மனைவி ஈமெயில் அனுப்பினால் கணவன் கைது!

கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஸ்வாதி என்பவர் அமெரிக்காவில் வசிக்கிறார். இவருக்கும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கும் சென்ற ஃபெப்ரவரியில் திருமணம் நடந்து இருவரும் அமேரிக்காவில் வசிக்கின்றனர். கணவர் இம்மாதம் 12-ம் தேதி விசாகப்பட்டினத்திற்கு தன் உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக வந்திருக்கிறார். உடனே அவருடைய மனைவி ஸ்வாதி போலீஸுக்கு ஒரு ஈமெயிலில் கணவர் வரதட்சிணை கொடுமை செய்ததாக புகார் கொடுத்தார். உடனே போலீசார் அந்த கணவரையும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரையும் இரவு 8 மணிக்கு கைது செய்துவிட்டனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் அவர் அமேரிக்காவில் கொடுமை செய்யப்பட்டதாகவும் ,அங்கு கடுமையாக தாக்கப் பட்டதாகவும், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாகவும், இன்னும் என்னென்ன எழுதினால் சட்டத்தின் அத்தனை பிரிவையும் போட்டுத் தாக்க முடியுமோ எல்லாவற்றையும் எழுதியிருக்கிறார். ஆனால் இவையெல்லாம் நடந்ததாகச் சொல்லப்படுகிற அமெரிக்காவில் ஒரு புகாரும் கொடுக்கவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்க மண்ணில் நடந்து அங்கு புகார் கொடுத்திருந்தால் அங்கு கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் பொய் புகார்களை இந்தியாவில் தானே கொடுக்க முடியும்!

ஆகையினால் இந்திய இளைஞர்களே, உங்களுக்கு இப்படியொரு திருமணம்தான் தேவையா?

சிந்தியுங்கள்!

2 மறுமொழிகள்:

')) said...

திருமணம் செய்து நன்றாக வாழ்ந்தவர்களையும் கொஞ்சம் பாருங்க இ.பி.கோ.

')) said...

அதையேதான் நானும் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். அது போன்றதொரு இணக்கமான வாழ்க்கையை முறிக்கும் வண்ணம் இத்தகைய ஒருசார்பு சட்டங்கள் செயல்படுகின்றன.

உங்களுக்கு அருகாமையிலுள்ள கோர்ட்டுகளுக்குச் சென்று பாருங்கள். நிலைமை புரியும்.