498A இந்தியா லிமிடெட் - கம்பெனி அறிக்கை!"498A இந்தியா லிமிடெட்" - ஒரு இந்திய அரசு நிறுவனம்.

நம் பாரதத் திருநாட்டில் ஜேஜேயென்று நடந்து கொண்டிருக்கும் பல நிழல் தொழில்களான ஹவாலா, பிணைக்கைதிகளாக ஆட்கடத்தல், கருப்புப் பணம், மோசடி போன்றவைகளோடு கூட இந்தியக் குற்றவியல் சட்டம் 498A பிரிவு ஒரு பெருத்த லாபம் சம்பாதிக்கும் தொழிலாக ஒரு சில சாராருக்கு அமைந்திருக்கிறது. இதனை தவறாக கட்டமைக்கப்பட்ட தன் சட்டங்களினால் அரசே ஊக்குவிப்பதால் இந்தத்துறை ஒரு அரசுத் துறை நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் கைமாறும் துகை ஆண்டுக்கு ரூபாய் 3000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்த "498A இந்தியா லிமிடெட்" நிறுவனத்தின் வெற்றிகரமான வளர்ச்சியை நோக்கும்போது இது ஒரு பிரும்மாண்டமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக அமைவதால் இதன் பங்குகள் நாட்டிலுள்ள எல்லா பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டு, ஒரு "நவரத்தினா" நிறுவனமாகக் கருதப்படும் என்று தெரிகிறது.

இதன் வளர்ச்சியின் குறியளவு:

இந்தியாவில் வேறெந்தத் துறையாலும் எட்டமுடியாத வளர்ச்சியை - ஐ.டி, பி.பி.ஓ உட்பட - இந்த 498 A கண்டிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 120% வளர்ச்சியை இது பதிவு செய்திருக்கிறது. அதாவது 1995-ல் வெறும் 28,579 வழக்குகள் என்ற நிலையிலிருந்து 2007-ல் 63,128 வழக்குகளாக பெருவளர்ச்சி கண்டிருக்கிறது.

மக்கள்பால் இதன் வீச்சு:

இந்த நிறுவனத்தின் தன்மையின் அடிப்படையில் இதன் "இருப்புநிலைக் குறிப்பு" (Balance Sheet) முழுதும் "கருப்பா"கவே கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1999-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சுமார் 10 லட்சம் அப்பாவி இந்தியக் குடிமக்கள் தவறாக கைது செய்யப்பட்டு அவர்களின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பகுதியினர் வயதான பெண்கள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள். இது ஒரு சாதாரணமான சாதனையாகக் கருத இயலாது!

இந்த சட்டத்தின் துஷ்பிரயோகத்தினால் கைது செய்யப்படும் ஒவ்வொரு நபரும் ஜாமீன் பெறுவதற்காக ரூ.10,000 செலவு செய்வதாக் கணக்கிட்டால் 10 லட்சம் பேருக்கு சுமார் 1000 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

இதன் அபரிமிதமான வளர்ச்சியினால் உந்தப்பட்டு இதன் கிளை நிறுவனங்களாக "குடும்ப வன்முறைச் சட்டம் லிமிடெட்" (Protection of Women from Domestic Violence Act, 2005) மற்றும் "எல்லா தற்கொலையும் வரதட்சணைக் கொலைகளே" (All Death Dowry death India limited) போன்ற நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். மேலும் "அனைத்து கணவன்மார்களும் இலவச ஏ.டி.எம் (ATM) மெஷின்களே" என்ற கொள்கையைப் பரப்பும் நிறுவனமும் தொடங்கப்பட்டு அது மிக லாபகரமாக் ஜேஜேயென்று நடந்துகொண்டிருக்கிறது.

