498A இந்தியா லிமிடெட் - கம்பெனி அறிக்கை!



"498A இந்தியா லிமிடெட்" - ஒரு இந்திய அரசு நிறுவனம்.

நம் பாரதத் திருநாட்டில் ஜேஜேயென்று நடந்து கொண்டிருக்கும் பல நிழல் தொழில்களான ஹவாலா, பிணைக்கைதிகளாக ஆட்கடத்தல், கருப்புப் பணம், மோசடி போன்றவைகளோடு கூட இந்தியக் குற்றவியல் சட்டம் 498A பிரிவு ஒரு பெருத்த லாபம் சம்பாதிக்கும் தொழிலாக ஒரு சில சாராருக்கு அமைந்திருக்கிறது. இதனை தவறாக கட்டமைக்கப்பட்ட தன் சட்டங்களினால் அரசே ஊக்குவிப்பதால் இந்தத்துறை ஒரு அரசுத் துறை நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் கைமாறும் துகை ஆண்டுக்கு ரூபாய் 3000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

இந்த "498A இந்தியா லிமிடெட்" நிறுவனத்தின் வெற்றிகரமான வளர்ச்சியை நோக்கும்போது இது ஒரு பிரும்மாண்டமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக அமைவதால் இதன் பங்குகள் நாட்டிலுள்ள எல்லா பங்குச் சந்தைகளிலும் பட்டியலிடப்பட்டு, ஒரு "நவரத்தினா" நிறுவனமாகக் கருதப்படும் என்று தெரிகிறது.

இதன் வளர்ச்சியின் குறியளவு:

இந்தியாவில் வேறெந்தத் துறையாலும் எட்டமுடியாத வளர்ச்சியை - ஐ.டி, பி.பி.ஓ உட்பட - இந்த 498 A கண்டிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் 120% வளர்ச்சியை இது பதிவு செய்திருக்கிறது. அதாவது 1995-ல் வெறும் 28,579 வழக்குகள் என்ற நிலையிலிருந்து 2007-ல் 63,128 வழக்குகளாக பெருவளர்ச்சி கண்டிருக்கிறது.

மக்கள்பால் இதன் வீச்சு:

இந்த நிறுவனத்தின் தன்மையின் அடிப்படையில் இதன் "இருப்புநிலைக் குறிப்பு" (Balance Sheet) முழுதும் "கருப்பா"கவே கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 1999-ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சுமார் 10 லட்சம் அப்பாவி இந்தியக் குடிமக்கள் தவறாக கைது செய்யப்பட்டு அவர்களின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவர்களில் பெரும்பகுதியினர் வயதான பெண்கள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள். இது ஒரு சாதாரணமான சாதனையாகக் கருத இயலாது!

இந்த சட்டத்தின் துஷ்பிரயோகத்தினால் கைது செய்யப்படும் ஒவ்வொரு நபரும் ஜாமீன் பெறுவதற்காக ரூ.10,000 செலவு செய்வதாக் கணக்கிட்டால் 10 லட்சம் பேருக்கு சுமார் 1000 கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

இதன் அபரிமிதமான வளர்ச்சியினால் உந்தப்பட்டு இதன் கிளை நிறுவனங்களாக "குடும்ப வன்முறைச் சட்டம் லிமிடெட்" (Protection of Women from Domestic Violence Act, 2005) மற்றும் "எல்லா தற்கொலையும் வரதட்சணைக் கொலைகளே" (All Death Dowry death India limited) போன்ற நிறுவனங்களையும் தொடங்கியுள்ளனர். மேலும் "அனைத்து கணவன்மார்களும் இலவச ஏ.டி.எம் (ATM) மெஷின்களே" என்ற கொள்கையைப் பரப்பும் நிறுவனமும் தொடங்கப்பட்டு அது மிக லாபகரமாக் ஜேஜேயென்று நடந்துகொண்டிருக்கிறது.

பங்குதாரர்கள்:

இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக (shareholders) அடியிற்கண்ட மகாஜனங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்:

1. மனைவிமார்கள்
2. பேராசை பிடித்த வக்கீல்கள்
3. மனசாட்சியற்ற சில நீதிபதிகள்
4. பெண்கள் சார்பு தன்னார்வக் குழுக்கள்
5. சர்வ வல்லமை பொருந்திய தேசிய பெண்கள் ஆணையம்
6. தற்போதைய பெண்கள் மற்றும் குழந்தை நல மத்திய அமைச்சர்
7. பரபரப்பையும் மனவெழுச்சியையும் தூண்டுகின்ற வகையில் வரதட்சணைக் கொடுமை பற்றிய பொய்களைப் பரப்பும் செய்தி ஊடகங்கள்
8. ஒரு இளம் பெண் கண்ணீர் விட்டவுடனேயே ஜொள்ளு விட்டு அப்படியே உருகிச் சொட்டும் பலவீனமுடைய பெரிய மனிதர்கள்

இந்த சட்டங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்க நல்ல மனமும், நியாய உணர்வும் கொண்ட பல நீதிபதிகளும், சமூகநல சிந்தனையாளர்களும், பாதிக்கப்பட்ட கண்வன்மார்கள் மற்றும் பெண்கள் சார்ந்த தன்னார்வ அமைப்புகளும் பல திருத்தங்களைப் பரிந்துரைத்திருக்கின்றனர். ஆனால் அவை ஏதும் அமுலாக்கப்படாவண்ணம் பாதுகாத்து வருகின்றனர், மேலே பட்டியலிடப்பட்ட பங்குதாரர்கள். ஏனெனில் இவ்வளவு லாபகரமாக நடந்துவரும் இந்த நிறுவனத்தின் வருவாய் அதனால் குறைந்துவிடுமோ என்னும் அச்சத்தினால்தான்.

