கணவன் முகத்தைச் சுளித்தாலே கேஸ் போடச் சொல்கிறது அரசாணை!

ஆனால் மனைவி எந்தவிதக் கொடுமை செய்தாலும் கணவனுக்கு விடிவு கிடையாது.

"குடும்ப வன்முறைச் சட்டம்" என்றொரு ஆணழிப்புச் சட்டத்தை (இதனை குடும்ப முறை ஒழிப்புச் சட்டம் என்றும் அழைக்கலாம்) அமுல்படுத்தி ஓராண்டு கழிந்தபின் அதன் செயலாகத்தை இன்னும் பரவலாக்கி (ஒரு குடும்பத்திற்கு ஒரு கேசு என்னும் நிலை வரும் வரையில்) தீவிர செயல்பாடு நிகழவேண்டும் என்னும் அடிப்படையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றிய செய்தியைக் காணுங்கள்:-

வீட்டுக்காரர் திட்டினால் உடனே போனை எடுங்க...மாவட்டந்தோறும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமனம்

பெண்களைத் திட்டும் கணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக் கும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி பரிசோதனை செய்து அறிக்கை அனுப்ப சேவை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளில் பெண்களுக்கான எதிரான வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தை, 2005ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை, 2006ம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு வெளியிட் டது. இதையடுத்து இச் சட்டமும், வழிமுறைகளும் அமலுக்கு வந்தன. இச்சட்டப்படி, வீடுகளில் மனைவி அல்லது பெண் வாழ்க்கைத் துணை தங்களது கணவர் அல்லது வாழ்க்கைத் துணையின் வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்படுவர்.

சட்டத்தில், வீட்டுப் பெண்களுக்கு உடல்ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ, உணர்வுப்பூர்வமாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ கொடுமைப்படுத்துதல் குற்றம். சட்டவிரோதமாக வரதட்சணை கோருதலும் இச்சட்டத்தில் குற்றமாகிறது. சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த உடனடி நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து, அவர்கள் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும்.மேலும், சேவை செய்ய விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று, முறையாக ஆய்வு செய்து அவர்களைப் பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சேவையளிப்போரின் விலாசம், தொலைபேசி எண்கள் போன்றவற்றை விளம்பரமாக வெளியிட்டு, இணையதளத்திலும் வெளியிட வேண்டும். இச்சட்டத்தைப் பெண்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய வேண்டுமென மத்திய அரசு கோரியிருந்தது. இதன்படி, மாவட்ட சமூகநல அதிகாரிகளை அந்தந்த மாவட்டத்துக்கு இச்சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளாக, தற்காலிக ஏற்பாடாக, நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. பின், பாதுகாப்பு அதிகாரிகள், சேவை அளிப்போர் மற்றும் கவுன்சிலிங் செய்வோரை நியமிப்பதற்கு பரிந்துரைகளை சமூக நலத்துறை அனுப்பியது.

மேலும், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சேவை அளிப்போராக நியமிப்பதற்கு பட்டியல் அனுப்புமாறு அரசுக்கு கோரப்பட்டது. இதைப் பரிசீலித்த தமிழக அரசு, விண்ணப்பம் செய்த அனைத்து தொண்டு நிறுவனங்களின் தகுதிகள் மற்றும் அவர்களது செயல்பாடுகளைப் பரிசீலித்து, விரிவாக அவற்றுடன் ஆலோசனை நடத்தி, சென்னைக்கு இரண்டு சேவை அளிப் போரையும், மற்ற மாவட்டங்களுக்கு தலா ஒருவரையும் நியமிக்க முடிவு செய்தது. இவர்களது பணிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொண்டு நிறுவனங்கள் தங்களிடம் சொந்தமாக கவுன்சிலிங் செய்வோரை வைத்திருக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. இதன்படி, சேவை அளிப்போரது பட்டியலை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இவர்கள், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்க இடம் அளிக்க வேண்டும். மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். மனரீதியான கவுன்சிலிங் அளிக்க வேண்டும். சட்ட உதவி வசதிகளை செய்து தர வேண்டும். தங்கியிருக்கும்போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைபேசி வசதி மற்றும் இதர தகவல் தொடர்பு வசதிகளை செய்து தர வேண்டும். சேவை அளிப்போர், பாதிக்கப்பட்டவருக்கு வீட்டில் நடந்த கொடுமைகளை, அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அதன் பிரதியை மாஜிஸ்திரேட்டுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிக்கும் அனுப்பிவைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்து, அதன் அறிக்கையை பாதுகாப்பு அதிகாரிக்கும், உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பிவைக்க வேண் டும். சேவை இல்லத்தில் தங்கியிருக்க பாதிக்கப் பட்டவர்கள் விரும்பினால், அவர்களை தங்க வைத்து அந்த இடம் பெற்றிய விவரங்களை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தெரியப்படுத்த வேண்டும்.சட்டரீதியான வழக்கு கள் ஏதும் சேவை அளிப் போருக்கு எதிராக தொடர முடியாது. இச்சட்டப்படி நியமிக்கப்படும் சேவை அளிப்போர் மேற் கொள் ளும் செலவுகள் ஏதும் ஈடுகட்டப்படாது. எனினும், பாதிக்கப் பட்டவருக்கு அளிக்கப்படும் தங்குமிடம், உணவு மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கான செலவுகளை ஈடுகட்டிக்கொள்ளலாம். சேவை அளிப்போர் தங்களிடம் எவ்வளவு பேர் பலனடைந்தனர் என்பது பற்றிய மாதாந்திர அறிக்கையை சமூக நலத் துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். சேவை அளிப்போரின் பெயர் மற்றும் விவரங்களை அந்தந்த மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும். இவ்வாறு சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

----------------------------------------

இந்தச் சட்டத்தின் பயங்கரம் இந்தச் செய்திக் குறிப்பின்மூலம் வெளிப்படவில்லை. உண்மையில் அந்தச் சட்டத்தின் அடிப்படையில் திடீரென்று ஒரு பெண் தன்னுடன் கணவனாக, அல்லது கணவன்போல் இருக்கும் ஒரு ஆண் தன்னிடம் பேசும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டான், அல்லது தன் தாயார் முன்னிலையில் "அச்" என்று தும்மினான் என்று புகார் கொடுத்து, அந்தக் கணவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே வெளியேற்றச் செய்யலாம்!


Section 23 (Chapter 23) Residence orders.

19. Residence orders.-

(1) While disposing of an application under sub-section (1) of section 12, the Magistrate may, on being satisfied that domestic violence has taken place, pass a residence order -

(a) restraining the respondent from dispossessing or in any other manner disturbing the possession of the aggrieved person from the shared household, whether or not the respondent has a legal or equitable interest in the shared household;

(b) directing the respondent to remove himself from the shared household;

(c) restraining the respondent or any of his relatives from entering any portion of the shared household in which the aggrieved person resides;

(d) restraining the respondent from alienating or disposing off the shared household or encumbering the same;

(e) restraining the respondent from renouncing his rights in the shared household except with the leave of the Magistrate; or

(f) directing the respondent to secure same level of alternate accommodation for the aggrieved person as enjoyed by her in the shared household or to pay rent for the same, if the circumstances so require:Provided that no order under clause (b) shall be passed against any person who is a woman.

கேட்கவே நம்பிக்கையில்லாமல் இருக்கிறதா? இந்த சட்ட விவரங்களை வழக்கு மற்றும் தீர்ப்புகளின் ஆதாரங்களுடன் எதிர்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.

1 மறுமொழி:

Anonymous said...

One more new legal robbery starts now!

India - land of prosperrity to start 498a, DP, DV business for cops, social service NGOs.