ஆமாம் அய்யா, அப்படித்தான் மெத்தப் படித்தவர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act, 2005) வரையறுத்துள்ளபடி வன்முறை என்பது ஆண்கள் மட்டும்தான் செய்வான். பெண்கள் வன்முறையே செய்யமாட்டார்கள் என்றுதான் இந்தச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்கள் மீது இந்தச் சட்டத்தை ஏவி விட்டு வன்கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள் நடுத்தர வர்க்க இளம் மனைவிகள். அதைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் அவர்கள்.
இந்தச் செய்தியை வாசியுங்கள். மென்னியலாளரின் வக்கிரங்கள் வெளிப்படும்:
குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது
அக்டோபர் 09,2009, செய்தி: தினத்தந்தி.
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கவர்னகிரி சிலோன் காலனி ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி.
அவருக்கும், அதே பகுதி சுப்பையா மகள் ரேவதிக்கும்(22), எட்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ரேவதிக்கு, செப்., 24ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஏழே மாதத்தில் பிறந்த அக்குழந்தைகள் இங்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டன. படுகொலை: நேற்று காலை 7.30 மணியளவில் தாய்ப்பால் தருவதற்காக அக்குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த தாய் ரேவதியிடம் தரப்பட்டன. அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார்.
மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார். தாய்ப்பால் குடித்தவுடன் அக்குழந்தைகள் திடீரென மயங்கிவிட்டதாக, ரேவதி டாக்டர்களிடம் நாடகமாடினார். அக்குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் லூர்டஸ் அல்பிலோ, அவை கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பிறந்த 14வது நாளில் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொலை செய்த தாய் ரேவதி, பாட்டி தேனிலாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.
"தலைப்பிரவத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததோடு, அவை குறைப்பிரசவமாக இருந்ததால் அவற்றை எதிர்காலத்தில் நன்றாக வளர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், கொலை செய்தோம்” என, இருவரும் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த கொடூர கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள்!
குறிச்சொற்கள் biased laws, dv act, victims, குடும்ப வன்முறை, கொலை, சட்டம்-நீதி, ராமாத்தாள்
தாலியே தேவை இல்லை - ஆனால் தம்பதிகள்
இந்த வாரக் குமுதம் இதழில் வெளிவந்துள்ள கவர் ஸ்டோரி இது:
சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை. நாற்பதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம். ஃப்ரீயா இருக்கணும். முடிஞ்சவரை என்ஜாய் பண்ணணும். இரண்டு இளம்பெண்கள். கூடவே அலுவலக ஆண் நண்பர்கள். ஒன்றாகச் சேர்ந்து அபார்ட்மெண்ட்டில் `குடும்பம்' அமைக்கிறார்கள்.
லிவிங் டூகெதர். 'தாலியே தேவையில்ல... நீதான் எம் பொஞ்சாதி'னு ஒரு பாட்டு வருமே. அதே சங்கதிதான். எதையும் ருசி பார்க்கத் துடிக்கும் சாஃப்ட்வேர் ஊழியர்களின் இந்த 'ஜஸ்ட் லைக் தட்' செக்ஸ் வாழ்க்கைதான் இப்போதைய லேட்டஸ்ட் பரபரப்பு.
"லேடீஸ் ஹாஸ்டல் செம போர். நமக்குன்னு டி.வி. வச்சுக்க முடியாது. சத்தமா பாட்டுக் கேட்க முடியாது. 'லேப்டாப்' மாதிரியான காஸ்ட்லி பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்ல. நைட்டுல சீக்கிரமா வந்துரணும், பாய் ஃப்ரெண்ட்ஸுங்க பார்க்க வரக்கூடாதுனு ஏகப்பட்ட கண்டிஷன். முப்பதாயிரம் சம்பளம் வாங்கி எதுக்காக இப்படி கஷ்டப்படணும்? ஸோ... அபார்ட்மெண்ட்தான் வசதி. இருபதாயிரம் வாடகை. நாலு லட்சம் அட்வான்ஸ். ஆபிஸ் நண்பர்களோட ஷேர் பண்ணிகிட்டு ஒண்ணா தங்குறோம். இதுல தப்பு என்ன இருக்கு?'' என்கிறார் பூரணி. பிரபல ஐ.டி கம்பெனிகளின் சாஃப்ட்வேர் டெவலப்பர்.
