது திருமணம் அல்லது காலம் கடந்த திருமணம் போன்றவையும் திருமண முறிவுகளுக்கு காரணங்களாகிவிடுகிறது. மேலும், குடும்பத்தில் இரண்டு பேரும் சம்பாதிக் கும் நிலையில் பிரச்னை ஏற்படும் போது அவரவர் விருப்பத்திற்கு செயல்படுகின்றனர். வேறு நபர்களுடன் தொடர்பு வைத்து ஆறுதல் தேட முயற்சிக்கின்றனர். இவையும் விவாகரத்து அதிகரிப்பதற்கு காரணங்கள்.

 • நன்றி: தினமலர்.

வரதட்சணை கொடுமை புகார் - நிறைமாத கர்ப்பிணி அலைக்கழிப்பு

சென்னை : வரதட்சணை கொடுமை புகார் தொடர்பாக நிறைமாத கர்ப்பிணியை 150 கி.மீ., துஷரம் அலைய வைத்ததாக கரூர் பெண் போலீசார் மீது மாநில மனித உரிமை கமிஷனில் புகார் கூறப்பட்டுள்ளது.


சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த ராதா என்பவர் சார்பில் வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

எனது சகோதரருக்கும் ஜான்சி என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 2ம் தேதி
சகோதரருடன் தகராறு செய்து விட்டு, ஜான்சி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
எங்கள் குடும்பம் மீது கரூர் போலீசில் வரதட்சணை கொடுமை புகார் கொடுத்தனர். சேலம்
ஆத்துஷரில் கணவனுடன் வசித்து வந்த எனது சகோதரி சரஸ்வதி நிறைமாத கர்ப்பிணி. அவரை
வலுக்கட்டாயமாக கரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து சட்டவிரோத காவலில்
வைத்தனர். அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை. இதனால் வாந்தி எடுத்து மயங்கி
விழுந்தார். கர்ப்பிணியாக இருந்த போதிலும் கருணை காட்டாமல் மனிதாபிமானமற்ற முறையில்
போலீசார் நடந்து கொண்டனர்.இதையடுத்து வக்கீல்கள் எஸ்.ஜெயக்குமார், வி.எஸ்.சுந்தர்
ஆகியோரை தொடர்பு கொண்டேன். அவர்கள் போலீஸ் உயர் அதிகாரி ராஜாவிடம் பேசினர். அவரது
தலையீட்டால் எனது சகோதரி விடுவிக்கப்பட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். எனது சகோதரியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கரூர்
இன்ஸ்பெக்டர் ஷரீனா, கான்ஸ்டபிள்கள் பானுமதி, பரிமளம் உட்பட போலீசார் சித்ரவதை
செய்துள்ளனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

--------------------

செய்தி : தினமலர்

இப்படியும் சில குடும்பங்கள்

பொதுவாக இட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே வாடகைக்கு
குடியிருப்பவர்கள் கோர்ட் உத்தரவுபடி வெளியேற்றப்படுவர். ஆனால், மிகவும் அரிதாக,
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மகன் மற்றும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்ற
கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மும்பையில் புறநகர் பகுதியான விலே பார்லியில் தங்கியிருக்கும் வயதான தம்பதிகளுக்கு ஒரு மகனும், மருமகளும் உள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் வீடு வயதான தாய்க்கு சொந்தமானது. மகன் மற்றும் மருமகள் இடையே தினமும் சண்டை தான். ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வயதான தம்பதியின் மகன் கோர்ட்டுக்கு சென்று விட்டார். அந்த வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்ற வேண்டும் என்ற மகனின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக மாமியாருக்கும், மருமகளுக்கும் தினமும் மோதல் தான். ஒருவர் மீது மற்றொருவர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்து கொண்டனர். ஆனால், பிரச்னை தான் தீரவில்லை. இறுதியில் வயதான பெண், வக்கீல் நிதின் வாட்கார் என்பவர் உதவியுடன் செசன்ஸ் கோர்ட் கதவுகளை தட்டினார்.

"மகன் மற்றும் மருமகள் தினமும் போடும் சண்டையால் வயதான தம்பதியாகிய எங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, மகன் மற்றும் மருமகளை வீட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.வயதான தம்பதிகளில் பெண்ணுக்கு 76 வயதாகிறது; ஆணுக்கு 80 வயதாகிறது. அவர்கள் கோர்ட் கதவுகளை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் பெயர்களை வெளியிடவும் மறுப்பு தெரிக்கப் பட்டது. இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.பி. மாலிக் விசாரணை செய்தார். அந்த வீட்டில் இருந்து மகனும், மருமகளும் நான்கு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இடைக்கால உத்தரவும் பிறப்பித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் மகனும், மருமகளும் வெளியேற்றப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

கள்ளக்காதலனுடன் மனைவி சல்லாபம் கையும் - களவுமாக கணவனிடம் சிக்கினார்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே இருப்பது ராஜகீழ்ப்பாக்கம். இங்குள்ள சின்மயா காலனியைச் சேர்ந்தவர் அன்பழகன் (28). டியூசன் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி (25) தி.நகரில் உள்ள ஒரு "கால் சென்ட்"டரில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அன்பழகன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பக்க கதவு மூடியிருந்தது. "காலிங் பெல்" அடித்தும் கதவு திறக்காததையடுத்து மனைவியின் மொபைல் போனில் அன்பழகன் அழைத்தார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. வெகுநேரம் கழித்து மகாலட்சுமி கதவைத் திறந்தார். சந்தேகமடைந்த அன்பழகன் நேராக "பெட் ரூம்" செல்ல முயன்றார். அப்போது, வேகமாக சென்ற மகாலட்சுமி "பெட்ரூம்" கதவை மூடினார். மேலும் சந்தேகமடைந்த அன்பழகன், "பெட்ரூம்" கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் சுற்றுச் சுவரை தாவி ஒருவர் குதிப்பதை பார்த்தார். உடனே, அந்த நபரை துரத்தி பிடித்தார் அன்பழகன். மனைவியையும், அந்த நபரையும் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமியின் கள்ளக்காதலன் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் அமீது என்பவரின் மகன் ரப்பானி (29) என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்ததும் தெரியவந்தது. மகாலட்சுமி பணிபுரியும் "கால்சென்ட்"டரில் ரப்பானியும் பணிபுரிந்து வருவதும். ஒன்றரை வருடமாக இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். "நான் ரப்பானியுடன் தான் வாழ்வேன். எனது பெண் குழந்தையும் ரப்பானிக்கு பிறந்தது தான்" என்று போலீசாரிடம் வாதிட்டார். அதைக் கேட்ட மறு நிமிடமே, "மனைவி வேண்டாம்" என்று அன்பழகன் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

அன்பழகன், அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் கள்ளக்காதலன் ரப்பானி ஆகிய மூன்று பேரும் மேடவாக்கத்திலுள்ள ஒரே கல்லுரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரியில் படிக்கும் போது அன்பழகனுக்கும், மகாலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி வேலைபார்த்த அதே "கால்சென்ட்"டரில் ரப்பானிக்கும் பணி கிடைத்துள்ளது. மகாலட்சுமியும், ரப்பானியும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தி: "தினமலர்"