பங்குதாரர்கள்:

இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக (shareholders) அடியிற்கண்ட மகாஜனங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்:

1. மனைவிமார்கள்
2. பேராசை பிடித்த வக்கீல்கள்
3. மனசாட்சியற்ற சில நீதிபதிகள்
4. பெண்கள் சார்பு தன்னார்வக் குழுக்கள்
5. சர்வ வல்லமை பொருந்திய தேசிய பெண்கள் ஆணையம்
6. தற்போதைய பெண்கள் மற்றும் குழந்தை நல மத்திய அமைச்சர்
7. பரபரப்பையும் மனவெழுச்சியையும் தூண்டுகின்ற வகையில் வரதட்சணைக் கொடுமை பற்றிய பொய்களைப் பரப்பும் செய்தி ஊடகங்கள்
8. ஒரு இளம் பெண் கண்ணீர் விட்டவுடனேயே ஜொள்ளு விட்டு அப்படியே உருகிச் சொட்டும் பலவீனமுடைய பெரிய மனிதர்கள்

இந்த சட்டங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க நல்ல மனமும், நியாய உணர்வும் கொண்ட பல நீதிபதிகளும், சமூகநல சிந்தனையாளர்களும், பாதிக்கப்பட்ட கண்வன்மார்கள் மற்றும் பெண்கள் சார்ந்த தன்னார்வ அமைப்புகளும் பல திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கின்றனர். ஆனால் அவை ஏதும் அமுலாக்கப்படாவண்ணம் பாதுகாத்து வருகின்றனர், மேலே பட்டியலிடப்பட்ட பங்குதாரர்கள். ஏனெனில் இவ்வளவு லாபகரமாக நடந்துவரும் இந்த நிறுவனத்தின் வருவாய் அதனால் குறைந்துவிடுமோ என்னும் அச்சத்தினால்தான்.

இந்த நிறுவனங்களுக்கு ஐக்கியநாடுகள் சபை மற்றும் அதன் கிளை அமைப்புகளிடமிருந்தும் பெருமளவு நிதி முதலீடு கிடைக்கிறது. ஏனெனில் அத்தகைய அமைப்புகளுக்கு முற்றிலும் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் கொண்ட அறிக்கைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அதனால் ஏதோ சமூக சீர்திருத்தத்திற்கு உதவுவதாக கற்பனை செய்துகொண்டு மேற்கூறிய டுபாக்கூர் நிறுவனத்திற்கு நிதியை அனுப்பி விரயம் செய்கின்றனர் அவர்கள்.

பரவலான விழிப்புணர்வினாலும், பெருமளவில் பெண்களின் கல்வி மற்றும் சமமான வேலை வாய்ப்புக்களாலும், வரதட்சணை கேட்டுப் பெறுவது என்னும் வழக்கமே இந்திய சமூகத்திலிருந்து அநேகமாக முழுதும் நீக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை. இந்த நிலையில் இன்னமும் ஊர்தோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றதாகவும், அவர்கள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் பொய்களை அள்ளி வீசிக்கொண்டு இந்த நிறுவனத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதன் பங்குதாரர்கள்.

உணமை நிலை:

இந்த நிறுவனம் பெறும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் இந்திய மண்ணின் மைந்தர்கள் சொட்டும் ரத்தத்தினால் கிடைப்பது என்பதை அரசும், மக்களும், ஊடகங்களும் உணரவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்த கொடுங்கோன்மை சட்டங்களால் 1.2 லட்சம் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தவிர 1000 குழந்தைகளும் 18,000 முதியோர்களும் கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆணாகப் பிறந்ததினால், அல்லது ஆண்குழந்தையைப் பெற்றதனால், அல்லது ஆணிற்கு உறவினராக இருப்பதனால் மட்டும் தன் சொந்த நாட்டிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறார்கள். இந்த உண்மைகள் தெரிந்தும், மேற்சொன்ன பங்குதாரர்களின் மிகுதியான செல்வாக்கினால் கண்டும் காணாதுபோல ஆட்சியாளர்கள் உள்ளனர்.
ஆனால் இந்த நிறுவனத்தின் வெற்றி என்பது நம் பாரதத்தின் பண்பாடுமிக்க குடும்ப வாழ்க்கை முறையின் நாசம் என்பது திண்ணம். மேலை நாட்டு மாயையான நாகரிகத்தினால் கவரப்பட்டு குடும்ப முறையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு தகப்பன் பெயர் தெரியாத ஒரு வருங்கால சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவதுதான் இந்த 498A லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது.

நடுவு நிலையும், நல்லுள்ளமும் கொண்ட இந்திய மக்களே, இத்தகைய சமுதாயச் சீரழிவை நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா, சிந்தியுங்கள்!

பெண் நீதிபதியிடம் வரதட்சணை கேட்டார்களாம்!

