ஒண்ணுந்தெரியாத பாப்பா

பிப்ரவரி 27,2009 - தினமலர்

திருவாடானை: "மிஸ்டு கால்' மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி, குடும்பம் நடத்திய போலி இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் கனகவள்ளி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜனவரி முதல் தேதி இவருடைய மொபைலுக்கு மிஸ்டு கால் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், " சாரி ராங் நம்பர்' என கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின், அதே எண்ணில் மிஸ்டு கால் வரவே மீண்டும் கனகவள்ளி பேசினார். தனது பெயர் ஜெயக்குமார்(32) என்றும், மதுரையில் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறி போனை "கட்' செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது போனில் பேசினர். நாளடைவில் முகம் பார்க்காமல் காதலை வளர்த்துக் கொண்டனர்.

கடந்த 22ம் தேதி நான்கு சவரன் தங்க நகை, 18 ஆயிரம் ரூபாயுடன் மதுரை சென்ற கனகவள்ளி, அங்கு தனி வீட்டில் ஜெயக்குமாருடன் குடும்பம் நடத்தினார்.

இவரை தேடிய பெற்றோர் போலீஸ் உதவியுடன் கனகவள்ளியை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், அங்குள்ள தனியார் கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கனகவள்ளியை மீட்ட போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், " இன்ஜினியர் மாப்பிள்ளை என்ற ஆசையில் கனகவள்ளி சென்றுள்ளார். அடையாளம் தெரியாத ஆண்களுடன் இளம்பெண்கள் போனில் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

-----------

அந்தப் போலீசாருக்கு புதுமைப் பெண்களின் வேட்கைகள் புரியவில்லை. சுத்த பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! Pub களுக்குப் போய் இஷ்டத்திற்கு குடித்து விட்டுக் கும்மாளம் போடுவதும், கண்டவனோடு ஜல்சா பண்ணுவதும்தான் இன்றைய நாகரிகம். பெற்றோர்களோ, போலீசாரோ கண்டுவிட்டால் இருக்கவே இருக்கிறது “இவன் என்னைக் கற்பழித்துவிட்டான்” என்னும் அஸ்திரம்!

“கற்பு” என்பதே கெட்ட வார்த்தை என்றும், கற்பு - கற்பு என்று சொல்லியே எங்களை ஆணாதிக்க சமுதாயம் அமுக்கி வைத்துவிட்டது என்றும் அறைகூவலிடுவோர், கற்பழிப்பு சட்டத்தையும் எடுக்கச் சொல்லிப் போராடுவதுதானே? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க மாணவி ஆர்த்தி ஆர்வம்

வாங்கம்மா, வாங்க! நீங்கதான் பாக்கி.

ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் இங்க இருக்கிற AIDWA வக்கீல்கள் எல்லாரும் சேர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிச்சு, பல்லாயிரக்கணக்கான வயோதிகத் தாய்மார்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் பொய் வழக்குகளில் கைது செய்வித்து அதனால் பெரும் லாபமடைந்து பெண் குலத்திற்கு மாபெரும் தொண்டுகளை ஆற்றி வருகிறார்கள்.

வாங்கம்மா, நீங்களும் சேர்ந்து கும்மி அடியுங்க. இதில நல்ல வருமானம் இருக்கு!

-------------

பெரியகுளம்: தினமலர் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற பெரியகுளம் கல்லூரி மாணவி ஆர்த்தி எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என தெரிவித்தார். பெரியகுளம் ஜெயராஜ் செல்லத்துரை கல்லூரி தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.,) முதலாமாண்டு மாணவி ஆர்த்தி (18). இவர் சென்னையில் 2008ம் ஆண்டு டிச., மாதம் தினமலர், தி ஹிந்து, ஏர் இந்தியா ஆகிய நிறுவனங் கள் இணைந்து வழங்கிய நேர்காணல் போட்டியில் கலந்து கொண்டார். ஆர்த்தி எழுதிய கட்டுரைகளுக்கு தேனி மாவட்ட அளவில் 2ம் இடம் கிடைத்தது. "விழிப்புணர்வு பற்றிய ஓட்டம்' என்ற ரேங் அவார்டு (சீல்டு) வழங்கப் பட்டது.எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., படித்து பெண் சிசுக்கொலை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க பாடுபடுவேன் என ஆர்த்தி தெரிவித்தார்.

பாவம் பெண், கொலைதானே செய்தாள்!

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்”

- இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.

”பெண்கள்மீது நடக்கும் குடும்ப வன்முறைகளை வெளியில் சொல்லக் கூட முடியாமல் ஒடுங்கி வெதும்பி பரிதாபமாகக் கிடக்கிறார்கள் மணமான பெண்கள். அவர்கள் அனைவருமே அதிர்ந்து பேசக்கூட முடியாத நிலைமையில் உள்ளார்கள்”

-- பெண்கள் வாரியம் மற்றும் பெண்ணிய வாதிகள்.

இப்போது செய்தி:

கள்ளத் தொடர்பு கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது

பிப்ரவரி 19,2009 - செய்தி - தினமலர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (48). இவர் மனைவி பேச்சியம்மாள் (41). இவருக்கும் ரைஸ் மில்லில் வேலைபார்த்த சுரேஷ்குமாருக்கும் (28) பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்த பரமசிவம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவனை கொலை செய்ய வேண்டும் என காதலனிடம் பேச்சியம்மாள் கூறினார். நேற்று முன்தினம் இரவில் சுரேஷ்குமார் தன் உறவினர் முருகேசபாண்டியனுடன்(38) பேச்சியம்மாள் வீட்டின் மாடியில் ஒளிந்திருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பரமசிவம் மாடியில் மனைவி இருப்பதை பார்த்து அங்கு சென்றார்.

அங்கு சுரேஷ்குமார் இருப்பதை பார்த்ததும், இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். இதில் சுரேஷ்குமார் பரமசிவத்தை கீழே தள்ளியதும், முருகேசபாண்டியன் பரமசிவத்தின் கால்களை பிடிக்க, பேச்சியம்மாள் கணவன் மார்பில் உட்கார்ந்தார். சுரேஷ்குமார் துணியால் பரமசிவத்தின் வாயையும், மூக்கையும் பொத்தினார். பரமசிவம் மூச்சு திணறி இறந்தார். போலீசார் பேச்சியம்மாளை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் மனைவி, கள்ளக் காதலன் மற்றும் அவரது உறவினர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மூவரையும் கைது செய்தார்.

ஆண் உயிரும் ஒரு மனித உயிர்தான்

மதுரை: தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே வாலிபரை தற்கொலை செய்ய மனைவி தூண்டிய புகார் குறித்து பதிலளிக்கும்படி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை பசும்பொன்நகரை சேர்ந்த வேணி தாக்கல் செய்த மனு: என் மகன் பூவைராஜா(23) மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருக்கும் தேனி மாவட்டம் சின்னமனூர் மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி மகள் உமாமகேஸ்வரிக்கும் (31) காதல் ஏற்பட்டது.

