கோபம் கொண்டு கணவன் பேசாவிட்டாலும் சட்டம் பாயும்

"மருமகளுக்கு மாமியார் சாப்பாடு தரவில்லை என்றால் கூட அதை வன்முறையாகக் கருதி, வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மாமியார் மீது நடவடிக்கை எடுக்கலாம்,'' என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சமூக நலத்துறை மற்றும் அண்ணா மேலாண்மை மையம் சார்பில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டம்' பயிற்சி துவக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா மேலாண்மை மையத்தின் இயக்குனர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார். சமூக நலத்துறையின் இயக்குனர் மணிவாசன் பேசுகையில், "குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாத்தல் சட்டத்தை தமிழக அரசு 2006ம் ஆண்டு கொண்டு வந்தது.

மனைவியை கணவர் அடித்தார் என்பதும் வன்முறை தான். மனதளவில் மனைவியை துன்புறுத்துவதும் வன்முறை தான். மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள இச்சட்டம் வழிகாட்டுகிறது,'' என்றார்.

மாநில மகளிர் ஆணையத் தலைவி ராமாத்தாள் பேசுகையில், "மனைவியை அடிப்பதும், உதைப்பதும் வன்முறை தான். அதேபோல மனைவியிடம் கோபப்பட்டு அவருடன் நான்கு நாட்கள் பேசாமல், சாப்பிடாமல் சில கணவர்கள் இருப்பார்கள். இதுவும் வன்முறையாக எடுத்துக் கொள்ளப்படும்,'' என்றார்.

மனைவியிடம் கோபம் கொண்டு கணவன் பேசாமல் இருந்தால் அது வன்முறை. உடனே கணவனை கைது செய்யலாம். ஆனால் கண்வன் மீது கோபம் கொண்டு மனைவி பேசாமல் இருந்தாலோ உணவு இட மறுத்தாலோ அது குற்றமேயில்லை. என்ன நியாயமடா இது!

மனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது!

கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்வாதி என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் சென்ற ஃபெப்ரவரியில் திருமணம் நடந்து இருவரும் அமேரிக்காவில் வசிக்கின்றனர். கணவர் இம்மாதம் 12-ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு தன் உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக வந்திருக்கிறார். உடனே அவருடைய மனைவி ஸ்வாதி போலீஸுக்கு ஒரு ஈமெயிலில் கணவர் வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த கணவரையும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரையும் இரவு 8 மணிக்கு கைது செய்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் அவர் அமேரிக்காவில் கொடுமை செய்யப்பட்டதாகவும் ,அங்கு கடுமையாக தாக்கப் பட்டதாகவும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகவும், இன்னும் என்னென்ன எழுதினால் சட்டத்தின் அத்தனை பிரிவையும் போட்டுத் தாக்க முடியுமோ எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் நடந்ததாகச் சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நடந்து அங்கு புகார் கொடுத்திருந்தால் அங்கு கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் பொய் புகார்களை இந்தியாவில் தானே கொடுக்க முடியும்!

ஆகையினால் இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இப்படியொரு திருமணம்தான் தேவையா?

சிந்தியுங்கள்!

இந்து திருமண சட்டம் குடும்பங்களை உடைக்கிறது - சுப்ரீம் கோர்ட் நீதிபதி!

புதுடெல்லி: இந்து திருமண சட்டம், குடும்பங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக குடும்பங்களை உடைக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வேதனையுடன் கூறினார்.இந்து திருமண சட்டம் 1955-ம் ஆண்டு இயற்றப்பட்டதாகும். 2003-ம் ஆண்டு வரை இந்த சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள விவாகரத்து தொடர்பான விதிகள் ஆங்கிலேய சட்டத்தில் இருந்து உருவாக்கப்பட்டதாகும்.
இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் சமீபகாலமாக கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் குவிந்து வருகின்றன. இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவிக்கையில் இந்து திருமண சட்டம் குடும்ப அமைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்தவர் கவுரவ் நாக்பால். இவருடைய மனைவி சுமேதா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பசாயத் சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:


குடும்பங்களை உடைக்கும் சட்டம்

குடும்பங்களை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்து திருமண சட்டம். ஆனால் தற்போது அந்த சட்டம் நேர் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்பங்களை இணைப்பதற்கு பதிலாக உடைப்பதற்குத்தான் அதிகம் பயன்படுகிறது. இந்து திருமண சட்டத்தின் அடிப்படையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுகளில் வழக்குகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. திருமணம் ஆகும்போதே விவாகரத்துக்கான முன் எச்சரிக்கை
மனுவையும் தாக்கல் செய்து விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாதிப்பு


கணவனும், மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து விடுகிறார்கள். ஆனால் இந்த பிரிவால் மோசமாக பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகள்தான். அதிலும் பெண் குழந்தையாக இருந்து விட்டால் அதன் எதிர்காலம் அதிகம் பாதிக்கும். அந்த பெண் குழந்தை, திருமணத்தின் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே குழந்தைகளின் நலனை நினைத்தாவது தம்பதிகள் தங்களுடைய சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும். தங்களை விட தங்கள் குழந்தையின் எதிர்காலம்தான் முக்கியம் என்று உணர வேண்டும்.

முன்னோர்கள், குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டின் நான்கு சுவர்களுக்கும் தீர்த்துக்கொள்வார்கள். தற்போது இருப்பதைப் போன்ற சிக்கல்களை அவர்கள் சந்தித்தது இல்லை. தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு தொழுநோயோ, மனநிலை பாதிப்போ இருந்தால் விவாகரத்து வழங்கலாம் என்று இந்து திருமண சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதியை பல தம்பதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள்.


இவ்வாறு நீதிபதி பசாயத் கூறினார்