ஐயோ பாவம் கணேஷ்!

சென்னை: கள்ளக் காதலி யோசனையின் பேரில், அவரது கணவர் காரை திருடி விற்று உல்லாசமாக இருந்த கள்ளக் காதலன் கைது செய்யப்பட்டார்.

சென்னை அபிராமபுரம் சண்முகபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் (32). இவரது மனைவி லட்சுமி (28). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். லட்சுமி தனது மொபைல்போனில் எதேச்சையாக பேசும் போது சுதாகர் (19) என்ற வாலிபரின் தொடர்பு கிடைத்தது. கணேஷ் வீட்டில் இல்லாத போது லட்சுமியுடன் சுதாகர் உல்லாசமாக இருந்தார்.

கடந்த ஆறு மாதத்தில் அவர்களுக்குள் நெருக்கம் மேலும் அதிகரித்தது. கணேஷ் தனது காரை சாலையில் நிறுத்தி விட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, காரின் சாவியை கள்ளக்காதலன் சுதாகரிடம் கொடுத்து அதை திருடி செல்லும்படி லட்சுமி கூறியுள்ளார்.காரை திருடி சென்ற சுதாகர், அதன் இன்ஜினை கழட்டி வீட்டில் வைத்துக் கொண்டார். நான்கு டயர்களை மட்டும் 3,000 ரூபாய்க்கு விற்றார். அந்தப் பணத்துடன் கடந்த வாரம் இருவரும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர்.

பணம் தீர்ந்ததும் மீண்டும் தன் வீட்டிற்கு லட்சுமி வந்தார். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு லட்சுமியை கணேஷ் ஏற்றுக் கொண்டார். கார் திருட்டு சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசில் கணேஷ் புகார் கொடுத்தார். போலீசாரின் விசாரணையில் கார் திருட்டுக்கும், லட்சுமி சுதாகரின் கள்ளக்காதலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சுதாகரனின் மொபைல் போனை வைத்து போலீசார் அவரை பிடித்தனர்.லட்சுமியின் திட்டப்படியே காரை திருடியதை சுதாகர் ஒப்புக் கொண்டார். சுதாகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணேஷ் மற்றும் லட்சுமி இருவரையும் ஒன்றாக சேர்ந்து வாழும்படி போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8492&cls=row4&ncat=TN
-----------

இப்போது சொல்லுங்கள், குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் மன நலனுக்காகவும், தன் தன்மானத்தையே இழந்து தன் அடிப்படை உணர்வுகளையே விட்டுக் கொடுக்க முன் வந்தது யார்? தந்தையா, தாயா?

ருசி கண்ட பூனையான இந்த கற்புக்கரசி மீண்டும் பணம் கிடைத்தவுடன் யாரைத் தேடுவாளோ!

வெட்கக் கேடு!!

3 மறுமொழிகள்:

')) said...

இதுபோல் தே______ எதை வேண்டுமானலூம் செய்வார்கள் ஆனால் குழந்தைக்களின் எதிர்காலத்துக்காக பொறுத்துக்கொள்ள வேண்டுமாம்
என்ன கொடும சார் இது...

')) said...

இதோ தினத்தந்தியில் வந்துள்ள செய்தி. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தலை சுத்துது!

போலீஸ்காரங்களுக்கு இதுபோல் அவிசாரி போன பொண்ணுங்களை அந்த அப்பாவிப் புருஷன் கிட்டயே சேர்ந்து வாழணும்னு சொல்றதுதான் வேலையா? இது என்ன நியாயமோ, அய்யா!

சீ, இந்த மாதிரி ஒரு மணவாழ்க்கையும் தேவையா!
--------------

சென்னை, பிப்.11-

சென்னையில் கார் திருட்டு வழக்கில் கணவனை மனைவி சிக்க வைத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலனை மணப்பதற்காக அவர் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதும் அம்பலம் ஆனது. இதனால் அவமானப்பட்ட அந்த பெண் தற்கொலைக்கு முயன்றார்.

இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வாடகை கார்

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் வாடகைக்கு கார்களை விட்டு தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கார் ஒன்றை அபிராமபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவரிடம் மாத வாடகைக்கு விட்டிருந்தார். மாத வாடகையை கார் டிரைவர் கடந்த 2 மாதமாக கொடுக்கவில்லை. இதனால் சரவணன் கார் டிரைவரை அவரது வீட்டுக்கு சென்று கண்டித்தார். வாடகை தராவிட்டால் காரை கொடுத்து விடு என்றும் எச்சரித்துவிட்டு வந்தார்.

