வக்கீல் இருக்கிறார், ஜாக்கிறதை!

தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது

மார்ச் 15,2009, தினமலர்

திருச்சி : சொத்துக்கு ஆசைப்பட்டு தந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றதோடு, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வக்கீலை தீர்த்துக் கட்ட முயன்ற வழக்கில் கைதான திருச்சி வக்கீல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைதாவது தமிழகத்தில் இதுவே முதன்முறை.

திருச்சி எஸ்.பி., கலியமூர்த்தி கூறியதாவது:

திருச்சி வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் ராஜேஷ்கண்ணா (35). அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி. சுப்பிரமணியபுரத்தில் வசித்து வந்த இவரை, வக்கீல் ராஜேஷ்கண்ணா கூலிப்படை உதவியுடன் சில மாதம் முன் விஷம் கொடுத்து கொலை செய்தார். பின், அதே கூலிப்படையுடன் சோமரசம்பேட்டை வசந்தம் நகரில் வசிக்கும் கள்ளக்காதலி வித்யாவின்(30) கணவரான வக்கீல் வெங்கடேசனை வெட்டினார். அப்போது தப்பியோடிய தணிகாசலம் என்பவனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட தணிகாசலத்திடம் நடத்திய விசாரணையில், "ரவிச்சந்திரன்(35) செல்வம்(27) குமார் (30) ராதாகிருஷ்ணன்(24) ஆகியோருடன் சேர்ந்து வக்கீல் ராஜேஷ்கண்ணா தூண்டுதலின் பேரில் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்திக்கு விஷம் கொடுத்துக் கொன்றோம். வக்கீல் வெங்கடேசன் மனைவி வித்யா - வக்கீல் ராஜேஷ்கண்ணா கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வெங்கடேசனை தீர்த்துக் கட்ட முயன்றதாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். அதன் பேரில், கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், வக்கீல் ராஜேஷ்கண்ணா, அவரது கள்ளக்காதலி வித்யா, கூலிப்படையினர் ரவிச்சந்திரன், தணிகாசலம், செல்வம், குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., பரிந்துரைப்படி வக்கீல் ராஜேஷ்கண்ணா, ரவிச்சந்திரன் இருவரும் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழக வரலாற்றில் வக்கீல் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

-------------

அன்றாடம் குடும்பங்களில் நிகழும் சண்டை, சச்சரவுகளுக்கு வக்கீல்களும், வழக்குகளும், கோர்ட்டுகளும்தான் தீர்வா? பெண்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். வழக்குப் போடுவதால் யாருக்கு நன்மை? வழக்குப் போடுபவர்களுக்கா, இல்லை வக்கீல்களுக்கா? சிந்தித்துப் பாருங்கள்!

அநாவசிய கைது நடவடிக்கைகளைக் குறைக்க ஒரு சட்டத்திருத்தம் பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் சட்ட நடைமுறைக்கு கொண்டுவராமல் காலம் தாழ்த்தி வருகிறது அரசு. ஏன்? வக்கில்களின் வருமானம் குறையுமே என்பதற்காக. மக்களின் துன்பம் இதனால் தீருமே என்பதைப் பற்றி யாருக்குக் கவலை. தடி எடுத்தவன் தண்டல்காரன்.

இந்த வக்கீல்களின் நடத்தையின் மூலம் ஒன்று தெளிவாகிறது. நாம் பழைய கற்காலத்தை நோக்கி வெகு வேகமாக முன்(பின்)னேறிக்கொண்டிருக்கிறோம்!

1 மறுமொழி:

')) said...

முன்பெல்லாம் புரொபஷனல் கொலைகாரர்கள் கொலைசெய்து விட்டு வக்கீலின் உதவியுடன் வெளியே வந்து விடுவார்கள். இப்பொழுது 2-IN-1 ஆக மாறிவிட்டது அந்த தொழில். சபாஷ். காந்தியடிகளும், நேருவும் வழக்கறிஞர்களாக இருந்து வெள்ளை போலிசின் வன்முறைகளை அகிம்சை வழியில் எதிர்த்தார்கள். ஆனால் இப்போது அந்த தொழிலின் நிலை எப்படி இருக்கிறது? அந்த தொழில் செய்பவர்கள் எந்த வகை போராட்டத்தை செய்கிறhர்கள்?