ஒரு பெண்ணின் சோகக் கதை

நானும் பெண்தான். ஆனால் சட்டம் என்னை பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய சட்டங்களின் கண்களில் ஒரு ஆண்மகனின் தாயும் பெண்ணல்ல, சகோதரியும் பெண்ணல்ல.


நான் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணின் சகோதரியாகப் பிறந்ததுதான். ஒரு நெஞ்சில் ஈரமற்ற கொடுமைக்காரப் பெண்ணை என் அண்ணன் கைபிடித்த காரணத்தால் நான் சிறைக்குச் செல்ல நேர்ந்தது. அந்த அண்ணன் வாழ்ந்த 12 நாள் மணவாழ்க்கைக்குத் தண்டமாக அந்தப் பெண்ணிற்கு தன் சம்பளம் முழுவதையும் கொடுத்து அழுது கொண்டிருக்கிறான். சட்டம் பயின்ற அந்தப் பெண் எந்த ஒரு தொழிலும் செய்யாமல், வேலையும் பார்க்காமல் என் அண்ணனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி பணம் பிடுங்கிக் கொட்டிருக்கிறாள். இதற்கு சட்டங்கள் துணை போகின்றன.


என்னவாயிற்று என் வாழ்க்கை? அவள் எங்கள்மேல் ஏவி விட்ட பொய்க் கேசுகளின் தாக்கத்தால் கையிலிருந்த சேமிப்பெல்லாம் போய், எங்கள் அண்னனும் சம்பாதிப்பது அனைத்தையும் அந்தப் பேயிடம் சமர்ப்பிக்கும் நிலையில் நான் ஏதோ சொற்ப ஊதியத்தில் வேலை பார்த்து என் பெற்றோரைக் காப்பாற்றி வருகிறேன்.


எனக்கு திருமணம் ஆகும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.
இப்போது சொல்லுங்கள் - 498A சட்டங்களும், பெண்கள் நல வாரியங்களும், என்.ஜி.ஓக்களும் , பெண்கள் நல அமைச்சர்களும் பெண்களுக்காகவா? இல்லை பொய் வழக்குபோட்டு அதனால் ஆதாயம் பார்க்கும் முதலைகளுக்காகவா?


ஒரு பெண்ணின் ஒலங்களைக் காண இந்த வலைப்பதிவைப் படியுங்கள்.

2 மறுமொழிகள்:

')) said...

இதுபோல் கொடுமைகள் ஏராளம்... இன்னும் சில நாட்களில் திருமணம் என்ற முறை இல்லாம் போனாலூம் அச்சரியப்படுவதிற்கில்லை

')) said...

எங்கதையும் கொஞ்சம் படிச்சி பாருங்க....


http://tamizhsaran-antidowry.blogspot.com