வேளச்சேரியில் கொத்துக் கொத்தாய் நிறைய அடுக்குமாடிக் கட்டங்கள். அதிகபட்சமாய் பதினைந்து மாடிகள் கூட உண்டு. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்டில் சுகந்திக்கு துணி துவைப்பது, வீடு கழுவுவது என வீட்டு வேலை. ``எல்லாமே பெரிய எடத்துப் புள்ளைங்க சார்... பொண்ணுங்க. பசங்கனு கும்பலா குடும்பம் நடத்திக் கிட்டிருக்காங்க'' என்கிறார் அதிர்ச்சியாக.
இப்படிப் போகிறது கதை. ஆனால் ஆண்களே, நீங்க ஜாலியா இருந்திடலாம்னு நெனைக்காதீங்க! பெண்கள் எப்படி வேணா இருக்கலாம். ஆனால் ஆண்கள் பாடு ஆபத்து. ஏன்னா கேட்கறீங்க? இதோ இன்றைக்கு தினமலரில் வந்துள்ள செய்தியைப் படிங்க:
கால் சென்டர் பெண் ஊழியர் கற்பழிப்பு: காதலன் உட்பட இருவர் கைது
சென்னை: கால் சென்டரில் பணிபுரிந்தவரை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காதலன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, பெரம்பூர் பந்தர் கார்டனைச் சேர்ந்தவர் உமா. இவரது மகள் சந்திரா(25). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) வேளச்சேரியில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மாம்பாக்கத்தைச் சேர்ந்த அகமது (28) என்பவரும் பணிபுரிந்து வருகிறார். ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இரண்டு வருடமாக காதலித்து பல இடங்களுக்கும் சென்று வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்திராவுக்கு பிறந்த நாள்.
அகமது தனது நண்பர் சுரேஷ் என்பவருடன் மடிப் பாக்கத்தில் உள்ள மற்றொரு நண்பரின் வீட்டிற்கு சந்திராவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மது விருந்துடன் கேக் வெட்டி கொண்டாடினர். அன்றிரவு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வீடு திரும்பியதும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்திரா கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்வதற்கு அகமது ஒத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இது குறித்து உமா செம்பியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி கற்பழித்ததாக அகமதுவையும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சுரேஷையும் கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எப்படி இருக்கிறது கதை. முழுதும் உடன்பட்டு உல்லாசமாக இருந்தாளாம். அது எப்படி கற்பழிப்பாகும் என்பது புரியவில்லை!
ஒரு ஆணை ஒரு பெண் தன்னுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தி அழைத்தால், "எந்தவித எதிர்பார்ப்புமின்றி முழு சம்மதத்துடன்தான் இன்னாருடன் கலவியில் ஈடுபடுகிறேன்" என்று சாட்சிகள் முன்னிலையில் எழுதி வாங்கிக் கொண்டு, ஆடியோ, வீடியோ ரெகார்டு செய்துகொண்ட பின்னர் மேல் நடவடிக்கைகளி ஈடுபட்டால்தான் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது போலிருக்கிறது! இல்லாவிடில் அனைத்து ஆணெதிர்ப்புச் சட்டங்களும் ஆணின்மேல் பாயும் அபாயம் இருக்கிறது.