உமாமகேஸ்வரி மதுரை கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ., படித்து வந்தார். அவர்கள் 2008 ஜூலை 21ல் திருமணம் செய்து கொண்டு சென்னை, திருப்பதி போன்ற இடங்களுக்கு சென்று வந்தனர். பிறகு உமாமகேஸ்வரி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அவரை தேடி சென்ற என் மகனை உமா மகேஸ்வரியின் தந்தை, தாய், சகோதரியின் கணவர் சிவக்குமார், மற்றும் சகோதரர் மிரட்டியுள்ளனர்.

ஜன., 8ம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டிற்கு அருகில் என் மகன் விஷம் குடித்து இறந்தார். ஓடைப்பட்டி போலீசார் தற்கொலை பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை தற்கொலைசெய்ய தூண்டிதாக உமாமகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிய கோரி ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கப்பட்டது. சிவக்குமார் போலீஸ் துறையில் பணிபுரிவதால் நடவடிக்கை இல்லை.

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில் பாபுராஜேந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி பி.ஆர்.சிவக்குமார், "இதற்கு பதிலளிக்கும்படி தேனி எஸ்.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப' உத்தரவிட்டார்.

களவில் விளையும காதல்

கலாசாரக் கட்டுப் பெட்டிகளின் தாந்தோன்றித்தனத்தை முறியடித்து “விடுதலை பெற்ற” இளம் பெண்கள் தங்கள் பெண்ணுரிமையை நிலை நாட்டி காதலர் தினத்தன்று அடித்த கூத்துக்கள் இவை:-

1. இந்து முன்னணி, போலீசாரின் கெடுபிடி தாங்க முடியாமல் காதலர்கள் பெரும்பாலும் திண்டுக்கல் நகரில் உள்ள சினிமா தியேட்டருக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனால் தியேட்டர்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டரில் இருந்து சினிமா பார்த்து விட்டு ஜோடி, ஜோடியாக காதலர்கள் வெளியேறியதை நேற்று காணமுடிந்தது.

2. அப்போது அந்த பகுதியில் கண்ணில்பட்ட சில காதல் ஜோடிகளை போலீசார், எச்சரித்து அனுப்பி வைத்தனர். வேலூர் கோட்டை பகுதியில் போலீசாரின் கெடுபிடி அதிகமாக இருந்த காரணத்தால், காதல் ஜோடிகள், சினிமா தியேட்டர்கள், அமிர்தி வன உயிரியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர்.

3. ஒவ்வொரு ஜோடியும் காதலின் சின்னமான சிவப்பு ரோஜா மலர்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டனர். காதல் ஜோடிகள் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ள அணைத்துக்கொண்டு மெய்மறந்து பரிமாறி கொண்டனர்.

-----------------------------------------

”தெய்வீகமான காதல்” களியாட்டங்களை கட்டுப்பாடின்றி, சினிமா தியேட்டர் அரையிருட்டின் துணையுடன் வெறி கொண்டு நிகழ்த்திவிட்டு பிறகு இன்னொருவனைத் திருமணம் செய்துகொண்டால் அது இணக்கமான மணவாழ்க்கையாக இருக்க முடியுமா?

பிறகு நடப்பவை என்ன?

கீழ்க்கண்ட செய்திகளைப் படியுங்கள். இவை யாவும் காதலர் தினத்தன்று நிகழ்ந்தவைதான்!!

1. சூப்பர் மார்க்கெட்டில் பெண் விற்பனையாளர் கொலை : பட்டப் பகலில் வாலிபர் வெறிச்செயல். அந்த வாலிபர் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஆனந்தியின் வலது நெஞ்சில் சராமரியாக குத்தி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் ஆனந்தி கீழே மயங்கி சாய்ந்தார்.

சில தினங்களுக்கு முன் ஆனந்தியை பெண் பார்க்க சிலர் வந்துவிட்டுச் சென்றனர். விசாரணையில் ஆனந்தி ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்தது தெரியவந்தது. இந்த நிலையில் தாக்குதல் நடந்துள்ளதால் காதல் விவகாரத்தால் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2. சென்னையில் புதுமணத்தம்பதிகள் பரிதாப சாவுமனைவியை எரித்துக் கொன்று விட்டு, தீக்காயத்தால் கணவனும் இறந்தார்சென்னையில் புது மணத்தம்பதிகள் பரிதாபமாக இறந்து போனார்கள். ஒருவர் மீது ஒருவர் சந்தேகப்பட்டதால் இருவர் உயிரையும் தீ குடித்து விட்டது.
---------------

குழந்தையைக் கடத்திச் சென்ற மனைவி

சென்னை வேப்பேரியில் வசிப்பவர் பாலாஜி (வயது 30). அசோக் லைலேண்டு நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவரது மனைவி பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடால் பிரிந்து வாழும் இவர்கள், விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர்.

இந்த நிலையில், குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்ற பிரச்சினை ஏற்பட்டது. குழந்தை பாலாஜியிடம் இருக்க வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை குழந்தையை மனைவியிடம் கொடுக்க வேண்டும் என்றும் பாலாஜிக்கு கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குழந்தையை பாலாஜியின் மனைவி வந்து பார்த்து செல்வார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி வேப்பேரி போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தையை பார்க்க அழைத்து சென்ற தனது மனைவி குழந்தையோடு காணாமல் போய்விட்டதாகவும், குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும், குழந்தையை மீட்டுத் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு மீது இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் எனும் மாயை!

சென்னை குடும்பநலக் கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் 9 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

காதலர் தினம் என்பது யாரிடமும் கேட்காமல் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட நவீன நாகரீகமாகும். காதலர்களுக்கு இந்த தினம் கொண்டாட்டமாக அமைந்தாலும், பெற்றோருக்கு இது கஷ்ட தினமாகத்தான் தோன்றும்.

காதல் பற்றிய தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை என்பதால், அதுபற்றி எடுக்கும் சினிமா படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன. பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும் காதல், அந்தந்த காலகட்டங்களில் அனைவரின் மனதிலும் புகுந்து குத்தாட்டம் போட்டுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேள்விப்பட்ட காதல், இன்று தெருவுக்கு தெரு மறைவில் நிற்கிறது.

மல்லுக்கட்டும் காதலர்கள்

பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிகின்றன. அப்படிப்பட்ட காதல் திருமணங்களும் பெரும்பாலும் கோர்ட்டுகளில் முடிந்து விடுகின்றன. தற்போது கோர்ட்டுகளில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, மிகுந்த ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்புகின்றன. இவைகளில் பெரும்பாலான வழக்குகளில், `முன்னாள்' காதலர்கள்தான் மல்லுக்கட்டுகின்றனர் என்பது இன்னும் வியப்பு.

சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கோர்ட்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது.

கடந்த ஆண்டில்...

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 412 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் காதல் திருமணங்கள் ஏராளமாக உள்ளன.

5-வது நாளில் வந்த மனு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்று, கோர்ட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் 23.1.09 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்த திருமணம் அது. 27-ந் தேதி காலையிலேயே மணமகன் தனது கையில் விவாகரத்து மனுவுடன் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். மனுவைப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி.

`திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகவில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்து விட்டீர்களே', என்று கேட்டு இருக்கிறார். அதற்கு மணமகன், `சீக்கிரமா? தாமதமாக கோர்ட்டுக்கு வந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை), 26 (குடியரசுத் தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை வந்துவிட்டதால் இவ்வளவு பிந்தி வரவேண்டியதாகி விட்டது. இல்லாவிட்டால் திருமணமான மறுநாளே மனுவோடு வந்து இருப்பேன்' என்று அந்த மணமகன் கூறி இருக்கிறார்.

மனைவிகளாகும் மாணவிகள்

மணமக்களின் மணமாலை கூட முழுவதுமாக வாடி முடிவதற்குள், இவர்களின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இதுபோல் பல கல்லூரி மாணவிகள் சிலர், `திடீர்' மனைவிகளாகவும், முன்னாள் மனைவிகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தையும், கடமையையும் மறந்து, அவர்களின் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனையின்படி, காதலனுடன் எங்காவது சென்று பதிவுத் திருமணம் செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற திருட்டுத் தாலிகளை பெற்றோர் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்து விடுவதால் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வரும் மாணவி (மனைவி)களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும்காலத்தில் பெற்றோருக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நடிகைகளும் விவாகரத்தும்

விவாகரத்துக்கு வயதும் ஒரு தடையல்ல. 50 வயதைத் தாண்டிய பிறகு விவாகரத்து செய்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருக்கின்றனர். சென்னை கோர்ட்டில் தற்போது வீடியோ கான்பரன்சிங் என்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் உள்ள மணமக்களுக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நடிகர்களும் விவாகரத்துக்கு தப்பவில்லை. ராமராஜன்-நளினி, பார்த்திபன்-சீதா இவர்களும் அடக்கம். ஸ்ரீவித்யா-ஜார்ஜ், ஊர்வசி-மனோஜ், ஹீரா-புஸ்கர்நட், சொர்ணமால்யா-அர்ஜுன், வனிதா-ஆனந்த் ஆகியோரும் மணவாழ்க்கையை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். சுகன்யா-ஸ்ரீதர், பிரசாந்த்-கிரகலட்சுமி, சரிதா-முகேஷ், மீராவாசுதேவன்-விஷால் ஆகிய ஜோடிகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். காதல் பரிமாணத்தை வளர்க்கும் சினிமா, டி.வி. தொடர்களால், இளம் உள்ளங்கள் கெட்டு, இறுதியில் கோர்ட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காதலர் தினத்துக்கு அர்ப்பணம்

இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை குடும்பநல கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. நேற்று மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளில் (வக்கீல் புறக்கணிப்புப் போராட்டம் இருந்தாலும்) பெரும்பாலான வழக்குகள், காதல் மணம்புரிந்தோரால் தாக்கல் செய்யப்பட்டன. காதலர் தினத்துக்காக இதை அர்ப்பணித்து இருப்பார்களோ, என்னவோ?

நன்றி - தினத்தந்தி 14-02-2009

வரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு

மானாமதுரை அருகே மணமகனின் குடும்பத்திற்கு வரதட்சணை கொடுத்ததாக பெண்ணின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே இடைய மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் கனிமொழி (வயது 25). இவருக்கும் மானாமதுரை சோமசுந்தரம் காலனியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அருளாழி என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகனுக்கு ஒரு லட்சம் ரொக்க பணம், 45 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் 2008ம் ஆண்டு கூடுதலாக ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக மானாமதுரை போலீஸ் நிலையத்தில் கனி மொழி புகார் செய்தார். அதன் பேரில் அருளாழி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட் டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருமணத்தின் போது வரதட்சணை கொடுத்ததாக சுப்பிரமணியன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்தார்.

வரதட்சணை கொடுப்பது குற்றம் என்பதால் அதன் அடிப்படையில் சுப்பிர மணியன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மானாமதுரை கோர்ட்டில் ஆறுமுகம் மனு செய்தார். நீதிபதி ரவி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலாவதி விசாரணை நடத்தி வரதட்சணைகொடுத்ததாக சுப்பிரம ணியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

============

இதுபோல் நிறைய வழக்குகள் பதியப்பட வேண்டும். அப்போதுதான் பொய் டெம்பிளேட் 498A கேசுகள் பதிவது நிற்கும்!

ஐயோ பாவம் கணேஷ்!

சென்னை: கள்ளக் காதலி யோசனையின் பேரில், அவரது கணவர் காரை திருடி விற்று உல்லாசமாக இருந்த கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை அபிராமபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (32). இவரது மனைவி லட்சுமி (28). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லட்சுமி தனது மொபைல்போனில் எதேச்சையாக பேசும் போது சுதாகர் (19) என்ற வாலிபரின் தொடர்பு கிடைத்தது. கணேஷ் வீட்டில் இல்லாத போது லட்சுமியுடன் சுதாகர் உல்லாசமாக இருந்தார்.

கடந்த ஆறு மாதத்தில் அவர்களுக்குள் நெருக்கம் மேலும் அதிகரித்தது. கணேஷ் தனது காரை சாலையில் நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, காரின் சாவியை கள்ளக்காதலன் சுதாகரிடம் கொடுத்து அதை திருடி செல்லும்படி லட்சுமி கூறியுள்ளார்.காரை திருடி சென்ற சுதாகர், அதன் இன்ஜினை கழட்டி வீட்டில் வைத்துக் கொண்டார். நான்கு டயர்களை மட்டும் 3,000 ரூபாய்க்கு விற்றார். அந்தப் பணத்துடன் கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

பணம் தீர்ந்ததும் மீண்டும் தன் வீட்டிற்கு லட்சுமி வந்தார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லட்சுமியை கணேஷ் ஏற்றுக் கொண்டார். கார் திருட்டு சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசில் கணேஷ் புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் கார் திருட்டுக்கும், லட்சுமி சுதாகரின் கள்ளக்காதலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சுதாகரனின் மொபைல் போனை வைத்து போலீசார் அவரை பிடித்தனர்.லட்சுமியின் திட்டப்படியே காரை திருடியதை சுதாகர் ஒப்புக் கொண்டார். சுதாகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணேஷ் மற்றும் லட்சுமி இருவரையும் ஒன்றாக சேர்ந்து வாழும்படி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8492&cls=row4&ncat=TN
-----------

இப்போது சொல்லுங்கள், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் மன நலனுக்காகவும், தன் தன்மானத்தையே இழந்து தன் அடிப்படை உணர்வுகளையே விட்டுக் கொடுக்க முன் வந்தது யார்? தந்தையா, தாயா?

