கணவனின் குடும்பத்தை கூட்டமாக பொய் வழக்கில் சிக்கவைக்கும் இளம் மருமகள்கள்

பொய் வரதட்சணை வழக்குகளின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றது. பின்வரும் செய்தியில் பாருங்கள். மருமகளின் நகைகளை அடகுவைக்க கணவனின் ஒட்டுமொத்தக் குடும்பமும் அடகுகடைக்குச் சென்றார்களாம். உங்களால் நம்பமுடிகிறதா?


வரதட்சணை கேட்டு பட்டதாரி பெண் சித்ரவதை
சென்னை இன்ஜினியருக்கு வலைவீச்சு
ஏப்ரல் 16,2012 Dinamalar

தேனி : வரதட்சணை கேட்டு, இன்ஜினியரிங் பட்டதாரி பெண்ணை அடித்து சித்ரவதை செய்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரை, மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி, சரவணக்குடில் பகுதியை சேர்ந்தவர் நதியா, 25; பி.இ., படித்துள்ளார். இவருக்கும், சென்னை டாடா இண்டஸ்ட்ரீசில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் கார்த்திக்கிற்கும், 2010 ஜூன் 24ல் திருமணம் நடந்தது. 65 சவரன் நகையும், 2.50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசைகளும் கொடுத்தனர்.

திருமணமான மூன்றாவது மாதத்தில், வீடு வாங்குவதற்காக பீரோவில் வைத்திருந்த நதியாவின் நகைகளை எடுத்து, கணவன் கார்த்திக், அவரது தந்தை மனோகரன், தாய் ராஜதிலகம், தங்கை சுகாசினி, அவரது கணவர் ராஜா ஆகியோர் அடகு வைத்தனர். மேலும், கூடுதல் வரதட்சணையாக 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டினர். பணம் கொடுக்காவிட்டால், விவாகரத்து செய்வதாகக் கூறி வெற்றுப் பேப்பரில் கையெழுத்து கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

தேனி அனைத்து மகளிர் போலீசில் நதியா புகார் செய்தார். போலீசார், கார்த்திக் உட்பட ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாப்ட்வேர் இன்ஜினியரை கைது செய்வதற்காக போலீசார் சென்னை சென்றுள்ளனர்.