அதுவும் கணவன் இறந்து ஓராண்டுக்குப் பிறகு!!

கட்னி (மத்தியப் பிரதேசம்) : செய்தி: தினமலர்.

மாமியாரும், மாமனாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஒருவர், போலீசில் புகார் செய்துள்ளார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மாதுரி; கட்னி மாவட்ட கோர்ட்டில் நீதிபதியாக உள்ளார். 1994ல் இவருக்கும், லால் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லால் இறந்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில் இங்குள்ள மாதவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் மாதுரி வரதட்சணை புகார் கொடுத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

"கடந்த ஒரு ஆண்டாக என் மாமனார், மாமியார், கணவரின் சகோதரரும், என்னிடம் ஒரு கோடி ரூபாய் வரதட்சணையாக கேட்டு கொடுமைப் படுத்தி வருகின்றனர். என் பெற்றோரையும் இதற்காக மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகை யில்,"மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடி வருகிறோம்' என்றனர்.
-------

கணவன் இறந்து ஓராண்டுக்குப் பிறகு நீதிபதியாக இருக்கும் ஒரு அம்மணியிடம் கணவனின் பெற்றோர் வரத்ட்சணை கேட்டார்களாம்!

நம்புகிறீர்களா, நண்பர்களே!

பிறகு ஏன் இந்தப் புகார் என்கிறீர்களா? அதுதான் இந்தக் கொடுங்கோன்மை சட்டமான இ.பி.கோ 498A பிரிவு ஏற்படுத்திக் கொடுக்கும் வழி. ஒரு மனைவி சொன்னால் போதும், அவள் யாரைக் கைகாண்பிக்கிறாளோ, அவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். இதுபோல் பொறுப்பில்லாமல் சட்டம் இருக்கும்போது, "அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம்" என்ற எண்ணப்பாங்கிலும், "கணவன் வீட்டாரை ஒரு நாளாவது கம்பி என்ண வைக்கிறேன் பார்" என்ற வெறிபிடித்த மனப்பான்மையாலும், இந்த சட்டத்தைக் கையிலெடுத்து பல பெண்கள் பேயாட்டம் ஆடுகிறார்கள்.

நிச்சயம் சொல்கிறேன். இந்தச் சட்டம் உடனடியாக வழு நீக்கப்படாமல் அல்லது ரத்து செய்யப்படாமல் இப்படியே போனால், பாரதப் பிரதமர், குடியரசுத் தலைவர், முதன் மந்திரிகள் முதல் (வலைப் பதிவர்கள் உட்பட) அனைத்து ஆண்களும் அவர்தம் பெற்றோரும் 498A சட்டத்தில் சிறையில் களி தின்கப்போகும் நாள் விரைவில் வரும்.

மேலதிக விவரங்களுக்கு:

http://www.498a.org/
http://www.mynation.net/
http://www.savefamily.org/
http://www.saveindianfamily.org/
http://www.youtube.com/group/saveindianfamily
http://www.antidowry.org/
http://legalfighter.wordpress.com/
http://www.indiatalking.com/blog/swarup
http://www.youtube.com/user/swarup1973
http://pariwariksuraksha.blogspot.com/
http://www.telegraphindia.com/1050913/asp/nation/story_5231379.asp

கணவன் முகத்தைச் சுளித்தாலே கேஸ் போடச் சொல்கிறது அரசாணை!

ஆனால் மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் கணவனுக்கு விடிவு கிடையாது.

"குடும்ப வன்முறைச் சட்டம்" என்றொரு ஆணழிப்புச் சட்டத்தை (இதனை குடும்ப முறை ஒழிப்புச் சட்டம் என்றும் அழைக்கலாம்) அமுல்படுத்தி ஓராண்டு கழிந்தபின் அதன் செயலாகத்தை இன்னும் பரவலாக்கி (ஒரு குடும்பத்திற்கு ஒரு கேசு என்னும் நிலை வரும் வரையில்) தீவிர செயல்பாடு நிகழவேண்டும் என்னும் அடிப்படையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றிய செய்தியைக் காணுங்கள்:-

வீட்டுக்காரர் திட்டினால் உடனே போனை எடுங்க...மாவட்டந்தோறும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்

பெண்களைத் திட்டும் கணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக் கும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி பரிசோதனை செய்து அறிக்கை அனுப்ப சேவை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்களுக்கான எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தை, 2005ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை, 2006ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு வெளியிட் டது. இதையடுத்து இச் சட்டமும், வழிமுறைகளும் அமலுக்கு வந்தன. இச்சட்டப்படி, வீடுகளில் மனைவி அல்லது பெண் வாழ்க்கைத் துணை தங்களது கணவர் அல்லது வாழ்க்கைத் துணையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்படுவர்.