ருசி கண்ட பூனையான இந்த கற்புக்கரசி மீண்டும் பணம் கிடைத்தவுடன் யாரைத் தேடுவாளோ!

வெட்கக் கேடு!!

14-02-2009 அன்று பெங்களூரில் தர்ணா

இந்திய குடும்ப நல வாழ்வை பேணிக்காக்கும் அமைப்பினர் (Save Indian Family Foundation) வரும் 14-02-2009 அன்று பெங்களூரில் ஒரு தர்ணா நடத்த இருக்கிறார்கள்.

இடம்: எம்.ஜி சாலை - மகாத்மா காந்தி சிலை எதிரில்

நேரம்: காலை 10-00 மணீ முதல் பிற்பகல் 1-00 மணி வரை

பங்கு கொள்வோர்: சட்டபூர்வ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்தக் கொடுமையை எதிர்க்கும் நல்மனது படைத்தவர்கள்.

இவர்களில் பொறியாளர்கள், மென்பொருளாளர்கள், வக்கீல்கள், எழுத்தர்கள், டாக்டர்கள், அரசு பணியாளர்கள், என்.ஆர்.ஐ-க்கள், சார்ட்டட் அக்கவுண்டண்ட்கள், வணிகத்துறையினர், பெண்கள் இன்னும் பலர் அடங்குவர்

இந்த தர்ணா எவ்விதக் கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்படுகிறது?

 1. ஆண்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு (பெண்களுக்கு உள்ளது போலவே) ஒரு தேசிய ஆணையமும் ஆண்கள் நல்வாழ்வு அமைச்சகமும் வேண்டும்
 2. தேங்கி நிற்கும் ஆயிரக்கணக்கான குடும்ப வழக்குகளை மேலும் நிறைய நீதிபதிகளை நியமித்தும், மாலை நேர நீதிமன்றங்களை அமைத்தும் விரைவில் தீர்க்க வேண்டும்
 3. மக்களின் - முக்கியமாக இளைஞர்களின் - வாழ்வைப் பெருமளவில் பாதிக்கும் கொள்கை முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய் பங்களிப்பையும் பெறவேண்டும்.
 4. தற்போது பெண்ணிற்கு மட்டும் மேன்மை தந்து ஆண்களை ஒடுக்கும் சட்டங்களை ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகப் பொருந்தும்படி மாற்றியமைக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக “மனைவி”, “கணவன்” போன்ற சொற்களை நீக்கிவிட்டு இருவருக்கும் பொருந்தும் “வாழ்க்கைத் துணை” அல்லது “துணைவர்” (spouse) என்றே குறிப்பிட வேண்டும்.
 5. மனைவி கணவனிடமிருந்து தற்போது பலவித சட்டப் பிரிவுகளில் ஒரே நேரத்தில் ஜீவனாம்சம்/மானியம் பெறும் அமைப்பு இருக்கிறது. இதை முறைப்படுத்தி, ஆண், பெண் இருவரும் வேலை பார்த்து நல்ல ஊதியம் பெற்று வரும் மாறுபட்ட சமூக நிலையை கருத்தில் கொண்டு சட்டங்களில் முறையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.
 6. ”குடும்ப வன்முறைச் சட்டம்” தற்போது ஒருதலைப் பட்சமாக இருக்கிறது. அதில் வன்முறை என்பது (மனத்தளவிலோ, உடலளவிலோ) கண்வன் தான் செய்வான் என்று எழுதப் பட்டிருக்கிறது. அதை நியாயமான முறையில் மாற்றி, மனைவி தன் கணவன் மற்றும் மாமியார், மாமனார்க்குச் செய்யும் கொடுமைகளையும் அதில் உள்ளடக்கி, அத்தகைய கொடுமைகளுக்களுக்கான நிவாரணங்களையும் அச்சட்டத்தில் சேர்க்கவேண்டும்.
 7. குடும்ப விவகாரங்களில் போலீஸ் தலையிடுதலை நிறுத்தவேண்டும். அவர்கள் தற்போது செய்வதுபோல் குடும்பப் பிரச்னைகளில் நுழைந்து அறிவுரைகளோ, பரிந்துரைகளோ, பஞ்சாயத்தோ அளிக்கக்கூடாது
 8. பச்சிளங் குழந்தைகளின் காப்புப் பொறுப்பை நிர்ணயிக்கும் போது அக் குழந்தைகளை நேரிடையாக விசாரிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். இந்தச் செயல் அந்த பிஞ்சு மனங்களை நோகச் செய்யும் கொடூரமான ஒரு செயல். சூதறியா அக்குழந்தைக்கு தாயும் தந்தையும் சமம் தான். அந்த நிலையில் அக்குழந்தையிடம், “நீ தாயிடம் இருக்க விரும்புகிறாயா, தந்தையிடமா?” என்று விசாரிக்க முயலும் போது, அந்த நேரத்தில் காப்புரிமை பெற்றுள்ள பெற்றவர் மற்றவருக்கு எதிராக குழந்தையின் மனத்தைத் திருப்ப எத்தனிக்கும் அபாயம் உள்ளது.
 9. குற்றவியல் சட்டஙகளின் அடிப்படையில் வழக்கு நடக்கும்போது பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிரிமினல் வழக்குகளை சட்டப்படி புகார்கள் உணமையா பொய்யா என்று தீர விசாரித்து அதன்படி தீர்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அவற்றில் எவ்வித சமரச இணக்கமும் மேற்கொள்ளக் கூடாது.
 10. பலவித சூழல்களின் தாக்கத்தால் நம் நாட்டில் தற்போது குடும்பச் சச்சரவுகள் மிக அதிகமாகி விட்டன. அதனால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணவும், நம் நாட்டின் பண்பாட்டின் அடிப்படையில் இணக்கமான குடும்ப வாழ்வு முறையை வளப்படுத்தவும் ஒரு தேசிய அளவிலான கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி உரிய தீர்வுகளைக் காண வேண்டும்.
 11. வருமான வரி விதித்தலில் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் இருபாலருக்கும் ஒரே விதமான வரி விகிதம் இருக்கவேண்டும்..
 12. தற்போது நீதிமன்றங்களும், காவல் துறையும், நடுவர்களும் ஆண்களுக்கு எதிரான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் என்றாலே கிரிமினல்கள் போலவும், பெண் என்றாலே ஆண்களால் கொடுமைப் படுத்தப்பட்டவர்கள் போலவும் ஒரு கருத்தாக்கம் அவர்கள் மனத்தில் ஆழப் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இது உண்மை நிலைக்கு மாறாக உள்ளது என்பதால், அத்துறைகளைச் சார்ந்தவர்களை ஆண்களுக்கும் இணக்கமான மனப்பான்மையையுடன் அவர்களின் பிரச்னைகளை அணுகும்படியான மனமாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் (sensitization of their minds towards the problems of men). தற்போதுள்ள ஆண்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் நடைமுறை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.
 13. மணமுறிவு நிகழும்போது ஜீவனாம்சம்/மானியம் போன்ற பணம் சார்ந்த ஈட்டுத் தொகை வழங்கும் முறையை நிறுத்த வேண்டும். தவிர்க்க இயலாத சில கட்டங்களில்தான் இவை அளிக்கப்பட வேண்டும். அதுவும் மாறுபட்ட பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு, கணவன், மனைவி இருவருடைய உண்மையான வருமானத்தையும் கண்டறிந்து அதற்கேற்ப நடுநிலையுடன் வழங்கப்பட வேண்டும்.