கற்பழிப்புச் சட்டம் அடிப்படையில் இப்படிச் சொல்கிறது:
As per Section.375 of IPC a man is said to commit the offence of rape with a woman under the following six circumstances:
1. Sexual intercourse against the victims will,
2. Without the victims consent,
3. With her consent, when her consent has been obtained by putting her or any person that she may be interested in fear of death or hurt,
4. With her consent, when the man knows that he is not her husband,
5. With her consent, when at the time of giving such consent she was intoxicated, or is suffering from unsoundness of mind and does not understand the nature and consequences of that to which she gives consent,
6. With or without her consent when she is under sixteen years of age.
ஆனால் அதை எப்படி வேண்டுமானாலும் கோர்ட்டுக்கள் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் பொதுவாக எல்லாம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும். இங்கு சென்று பாருங்கள்:
http://www.legalserviceindia.com/articles/rape_laws.htm
ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
சட்டம் படுத்தும் பாடு
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, misuse, ஆண்பாவம், கொடுமை, சட்டம்-நீதி
இப்படியும் சில குடும்பங்கள்
பொதுவாக இட உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தால் மட்டுமே வாடகைக்குமும்பையில் புறநகர் பகுதியான விலே பார்லியில் தங்கியிருக்கும் வயதான தம்பதிகளுக்கு ஒரு மகனும், மருமகளும் உள்ளனர். அவர்கள் தங்கி இருக்கும் வீடு வயதான தாய்க்கு சொந்தமானது. மகன் மற்றும் மருமகள் இடையே தினமும் சண்டை தான். ஒரு கட்டத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வயதான தம்பதியின் மகன் கோர்ட்டுக்கு சென்று விட்டார். அந்த வீட்டில் இருந்து மனைவியை வெளியேற்ற வேண்டும் என்ற மகனின் கோரிக்கையை கோர்ட் நிராகரித்து விட்டது. இதன் தொடர்ச்சியாக மாமியாருக்கும், மருமகளுக்கும் தினமும் மோதல் தான். ஒருவர் மீது மற்றொருவர் போலீஸ் நிலையத்திலும் புகார் கொடுத்து கொண்டனர். ஆனால், பிரச்னை தான் தீரவில்லை. இறுதியில் வயதான பெண், வக்கீல் நிதின் வாட்கார் என்பவர் உதவியுடன் செசன்ஸ் கோர்ட் கதவுகளை தட்டினார்.
குடியிருப்பவர்கள் கோர்ட் உத்தரவுபடி வெளியேற்றப்படுவர். ஆனால், மிகவும் அரிதாக,
பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மகன் மற்றும் மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்ற
கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"மகன் மற்றும் மருமகள் தினமும் போடும் சண்டையால் வயதான தம்பதியாகிய எங்களால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, மகன் மற்றும் மருமகளை வீட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.வயதான தம்பதிகளில் பெண்ணுக்கு 76 வயதாகிறது; ஆணுக்கு 80 வயதாகிறது. அவர்கள் கோர்ட் கதவுகளை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களின் பெயர்களை வெளியிடவும் மறுப்பு தெரிக்கப் பட்டது. இந்த வழக்கை கூடுதல் செசன்ஸ் நீதிபதி ஆர்.பி. மாலிக் விசாரணை செய்தார். அந்த வீட்டில் இருந்து மகனும், மருமகளும் நான்கு வாரங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று இடைக்கால உத்தரவும் பிறப்பித்தார். கோர்ட் உத்தரவின் பேரில் மகனும், மருமகளும் வெளியேற்றப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்று வக்கீல்கள் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
பொய் வழக்குகளால் பாதிக்கப்படுவதை எதிர்த்து ஒரு வழக்கு!
பொய் வரதட்சிணைக் கொடுமை வழக்கில், அவசரப்பட்டு, விசாரணையின்றி நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? உங்கள் உறிமைகள் பறிக்கபட்டனவா? உங்கள் தாய், தந்தை, உடன் பிறந்தோர், உறவினர் போன்றோர் கைது செய்ய்ப் பட்டனரா? பொய் டவுரி வழக்கில், விசாரணையின்றி, முன் மீன் எடுக்கவும் நேரமின்றி, வக்கீலை அணுகவும் நேரமின்றி, நீங்கள் கைது செய்யபட்டீர்களா? அரசியல் சட்டத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய உங்கள் அடிப்படை மனித உறிமைகள் மீறப்பட்டதாகக் கருதுகிறீர்களா?
