கள்ளக்காதலனுடன் மனைவி சல்லாபம் கையும் - களவுமாக கணவனிடம் சிக்கினார்

சென்னையை அடுத்த சேலையூர் அருகே இருப்பது ராஜகீழ்ப்பாக்கம். இங்குள்ள சின்மயா காலனியைச் சேர்ந்தவர் அன்பழகன் (28). டியூசன் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி மகாலட்சுமி (25) தி.நகரில் உள்ள ஒரு "கால் சென்ட்"டரில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் மூன்று வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு அன்பழகன் வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பக்க கதவு மூடியிருந்தது. "காலிங் பெல்" அடித்தும் கதவு திறக்காததையடுத்து மனைவியின் மொபைல் போனில் அன்பழகன் அழைத்தார். அப்போதும் கதவு திறக்கப்படவில்லை. வெகுநேரம் கழித்து மகாலட்சுமி கதவைத் திறந்தார். சந்தேகமடைந்த அன்பழகன் நேராக "பெட் ரூம்" செல்ல முயன்றார். அப்போது, வேகமாக சென்ற மகாலட்சுமி "பெட்ரூம்" கதவை மூடினார். மேலும் சந்தேகமடைந்த அன்பழகன், "பெட்ரூம்" கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் சுற்றுச் சுவரை தாவி ஒருவர் குதிப்பதை பார்த்தார். உடனே, அந்த நபரை துரத்தி பிடித்தார் அன்பழகன். மனைவியையும், அந்த நபரையும் சேலையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் மகாலட்சுமியின் கள்ளக்காதலன் மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த அப்துல் அமீது என்பவரின் மகன் ரப்பானி (29) என்பதும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்ததும் தெரியவந்தது. மகாலட்சுமி பணிபுரியும் "கால்சென்ட்"டரில் ரப்பானியும் பணிபுரிந்து வருவதும். ஒன்றரை வருடமாக இருவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மகாலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். "நான் ரப்பானியுடன் தான் வாழ்வேன். எனது பெண் குழந்தையும் ரப்பானிக்கு பிறந்தது தான்" என்று போலீசாரிடம் வாதிட்டார். அதைக் கேட்ட மறு நிமிடமே, "மனைவி வேண்டாம்" என்று அன்பழகன் போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.

அன்பழகன், அவரது மனைவி மகாலட்சுமி மற்றும் கள்ளக்காதலன் ரப்பானி ஆகிய மூன்று பேரும் மேடவாக்கத்திலுள்ள ஒரே கல்லுரியில் ஒன்றாக படித்தவர்கள். கல்லூரியில் படிக்கும் போது அன்பழகனுக்கும், மகாலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மகாலட்சுமி வேலைபார்த்த அதே "கால்சென்ட்"டரில் ரப்பானிக்கும் பணி கிடைத்துள்ளது. மகாலட்சுமியும், ரப்பானியும் ஏற்கனவே நண்பர்கள் என்பதால் நெருங்கி பழகியுள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தி: "தினமலர்"

4 மறுமொழிகள்:

')) said...

இ.பி.கோ 498அ வுக்கும் இச்செய்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? நான் கூறியது சட்டப் பிரிவையே. பதிவரை அல்ல.

மகாலட்சுமி ஒன்றும் பொய் வழக்கு போட்டதாகத் தெரியவில்லையே. அன்பழகன் மற்றும் மகாலட்சுமியின் இந்த விவகாரம் உங்கள் வலைப்பூவுக்கு அவசியமா? அது அவர்கள் தனிப்பட்ட சோகம்தானே. யோசியுங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

உங்கள் கருத்துக்கு நன்றி.

இந்த செய்தியை இங்கு இட்டதன் நோக்கம், மணமான பெண்கள் எத்தகைய மனப்பான்மையுடன் இப்போது இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவும், திருமணம் என்னும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பு பெண்கள்தம் மனத்தில் எவ்வளவு தூரம் மதிப்பற்றுப் போயிற்று என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் 498அ வழக்குகள் பலவற்றின் அடித்தளத்தில் இதுபோன்ற கள்ளக் காதல்கள் ஒளிந்திருப்பதை பல கேசுகளில் காணமுடிகிறது.

இத்தகைய நடைமுறைகள் ஒன்றோடொன்று பின்னி நிற்பது நம் சமுதாயத்தின் சாபக்கேடு!

')) said...

கல்ப் நியூஸ் பத்திரிக்கையின ்(gulfnews.com) வாசகன். அப்பத்திரிக்கையில் எவ்வளவு கொடிய குற்றவாளியாயினும் அவர்களுடைய முழுப் பெயர்கள் வெளியிடுவதில்லை. வெறும் இனிஷியல் மட்டுமே போடுவார்கள். இத்தகைய நல்ல நடைமுறை நம் பத்திரிக்கைகள் கொண்டுவரலாமே.

Anonymous said...

//மணமான பெண்கள் எத்தகைய மனப்பான்மையுடன் இப்போது இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டவும், திருமணம் என்னும் கட்டுக்கோப்பான சமூக அமைப்பு பெண்கள்தம் மனத்தில் எவ்வளவு தூரம் மதிப்பற்றுப் போயிற்று என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் 498அ வழக்குகள் பலவற்றின் அடித்தளத்தில் இதுபோன்ற கள்ளக் காதல்கள் ஒளிந்திருப்பதை பல கேசுகளில் காணமுடிகிறது.//

மிகச் சரி!

முழுமையை அலசும்போது, அதன் பிரிக்க முடியாத அங்கமான இது போன்ற போக்குகளையும் சேர்த்துப் பார்க்காமல் ஒதுக்க முடியாது.

-நல்லவளுக்கு நல்லவன்.