கணவனின் வக்கீலை செருப்பால் அடித்த மனைவி


சென்னை குடும்பநல கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கும், பெண்ணுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. வக்கீலை பெண் செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால், விவாகரத்து கோரி சென்னை குடும்பநல கோர்ட்டில் காயத்ரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி நாராயணன் முன் நேற்று விசாரணை நடந்தது. விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

கோர்ட்டை விட்டு காயத்ரி வெளியே வந்தார். கார்த்திக் சார்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்ரமணியனும் வெளியே வந்தார். அப்போது காயத்ரிக்கும், வக்கீலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், வக்கீல் பாலசுப்ரமணியனை காயத்ரி செருப்பால் அடித்ததாகவும், பதிலுக்கு வக்கீலும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.உடனே அங்கு போலீசார் வந்தனர். அப்போது, சில வக்கீல்கள் சேர்ந்து காயத்ரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் நிலையத்துக்கு காயத்ரி மற்றும் அவரது தந்தையை அழைத்து வந்தனர். வக்கீல் பாலசுப்ரமணியன் அளித்த புகாரில், "என்னை கொலை செய்துவிடுவேன் என காயத்ரியும், அவரது தந்தை தினகர்குமாரும் கூறினர். செருப்பால் என் கன்னத்தில் காயத்ரி பல முறை அடித்தார். சக வக்கீல்கள் என்னை விடுவித்தனர். இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

காயத்ரி தாக்கப்பட்டது குறித்து புகார் கொடுக்க அவர் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. அது சாத்தியமாகவில்லை. காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் நிலையத்துக்குள் வைத்திருந்தனர்.இதற்கிடையில் வக்கீல்கள் பலர், போலீஸ் நிலையம் வெளியில் திரண்டனர். வக்கீல் புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து காயத்ரி, அவரது தந்தையை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

காயத்ரியின் முகம் வீக்கமாக இருந்தது. மாஜிஸ்திரேட் முன் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்பின், அரசு பொது மருத்துவமனையில் காயத்ரி சேர்க்கப்பட்டார்.
=====================

திறந்த கோர்ட்டில் பலர் முன்னிலையில் வக்கீலை செருப்பால் அடித்த அந்தப் பெண், மூடிய கதவுகளுக்குள் தன் கணவனையும் அவனுடைய பெற்றோரையும் என்ன பாடு படுத்தியிருப்பாள்!

இதுபோல் இந்தப் பெண்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் ஒருதலைப் பட்சமான சட்டங்களும், தான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் அகம்பாவமான மனப்பான்மையும்தான்.

இந்த நாட்டில் ஆண்களும் அவனைப் பெற்றவர்களும் பாவப்பட்ட ஜன்மங்கள்!

ரேணுகா சவுத்திரி போன்ற பெண்கள் மந்திரியாக நீடிக்கும்வரை இந்த நிலைமை தொடரும்.

3 மறுமொழிகள்:

')) said...

பொய் வரதட்சணை கேசு கொடுக்கும் நச்சுப் பாம்புகளுக்கு பொய்யனா கிரிமினல் புகார் எழுதிக்கொடுத்து அப்பாவிகளை துன்புறுத்த துணை போன கிரிமினல் வக்கீல்களுக்கு கிடைத்த சரியான செருப்படி. சபாஷ்.

சட்டத்தை தவறhக பயன்படுத்தத் துணைபோகும் சில வக்கீல்களும், போலீசும் செருப்படிக்குத் தகுதியானவர்களே.

')) said...

அட்ரசக்க, அட்ரசக்க

இது போல பிசாசு வக்கிலையே பொது எடுத்துல அதுவும் கோர்ட்டு உள்ள செருப்பால அடிக்குதுன்னா அதொட 498a புருஸன் என்னா அடிவாங்கிருப்பாரு...

')) said...

நல்ல நல்ல செய்தியா கொஞ்ச நாளா வெளியாகுது

அதுல இதுவும் ஒன்னு இது படிச்சிப்பாருங்க

http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2471&cls=row4&ncat=IN