இந்த நிலையில், அந்த கார் காணாமல் போய்விட்டது. இதுதொடர்பாக கார் டிரைவர் மீது சரவணன் அபிராமபுரம் போலீசில் புகார் கொடுத்தார். துணை கமிஷனர் மவுரியா உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரவீந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் சூரியநாராயணன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கார் டிரைவர் மறுப்பு

போலீசார் கார் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். காரை நான் திருடவில்லை என்றும், வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்த கார் காணாமல் போய்விட்டது என்றும், அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் போலீஸ் விசாரணையில் கார் டிரைவர் மறுத்தார்.

அப்போது கார் டிரைவரின் வீட்டுக்கு மர்ம வாலிபர் ஒருவர் ரகசியமாக வந்து சென்றது தெரியவந்தது. டிரைவர் இல்லாத நேரத்தில் அந்த வாலிபர் வந்து டிரைவரின் மனைவியோடு தனிமையில் உட்கார்ந்து பேசிவிட்டு செல்வதை போலீசார் தெரிந்து கொண்டனர்.

மனைவியின் திட்டம்

அந்த நபரின் பெயர் சுதாகர் என்றும், அவரும், டிரைவரின் மனைவியும் கள்ளக்காதலில் ஈடுபடுவதும் அம்பலமானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சுதாகர்தான் காரைத் திருடியது தெரியவந்தது. திருடிய காரின் பாகங்களை தனித்தனியாகப் பிரித்து உத்திரமேரூரில் உள்ள மெக்கானிக் ஒருவரிடம் விற்றதும் அம்பலமானது.

காரைத் திருடச் சொல்லி ஆலோசனை வழங்கியது டிரைவரின் மனைவிதான் என்றும், பழியை டிரைவர் மீது போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டம் வகுத்துக் கொடுத்ததாகவும் சுதாகர் போலீசாரிடம் கூறினார். டிரைவரின் மனைவியை விசாரித்தபோது அவரும் உண்மையை ஒப்புக் கொண்டார்.

டிரைவருக்கு சிறிய வயதுடைய 3 குழந்தைகள் உள்ளன. இதனால் டிரைவரின் மனைவியையும், அவரது கள்ளக்காதலன் சுதாகரையும் கைது செய்தால் டிரைவரின் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று போலீசார் கருதினார்கள்.

தற்கொலை முயற்சி

மனைவி செய்த குற்றத்தை மன்னித்து அவரோடு மீண்டும் வாழ்வதற்கு டிரைவர் சம்மதித்தார். இதனால் போலீசாரும் டிரைவரின் மனைவியை எச்சரித்து நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்தனர். அவரது கள்ளக்காதலன் சுதாகர் கைது செய்யப்பட்டார். மனிதாபிமான முறையில் போலீசார் இந்த பிரச்சினையை அணுகி சுமூகமாக தீர்த்து வைத்தனர்.

ஆனால், தன்னுடைய கள்ளக்காதலும், கணவனை ஜெயிலுக்கு அனுப்ப சதித்திட்டம் தீட்டியதும் அம்பலமானதால் டிரைவரின் மனைவி அவமானத்தால் மனமுடைந்தார். நேற்று மாலையில் கத்தியால் கையைக் கீறி அவர் தற்கொலைக்கு முயன்றார்.

உடனே போலீசார் அவரைக் காப்பாற்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டிரைவரின் குடும்ப நலம் கருதி அவரது பெயரையும், அவரது மனைவியின் பெயரையும் போலீசார் வெளியிடவில்லை.

')) said...

இன்னும் கொஞ்ச நாள்ல இந்த தே____ வேற எவன்கூடயாவது சேர்ந்து கிட்டு 498A பொய்கேசு போடும் அதையும் அந்த இளிச்சவாயன் பொறுத்துகிட்டு குழந்தைக்காக அந்த _______ கூட குடும்பம் நடத்தனும் இதல்லாம் இந்த நாட்ல பொறந்த அப்பாவி அம்பளைங்களோட தலையேழுத்து