அனைவரும் வருக!

ஒரு பெண்ணின் சோகக் கதை

நானும் பெண்தான். ஆனால் சட்டம் என்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சட்டங்களின் கண்களில் ஒரு ஆண்மகனின் தாயும் பெண்ணல்ல, சகோதரியும் பெண்ணல்ல.


நான் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணின் சகோதரியாகப் பிறந்ததுதான். ஒரு நெஞ்சில் ஈரமற்ற கொடுமைக்காரப் பெண்ணை என் அண்ணன் கைபிடித்த காரணத்தால் நான் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. அந்த அண்ணன் வாழ்ந்த 12 நாள் மணவாழ்க்கைக்குத் தண்டமாக அந்தப் பெண்ணிற்கு தன் சம்பளம் முழுவதையும் கொடுத்து அழுது கொண்டிருக்கிறான். சட்டம் பயின்ற அந்தப் பெண் எந்த ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் பார்க்காமல் என் அண்ணனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி பணம் பிடுங்கிக் கொட்டிருக்கிறாள். இதற்கு சட்டங்கள் துணை போகின்றன.


என்னவாயிற்று என் வாழ்க்கை? அவள் எங்கள்மேல் ஏவி விட்ட பொய்க் கேசுகளின் தாக்கத்தால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் போய், எங்கள் அண்னனும் சம்பாதிப்பது அனைத்தையும் அந்தப் பேயிடம் சமர்ப்பிக்கும் நிலையில் நான் ஏதோ சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்து என் பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன்.


எனக்கு திருமணம் ஆகும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
இப்போது சொல்லுங்கள் - 498A சட்டங்களும், பெண்கள் நல வாரியங்களும், என்.ஜி.ஓக்களும் , பெண்கள் நல அமைச்சர்களும் பெண்களுக்காகவா? இல்லை பொய் வழக்குபோட்டு அதனால் ஆதாயம் பார்க்கும் முதலைகளுக்காகவா?


ஒரு பெண்ணின் ஒலங்களைக் காண இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

கணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி


சென்னை குடும்பநல கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கும், பெண்ணுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வக்கீலை பெண் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் காயத்ரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாராயணன் முன் நேற்று விசாரணை நடந்தது. விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கோர்ட்டை விட்டு காயத்ரி வெளியே வந்தார். கார்த்திக் சார்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்ரமணியனும் வெளியே வந்தார். அப்போது காயத்ரிக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வக்கீல் பாலசுப்ரமணியனை காயத்ரி செருப்பால் அடித்ததாகவும், பதிலுக்கு வக்கீலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.உடனே அங்கு போலீசார் வந்தனர். அப்போது, சில வக்கீல்கள் சேர்ந்து காயத்ரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்துக்கு காயத்ரி மற்றும் அவரது தந்தையை அழைத்து வந்தனர். வக்கீல் பாலசுப்ரமணியன் அளித்த புகாரில், "என்னை கொலை செய்துவிடுவேன் என காயத்ரியும், அவரது தந்தை தினகர்குமாரும் கூறினர். செருப்பால் என் கன்னத்தில் காயத்ரி பல முறை அடித்தார். சக வக்கீல்கள் என்னை விடுவித்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

காயத்ரி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்க அவர் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அது சாத்தியமாகவில்லை. காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் நிலையத்துக்குள் வைத்திருந்தனர்.இதற்கிடையில் வக்கீல்கள் பலர், போலீஸ் நிலையம் வெளியில் திரண்டனர். வக்கீல் புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

காயத்ரியின் முகம் வீக்கமாக இருந்தது. மாஜிஸ்திரேட் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின், அரசு பொது மருத்துவமனையில் காயத்ரி சேர்க்கப்பட்டார்.
=====================

திறந்த கோர்ட்டில் பலர் முன்னிலையில் வக்கீலை செருப்பால் அடித்த அந்தப் பெண், மூடிய கதவுகளுக்குள் தன் கணவனையும் அவனுடைய பெற்றோரையும் என்ன பாடு படுத்தியிருப்பாள்!

இதுபோல் இந்தப் பெண்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் ஒருதலைப் பட்சமான சட்டங்களும், தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் அகம்பாவமான மனப்பான்மையும்தான்.

இந்த நாட்டில் ஆண்களும் அவனைப் பெற்றவர்களும் பாவப்பட்ட ஜன்மங்கள்!

ரேணுகா சவுத்திரி போன்ற பெண்கள் மந்திரியாக நீடிக்கும்வரை இந்த நிலைமை தொடரும்.

மதுபானக் கடையில் நிரம்பி மனம்போனபடி குடியுங்கள் என்கிறார் மத்திய மந்திரி

கட்டளையிட்ட அமைச்சர் - ரேணுகா சவுத்திரி. இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்!!

அவர் அளித்துள்ள அக்கட்டளை யாருக்கு? - இளம் பெண்களுக்கு!


“பப் பரோ ஆந்தோளன்” (Pub bharao Andolan) என்று ஒன்றைக் கடைப்பிடித்து கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள இளம் பெண்களை சாராயக் கடைக்குப் போய் (இதை ஸ்டைலாக “Pub" என்று அழைப்பார்கள்) இஷ்டத்திற்கு தண்ணி போட்டு கூத்தடியுங்கள்.” இத்தகைய அறைகூவலை விடுத்துள்ளார் ரேணுகா சவுத்திரி!
இப்போது நாட்டிற்கு இதுதான் தலையாய பிரச்னையா? இந்த முன்னேற்றம்தான் காந்தி கண்ட ராமராஜ்யமா?

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக அவருடைய அமைச்சகத்திற்கு சிலவு செய்யும் மக்கள் வரிப்பணம் ஆண்டு ஒன்றுக்கு 7200 கோடி ரூபாய்!