இந்தியாவில் இதுபோல் பாதிக்கப் பட்டோர் நலனுக்காகவே தொடங்கப்பட்டுள்ள Save Indian Family Foundation - ன் அங்கத்தினர் ஒருவர் இத்தகைய அநியாயமான, விசாரணையில்லாக் கைதுகளை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்க இருக்கிறார். இந்த வழக்கில் அவர் முன்வைக்கும் கோரிக்கைகள்:-
- குற்றம் சாட்டப்பட்டவர், உண்மையில் குற்றவாளி தானா என சரியாக விசாரிக்கப் பட வேண்டும்
- குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றங்களை அணுக , நீதி உதவி கோர போதுமான நேரம் கொடுக்கப்ப்பட வேண்டும்
அவருடைய கோரிக்கைகளை வலுப்படுத்த ஆவலா?
ஆமெனில் உங்கள் விபரங்களை
ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு உடன் அனுப்பவும். அரசியல் சாசன சட்ப்படி (Constitution of India) தனி மனித சுதந்திரம் என்பது ஒவ்வோர் இந்தியனுக்கும் கொடுக்கபட்ட ஒரு இன்றியிமையாத சொத்து. நம் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வது நம் கடமை.
உடன் செயல் படுவீர்!!
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, law, misuse, victims, கொடுமை, சட்டம்-நீதி, சமூகம், பொய் வழக்கு
பொய் வரதட்சிணை வழக்குகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா
"ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இப்ப ஆளையே ...." என்று ஒரு செலவாடை உண்டு. அது போலவே சாமானிய மனிதர்களை விழுங்கிகொண்டிருக்கும் பொய் டவுரி வழக்குகள் இப்போது பிரபலங்களையும் மந்திரிகளையும் தாக்கத் தொடங்கியிருக்கின்றன.
இத்தகைய வழக்குகளின் பின்னணி:-
பெண்களை "டவுரி" கொடுமையிலிருந்து காக்க சுமார் 20 ... 25 ஆண்டுகள் முன் உருவாக்கப்பட்ட சில சட்டங்கள் இன்று புதுமைப் பெண்கள் என்ற முக்காடில் ஒளிந்திருக்கும் சில விஷமிப்பெண்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. "..உன் மீதும், உன் வயோதிகத் தாய் மீதும், உன் வீட்டில் நல்ல வேலையில் இருப்போர் மீதும் போலீஸில் புகார் செய்வேன்.." என்று சில மனைவிகள் கணவன்மார்களை மிரட்டுவது சகஜமாகிவிட்டது. பழி தீர்க்க அலையும் சில பெண்களும், தவரான பாலியல் குற்றங்களில் பிடிபட்ட பெண்களும், முன்னமே திருமணம் ஆகி அதை மறைத்து மீண்டு மணமுடிக்கும் சில பெண்களும், குட்டு வெளிப்பட்டால், தான் தப்பித்துக்கொள்ளவும், ஆண்கள் மீது பழிபோடவும், பொய் டவுரி வழக்குகளை தாக்கல் செய்துவிடுகின்றனர். புதுமைப்பெண் என்ற பெயரில் பலர் இந்த மிரட்டலில் பணம் கரக்கின்றனர். பணம் கொடுக்க முன் வராத ஆண்கள், அப்பாவிகளாய் இருப்பவர் ஆகியோர் கைது செய்ப்பட்டு, அவர்களும் அவர்களது வீட்டாரும் அவமானத்துக்குள்ளாகுகின்றனர். இந்தப் போக்கை உச்ச நீதி மன்றமே, "legal terrorism", அதாவது "சட்டத்த்தை வைத்தாடும் பயங்கரவாதம்" என்று கூறியிருக்கிறது - case of Sushil Kumr Sharma Vs Union of India - 2005.
