ஒண்ணுந்தெரியாத பாப்பா

பிப்ரவரி 27,2009 - தினமலர்

திருவாடானை: "மிஸ்டு கால்' மூலம் இளம்பெண்ணை ஏமாற்றி, குடும்பம் நடத்திய போலி இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் கனகவள்ளி (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜனவரி முதல் தேதி இவருடைய மொபைலுக்கு மிஸ்டு கால் வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், " சாரி ராங் நம்பர்' என கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு பின், அதே எண்ணில் மிஸ்டு கால் வரவே மீண்டும் கனகவள்ளி பேசினார். தனது பெயர் ஜெயக்குமார்(32) என்றும், மதுரையில் இன்ஜினியராக பணிபுரிவதாகவும் கூறி போனை "கட்' செய்துள்ளார்.

இதை தொடர்ந்து இருவரும் அவ்வப்போது போனில் பேசினர். நாளடைவில் முகம் பார்க்காமல் காதலை வளர்த்துக் கொண்டனர்.

கடந்த 22ம் தேதி நான்கு சவரன் தங்க நகை, 18 ஆயிரம் ரூபாயுடன் மதுரை சென்ற கனகவள்ளி, அங்கு தனி வீட்டில் ஜெயக்குமாருடன் குடும்பம் நடத்தினார்.

இவரை தேடிய பெற்றோர் போலீஸ் உதவியுடன் கனகவள்ளியை கண்டுபிடித்தனர். விசாரணையில், ஜெயக்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், அங்குள்ள தனியார் கடையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கனகவள்ளியை மீட்ட போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், " இன்ஜினியர் மாப்பிள்ளை என்ற ஆசையில் கனகவள்ளி சென்றுள்ளார். அடையாளம் தெரியாத ஆண்களுடன் இளம்பெண்கள் போனில் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

-----------

அந்தப் போலீசாருக்கு புதுமைப் பெண்களின் வேட்கைகள் புரியவில்லை. சுத்த பத்தாம் பசலிகளாக இருக்கிறார்களே! Pub களுக்குப் போய் இஷ்டத்திற்கு குடித்து விட்டுக் கும்மாளம் போடுவதும், கண்டவனோடு ஜல்சா பண்ணுவதும்தான் இன்றைய நாகரிகம். பெற்றோர்களோ, போலீசாரோ கண்டுவிட்டால் இருக்கவே இருக்கிறது “இவன் என்னைக் கற்பழித்துவிட்டான்” என்னும் அஸ்திரம்!

“கற்பு” என்பதே கெட்ட வார்த்தை என்றும், கற்பு - கற்பு என்று சொல்லியே எங்களை ஆணாதிக்க சமுதாயம் அமுக்கி வைத்துவிட்டது என்றும் அறைகூவலிடுவோர், கற்பழிப்பு சட்டத்தையும் எடுக்கச் சொல்லிப் போராடுவதுதானே? இல்லாத ஒன்றை எப்படி அழிப்பது?

15 மறுமொழிகள்:

')) said...

கற்பழிப்பு என்ற வார்த்தை பிரயோகமே தவறு. அதை பாலியல் பலாத்காரம் என்று தான் குறிப்பிடவேண்டும். பாலியல் பலாத்காரம் ஆண்களுக்கு எதிராக ஆண்களால் கூட நிகழ்த்தப்படுகிறது (உதாரணம்: சிறைகளில்).

கற்பு என்ற கோட்பாட்டை காப்பாற்ற பாலியல் பலாத்காரத்தை தடுக்க சொல்லவில்லை நண்பரே.பாலியல் பலாத்காரம் என்பது ஒரு மிககொடூரமான உடல் ரீதியான, மனரீதியான வன்முறை.

')) said...

நீங்கள் மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் 19 வயது பெண் ஒருவரை 32 வயது திருமணமான ஆண் காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறார்.நீங்கள் எழுதியிருப்பதை படித்தால் கனகவள்ளி எனும் அந்த பெண் "பப்புக்கு போய் கூத்தடிப்பவராகவோ, கண்டவனுடன் ஜல்சா செய்பவராகவோ" தெரியவில்லை.கிராமத்து பெண் என்று நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள். கிராமத்தில் பப் எல்லாம் கிடையாது.