சட்டத்தில், வீட்டுப் பெண்களுக்கு உடல்ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ கொடுமைப்படுத்துதல் குற்றம். சட்டவிரோதமாக வரதட்சணை கோருதலும் இச்சட்டத்தில் குற்றமாகிறது. சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உடனடி நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்கள் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.மேலும், சேவை செய்ய விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, முறையாக ஆய்வு செய்து அவர்களைப் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சேவையளிப்போரின் விலாசம், தொலைபேசி எண்கள் போன்றவற்றை விளம்பரமாக வெளியிட்டு, இணையதளத்திலும் வெளியிட வேண்டும். இச்சட்டத்தைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய வேண்டுமென மத்திய அரசு கோரியிருந்தது. இதன்படி, மாவட்ட சமூகநல அதிகாரிகளை அந்தந்த மாவட்டத்துக்கு இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளாக, தற்காலிக ஏற்பாடாக, நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின், பாதுகாப்பு அதிகாரிகள், சேவை அளிப்போர் மற்றும் கவுன்சிலிங் செய்வோரை நியமிப்பதற்கு பரிந்துரைகளை சமூக நலத்துறை அனுப்பியது.

மேலும், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சேவை அளிப்போராக நியமிப்பதற்கு பட்டியல் அனுப்புமாறு அரசுக்கு கோரப்பட்டது. இதைப் பரிசீலித்த தமிழக அரசு, விண்ணப்பம் செய்த அனைத்து தொண்டு நிறுவனங்களின் தகுதிகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளைப் பரிசீலித்து, விரிவாக அவற்றுடன் ஆலோசனை நடத்தி, சென்னைக்கு இரண்டு சேவை அளிப் போரையும், மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்தது. இவர்களது பணிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொண்டு நிறுவனங்கள் தங்களிடம் சொந்தமாக கவுன்சிலிங் செய்வோரை வைத்திருக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன்படி, சேவை அளிப்போரது பட்டியலை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்க இடம் அளிக்க வேண்டும். மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். மனரீதியான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். சட்ட உதவி வசதிகளை செய்து தர வேண்டும். தங்கியிருக்கும்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி வசதி மற்றும் இதர தகவல் தொடர்பு வசதிகளை செய்து தர வேண்டும். சேவை அளிப்போர், பாதிக்கப்பட்டவருக்கு வீட்டில் நடந்த கொடுமைகளை, அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிரதியை மாஜிஸ்திரேட்டுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிக்கும் அனுப்பிவைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை பாதுகாப்பு அதிகாரிக்கும், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பிவைக்க வேண் டும். சேவை இல்லத்தில் தங்கியிருக்க பாதிக்கப் பட்டவர்கள் விரும்பினால், அவர்களை தங்க வைத்து அந்த இடம் பெற்றிய விவரங்களை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.சட்டரீதியான வழக்கு கள் ஏதும் சேவை அளிப் போருக்கு எதிராக தொடர முடியாது. இச்சட்டப்படி நியமிக்கப்படும் சேவை அளிப்போர் மேற் கொள் ளும் செலவுகள் ஏதும் ஈடுகட்டப்படாது. எனினும், பாதிக்கப் பட்டவருக்கு அளிக்கப்படும் தங்குமிடம், உணவு மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான செலவுகளை ஈடுகட்டிக்கொள்ளலாம். சேவை அளிப்போர் தங்களிடம் எவ்வளவு பேர் பலனடைந்தனர் என்பது பற்றிய மாதாந்திர அறிக்கையை சமூக நலத் துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். சேவை அளிப்போரின் பெயர் மற்றும் விவரங்களை அந்தந்த மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இவ்வாறு சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

----------------------------------------

இந்தச் சட்டத்தின் பயங்கரம் இந்தச் செய்திக் குறிப்பின்மூலம் வெளிப்படவில்லை. உண்மையில் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் திடீரென்று ஒரு பெண் தன்னுடன் கணவனாக, அல்லது கணவன்போல் இருக்கும் ஒரு ஆண் தன்னிடம் பேசும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டான், அல்லது தன் தாயார் முன்னிலையில் "அச்" என்று தும்மினான் என்று புகார் கொடுத்து, அந்தக் கணவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே வெளியேற்றச் செய்யலாம்!


