வில்லங்க வித்யா!

(நன்றி: ஜூனியர் விகடன் 21-01-2009)


திருச்சி சோமரசம்பேட்டை வாசன் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். வழக்கறிஞரான இவரை கடந்த 11-ம் தேதி இரவு வீட்டு வாசலிலேயே மர்ம நபர்கள் சிலர் சராமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியிருக்கின்றனர்.

வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெட்டியவர்களைத் துரத்தியிருக்கின்றனர். இந்த சமயத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி-யான கலியமூர்த்தி தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்துசேர... சிதறி ஓடிய ரவுடிகளில் ஒருவன், கட்டடம் ஒன்றின் மாடியில் ஏறி பட்டாக் கத்தியைக் காட்டி எல்லோரையும் மிரட்டியிருக்கிறான். துப்பாக்கி முனையில் அவனை வளைத்திருக்கிறார்கள் போலீஸார்.
தணிகாசலம் என்ற அந்த ரவுடியிடம் போலீஸார் விசாரித்தபோதுதான் தங்களின் தலைவனாக அவன் ராஜேஷ்கண்ணா என்ற இன்னொரு வக்கீலை அடை யாளம் காட்டியிருக்கிறான். சிறிது நேரத்தில் அவரும் கைது செய்யப்பட... அடுத்தடுத்து அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோயிருக்கிறது போலீஸ் வட்டாரம்.

விசாரணை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ''ராஜேஷ்கண்ணா ஐயர், வெங்கடேஷ் ஐயங்கார். ரெண்டு பேருமே நெருக்கமான நண்பர்கள். முதல்ல வண்ணாரப்பேட்டையில் ஒரு அபார்ட்மென்டில் எதிரெதிர் வீடுகளில் வசித்தப்ப ரெண்டு குடும்பங்களும் ரொம்ப குளோஸா பழகியிருக்காங்க. வெங்கடேஷ§க்கும் வித்யாவுக்கும் கல்யாணமாகிப் பல வருஷங்களாகியும் குழந்தையில்லை. கணவரின் குறைபாட்டால்தான் குழந்தை பிறக்கவில்லை என்ற வருத்தத்தில் இருந்த வித்யாவுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டிருக்கு. அந்த நெருக்கம் கர்ப்பத்தில் முடிய...

வெங்கடேஷ் அப்போதைக்கு அதைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகும் வெங்கடேஷுக்கும் ராஜேஷ்கண்ணாவுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நெருக்கமாக... நண்பர்களுக்குள் தகராறு வந்திருக்கிறது. அதன் பிறகு, சோமரசம்பேட்டைக்கு வீடு மாற்றி வந்துவிட்டார் வெங்கடேஷ். இதன் பிறகும் வித்யாவின் கள்ளத்தொடர்பு தொடர்ந்திருக்கிறது.

ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் அளவுக்கு பகை வளர்ந்த நிலையில், வெங்கடேஷைப் போட்டுத்தள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. வித்யா விடமும் கொலைத் திட்டத்தைச் சொன்னதும், அவரும் அதற்கு சம்மதித்து தன் கணவனைக் கொலை செய்ய ஒரு லட்ச ரூபாய் பணமும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

இதன் பிறகு தன் கிளையன்ட்டான தணிகாசலம் என்ற ரவுடியிடம் சொல்லி கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார் ராஜேஷ்கண்ணா. இந்த நேரத்தில் ராஜேஷின் மூளை இன்னுமொரு கிரிமினல் கோணத்தில் யோசித்திருக்கிறது. அவர் தந்தை கிருஷ்ணமூர்த்தியோடு அவருக்கு ரொம்ப நாளாகவே சொத்துப் பிரச்னை இருந்திருக்கிறது. இதே கூலிப்படையை வைத்து கையோடு தன் தந்தையையும் போட்டுத்தள்ள முடிவு செய்திருக்கிறார்.

அதன்படி தணிகாசலம், செல்வம், ரவி, குமார், ராதாகிருஷ்ணன் என்று ஐந்து பேர்கொண்ட கூலிப்படையை நான்கு நாட்களுக்கு முன்னதாகவே தன் தந்தை வீட்டில் தங்க வைத்திருக்கிறார். இந்தக் கூலிப்படைக்கு இரண்டு கொலைகளுக்கும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தவர், அவர்களுக்காக ஒரு பழைய பத்மினி ஃபியட் காரையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கூலிப்படையும் ராஜேஷின் தந்தையுடன் சந்தேகம் வராதபடி பழகியிருக்கிறார்கள். திட்டமிட்டபடியே கடந்த 11-ம் தேதி மாலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் மது அருந்தியிருக்கிறார்கள்.