அதை வைத்துக்கொண்டு இவரும் NCW மற்றும் AIDWA உறுப்பினர்களும் மற்ற பிரச்னைகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் மங்களூர் சாராயக் கடையில் பெண்கள் குடித்துக் கூத்தடிக்கும் உரிமையை நிலை நாட்டுவதிலேயே தங்கள் நேரம் மற்றும் மக்கள் பனத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு விசாரணக் குழு அனுப்பினார். அப்போது வந்த அம்மையார் பாவம் எழுதிக் கொடுத்ததை படிக்காமல் கொஞ்சம் நடுநிலையாகப் பேசி தனி ஆவர்த்தனம் வாசித்துவிட்டார். அதனால் குதித்தெழுந்த இந்த ரேணுகா சவுத்திரி இன்னொரு விசாரணக் குழுவை அனுப்பியிருக்கிறார். யார் அப்பன் வீட்டுப் பணம்? இதுதான் இப்போது முக்கியமா?

அங்கே மருத்துவ மனையின் இங்குபேட்டரில் பச்சிளம் குழந்தைகள் கருகிச் செத்திருக்கின்றன.

யு.பி.யில் ஆறு வயது தலித் பெண்ணை காவல் துறையினர் சித்தரவதை செய்திருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.

அதெல்லாம் பிரச்னையாகத் தெரியவில்லை, இந்த அமைச்சருக்கு. மங்களூரில் பெண்கள் தண்ணி போடுவதுதான் நாட்டிற்குத் தலைபோகிற பிரச்னையா? அந்தப் பெண்களே பதுங்கி விட்டார்கள். இவர் சாமியாடுகிறார்.

அந்த ரேணுகா அம்மையாரின் கைவண்ணம் என்ன தெரியுமா?

498A சட்டத்தில் இதுவரை 1,23,000 பெண்கள் - அதுவும் வயதான தாய்மார்கள் விசாரணையின்றி கைதாகி சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இவருடைய பிடிவாதத்தால்!

4 வயது சிறுவன் கைதாகி சிறையிலடைக்கப்பட்டான் -அவன் வரதட்சணைக் கொடுமை செய்தானாம்!

வெட்கக்கேடு!

வில்லங்க வித்யா!

(நன்றி: ஜூனியர் விகடன் 21-01-2009)


திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். வழக்கறிஞரான இவரை கடந்த 11-ம் தேதி இரவு வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் சராமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியிருக்கின்றனர்.

வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெட்டியவர்களைத் துரத்தியிருக்கின்றனர். இந்த சமயத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி-யான கலியமூர்த்தி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்துசேர... சிதறி ஓடிய ரவுடிகளில் ஒருவன், கட்டடம் ஒன்றின் மாடியில் ஏறி பட்டாக் கத்தியைக் காட்டி எல்லோரையும் மிரட்டியிருக்கிறான். துப்பாக்கி முனையில் அவனை வளைத்திருக்கிறார்கள் போலீஸார்.
தணிகாசலம் என்ற அந்த ரவுடியிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் தங்களின் தலைவனாக அவன் ராஜேஷ்கண்ணா என்ற இன்னொரு வக்கீலை அடை யாளம் காட்டியிருக்கிறான். சிறிது நேரத்தில் அவரும் கைது செய்யப்பட... அடுத்தடுத்து அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறது போலீஸ் வட்டாரம்.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''ராஜேஷ்கண்ணா ஐயர், வெங்கடேஷ் ஐயங்கார். ரெண்டு பேருமே நெருக்கமான நண்பர்கள். முதல்ல வண்ணாரப்பேட்டையில் ஒரு அபார்ட்மென்டில் எதிரெதிர் வீடுகளில் வசித்தப்ப ரெண்டு குடும்பங்களும் ரொம்ப குளோஸா பழகியிருக்காங்க. வெங்கடேஷ§க்கும் வித்யாவுக்கும் கல்யாணமாகிப் பல வருஷங்களாகியும் குழந்தையில்லை. கணவரின் குறைபாட்டால்தான் குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த வித்யாவுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கு. அந்த நெருக்கம் கர்ப்பத்தில் முடிய...

வெங்கடேஷ் அப்போதைக்கு அதைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகும் வெங்கடேஷுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நெருக்கமாக... நண்பர்களுக்குள் தகராறு வந்திருக்கிறது. அதன் பிறகு, சோமரசம்பேட்டைக்கு வீடு மாற்றி வந்துவிட்டார் வெங்கடேஷ். இதன் பிறகும் வித்யாவின் கள்ளத்தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் அளவுக்கு பகை வளர்ந்த நிலையில், வெங்கடேஷைப் போட்டுத்தள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. வித்யா விடமும் கொலைத் திட்டத்தைச் சொன்னதும், அவரும் அதற்கு சம்மதித்து தன் கணவனைக் கொலை செய்ய ஒரு லட்ச ரூபாய் பணமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

இதன் பிறகு தன் கிளையன்ட்டான தணிகாசலம் என்ற ரவுடியிடம் சொல்லி கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. இந்த நேரத்தில் ராஜேஷின் மூளை இன்னுமொரு கிரிமினல் கோணத்தில் யோசித்திருக்கிறது. அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தியோடு அவருக்கு ரொம்ப நாளாகவே சொத்துப் பிரச்னை இருந்திருக்கிறது. இதே கூலிப்படையை வைத்து கையோடு தன் தந்தையையும் போட்டுத்தள்ள முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி தணிகாசலம், செல்வம், ரவி, குமார், ராதாகிருஷ்ணன் என்று ஐந்து பேர்கொண்ட கூலிப்படையை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தன் தந்தை வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இந்தக் கூலிப்படைக்கு இரண்டு கொலைகளுக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தவர், அவர்களுக்காக ஒரு பழைய பத்மினி ஃபியட் காரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கூலிப்படையும் ராஜேஷின் தந்தையுடன் சந்தேகம் வராதபடி பழகியிருக்கிறார்கள். திட்டமிட்டபடியே கடந்த 11-ம் தேதி மாலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் மது அருந்தியிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி குடித்த மதுவில் விஷம் கலந்திருந்ததால் கொஞ்ச நேரத்தில் அவர் இறந்து விட்டார். அதன் பிறகே வெங்கடேஷை வெட்டுவதற்காக காரில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். ஆனால், காரியத்தை கச்சிதமாக முடிப்பதற்குள் அந்தப் பகுதியில் கூட்டம் கூடிவிடவே திட்டம் ஏடாகூடமாகி மாட்டிக்கொண்டு விட்டனர் கூலிப்படையினர். இருந்தாலும், கூலிப் படையாக வந்தவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். இப்போது கூலிப்படையைச் சேர்ந்த செல்வம், ரவி ரெண்டு பேரையும் பிடித்துவிட்டோம். குமாரையும் ராதாகிருஷ்ணனையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வித்யாவைப் பார்த்துத்தான் நாங்கள் மிரண்டுவிட்டோம். 'ஏம்மா, ஆசாரமான ஒரு பிராமின் குடும்பத்துப் பொண்ணு நீ... தாலி கட்டின புருஷனையே கொல்லத் துணிஞ்சிருக்கியேம்மா...' என்று அவரிடம் கேட்டோம். 'எனக்கு வெங்கடேஷ்கூட வாழப் பிடிக்கலை. ராஜேஷ்கண்ணாகூட வாழறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!' என்று வெறி பிடித்த மாதிரி அவர் சொன்னது கேட்டு ஷாக் ஆகிப்போனோம்'' என்றனர்.