Section 23 (Chapter 23) Residence orders.

19. Residence orders.-

(1) While disposing of an application under sub-section (1) of section 12, the Magistrate may, on being satisfied that domestic violence has taken place, pass a residence order -

(a) restraining the respondent from dispossessing or in any other manner disturbing the possession of the aggrieved person from the shared household, whether or not the respondent has a legal or equitable interest in the shared household;

(b) directing the respondent to remove himself from the shared household;

(c) restraining the respondent or any of his relatives from entering any portion of the shared household in which the aggrieved person resides;

(d) restraining the respondent from alienating or disposing off the shared household or encumbering the same;

(e) restraining the respondent from renouncing his rights in the shared household except with the leave of the Magistrate; or

(f) directing the respondent to secure same level of alternate accommodation for the aggrieved person as enjoyed by her in the shared household or to pay rent for the same, if the circumstances so require:Provided that no order under clause (b) shall be passed against any person who is a woman.

கேட்கவே நம்பிக்கையில்லாமல் இருக்கிறதா? இந்த சட்ட விவரங்களை வழக்கு மற்றும் தீர்ப்புகளின் ஆதாரங்களுடன் எதிர்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.

மருமகனை கொன்ற மாமியார்

News from Thatstamil.com:

திருச்சி: மகளை கொடுமைப்படுத்திய மருமகனை கொலை செய்த மாமியார் கைது செய்யப்பட்டார்.

திருச்சியை அடுத்த பள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (46). இவரது மகள் வசந்தா. இவருக்கும் அத்தை மகனான மணிகண்டனுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

மணிகண்டன் 3 ஆண்டுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார். 3 மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார்.

இந் நிலையில் இரு நாட்களுக்கு முன் தாயனூர் ரோட்டில் மணிகண்டன் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் மாமியார் முத்துலட்சுமி மற்றும் மகன் விஸ்வநாதனை (24) கைது செய்தனர்.

விசாரணையில் விஸ்வநாதன் அளித்த வாக்குமூலம்:

மாமா மணிகண்டன் என் அக்காள் வசந்தா மீது சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இது குறித்து மகளிர் போலீசில் என் அக்கா புகார் செய்தார். போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனால், மணிகண்டன் தொடர்ந்து தொல்லை தந்ததால் அக்கா விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

தொடர்ந்து அக்காவை மாமா கொடுமைப்படுத்தி வந்ததால் அவரை கொலை செய்ய நானும், என் தாயாரும் முடிவு செய்தோம்.

அவரை சமாதானம் பேச வரும்படி தொலைபேசியில் அழைத்தேன். அவரும் பள்ளக்காடுக்கு இரவில் வந்தார். அப்போது மின்சாரம் தடைபட்டிருந்ததால் அதை சாதகமாக பயன்படுத்தி தயாராக வைத்திருந்த கத்தி, அரிவாளால் நானும், என்னுடைய தாயாரும் மாமாவை வெட்ட முயன்றோம். அவர் எங்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

இருவரும் அவரை துரத்தினோம். ஆத்திரத்தில் என் தாயார் மாமாவை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் அவர் இறந்தார் என்று கூறியுள்ளார்.

பெண்கள் மாயம்!

பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட 5 பெண்கள் மாயம் - செய்தி: தினமலர் 13-10-2008.