கிருஷ்ணமூர்த்தி குடித்த மதுவில் விஷம் கலந்திருந்ததால் கொஞ்ச நேரத்தில் அவர் இறந்து விட்டார். அதன் பிறகே வெங்கடேஷை வெட்டுவதற்காக காரில் கிளம்பிப் போயிருக்கிறார்கள். ஆனால், காரியத்தை கச்சிதமாக முடிப்பதற்குள் அந்தப் பகுதியில் கூட்டம் கூடிவிடவே திட்டம் ஏடாகூடமாகி மாட்டிக்கொண்டு விட்டனர் கூலிப்படையினர். இருந்தாலும், கூலிப் படையாக வந்தவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். இப்போது கூலிப்படையைச் சேர்ந்த செல்வம், ரவி ரெண்டு பேரையும் பிடித்துவிட்டோம். குமாரையும் ராதாகிருஷ்ணனையும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இதில் வித்யாவைப் பார்த்துத்தான் நாங்கள் மிரண்டுவிட்டோம். 'ஏம்மா, ஆசாரமான ஒரு பிராமின் குடும்பத்துப் பொண்ணு நீ... தாலி கட்டின புருஷனையே கொல்லத் துணிஞ்சிருக்கியேம்மா...' என்று அவரிடம் கேட்டோம். 'எனக்கு வெங்கடேஷ்கூட வாழப் பிடிக்கலை. ராஜேஷ்கண்ணாகூட வாழறதுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்!' என்று வெறி பிடித்த மாதிரி அவர் சொன்னது கேட்டு ஷாக் ஆகிப்போனோம்'' என்றனர்.

சம்பந்தப்பட்டிருப்பது இரண்டு வக்கீல்கள் என்றாலும், புனிதமான நீதித் துறைக்கு இதில் எந்தவிதக் கறையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறதாம், திருச்சி வழக்கறிஞர்கள் சங்கம். இதற்கிடையே முக்கியமான சில வி.வி.ஐ.பி-க்கள் எவ்வளவோ பிரஷர் கொடுத்தும் கொஞ்சமும் அசராமல் ராஜேஷ், வித்யா உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்து உள்ளே தள்ளியிருக்கிறது போலீஸ்.

இந்த விவகாரத்தில் வேறொரு கோணமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது திருச்சி கோர்ட் வட்டாரங்களில். ''ராஜேஷ்கண்ணாவும் தன் மனைவியும் நெருங்கிப் பழகறது வெங்கடேஷுக்கு நல்லாவே தெரியும். இது ஒரு கட்டத்தில் போட்டோ, பண மிரட்டல் என்றெல்லாம் வளர்ந்தது. இதில் ராஜேஷ்கண்ணா தவித்துப் போனார். பண மிரட்டலால் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான் தந்தையுடன் சொத்துப் பிரச்னையாக மாறியிருக்கிறது. இதுக்கப்புறம்தான் வித்யாவும் ராஜேஷ்கண்ணாவும் கூடிப் பேசிக் கொலை செய்யுற முடிவுக்கே வந்திருக்காங்க'' என சில வில்லங்க முடிச்சுகளை அவிழ்த்தார்கள்.

இந்த விவரங்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக வெங்கடேஷை சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றோம். அவர் ஐ.சி.யூ-விலேயே இருந்ததால் வெளியில் காத்திருந்த அவரது குடும்பத்தினர் சிலரிடம் பேசினோம். ''எங்க குடும்பம் ரொம்ப கௌரவமானது. நீங்க கேள்விப்பட்டதாகச் சொல்லும் சந்தேகங்கள் ரொம்ப அருவருப்பா இருக்கு. இப்படிப்பட்ட விஷயங்கள் எங்க குடும்பத்தில் நடக்க வாய்ப்பில்லை. தங்களோட தப்பை நியாயப்படுத்தறதுக்காக ராஜேஷ்கண்ணா தரப்புல சிலர் இப்படி கட்டுக்கதைகளைக் கிளப்பிவிடுறாங்க. மரண அவஸ்தையில் படுத்திருக்கிறவன் இதையெல்லாம் கேட்டா அப்படியே உயிரை விட்டுடுவான்!'' என்று கண்ணீர் சிந்தினார்கள்.
-------------
குறிப்பு (டோண்டு கவனத்திற்கு):-
1.மேற்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கும் ஐயர், அய்யங்கார், ஆசாரமான பிராமின் என்னும் ஜாதி பற்றிய குறிப்புக்கள் நான் எழுதியவை அல்ல. அவை ஜூனியர் விகடன் கட்டுரையில் இருப்பவை.
2. நேரமிருந்தால் குடும்ப நீதிமன்றம் சென்று பாருங்கள்; இதுபோல் ”ஆசாரமான” பல புதுமைப் பெண்கள், “எப்படியாவது அவங்களை உள்ள தள்ளணும். அதுக்கு எதைச் செய்யவும் தயார்” என்று வெறியோடு கூச்சலிடும் காட்சிகளைக் கண்ணாறக் காணலாம்!
3. சங்கீதா... சித்ரா... இதுபோல் ஆட்களைப் போட்டுத்தள்ளும் சுபாரி காண்டிராக்ட் வேலையில் இதுபோன்ற ஆசாரப் பெண் திலகங்கள் பெருமளவில் இறங்கிவிட்டதைக் காணும்போது, இந்தப் பெண்கள் இதை ஒரு குடிசைத் தொழிலாக நடத்துவார்கள் போலிருக்கிறதே!!