பாதிக்கப்பட்ட பிரபலங்கள்:-
- நடிகர் திரு பிரசாந்த் மீது டவுரி வழக்கு தொடர்ந்த அவரது மனைவி (என்று ஆஜரான) கிருகலக்ஷ்மிக்கு முன்னமே ஒரு திருமணம் ஆகியிருந்த குட்டு வெளிப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். முன் மணத்தை மறைத்து, தன்னை திருமணம் செய்து கொண்ட ஆதாரங்களை பிரசாந்த் இப்போது நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் டவுரி வழக்கு தொடரும் முன் பிரசாந்த் கிருகலக்ஷ்மியுடன் வாழத்தயார் என்று நீதிமன்றத்தில் பெட்டிஷன் கொடுத்திருந்தார் (இப்படியும் சில அப்பாவிகள்!)!. அதன் பின்பும் கிருகலஷ்மி, பிரசாந்தின் தாய் தந்தை என்று முதியவர்களையும் சேர்த்து டவுரி வழக்கு தொடுத்தார். எல்லோரையும் கைது செய்யும் பொருட்டு போடப்பட்ட இந்த திட்டம் இப்போது அம்பலமாகியுள்ளது!
- அர்ஜுன் சிங் இந்த வரிசையில் சமீபத்தில் அகப்பட்டவர் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் சிங்கின் பேரனின் மனைவி ப்ரியங்கா, அர்ஜுன் சிங் மீது டவுரி வழக்குத் தொடுத்து இருக்கிறார். இது பொய்யா மெய்யா என்று நிரூபிக்கப் படவில்லை. இந்த வழக்கு டில்லியில் பெரும் பரபரப்பை ஏர்ப்படுத்தியுள்ளது. அர்ஜுன் சிங் பென்சு கார் ஆகியவை கேட்டு தன்னை வதைப்பதாய் குற்றம் சாட்டியுள்ளார் பேரனின் மனைவி ப்ரியங்கா. தனக்கும் இந்த திருமணத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி தப்பிக்கப்பார்கிறார் மந்திரி !! அர்ஜுன் சிங் ஒரு மந்திரி என்பதாலோ என்னவோ, அவர் இன்னமும் கைது செய்ப்பட்டவில்லை. சாதாரண மனிதராக இருந்தால் "இந்தா, சூ சூ" என்பதற்குள் கைதாகி விடுவார்கள். அத்தகைய விஷக் கொடுக்கு இந்தச் சட்டம்!
அர்ஜுன் சிங் பல ஆண்டுகள் மத்திய பிரதேச மாநிலத்தின் முதன் மந்திரியாக இருந்தவர். அதன் பின் கவர்னராகவும், மத்திய மந்திரி சபையில் முக்கியப் பொறுப்புகளில் கேபினெட் அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நீண்ட நெடுக பணியாற்றுபவர். அரசியலில் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருந்த வருக்கு ஒரு பெண்ணிடமிருந்து வரதட்சிணை வாங்கவேண்டிய தேவை என்ன? இதிலிருந்தே தெரியவில்லையா, அந்தப் பெண் தான் பிரபலமாவதற்காகவும், பெரிய மனிதர்களை இதுபோல் பயமுறுத்தினால் கேட்டதை செய்வார்கள் என்பதாலும் இதுபோன்ற வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பது?
நாடே கண்டு தவிக்கும் இந்த பொய் டவுரி வழக்குகள் எங்கு போய் முடியும்?
இத்தகைய வன்கொடுமைச் சட்டத்தினால் தீண்டப்பட்ட கணவர்கள், மர்றும் அவர்தம் குடும்பத்தினர்களின் கதி என்ன?