சென்னை : வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட ஐந்து பெண்கள் மாயமாகினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

1. இளம்பெண் மாயம்:

கிழக்கு தாம்பரம், சுத்தானந்த பாரதி தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் திரைப் பட நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் உறவினர் பெண்ணான ரம்யா (21) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி ரம்யா கடிதம் எழுதி வைத்துவிட்டு திடீரென மாயமானார். அதில், "பெற்றோர் நிச்சயித்த திருமணம் எனக்குப் பிடிக்கவில்லை" என்று எழுதி இருந்தது. இது குறித்து சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப் பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2. கல்லூரி மாணவி மாயம்:

குரோம்பேட்டை, சி.எல்.சி., லேன் எட்டாவது தெருவை சேர்ந்த அப்துல்காதர் என்பவரின் மகள் சைனஸ்பானு (18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங் களில் தேடியும் சைனஸ்பானு கிடைக் காததால், மகளைக் காணவில்லை என அவரின் தாய் அசினாபானு போலீசில் புகார் செய்தார். இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

3. பள்ளி மாணவிகள் மாயம்:

பள்ளிக் கரணை, ஆதிசாரணி நகரை சேர்ந்தவர்கள் ராகா (16) வனிதா (15). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் முறையே பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளி சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும், இருவரும் கிடைக்காததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4. தாய் வீட்டிற்கு சென்ற பெண் மாயம்:

கோவிலம்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மோகன். கட்டட வேலை பார்த்து வரும் இவரின் மனைவி குமாரி (31). இவர்களுக்கு ராஜா (10), கார்த்தி (8) என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் குமாரி ஆதம்பாக்கம், பிருந்தாவன் நகரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றவர், மாயமானார். உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் குமாரி கிடைக்காததால், மனைவியை காணவில்லை என மோகன் போலீசில் புகார் செய்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----------------

இதற்கெல்லாம் காரணம் ஆண்கள் செய்யும் வரதட்சிணைக் கொடுமையா? ஆண்களையும் அவர்களைப் பெற்றவர்களையும் கைது செய்து கொடுமைப் படுத்த ஏராளமான கொடுங்கோல் சட்டங்களை இயற்றிவிட்டு, அவற்றை இன்னும் கடுமையாக்கத் துடிக்கும் ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் மற்றும் NCW, AIDWA போன்ற அமைப்புகள், பெண்களின் உண்மையான பிரச்னைகளைத் தீர்க்கிறார்களா?

சிந்திப்பீர்!

பெண்மை போற்றி!

ஆம். சுகபோதானந்தா குறிப்பிட்டுள்ளதுபோல் பாரதத்தின் புதுமை பெண், தற்போது சட்டங்களின் துணையுடன் நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் துன்பக்கடலில் மூழ்கச் செய்யும் புனிதத் தொண்டில்தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். அதற்கான வன்முறை ஆயுதங்களை அவர்கள்தம் கைகளில் அளிப்பவர்கள் ரேணுகா சவுத்திரி, கிரிஜா வியாஸ் போன்ற ஆணழிப்புக் காவலர்கள்.

அனில் கும்ப்ளேயும் குழந்தை உரிமை வழக்கும்

"மங்கையர் மலர்" அக்டோபர் 2008 இதழில் "ஒரு வார்த்தை" என்னும் தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை மின்வருடி இதன்கீழ் இட்டிருக்கிறேன். அதை எழுதியுள்ள அம்மணி கடைசியில் எழுதியுள்ள முடிவுரையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.

(படங்களின்மேல் கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)
498A சட்டத்தின் கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வு


IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.

அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:

1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.

2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.

3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.

5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.

6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).

7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.

9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.

10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.

11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.

12. முக்கிய கோரிக்கைகள்:

i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்
ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)

ஏழு வருட பந்தம்!

நம் நாட்டு சட்டப்படி ஒரு பெண் மணமான ஏழு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டால் உடனே ஆர்.டி.ஓ விசாரணை செய்யப்படவேண்டும், இயற்கை மரணமானாலும்கூட. ஆனால் அந்தப் பெண்ணின் பெற்றோரோ அல்லது யாரேனும் உறவினரோ, அது இயற்கை மரணம் அல்ல, கொலை என்றோ, அல்லது தற்கொலை என்றோ புகாரளித்தால் உடனே கணவனும் அவனுடைய பெற்றோரும் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள்.

ஆகையால் கணவன்மார்களே, உங்கள் மனைவிமாரை ஏழு வருடங்கள் ஒன்றும் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் பெண்கள் இப்போதெல்லாம் அவ்வளவுநாள் இடைவெளி விடுவதில்லை! மணமான ஓரிரு மாதங்களிலேயே வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை இப்படி ஏதேனும் வழக்கு போட்டுவிடுகிறார்கள்.

இப்போது கீழ்க்கண்ட செய்திகளை வாசியுங்கள்:-

சோழவரம் அருகே பெண் தீயில் கருகி சாவுகணவர் கொலை செய்ததாக தந்தை புகார் : பொன்னேரி, செப்.18-

சோழவரம் அருகே பெண் தீயில் கருகி செத்தார். அவரது கணவர் கொலை செய்ததாக பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார்.

சோழவரம் அருகே உ ள்ள மாபுஸ்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நாகபூஷணம். கட்டிட தொழிலாளி. கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வீங்குன்றம் அருகேஉள்ள பழுதுகுளம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதியின் மகள் தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா (வயது 5) என்ற மகனும், ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவி உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று தீயை அணைத்தனர். பின்னர் தேவியின் உயிரை காப்பாற்ற சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தேவிக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி பரிதாபமாக செத்தார்.
இந்த நிலையில் தேவியின் தந்தை பார்த்தசாரதி சோழவரம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன்னுடைய மகளை வரதட்சணை கேட்டு நாகபூஷணமும் அவரது சகோதரர் முனுசாமியும் அடித்து துன்புறுத்தி தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டதாக புகார் மனுவில் கூறியுள்ளார்.
நாகபூஷணம், தேவியின் திருமணம் முடிந்து 5 வருடமே ஆன நிலையில் இந்த வழக்கை பொன்னேரி ஆர்.டி.ஓ. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.

--------------------------------------------------

புது மணப்பெண் தற்கொலை : செப்டம்பர் 18,2008,00:00 IST

தூத்துக்குடி : தூத்துக்குடி டி.சவேரியார்புரம் எம்.ஜி.ஆர்., நகர் மாரிமுத்து மகள் முத்துலட்சுமி(18). அவருக்கும், பாலமுருகனுக்கும் செப்.,11ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமான ஆறாவது நாளில் (நேற்று முன்தினம்) வீட்டில் விஷம் குடித்த முத்துலட்சுமி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார். இந்த தற்கொலை காதல் தோல்வியால் நடந்தது என போலீசார் தொரிவித்தனர்.

----------------------------

பல்லாவரம்: மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பம்மல் நாகல்கேணி, அஜிஸ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். டெய்லர். இவரது மனைவி அமுதா (37). இவர்களுக்கு மகாலட்சுமி (19), பவித்ரா (6) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அமுதாவின் மாமியார் சுசீலா(67) அந்த பகுதியில், ஏல சீட்டு நடத்தி வருகிறார்.

மாமியார், மருமகள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் குடும்ப செலவிற்காக அமுதா, மாமியார் சுசீலாவிடம் பணம் கேட்டுள்ளார். இதில், ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அமுதா உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார். மருமகளை தற்கொலைக்குத் தூண்டியதாக சங்கர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுசீலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

என்ன தொடர்பு?

விதிஷா : சக மாணவிகளின் ஆத்திரத்தால், பள்ளி மாணவி கெரசின் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டாள்.

மத்தியப்பிரதேச மாநிலம் விதிஷா மாவட் டத்தில் உள்ள சத்வாடியா சராய் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நடந் துள்ளது.ஏழாவது படித்து வந்த மாணவி நிதி; பள்ளியில் சக மாணவிகள் இருவர் இந்த மாணவியுடன் சண்டை போட்டனர். சண்டை வலுத்தது. பள்ளியை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சக மாணவிகள் இருவரும் பின்தொடர்ந்தனர். அவர்களுடன் இன்னொரு சீனியர் மாணவியும் உடன் சென்றார்.நிதியை வழிமறித்து மூவரும் சண்டை போட் டனர். ஒரு கட்டத்தில், நிதியை தாக்கினர். மாணவிகளில் ஒருவர் கையில் வைத்திருந்த மண்ணெண் ணெயை நிதி மீது ஊற்றினாள். இன்னொரு மாணவி, தீப்பெட்டியில் இருந்து குச்சியை உரசி, தீப்பற்ற வைத்தார். தீக்காயங்களுடன் இருந்த நிதியை அவளின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிதி இறந்து விட்டார்.

