உரிமை மறுக்கப்பட்ட மகளிர் தினம்

நிகழும் மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம்.

அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1-30 மணி வரை புதுடில்லியிலுள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் (National Commission for Women - NCW) முன் ஒரு தர்ணா நிகழ உள்ளது.

தர்ணாவில் ஈடுபடுவோர்- “அகில இந்திய மறக்கப்பட மகளிர் அணி” (All India Forgotten Women) மற்றும் “தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் இயக்கம்” (Mothers and Sisters Initiative - MASI) என்னும் இரு இயக்கங்களைச் சேர்ந்த பெண்மணிகள்.

கோரிக்கைகள்:-

1. தேசிய மகளிர் ஆணையமும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் பெண்களின் மேம்பாட்டுக்காக உழைக்கிறோம் என்று கூறிக்கொண்டு நம் நாட்டின் முடும்ப வாழ்வு முறையையே அழித்துக் கொண்டு வருகிறார்கள். பலவித கொடுங்கோன்மை சட்டங்களைக் கட்டமைத்து நம் குடும்பங்களிலுள்ள ஆண்களையும், அவர்களின் தாய்மார்களையும், உடன் பிறந்த சகோதரிகளையும் சொல்லொணாத் துயரங்களுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்பாடுகள் உடனே நிருத்தப்பட வேண்டும். இல்லையெனில் நாம் சமூகத்தில் குடும்ப வாழ்வு முறை என்பதே அடியோடு அழிந்துபோகும் நிலை உருவாகிவிடும் அபாயம் இருக்கிறது.

2. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் நம் நாட்டில் 1,23,497 பெண்கள் IPC 498A சட்டத்தைக் கையெடுத்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இது அரசு அளித்துள்ள புள்ளிவிவரம். ஏன், இவர்கள் பெண்கள் இல்லையா? இத்தகைய சட்டங்கள் உண்மையில் எந்தப் பெண்ணுக்கும் மேன்மையளிக்கவில்லை. ஆனால் அது கெடுமதியுள்ள பெண்கள், வக்கீல்கள் போன்றோரால் கட்டப் பஞ்சாயத்து செய்து காசு பிடுங்கும் ஆயுதமாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. உடனே இந்தச் சட்டமும் குடும்ப வன்முறைச் சட்டமும் (DV Act) சட்ட வல்லுனர்கள் பலர் அறிவுரைத்துள்ளபடி திருத்தப்பட வேண்டும்.

3. சமீபத்தில் பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பெற்ற குற்றவியல் செயல்முறை விதிகளின் (CrPC) 41-வது பிரிவின் திருத்தத்தை உடனே அமுல் படுத்த வேண்டும். இந்தத் திருத்தத்தின் மூலம் தேவையற்ற கைது நடவடிக்ககள் நிறுத்தப்பட்டு காவல் துறையும் வக்கீல்களும் இந்திய குடிமக்களிடம் பொறுப்புடன் நடந்து கொள்ள வழிவகுக்கிறது. ஆனால் அதை அமுல் செய்தால் எங்கே தற்போதுள்ள “இம்” என்றால் கைது என்னும் நிலையில் அவர்கள் ஜாமீன் எடுப்பது போன்ற செயல்களுக்காக பெற்றுக்கொண்டிருக்கும் வருமானம் குறைந்து விடுமோ என்ற நினைப்பில் அந்தத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏற்காமல் உடனே அந்த சட்டத் திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும்.

4. இத்தகைய பெண்ணியவாதிகளால் நடத்தப்படும் ஆணையமும் மற்றும் பல பெண்ணிய என்.ஜி.ஓக்களும் சேர்ந்து பெண்களின் மனத்தில் நெறி சார்ந்த குடும்ப வாழ்வுக்கு எதிரான விஷ வித்துக்களை விதைத்து, பன்னாட்டு வணிக நிறுவனங்களின் விற்பனைகளை அதிகரிக்க அவர்களை தன்னிச்சையாக செலவழித்து ஓட்டாண்டியாகும் நிலையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் மங்களூரில் ஒரு மதுபானக் கடையில் நிகழ்ந்த கண்டிக்கத்தக்க வன்முறைக்கு எதிர்வினையாக இந்த பெண்கள் வாரியமும், பெண்கள் நலனுக்கான மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்திரியும் எடுத்த செயல்பாடுகள் என்ன?

அந்த “பப்”பில் நிகழ்ந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வற்புத்த வேண்டும். இனிமேல் இவ்வாறான வன்முறை நிகழாமல் காக்கப்படவேண்டும். அதை விடுத்து, “ஏ இந்திய இளம் பெண்களே! மதுபானக் கடைகளை நிரப்புங்கள். இஷ்டப்படி யாருடன் வேண்டுமானாலும் ஆடிப்பாடி தண்ணியடித்துக் கூத்தடியுங்கள் இது உங்கள் அடிப்படை உரிமை. அதை நிலை நிறுத்துங்கள்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். இதை “பப் பரோ ஆந்தோளன்” (Pub Bharo Andolan) என்று நாமகரணம் சூட்டி அதை ஒரு மாபெரும் வெற்றி என்றுவேறு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? அவர்களின் நோக்கம் என்ன? மதுபானக்கடைகளில் வியாபாரம் தழைக்கவேண்டும் என்பது தானே! பெண்கள் வாழ்வு எப்படி நாசமாகப் போனால் அவர்களுக்கென்ன அக்கறை! பெண்ணைப் பெற்ற்வர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இந்தப் பெண்ணிய வாதிகள் உண்மையில் பெண்களுக்கு நன்மையா செய்கிறார்கள்? எந்தப் பெற்றோர் தங்கள் பெண் மதுபானக் கடையில் தண்ணி போட்டு கூத்தடிக்க ஒப்புவார்கள்?

5. 498A, DvAct போன்ற சட்டங்களின் அடிப்படையில் நிகழும் ஆணழிப்புச் செயல்பாடுகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். அனைத்து குடும்பம் சார்ந்த சட்டங்களும் இருபாலர்களுக்கும் பொதுவாக பொருந்தும்படி மாற்றியமைக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தியாவில் கூடிய சீக்கிறமே ஒரு “தகப்பன் பெயர் தெரியாத சமூகம்” உருவாகி நிற்கும் அபாயம் இருக்கிறது!

தர்ணாவின்போது வைக்கப்படும் கோரிக்கைகள் (ஆங்கிலத்தில்):

On the occasion of International Women’s Day 2009, we make the following demands to the Government of India:


  • We demand immediate implementation of CrPC Amendments 2008 to protect us and our dear ones from legal terrorism and human rights violations.

  • We demand equal protection to men and women under law.

  • We demand laws and policies that promote family harmony.

  • We demand severe penalty for anyone misusing legal provisions to settle personal scores.

  • We demand that balanced, responsible, family-loving women are given charge of the Ministry of Women and Child Development and the National Commission for Women.

  • We demand a Ministry for Men to cater to the needs and welfare of our brothers and sons.

மேல் விவரம் இங்கே.

3 மறுமொழிகள்:

')) said...

கள்ளக்காதலால் கணவனையும் அண்ணனையும் கொலைகாரனாக்கிய கற்புக்கரிசி

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=9003&cls=row3&ncat=DI

')) said...

இந்த தர்ணாவின்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களை இந்த சுட்டியில் காணலாம்:

http://picasaweb.google.com/fightin498a/AIFWMASIDharna

நன்றி.

')) said...

படங்களின் சுட்டி இதோ!