4 மறுமொழிகள்:

')) said...

வணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html

')) said...

குறிப்பு (டோண்டு கவனத்திற்கு):-
1.மேற்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கும் ஐயர், அய்யங்கார், ஆசாரமான பிராமின் என்னும் ஜாதி பற்றிய குறிப்புக்கள் நான் எழுதியவை அல்ல. அவை ஜூனியர் விகடன் கட்டுரையில் இருப்பவை.

குறிப்பு என்று எழுதி இருக்கும் போதே தெரிகிறது உங்கள் நோக்கம்

மேற்கண்ட கட்டுரையில் எழுதியிருக்கும் ஐயர், அய்யங்கார், ஆசாரமான பிராமின் என்னும் ஜாதி பற்றிய குறிப்புக்கள் நான் எழுதியவை அல்ல. அவை ஜூனியர் விகடன் கட்டுரையில் இருப்பவை.

ஆமாம் இது நீங்கள் அல்ல , உங்களைப் போல் ஒரு பார்ப்பண எதிரி

2. நேரமிருந்தால் குடும்ப நீதிமன்றம் சென்று பாருங்கள்; இதுபோல் ”ஆசாரமான” பல புதுமைப் பெண்கள், “எப்படியாவது அவங்களை உள்ள தள்ளணும். அதுக்கு எதைச் செய்யவும் தயார்” என்று வெறியோடு கூச்சலிடும் காட்சிகளைக் கண்ணாறக் காணலாம்!

ஆம் இல்லை என்று சொல்லவில்லை,ஆனால் இது எல்லா ஜாதியிலும் இருக்கிறது, இந்த பதிவில் எதற்கு இப்படி ஒரு ஜாதிய பார்வை,
நீங்கள் சார்ந்த ஜாதி என்ன கண்ணகியின் அவதாரமா?

')) said...

ஐயா ஆனந்தன்,

ஆசாரங்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் உயர்த்திப் பிடித்து, அன்றாட வாழ்க்கையில் தங்கள் நன்னடத்தையினால் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது பிராமண சமுதாயம் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆனால் அந்தக் குலப் பெண்கள் தற்போது மேலை நாகரிகத்திலும், சந்தைக் கலாசாரத்த்லும் மயங்கி தங்கள் அடிப்படை பாரம்பரிய மரபு வேர்களைத் துறந்து மணவாழ்க்கை முறையையே கேலிக்கூத்தாக்கும் கலாசாரச் சீரழிவில் முன்னணி வகிக்கிறார்களே என்னும் விசனத்தின் வெளிப்பாடுதான் இந்தக் குறிப்பு.

ஆனால் உங்களுக்கு இது தொடர்பில்லாத பொருள்போல் தோன்றலாம். ஆனால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ 498A, DV Act போன்ற நச்சுப்பாம்புகளால் தீண்டப்படும் காலம் தொலைவிலில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால் அந்நேரம் சாதி மத வேற்பாடின்றி நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கத் தயாராக இருப்போம் என்பதைத் தெரிவிக்கிறோம்!

')) said...

நாடு நன்றரக சுபிக்ஷ்மாக இருக்கிறது என்று இந்த செய்தியில் நன்றரக தெரிகிறது. மலிவு விலையில் மதுவை அரசாங்கமே விற்பனை செய்கிறது, ரேஷன் கடையில் இலவச புழுத்துப்போன அரிசி கிடைக்கிறது, கொலை செய்வது எப்படி, சதித்திட்டம் தீட்டுவது எப்படி, பொய் வரதட்சணை கேஸ் போடுவது எப்படி என்று டீ.வி. சீரியல் பார்த்து தெரிந்து கொள்ள இலவச தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு கொலைகள். நல்ல முன்னேற்றம். சபாஷ்!!!