இறைவனே முடிவுசெய்யவேண்டும்!!
குறிச்சொற்கள் 498a, harassment, law, misuse, victims, ஆண்பாவம், கொடுமை, சட்டம்-நீதி, பொய் வழக்கு, வரதட்சணை
பொய் கற்பழிப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
"பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இது போல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
ம.பி. மாநிலத்தை சேர்ந்தவர் ராது. கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி, ராது தனது தாயின் உதவியுடன், 14 வயதான தனது முறைப்பெண் சுமன்பாய் என்பவரை கற்பழித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ம.பி., கோர்ட், ராதுவுக்கும் அவரது தாய்க்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ம.பி., ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அப்பீல் வழக்கு விசாரணைக்கு இடையில் ராதுவின் தாய் இறந்து விட்டார். அப்பீல் வழக்கில், ராதுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ராது மற்றும் அவரது தாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமன்பாயின் தந்தை மாங்கிலால் என்பவர், ராதுவின் தந்தை நாதுவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை ரத்து செய்யும்படி வலியுறுத்தி வந்தார் மாங்கிலால். இதற்கு நாது சம்மதிக்காததால், பொய் புகார் கூறி, மாங்கிலால் பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராகு தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் கொண்ட பெஞ்ச், ராதுவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:
ராது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. ராது குற்றம் செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கீழ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தவறை கண்டுபிடிப்பதில் தவறி விட்டன.எனவே, இந்த அப்பீல் மனுவை ஏற்று, கீழ் கோர்ட்டுகள் மற்றும் ம.பி., ஐகோர்ட் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்கும்போது, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதுபோல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
---------------
செய்தி: "தினமலர்"
குறிச்சொற்கள் 498a, law, misuse, victims, சட்டம், சட்டம்-நீதி, சமூகம், பொய் வழக்கு
ஒரு முஸ்லிம் அன்பர் படும் பாடு!
முஸ்லிம்கள் பென்களை அடிமைப் படுத்துவதாக ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. அது எவ்வளவு பொய் என்பதை சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்!
-------------------------
மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி விவாகரத்து மற்றும் 15 லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்ற பெண் இன்ஸ்பெக்டர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத் ஆம்பர்பேட் ஓமர் நகரைச் சேர்ந்தவர் ஹபீப் குரோஷி. இவரது மகன் காலித் குரோஷி (33). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரில் கூறியிருப்பதாவது:-
இவ்வாறு காலித் குரோஷி புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரவி உத்தரவிட்டார். அம்மனு திருவல்லிக்கேணி துணை கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
நான் துபாயில் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனக்கும் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த நிகாத் சுல்தானா என்பவருக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஐதராபாத்தில் வசித்து வந்தோம். இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வாரங்கள் தங்குவதற்காக சென்னையில் உள்ள சகோதரி வீட்டுக்கு வந்தேன். அங்கு கடந்த 15ம் தேதி இரவு பெண் போலீசார் வந்தனர். என்னையும் எனது பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அண்ணா சாலையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சென்ற பிறகு தான் என் மனைவி கொடுத்த புகாரின்பேரில் தான் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிந்தது. அப்புகாரில் என் குடும்பத்தினர் மீது வரதட்சணை உட்பட பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். அப்புகார் மனு மீது இன்ஸ்பெக்டர் கல்யாணி விசாரித்தார். இஸ்லாம் வழக்கப்படி விவாகரத்து செய்வதற்காக, மூன்று முறை சொல்லும் "தலாக்" என்பதை சொல்லச் சொல்லி போலீசார் என்னை வற்புறுத்தினர். என்னிடம் இருந்து ரூ.15 லட்சம் காசோலைகளாக பெற்றுள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
செய்தி: "தினமலர்"
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, misuse, victims, ஆண்பாவம், கொடுமை, சட்டம், சட்டம்-நீதி, சமூகம், பொய் வழக்கு