காதலித்து ஏமாந்த அந்த பெண்ணை நீங்கள் இப்படி அவமரியாதை செய்வது ஏன் என்றுதான் புரியவில்லை.

')) said...

”காதலித்து ஏமாற்றுவது” என்பது என்ன?

ஒரு 19 வயது பெண், தன் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் திருட்டுத் தனமாக ஓடிப்போய் ஒரு 32 வயது ஆணுடன் போய் குடும்பம் நடத்துகிறாள். அவளுடைய முழு விருப்பத்துடந்தானே இதைச் செய்திருக்கிறாள்? பிறகு அதற்கு ஆணை மட்டும் குற்றம் சாற்றி கைது செய்வது என்ன நியாயம்?

இன்னொரு விஷ்யம். இது மிக முக்கியமானது. உங்கள் பலருக்குத் தெரிந்திருக்காது. ஒரு பெண் எவ்வளவு காலம் வேண்டுமனாலும் எந்த ஆணுடனும் கூட கலைவையில் இடுபட்டுக் கொண்டு கணவன், மனைவி போல குடும்பம் நடத்திக் கொண்டிருக்கலாம். ஆனல் திடீரென்று ஒரு நாள் “இந்த ஆண் என்னை ஏமாற்றி விட்டான்.” என்று காவல் துறையில் புகார் கொடுக்கலாம். உடனே அந்த ஆணைக் கைது செய்து விடுவார்கள். எந்தக் குற்றம் புரிந்ததாகத் தெரியுமா? “கற்பழிப்பு” (Rape).ஆமாம் ஐயா!

அதோடு சேர்த்து Breach of faith போன்ற சட்டப் பிரிவுகளையும் சேர்த்துவிடுவார்கள்.

வன்புணர்வு, பலாத்காரமான கற்பழிப்பை நன் ஆதரிப்பதாக எண்ணவேண்டாம். அது மிகக் கொடுமையானது. கோவாவில் ஒரு அயல் நாட்டுப் பெண்னை ஒரு அரசியல்வாதியின் மகன் கொடுமையாக “பாலியல் பலாத்காரம்” செய்ததாகவும், ஆனால் அவன் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். அது கொடுமை.

ஆனல் ஒரு மேஜரான பெண் தன் முழு சம்மதத்துடன், திருட்டுத் தனமாக ஒரு ஆண்மகனுடன் ஜல்சா செய்துவிட்டு, மாட்டிக் கொண்டவுடன் ஆணை மட்டும் பழி வங்குவது என்ன நியாயம் என்று கேட்கிறேன். பதில் இருக்கிரதா உங்களிடம்?

முழு ஈடுபாட்டுடன் பகிரப்பட்ட பாலியல் இன்பக் கலவை இருவரும் சேர்ந்து செய்வதுதானே?

மேலும், இதை வாசிக்கும் இளைஞர்களுக்கு ஒரு வார்த்தை:-

ஒரு பெண் நண்பர் ஜாலியாக இருக்கலம் என்று கூப்பிட்டாள் என்று தகுந்த முன்னெச்சரிக்கை யில்லாமல் சென்று விடாதீர்கள். எந்த நிமிடமும் உங்கள்மீது ரேப் புகார் கொடுத்து உள்ளே தள்ள வைத்துவிடுவார்கள். சட்டங்கள் எல்லாம் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன. நீங்கள் கடிதத்திலோ, தொலைபேசியிலோ, எஸ்.எம்.எஸ் மூலமாகவோ ஒரு பெண்ணை அழைக்காதீர்கள். அப்படி ஒரு பெண் பிடிவாதமாக உங்களை விரும்பி அழைத்தால், அவள் அப்படி அழைத்ததற்கான முழு சாட்சியங்களையும், தரவுகளையும் சேமித்துக் கொள்ளுங்கள்!

உஷார்!!

')) said...

நண்பரே,

//ஒரு 19 வயது பெண், தன் பெற்றோருக்குத் தெரிவிக்காமல் திருட்டுத் தனமாக ஓடிப்போய் ஒரு 32 வயது ஆணுடன் போய் குடும்பம் நடத்துகிறாள். அவளுடைய முழு விருப்பத்துடந்தானே இதைச் செய்திருக்கிறாள்? பிறகு அதற்கு ஆணை மட்டும் குற்றம் சாற்றி கைது செய்வது என்ன நியாயம்?//

காரணம் அந்த ஆணுக்கு திருமனமாகிவிட்டது என்பதை அந்த பெண்ணிடம் மறைத்து குடும்பம் நடத்தியது.இது முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் சட்டப்படி செய்யும் துரோகமாகும்.

//ஆனல் ஒரு மேஜரான பெண் தன் முழு சம்மதத்துடன், திருட்டுத் தனமாக ஒரு ஆண்மகனுடன் ஜல்சா செய்துவிட்டு, மாட்டிக் கொண்டவுடன் ஆணை மட்டும் பழி வங்குவது என்ன நியாயம் என்று கேட்கிறேன். பதில் இருக்கிரதா உங்களிடம்?//

அந்த ஆணுக்கு திருமனமாகிவிட்டது என்பது தெரிந்துதான் அவள் பழகினாள் என்றால் அந்த ஆணை குறைகூறுவது நியாயமில்லை.ஆனால் இந்த சம்பவத்தில் அவன் கல்யாணமாகாதவன் என நினைத்து அவள் அவனுடன் ஓடிப்போய் குடும்பம் நடத்தி இருக்கிறாள்.பிறகு அந்த ஆணை கைது செய்யாமல் என்ன செய்வது?

')) said...

"என்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். அதனால் அவனுடன் கலவையில் ஈடுபட்டேன். அவனோடு குடும்பம் நடத்தினேன். என்னை ஏமாற்றிவிட்டன்" - இது என்னய்யா கதை? அதற்கென்ன சாட்சியம்?

அதையெல்லாம் விடுங்கள் ஐயா. ”திருமணம் நடக்கட்டும், பிறகு உன்னுடன் வாழ்கிறேன்” என்று சொல்ல வேண்டியதுதானே? அவன் மிஸ்டு கால் கொடுத்தானாம். இவள் போய் குடும்பம் நடத்தினாளாம்! பாலியல் இன்பத்திற்காகத் தானே அவனுடன் சென்றாள். பிறகு அவனை மட்டும் குற்றவாளியாக்குவது நியாயமா?

இந்த விஷயத்தில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் மிகவும் நியாயமானவை. இரு தரப்பு உட்படுதலையும் கவனத்தில் கொள்ளும் முறையில் அமைந்திருக்கின்றன.

தானாக முழு மனதுடன் உடன்பட்டு பெற்றோருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாக ஒருவனுடன் கூட வசித்து கலவையில் ஈடுபட்டவளுக்கு குற்றத்தில் பங்கில்லையா? அவள் சொன்னால் போதும், “என்னைத் திருமணம் செய்வதாக வாக்களித்தான்” என்று. உடனே அந்த ஆண்மகன் குற்றவாளியாகி விடுகிறான்!

ஏற்கனவே திருமணமான ஆணுடன் ஓடிப்போகும் இளம் பெண்கள் கேசுகள் எவ்வளவு வேண்டும்? தினமும் பேப்பரைப் படியுங்கள்.

கொண்ட கண்வனை விட்டுவிட்டு, டிரைவரோடும், ஆட்டோக்காரரோடும் ஓடும் பெண்கள் எவ்வளவு பேர்!

பாவம் ஒரு பாவமும் அறியாத பேதைப் பெண்கள்!

செல்வன், உங்களுக்கு இப்போதிருக்கும் அநியாயச் சட்டங்களால் பெண்கள் மூலம் தீங்கு ஏதும் நேராமலிருக்க உங்களுடன் சேர்ந்து நாங்களும் வேண்டுகிறோம்.

')) said...

பாவம் அந்த கிராமத்து அப்பாவிப் பெண். ஃபோன் செக்ஸ் என்பதை தவறhகப் புரிந்து கொண்டு பெட்டியுடன் புறப்பட்டு விட்டார் போலும்.

ஒரு துளி செய்தி:

The Judge asked the woman :'So when did you realize you were being Raped?'

woman: 'When the cheque bounced!'

')) said...

where was love in all this. he wanted to use her, she fell for the bait, and she fell for the bait because of a wish for better life! do not insult love in a bargaining relationship.
i like this post. keep writing

')) said...

நண்பர் செல்வனே,

பல பெண்கள் 498a என்னும் வரதட்சணைக்கொடுமைசட்டத்தைபயன்படுத்தி அப்பாவி வயனாத தாயார்களையும் சகோதரிகளையும் குற்றவாளி போல் சிறையில் அடைக்கின்றனர்... அதுபோல் பெண்களுக்கு தங்களுடைய பதில் என்ன? பல ஆண்கள் இச்சட்டத்தினால் வேலையிழந்து குடும்பத்தையிழந்து போலீஸ் கோர்ட்டு கேசுன்னு சுத்திக்கொண்டிருக்கின்றர்கள் அவர்ளுக்கு உங்களுடைய பதில் என்ன?

தப்புசெய்தால் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன அணைவருக்கும் சமமான தண்டனை வேண்டும் அதைவிடுத்துவிட்டு ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைத்ததுபோல் யார் மாட்டினாலூம் ஒன்னு 498a கேசு அல்லது d.v. கேசு

')) said...

தமிழ் சரவணா,

துஷ்பிரயோகம் செய்வதென்றால் டிராபிக் சட்டத்தை கூட துஷ்பிரயோகம் செய்ய முடியும்.நம் நாட்டில் அதையும் செய்கிறார்கள்.துச்பிரயோகம் செய்கிறார்கள் என்பதற்காக டிராபிக் சட்டத்தை தூக்கிவிட முடியுமா?

சமமில்லாத இருவரை சமமாக சட்டம் நடத்த முடியாது.வலுவற்றவர்களுக்கு சலுகை காட்டித்தான் ஆகவேண்டும்.ஆண் இனம் வலுமிக்கது.அதை எதிர்கொள்ள இம்மாதிரி சட்டங்களின் உதவி பெண்ணினத்துக்கு தேவைப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் இருவரிலும் அதிகம் சம்பாதிப்பவர்கள் யார்,அதிக சதவிகிதம் படித்தவர்கள், வேலைக்கு போகிறவர்கள் யார்,கருத்தியல்,அரசியல்,அதிகார தளங்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் யார்,வலுவானவர்கள் யார் என்று பட்டியல் போடுங்கள்.எந்த இனத்துக்கு வலு அதிகம் என்று தெரியவ்ரும்.

பெண்கள் சிலர் பொய்வழக்கு போடுவதில்லை என்று நான் கூறவில்லை.எந்த சட்டமானாலும் அதை துஷ்பிரயோகம் செய்பவர்கள் இருப்பார்கள்.துச்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்காக சட்டங்களை நீக்கதுவங்கினால் உலகில் எந்த சட்டமும் இருக்க முடியாது.

Anonymous said...

""அந்த ஆணுக்கு திருமனமாகிவிட்டது என்பது தெரிந்துதான் அவள் பழகினாள் என்றால் அந்த ஆணை குறைகூறுவது நியாயமில்லை.ஆனால் இந்த சம்பவத்தில் அவன் கல்யாணமாகாதவன் என நினைத்து அவள் அவனுடன் ஓடிப்போய் குடும்பம் நடத்தி இருக்கிறாள்.பிறகு அந்த ஆணை கைது செய்யாமல் என்ன செய்வது?""

Even assuming that This male has suppresed the fact that he was married
Can you tell me how it is rape?
May be cheating!
Both had sex on consent? How then it is Rape?
If we can prove that the women had knowledge of this man is already married what is your stance?

Why people think that WOMEN are not after sex?

')) said...

இனிய நண்பர் செல்வன் அவர்களுக்கு,

எங்களுடைய கோரிக்கை சட்டத்தை தூக்கசொல்வது கிடையாது... மேலும் வரதட்சணை வாங்கி பிழைக்கும் சில கூட்டத்தை கடுமையாண தட்டணைக்கு உட்படுத்தவேண்டும்... ஆனால் நம் நாட்டில் நடப்பதோ இச்சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி வயதான தாய்மார்களையும் சகோதரிகளையும் சிறையில் அடைப்பதும் மிரட்டப்படுவதும் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றது... உதாரணமாக எனது திருமணத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயார் ஐந்து நாள் புழல் சிறையில் அடைக்கபட்டார்.. எனது தாயார் ஒருமாத்த்திற்க்கு மேல் புழல் சிறை மற்றும் என் மனைவி போட்ட பொய்வழக்கில் இல்லாத எனது தம்பி கடைசிநேரத்தில் ஒரு சட்ட பிரிவைபயன்படுத்தி எனது தம்பியும் புழல் சிறையில் ஒருமாதத்திற்கு மேல் அடைக்கப்பட்டார்...

இதற்கேல்லாம் தங்களுடைய பதில் என்ன? இதுபோல் பல லட்சம் குடும்பங்கள் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்... ஆனால் பாவம் உண்மையிலேயே வரதட்சணை கொடுமையினால் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இச்சட்டத்தை பற்றி தெரியாமலூம் தெரிந்தால் பணபலம் குண்டர்பலம் மிக்க கூட்டத்தினால் மிரட்டப்படுகினர்...

காலம் தாழந்து கிடைக்கும் நீதி மிகக்கொடுமையானது நண்பர் செல்வன் அவர்களே.... இதினால் ஏற்படும் பாதிப்புகளும் மனஉலைச்சல்களில் பாதிக்கப்படுவது என்னைப்போன்ற ஏமாளி ஆண்கள் மட்டுமல்ல நம்முடைய தாய்மார்கள் சகோதரிகளும் தான் அவர்களுக்கு தங்கள் பதில் என்ன?

தங்கள் மீதும் தங்களை சார்ந்த நண்பர்கள் குடும்ப உறவினர்கள் மீதும் இதுபோல் கொடிய சட்டம் பாயாமல் இருக்க பிராத்திக்கின்றேன்


தங்கள் அன்பு நண்பன்
வாய்மையே வெல்லூம்,
அன்புடன் தமிழ். சரவணன்

')) said...

உயர்மதிப்பிறகுரிய ஐயா மருத்துவர் ருத்தரன் அவர்களுக்கு,

தங்களை போல் மனிதர்கள் இப்வலைபூவிற்கு வருகை தந்ததிற்க்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.. தங்களால் இயற்ற அளவிற்க்கு இச்சட்டத்தினை தவறாகப்பயன்படுத்தும் கெடுமதிபெண்களும் அறிவுறைகளும் அலோசனைகளும் வழங்க வேண்டுகின்றேன்...

நன்றி,

அன்புடன்,
தமிழ். சரவணன்

')) said...

please read this news:

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=8988&cls=row4&ncat=TN

')) said...

அது ரேப்போ,சீட்டிங் கேசோ, உள்ளே போகவேண்டியவன் உள்ளே போனான். அவ்வளவுதான். சட்டபிரிவு என்ன ஏது என்பதெல்லாம் எனக்கு தெரியாது.இவன் செய்த தவறுக்கு அந்த பெண்ணுக்கு வாழ்நாள் தண்டனை கிடைக்கும் எனும்போது அதற்கு தகுந்த தண்டனை இவனுக்கும் கிடைக்கவேண்டும்.பாதிக்கப்பட்ட இவனுடைய முதல் மனைவியை ஏமாற்றிய குற்றமும் இவனை சேர்கிறது.அதுக்கும் சேர்த்து இரண்டுபெண்களை ஏமாற்றியதுக்கு கடும் தண்டனை தரவேண்டும்.

ஏமாற்றி செக்ஸ் வைத்துக்கொண்டதால் கான்சென்ஸுவல் செக்ஸாக இருந்தாலும் அது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான்.

')) said...

இப்போது உள்ள இந்திய சட்டம் நல்ல நோக்கத்தோடு செல்போனை கண்டுபிடித்த அறிவியல் அறிஞர் மீது வழக்கு போடாமல் இருந்தால் சரிதான். ஒரு அறிவியலாரின் உன்னதமான படைப்பை எவ்வளவு கீழ்த்தரமாக யன்படுத்தியிருக்கிறhர்கள். இது அந்த ஆணின் தவறுமல்ல, பெண்ணின் தவறுமல்ல. அவர்களை நல்வழியில் வளர்க்காத பெற்றேhர்களும், கல்வி முறையும், தவறுகளை ஊக்குவிக்கும் சட்டமுறைகளும், இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சமுதாயத்தின் சில அங்கத்தினர்களும் தான். இவற்றிற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.