சம்பந்தப்பட்டிருப்பது இரண்டு வக்கீல்கள் என்றாலும், புனிதமான நீதித் துறைக்கு இதில் எந்தவிதக் கறையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம். இதற்கிடையே முக்கியமான சில வி.வி.ஐ.பி-க்கள் எவ்வளவோ பிரஷர் கொடுத்தும் கொஞ்சமும் அசராமல் ராஜேஷ், வித்யா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

இந்த விவகாரத்தில் வேறொரு கோணமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது திருச்சி கோர்ட் வட்டாரங்களில். ''ராஜேஷ்கண்ணாவும் தன் மனைவியும் நெருங்கிப் பழகறது வெங்கடேஷுக்கு நல்லாவே தெரியும். இது ஒரு கட்டத்தில் போட்டோ, பண மிரட்டல் என்றெல்லாம் வளர்ந்தது. இதில் ராஜேஷ்கண்ணா தவித்துப் போனார். பண மிரட்டலால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் தந்தையுடன் சொத்துப் பிரச்னையாக மாறியிருக்கிறது. இதுக்கப்புறம்தான் வித்யாவும் ராஜேஷ்கண்ணாவும் கூடிப் பேசிக் கொலை செய்யுற முடிவுக்கே வந்திருக்காங்க'' என சில வில்லங்க முடிச்சுகளை அவிழ்த்தார்கள்.

இந்த விவரங்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக வெங்கடேஷை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் ஐ.சி.யூ-விலேயே இருந்ததால் வெளியில் காத்திருந்த அவரது குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். ''எங்க குடும்பம் ரொம்ப கௌரவமானது. நீங்க கேள்விப்பட்டதாகச் சொல்லும் சந்தேகங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு. இப்படிப்பட்ட விஷயங்கள் எங்க குடும்பத்தில் நடக்க வாய்ப்பில்லை. தங்களோட தப்பை நியாயப்படுத்தறதுக்காக ராஜேஷ்கண்ணா தரப்புல சிலர் இப்படி கட்டுக்கதைகளைக் கிளப்பிவிடுறாங்க. மரண அவஸ்தையில் படுத்திருக்கிறவன் இதையெல்லாம் கேட்டா அப்படியே உயிரை விட்டுடுவான்!'' என்று கண்ணீர் சிந்தினார்கள்.
-------------
குறிப்பு (டோண்டு கவனத்திற்கு):-
1.மேற்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கும் ஐயர், அய்யங்கார், ஆசாரமான பிராமின் என்னும் ஜாதி பற்றிய குறிப்புக்கள் நான் எழுதியவை அல்ல. அவை ஜூனியர் விகடன் கட்டுரையில் இருப்பவை.
2. நேரமிருந்தால் குடும்ப நீதிமன்றம் சென்று பாருங்கள்; இதுபோல் ”ஆசாரமான” பல புதுமைப் பெண்கள், “எப்படியாவது அவங்களை உள்ள தள்ளணும். அதுக்கு எதைச் செய்யவும் தயார்” என்று வெறியோடு கூச்சலிடும் காட்சிகளைக் கண்ணாறக் காணலாம்!
3. சங்கீதா... சித்ரா... இதுபோல் ஆட்களைப் போட்டுத்தள்ளும் சுபாரி காண்டிராக்ட் வேலையில் இதுபோன்ற ஆசாரப் பெண் திலகங்கள் பெருமளவில் இறங்கிவிட்டதைக் காணும்போது, இந்தப் பெண்கள் இதை ஒரு குடிசைத் தொழிலாக நடத்துவார்கள் போலிருக்கிறதே!!

ஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்!

கீழ்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்!

ரூ.10 லட்சம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார்
மகள் காதலனுடன் ஓடியதை மறைத்து தாயார் நடத்திய நாடகம் அம்பலம்

சென்னை கீழ்பாக்கத்தில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார் கொடுப்பட்டது. மகள் காதலனுடன் ஓடியதை மறைப்பதற்காக தாயார் நடத்திய நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

துணிகடை அதிபர் மகள் சென்னை கீழ்பாக்கம் பர்னபி ரோட்டைச் சேர்ந்தவர் பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பாரிமுனையில் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பார்வதி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் பார்வதி வாக்கிங் சென்றிருந்தார். காலை 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதியின் தாயார் தேட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பார்வதியின் தாயார் தனது கணவருக்கு ஒரு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலில் பார்வதி காலையில் வாக்கிங் சென்றவள் வீடு திரும்பவில்லை என்றும், வாலிபர் ஒருவர் போன் செய்து பார்வதியை கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான் பார்வதியை விடுவேன் என்றும் மிரட்டுவதாகவும் கூறினார். இதை கேட்டு பார்வதியின் தந்தை அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ராஜாமணி மேற்பார்வையில், தனிப்படை போலீசார் பார்வதியை தேடினார்கள். பார்வதியின் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

அப்போது பார்வதி தனது காதலனுடன் ஓடி வந்து விட்டதாகவும், மும்பைக்கு ரெயிலில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடனே போலீசார் உங்களை கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் திரும்பி வந்து விடுங்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை கேட்டு பார்வதி மனம் மாறினார். தனது காதலனோடு நடுவழியில் ரெயிலை விட்டு இறங்கி கார் மூலம் நேற்று பிற்பகலில் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நானே விரும்பி காதலனுடன் ஓடிப்போனேன் என்றும் பார்வதி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

தனது மகள் காதலனுடன் ஓடிப்போனதை மறைப்பதற்காக பார்வதியின் தாயார் அவரது தந்தையிடம் பொய்யான தகவல் சொல்லி போலீசிலும், பொய் புகார் கொடுக்க வைத்துவிட்டார்.

பார்வதியின் தாயார் நடத்திய நாடகத்தால் கீழ்பாக்கம் போலீசார் நேற்று கடும் அவதிக்குள்ளானார்கள்.

பார்வதியின் காதலன் பெயர் கான் அப்துல்லா. மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்து இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

காதலனுடன் ஓடிப்போன பார்வதி போலீஸ் விசாரணையில், திடீரென்று மாற்றி பேசினார். காதலனோடு செல்ல விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் போய் விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் பார்வதியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பொய்யான புகார் கொடுத்ததற்காக போலீசார் கடும் எச்சரிக்கையையும் விடுத்தனர். பார்வதியின் காதலரும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்தி - தினத்தந்தி - சென்னை, பிப்.4- 2009.