--------------------

செய்தியை வாசித்துவிட்டீர்களா. உடனே ஒருவர் கேட்பார், இந்த செய்திக்கும் உங்கள் பதிவுக்கும் என்ன தொடர்பென்று!

உங்களுக்குத் தெரியுமா "The Protection Of Women From Domestic Violence Act, 2005" என்ற பெயரில் ஒரு சட்டம் இருக்கிறது என்று? அதனைச் சுருக்கமாக "குடுமப வன்முறைச் சட்டம்" என்று அழைக்கிறார்கள். அந்த சட்டத்தின் அடிப்படை வரையறைகளின்படி "வன்முறை" என்பது மனைவிக்கு கணவனால் செய்யப்பட்டதாக மனைவி கருதுவது மட்டுமே! மனைவி கணவனுக்குச் செய்யும் எந்த வன்முறையையும் இந்தச் சட்டம் கண்டு கொள்ளாது. கணவன் பாடு அம்போதான்!

மேலும், இந்தச் சட்டத்தில் அடிப்படையில் "தீங்கிழைக்கப்பட்ட" அல்லது "பாதிக்கப்பட்ட நபர்" (Aggrieved Person) என்றால் "திருமணமான ஒரு பெண்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

" 'aggrieved person' means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;"

(http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s3.htm)

இந்த இடத்தில் "respondent" - அதாவது பிரதிவாதி என்பவன் கணவன். அவன் கஷ்டப்பட்டு வாதாடி தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்க முயலவேண்டும். ஆனல் அது மிகக்கடினம். ஏனெனில் சட்டம் முழுதும் அவனுக்கு எதிராகவே இயற்றப்பட்டிருக்கிறது.

"குடுமப வன்முறை" என்பதற்கான definition இந்தச் சட்டத்தில் எப்படி வரையறுத்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்:

(a) harms or injures or endangers the health, safety, life, limb or well-being, whether mental or physical, of the aggrieved person or tends to do so and includes causing physical abuse, sexual abuse, verbal and emotional abuse and economic abuse; or
(b) harasses, harms, injures or endangers the aggrieved person with a view to coerce her or any other person related to her to meet any unlawful demand for any dowry or other property or valuable security; or
(c) has the effect of threatening the aggrieved person or any person related to her by any conduct mentioned in clause (a) or clause (b); or(d) otherwise injures or causes harm, whether physical or mental, to the aggrieved person.

http://www.vakilno1.com/bareacts/Domestic-Violence/s5.htm

இதற்கான விளக்கங்களைப் படித்தீர்களானால் இதன் பயங்கரம் விளங்கும். இந்த சட்டத்தின் அடிப்படையில் நிகழும் கொடுமைகளையும் இதன் விபரீதங்களையும் பற்றி உண்மைக் கதைகளுடன் பிரிதொரு நாள் விரிவாக எழுதுகிறேன்.

சரி. மேற்கண்ட விதிஷா நிகழ்வைப்பற்றிய செய்தியின் மூலம் நீங்கள் அறிவது என்ன?

பெண் என்பவள் கொலை உட்பட எத்தகைய கொடுமையான செயலையும் செய்யத் தயங்குபவள் அல்ல. ஆகையால் வன்முறை என்பது ஆண்களால் பெண்களுக்குக் கெதிராக நடப்பவைதான் என்னும் அடிப்படை கருதுகோள் எத்துனை தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிப்பதற்காகத்தான். இந்தப் புனைவுகோளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஆண்குலத்துக்கும், நாளடைவில் நம் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எப்படிப்பட்ட கேடுகளை விளைவிக்கப் போகின்றன என்பதை நினைத்தால் பயங்கரமாக உள்ளது என்பதுதான் நிஜம்.

இதை பொதுமக்கள் மனத்தில் கொண்டு, இத்தகைய ஒருதலைச் சார்புள்ள சட்டங்கள் அறவே நீக்கப்பட்டு, குடும்ப வாழ்வு முறையை தக்கவைக்கும் நோக்கத்தில் இருபாலருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் (gender-neutral laws) என்று ஒருமித்த குரல் எழுப்பவேண்டும். இது நம் கடமை. இல்லையேல் எதிர்காலத்தில் நம் நாட்டில் தகப்பன் பெயர் தெரியாத ஒரு சமுதாயம் கட்டாயம் உருவாகும்!