பாவம் பெண், கொலைதானே செய்தாள்!

முன்குறிப்பு:

“குடும்ப வன்முறை என்பது ஆண்கள் மட்டும் செய்வது. பாதிக்கப்பட்டவ்ர் என்றால் மனைவிதான்”

- இந்திய குடும்ப வன்முறைச் சட்டம்.

”பெண்கள்மீது நடக்கும் குடும்ப வன்முறைகளை வெளியில் சொல்லக் கூட முடியாமல் ஒடுங்கி வெதும்பி பரிதாபமாகக் கிடக்கிறார்கள் மணமான பெண்கள். அவர்கள் அனைவருமே அதிர்ந்து பேசக்கூட முடியாத நிலைமையில் உள்ளார்கள்”

-- பெண்கள் வாரியம் மற்றும் பெண்ணிய வாதிகள்.

இப்போது செய்தி:

கள்ளத் தொடர்பு கணவன் கொலை: மனைவி உட்பட மூவர் கைது

பிப்ரவரி 19,2009 - செய்தி - தினமலர்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சின்ன புளியம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (48). இவர் மனைவி பேச்சியம்மாள் (41). இவருக்கும் ரைஸ் மில்லில் வேலைபார்த்த சுரேஷ்குமாருக்கும் (28) பழக்கம் ஏற்பட்டது. இது தெரிந்த பரமசிவம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவனை கொலை செய்ய வேண்டும் என காதலனிடம் பேச்சியம்மாள் கூறினார். நேற்று முன்தினம் இரவில் சுரேஷ்குமார் தன் உறவினர் முருகேசபாண்டியனுடன்(38) பேச்சியம்மாள் வீட்டின் மாடியில் ஒளிந்திருந்தார். இரவு வீட்டிற்கு வந்த பரமசிவம் மாடியில் மனைவி இருப்பதை பார்த்து அங்கு சென்றார்.

அங்கு சுரேஷ்குமார் இருப்பதை பார்த்ததும், இருவரும் கட்டிபுரண்டு சண்டை போட்டனர். இதில் சுரேஷ்குமார் பரமசிவத்தை கீழே தள்ளியதும், முருகேசபாண்டியன் பரமசிவத்தின் கால்களை பிடிக்க, பேச்சியம்மாள் கணவன் மார்பில் உட்கார்ந்தார். சுரேஷ்குமார் துணியால் பரமசிவத்தின் வாயையும், மூக்கையும் பொத்தினார். பரமசிவம் மூச்சு திணறி இறந்தார். போலீசார் பேச்சியம்மாளை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் மனைவி, கள்ளக் காதலன் மற்றும் அவரது உறவினர் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மூவரையும் கைது செய்தார்.