தந்தையிடம் பேசியதற்காக குழந்தைகளுக்கு சூடு போட்டாள் தாய்

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்” - இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.
இப்போது செய்தி:

பள்ளிப்பாளையம், பிப்.3- 2009 - செய்தி - தினத்தந்தி

பள்ளிப்பாளையத்தில் தந்தையிடம் சென்று பேசியதற்காக குழந்தைகளுக்கு காலில் சூடு போட்டதாக தாய் மற்றும் அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் வெப்படையை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 32) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி தனக்கோடி (30). இவர்களுக்கு தினேஷ் (10), மனோஜ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 6 மாதகாலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமியின் தாயார் சரசு தனது பேரக்குழந்தைகளை ஆவலுடன் பார்க்க சென்றார்.

அப்போது அங்கு அவர்கள் தங்கள் கால்களில் தாய் சூடு போட்டதாக இருவரும் தனது பாட்டி சரசுவிடம் காண்பித்தனர். இதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு சிறுவர்கள் இருவரும் தனது தந்தையை பார்த்து பேசியதற்காக அம்மா சூடு போட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சரசு தனது மருமகள் தனக்கோடியிடம் சென்று ”ஏன் இப்படி செய்தாய்?” எனக்கூறி சத்தம் போட்டார். உடனே தனக்கோடியும், அவரது அண்ணன் தமிழரசு (35) இருவரும் சேர்ந்து ”நாங்கள் இப்படித்தான் செய்வோம். நீ யார் கேட்பதற்கு?” எனக்கூறியதாக தெரிகிறது. ”மேலும் ஏதாவது கூறினால் கம்பியால் அடித்து தொலைத்து விடுவோம்” என மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து சரசு பள்ளிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சரசுவை மிரட்டியதற்காகவும், சிறுவர்களுக்கு சூடு போட்டதற்காகவும் வழக்குப்பதிவு செய்து தனக்கோடியையும், அவரது அண்ணன் தமிழரசுவையும் கைது செய்து மேற் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
------------

குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி அம்மையார் இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? அடடா, அவருக்கு இதற்கெல்லாம் நேரம் ஏது? அவர்தான் மங்களூரில் Pub-ல் தண்ணி போட்டு ஆடுவதற்கு பணக்கார இளம் பெண்களுகளின் உரிமைகளை நிலை நாட்டுவதில் பிசியாக இருக்கிறாரே!

498A சட்டம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் இந்தியாவின் தலைமை நீதிபதி

இதையே முன்பு இந்திய குடியரசுத் தலைவரும் கூறியுள்ளது உங்களுக்கு நினைவிருக்கும்.


சிங்கத்தின் குகையிலேயே உண்மையைப் போட்டு உடைத்துள்ள தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களைப் பாரட்டுகிறோம்!

நம் அரசும் நிதிபதிகளும் இதுபோன்ற கொடுங்கோன்மை சட்டங்களைத் திருத்த முயல்வதை எதிர்த்துக்கொண்டு, இந்தியாவின் குடும்ப வாழ்க்கை முறையை முழுதுமாக ஒழித்துக்கட்ட கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படும் "தேசிய பெண்கள் ஆணையம்" (National Council for Women - NCW) 31-01-2009 அன்று நிகழ்த்திய “திருமணச் சட்டங்கள் - பிரச்னைகளும் சவால்களும்” என்பது பற்றிய கருத்தரங்கில் பேசிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள் இந்திய சமூகத்திற்கே எதிரான Sec 498A IPC பற்றி ஆணித்தரமாக “இந்தச் சட்டம் முழுதுமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது” ("It is being grossly misused") என்று கூறி, தான் உண்மையான நீதியரசர் என்பதை நிரூபித்திருக்கிறார்!

மேலும் அவர், ”கணவன், மனைவியிடையே நிகழும் கருத்து வேற்றுமைகளுக்கும் பிரச்னைகளுக்கும் சிறிதும் தொடர்பில்லாத நபர்களைக் கூட அநியாயமாக புகார்களில் சேர்த்து அவர்களைத் துன்பப்படுத்துகிறார்கள் ("relatives not involved with a matrimonial dispute were unfairly implicated") என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆனால் இந்த கொடுங்கோன்மை சட்டத்தினால் பெருமளவு பண ஆதாயம் பெற்றுவரும் இந்த ஆணையத்தின் தலவராக இருக்கும் கிரிஜா வியாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “இந்தச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. மக்களுக்கு போதிய அறிவு இல்லாததனால் பொய் கேசு போடுகிறார்கள். இதனால் வக்கீல்களும் போலீஸ்காரர்களும் தவறான ஆதாயம் பெறுகிறார்கள். ஆனால் இந்தச் சட்டத்தைத் திருத்த அவசியமில்லை” என்று கூறியிருக்கிறார்.

இந்த ஆணையம் நம்முடைய வரிப்பணத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆணையம். நம் பணத்தைக் கொண்டு நம் ரத்தத்தையே உறிஞ்சுகின்றது இந்த நச்சுப்பாம்பு!!

தலைமை நீதிபதி மேலும் பேசுகையில் “இதுபோன்ற சட்ட துஷ்பிரயோகத்தை அறிந்துதான் சமீபத்தில் குற்றவியல் செயல்பாட்டு நெறிமுறை (CrPC) திருத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு நல்ல சட்டத் திருத்தம். காவல் துறையினர் தகுந்த காரணமில்லாமல் கைது நடவடிக்கை எடுப்பதை இது நிறுத்திவிடும். பொய் கேசுகளில் கைது செய்வதையும் இது தடுக்கும். இது சமூகத்திற்கு நல்லது.” என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று அமுலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதையும் அந்த கிரிஜா வியாஸ் எதிர்த்திருக்கிறார்.
ஏன்?

சிம்பிள்! இவர்கள் அடித்து வரும் பகல் கொள்ளை நின்றுவிடுமே என்கிற கிலி அய்யா! மக்களின் நல்வாழ்வைப்பற்றி இவர்களுக்கு என்ன கவலை. பல கனவுகளுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் பெண்களின் மனத்தில் விஷ வித்தை விதைத்து இதுபோன்ற பொய் கேசுகளைப் போட வைத்து கணவன் மற்றும் அவர்களுடைய குடுமபத்தினர் மட்டுமின்றி, புகார் கொடுத்த பெண்களின் மணவாழ்க்கையையும் சீரழித்து இந்நாட்டை அந்நிய சக்திகளுக்கு அடிமைப் படுத்தும் கேடுகெட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள் இக்கெடுமதியினர்.

பெண்களைப் பற்றி இவர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் கீழ்மட்ட சமுதாயத்தினருக்கு ஏதேனும் செய்யட்டுமே.