ஓடிப்போகும் பெண், ஊக்குவிக்கும் தாயார்!

கீழ்பாக்கத்தில் பரபரப்பு சம்பவம்!

ரூ.10 லட்சம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார்
மகள் காதலனுடன் ஓடியதை மறைத்து தாயார் நடத்திய நாடகம் அம்பலம்

சென்னை கீழ்பாக்கத்தில் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கல்லூரி மாணவியை கடத்தியதாக பொய் புகார் கொடுப்பட்டது. மகள் காதலனுடன் ஓடியதை மறைப்பதற்காக தாயார் நடத்திய நாடகம் போலீசார் விசாரணையில் அம்பலமானது.

துணிகடை அதிபர் மகள் சென்னை கீழ்பாக்கம் பர்னபி ரோட்டைச் சேர்ந்தவர் பார்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை எழும்பூரில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை பாரிமுனையில் துணி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். பார்வதி தினமும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். நேற்று காலை 6 மணி அளவில் பார்வதி வாக்கிங் சென்றிருந்தார். காலை 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பார்வதியின் தாயார் தேட ஆரம்பித்தார்.

இந்த நிலையில், பார்வதியின் தாயார் தனது கணவருக்கு ஒரு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலில் பார்வதி காலையில் வாக்கிங் சென்றவள் வீடு திரும்பவில்லை என்றும், வாலிபர் ஒருவர் போன் செய்து பார்வதியை கடத்தி சென்று விட்டதாகவும், ரூ.10 லட்சம் பணம் கொடுத்தால்தான் பார்வதியை விடுவேன் என்றும் மிரட்டுவதாகவும் கூறினார். இதை கேட்டு பார்வதியின் தந்தை அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

இதுகுறித்து கீழ்பாக்கம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ராஜாமணி மேற்பார்வையில், தனிப்படை போலீசார் பார்வதியை தேடினார்கள். பார்வதியின் செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் பேசினார்கள்.

அப்போது பார்வதி தனது காதலனுடன் ஓடி வந்து விட்டதாகவும், மும்பைக்கு ரெயிலில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடனே போலீசார் உங்களை கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் திரும்பி வந்து விடுங்கள். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை கேட்டு பார்வதி மனம் மாறினார். தனது காதலனோடு நடுவழியில் ரெயிலை விட்டு இறங்கி கார் மூலம் நேற்று பிற்பகலில் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், நானே விரும்பி காதலனுடன் ஓடிப்போனேன் என்றும் பார்வதி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

தனது மகள் காதலனுடன் ஓடிப்போனதை மறைப்பதற்காக பார்வதியின் தாயார் அவரது தந்தையிடம் பொய்யான தகவல் சொல்லி போலீசிலும், பொய் புகார் கொடுக்க வைத்துவிட்டார்.

பார்வதியின் தாயார் நடத்திய நாடகத்தால் கீழ்பாக்கம் போலீசார் நேற்று கடும் அவதிக்குள்ளானார்கள்.

பார்வதியின் காதலன் பெயர் கான் அப்துல்லா. மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்து இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்.

காதலனுடன் ஓடிப்போன பார்வதி போலீஸ் விசாரணையில், திடீரென்று மாற்றி பேசினார். காதலனோடு செல்ல விரும்பவில்லை என்றும், பெற்றோருடன் போய் விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் பார்வதியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பொய்யான புகார் கொடுத்ததற்காக போலீசார் கடும் எச்சரிக்கையையும் விடுத்தனர். பார்வதியின் காதலரும் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.

செய்தி - தினத்தந்தி - சென்னை, பிப்.4- 2009.

1 மறுமொழி:

')) said...

//பார்வதியின் காதலன் பெயர் கான் அப்துல்லா. மும்பையைச் சேர்ந்த இவர் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்து இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து வந்தார்//

நல்ல வேல ஆரம்பத்திலேயே தப்பிச்சாரு இந்த புண்ணியவான்... கல்யாணம் மட்டும் பண்ணிருந்தாரு அவ்வளவுதான் அவரோட அம்மா வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துனான்னு கதை எழுதி எல்லாரையும் புடிச்சி உள்ள போட்டிருக்கும்