ஒரு பொய் வழக்கு புனையப்படுகிறது!

கீழ்க்கண்ட செய்தியை கவனமாகப் படித்துப் பாருங்கள். 498A சட்டத்தில் இப்படித்தான் பொய் வழக்குகள் புனையப் படுகின்றன. இத்தகைய steriotype வழக்குகளில் சிக்காமல் தவிர்ப்பது எப்படி என்று அறிய மறுமொழியில் உங்கள் ஐயங்களையும் வினாக்களையும் எழுதுங்கள்

=================================

பரமக்குடி,மார்ச்.30- 2009

பரமக்குடியில் வரதட் சணை கேட்டு காதல் கணவர் தன்னை துன்பு றுத்தியதாக இளம் பெண் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பரமக்குடி சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் கார்த்திக் பாபு (வயது 25). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த போது இவருக்கும் அதே கல்லூரில் படித்த வட வள்ளி பகுதியை சேர்ந்த பத்மாஸ்ரீ என்பவருக்கும்(26) பழக்கம் ஏற்பட்டது. வயது வித்தியாசம் இருந்தாலும் நாளடையில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. பின்னர் இருவரது பெற்றோர் கள் சம்மதத்துடன் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 3 நாட்களிலேயே கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சமரச பேச்சு வார்த்தைக்கு பின் அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். பின்னர் மனைவியுடன் சென்னை சென்ற கார்த்திக் பாபு அங்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பாத்து வந்தார். சில நாட்களிலேயே பணம், நகை போன்றவற்றை வரதட்சணையாக கேட்டு பத்மாஸ்ரீயை அவரது காதல் கணவர் கார்த்திக் பாபு துன் புறுத்தினாராம். இதையடுத்து பத்மாஸ்ரீ அங்குள்ள மகளிர் ஆணையத்திடம் புகார் செய்தார்.

அதன்பேரில் விசாரணை நடைபெற்ற சமயத்தில் கார்த்திக்பாபு ஜெர்மனி சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜெர்மனியில் இருந்து பரமக்குடிக்கு வந்துள்ளார். இது பற்றி அறிந்த பத்மாஸ்ரீ அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கணவன் கார்த்திக்பாபு, மாமனார் பிச்சை, மாமியார் பானுமதி, தம்பு ராஜ்குமார் ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கார்த்திக் பாபு உள்பட 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின் றனர்.

3 மறுமொழிகள்:

')) said...

ஹூம்! பாவம் தான்.

')) said...

ஐயோ என்ன கொடும சார் இது... இதுல பெரிய காமடி இது போல பொய்கேசு போட்டு எல்லாரையும் உள்ள புடிச்சி போட்டுட்டு சில கெடுமதிபெண்கள் மறுபடியும் அதே கணவனுடம் வாழத்து(ந)டிப்பது தான் கொடுமை... தொடரட்டும் 498a லீலைகள்

')) said...

கணவர் அடித்து துன்புறுத்தியதற்கு மாமனார், மாமியார், தம்பி மீது ஏன் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பெண் அனைவருடனும் குடும்பம் நடத்தி கும்மியடித்தாளா?

ஒன்று நன்றhகத் தெரிகிறது நாட்டிலுள்ள ஆண்கள் யாருக்கும் சுயபுத்தியே கிடையாது அவர்கள் அனைவரும் தனது தாய், தந்தை, தம்பி, தங்கை மற்றும் வீட்டில் ஜட்டி கூட போடத் தெரியாமல் திரியும் குழந்தை இவர்களின் பேச்சைக் கேட்டு தங்களது மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்துவார்கள். மனைவி சொல்லும் இந்தக் கதையை கேட்டு "மிக புத்திசாலிகளான" போலிசும், சட்ட "அதி மேதாவிகளும்" குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்து விசாரிப்பார்கள். இதில் யார் புத்திசாலி?