இந்த நிறுவனங்களுக்கு ஐக்கியநாடுகள் சபை மற்றும் அதன் கிளை அமைப்புகளிடமிருந்தும் பெருமளவு நிதி முதலீடு கிடைக்கிறது. ஏனெனில் அத்தகைய அமைப்புகளுக்கு முற்றிலும் தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் கொண்ட அறிக்கைகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. அதனால் ஏதோ சமூக சீர்திருத்தத்திற்கு உதவுவதாக கற்பனை செய்துகொண்டு மேற்கூறிய டுபாக்கூர் நிறுவனத்திற்கு நிதியை அனுப்பி விரயம் செய்கின்றனர் அவர்கள்.

பரவலான விழிப்புணர்வினாலும், பெருமளவில் பெண்களின் கல்வி மற்றும் சமமான வேலை வாய்ப்புக்களாலும், வரதட்சணை கேட்டுப் பெறுவது என்னும் வழக்கமே இந்திய சமூகத்திலிருந்து அநேகமாக முழுதும் நீக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை. இந்த நிலையில் இன்னமும் ஊர்தோறும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிவருகின்றதாகவும், அவர்கள் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் பொய்களை அள்ளி வீசிக்கொண்டு இந்த நிறுவனத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றனர், இதன் பங்குதாரர்கள்.

உணமை நிலை:

இந்த நிறுவனம் பெறும் ஒவ்வொரு ரூபாய் வருவாயும் இந்திய மண்ணின் மைந்தர்கள் சொட்டும் ரத்தத்தினால் கிடைப்பது என்பதை அரசும், மக்களும், ஊடகங்களும் உணரவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்த கொடுங்கோன்மை சட்டங்களால் 1.2 லட்சம் பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தவிர 1000 குழந்தைகளும் 18,000 முதியோர்களும் கைது செய்யப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் ஆணாகப் பிறந்ததினால், அல்லது ஆண்குழந்தையைப் பெற்றதனால், அல்லது ஆணிற்கு உறவினராக இருப்பதனால் மட்டும் தன் சொந்த நாட்டிலேயே இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறார்கள். இந்த உண்மைகள் தெரிந்தும், மேற்சொன்ன பங்குதாரர்களின் மிகுதியான செல்வாக்கினால் கண்டும் காணாதுபோல ஆட்சியாளர்கள் உள்ளனர்.
ஆனால் இந்த நிறுவனத்தின் வெற்றி என்பது நம் பாரதத்தின் பண்பாடுமிக்க குடும்ப வாழ்க்கை முறையின் நாசம் என்பது திண்ணம். மேலை நாட்டு மாயையான நாகரிகத்தினால் கவரப்பட்டு குடும்ப முறையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு தகப்பன் பெயர் தெரியாத ஒரு வருங்கால சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவதுதான் இந்த 498A லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நோக்கமாக இருக்கிறது.

நடுவு நிலையும், நல்லுள்ளமும் கொண்ட இந்திய மக்களே, இத்தகைய சமுதாயச் சீரழிவை நீங்கள் அனுமதிக்கப் போகிறீர்களா, சிந்தியுங்கள்!

3 மறுமொழிகள்:

Anonymous said...

Super Business!!! India will be richest country in 2020!!!

Anonymous said...

One possibility to solve this issue: Counter terrorism against legal terrorism.

If you tell about this issue nobody will take this as serious. Make whole country filled with false 498a victims. Until nobody will care about the victims.

"தனி மனிதன் ஒருவனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம் " என்று பாரதியார் எழுதி இருக்கிறார் . எனவே ஒரு அப்பாவி குடிமகனை அரசாங்கமே காட்டு மிராண்டித்தனமான சட்டங்களால் தண்டித்தால் என்ன செய்வது ?

Anonymous said...

Blood Sucking Lawyers in India:

Courtesy: Varamalar 2/11/08

"கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ... லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு... வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரணுமா? அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்... இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை...' எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.
சொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்... இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்... இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், "பாதிக்கப்பட்டோர் கழகம்' என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, "படித்துப்பார்...' என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்...
"ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்!' என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்?
பஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.
சிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், "ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது!' என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். "பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்!' என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி?
"ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்...' என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
"இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்!' என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது!
வழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.
ஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம்! ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.
"ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்!' என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.
இந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது...
வெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ - இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே! வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.
இந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே!
வழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.
சென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா?
வழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா?
பொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா? சிந்திப்பீர்!
இப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே!