சீரழியும் குடும்பங்கள்

ஜூனியர் விகடன் (01-07-2009) இதழில் வெளி வந்துள்ள கட்டுரை இது.

(இதன் மின் வடிவத்தை அனுப்பி வைத்த தமிழ் சரவணன் அவர்களுக்கு நன்றி)
---------------------------------

'புதருக்குள் பெண் பிணம், கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, ரயில் முன் பாய்ந்து கள்ளக் காதல் ஜோடி தற்கொலை' - தினம் இப்படி ஆவடியைச் சுற்றி சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது! ஆவடி குறித்து நம் ஆக்ஷன் செல்லுக்கு (எண்:9790962188) வந்திருந்த அதிகபட்ச புகார்களும் இதே ரேஞ்சில்தான் இருக்கிறது.

'போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், வீட்டை விற்கச் சொல்லி ரவுடிகள் மிரட்டுகிறார்கள், கள்ளக் காதலியுடன் சேர்ந்துகொண்டு கணவர் துன்புறுத்துகிறார், கொலையைத் தற்கொலையாக மாற்றிவிட்டார்கள், பள்ளிக்கூடம் போன பெண்ணை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியவில்லை...' இப்படியாக வரிசையான குற்றச் சாட்டுகள். ஆவடியில் மட்டும் ஏன் இப்படி?

இப்பகுதியில் குடியிருக்கும் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் சம்பத் நம்மிடம், ''பிரமாண்டமான தொழில் நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய பகுதி இது. ஆனால், பத்தாண்டுகள் பின்தங்கி நிற்கிறது. காரணம், ரவுடியிஸம்.

இப்பகுதி இளைஞர்கள் தாங்கள் ரோட்டில் நடந்தால், எல்லோரும் பயப்படவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்கூட கட்டப்பஞ்சாயத்து அஸைன்மென்டுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலுக்கும் இவர்களுக்கும் நெருக்க மான தொடர்பு இருக்கிறது. புறநகர்ப் பகுதி களில் திட்டமிட்டு ரவுடிக் குழுக்களை உருவாக்குவது இவர்கள்தான். இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் இந்த ரவுடி கும்பல் பின்னிப் பிணைந்துள்ளது.

ரயில் போக்குவரத்தே இல்லாத ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தொழிற்பேட்டையான அம்பத்தூர், ஆவடி ஏரியாக்களில் புதிதாக எந்தத் தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன்பே, கும்பலாக மாமூல் கேட்டு வந்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் துறையும் இப்படித்தான். கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம் ஏரியாக்களைவிட இங்கே 25 சதவிகிதம் விலை குறைவாக இருக்கிறது. இப்படியாக ஆவடியின் பொருளாதாரமே ரவுடிகளால் சீரழிந்து விட்டது.

பொருளாதாரச் சீரழிவு ஒரு புறம் என்றால், சமுதாயச் சீரழிவு அதைவிட மோசம். புறநகர் பகுதியின் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பலான படங்கள் தவிர, வேறெதையும் ஓட்டுவதில்லை. இந்தப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் ஈவ் டீசிங் தொல்லையிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாராவது எதிர்த்துப் பேசிவிட்டால், வீட்டுக்கே வந்து கலாட்டா செய்வார்கள். போலீசுக்குப் போனாலும் பயனில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் வேறு ஒரு ரவுடிக் கும்பலை நாடி, ஆதரவு கேட்கிறார்கள்.

அதேபோல், கள்ளக் காதல் விவகாரங்களும் இந்தப் பகுதிகளில் ஏராளம். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு முறையற்ற உறவுகளும் அதிகரித்திருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை அரசு இப்பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பி னால், ஏதாவது நன்மை கிடைக்கலாம்'' என்றார் சம்பத்.

''ஆவடியில் இருந்து எங்களுக்கு வரும் புகார்கள் பெரும்பாலும், கள்ளக் காதல் சம்பந்தப்பட்டவையாகவே இருக் கின்றன!'' என்கிறார் கலைச்செல்வி கருணாலயா என்கிற தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் புருஷோத்தமன். அவர் நம்மிடம், ''ஒரு முஸ்லிம் குடும்பம். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு நாள் தன் கணவன், அவருடைய அண்ணன் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்ட மனைவி, அங்கேயே சத்தம் போட்டு கலாட்டா செய்திருக்கிறார். அதற்குப்பிறகு அந்தக் குடும்பம் செய்ததுதான் அநியாயம். சத்தம் போட்டு கலாட்டா செய்த அந்தப் பெண்ணை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து, ஜன்னல் வழியே சாப்பாடு கொடுத்துள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் அப்பா மூலமாக சமூக நல வாரியத்தின் கவனத்துக்கு வந்து, போலீஸ் மூலமாக அந்தப் பெண்ணை மீட்டோம். ஆனால், கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இவளை நட்டாற்றில் விட்டுவிட்டான்.

இன்னொரு புகார் ஒரு இளைஞனைப் பற்றியது. அவனும் அவனுடைய அம்மாவும் ரோட்டோரம் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்களின் கடைக்கு எதிரே நாற்பது வயது விதவைப் பெண்மணி ஒருவரின் வீடு. அந்தப் பையனுக்கும் விதவைப் பெண்மணிக்கும் தொடர்பு ஏற்பட்டு, இப்போது அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இருவருக்கும் இருபது வயது வித்தி யாசம்! இந்தத் தவறான உறவு எதிர்காலத்தில் இரண்டு குடும்பங்களையும் பாதிக்கும் என்பதால் விதவைப் பெண்மணியிடமிருந்து பையனை மீட்டுக் கொடுக்கச் சொல்லி, அவனுடைய அம்மா போராடிக்கொண்டு இருக்கிறார்.

இன்னொரு வீட்டில், கட்டிய புருஷனை விட்டுவிட்டு அவனுடைய தம்பியுடன் ஓடிவிட்டாள் ஒரு பெண். வியாபாரம், வியாபாரம் என்று பணமே குறிக்கோளாக இருந்ததால், மனைவியைக் கோட்டை விட்டுவிட்டார் அந்தக் கணவர்'' என்றவர்,

''தனி மனித ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளை இங்குள்ள இயந்திர வாழ்க்கை தவிடு பொடியாக்கி வருகிறது. இதுதான் இவ்வாறான மனசாட்சியற்ற செயல்களுக்கு அடிப்படைக் காரணம். இதில் தொலைக்காட்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வசதிக்கு மீறிய வாழ்க்கை மீதான ஆசையும், அதற்குப் போதாத பொருளாதார நிலையும்கூட கள்ளக் காதலுக்கு ஒருவகையில் காரணி. தன்னு டைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத புருஷனை விட்டு விட்டு வேறொருவரை தேடிப் போகும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். மனம்விட்டுப் பேசக்கூடிய, முதிர்ச்சியோடு அறிவுரை சொல்லக்கூடிய நண்பர்களையோ தோழிகளையோ இன்றைய நடுத்தர வயதினர் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்கூட இந்தப் பக்குவமற்ற போக்குக்கு ஒரு காரணம்.

அடுத்த தலைமுறையையாவது கவனத்தில் கொண்டு இனிமேல் பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைக் கல்வியைக் கட்டாயப் பாடமாக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக விளங்கவேண்டும். இது நம் சமுதாயத் தலைவர்களுக்கும் பொருந்தும். இல்லையென்றால், 'அவரே இப்படி... நாம செஞ்சா என்ன?' என்று எண்ணவைத்துவிடும்'' என்று புருஷோத்தமன் பலமாக எச்சரிக்கை மணியடித்துப் பேசினார். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

ஆவடியில் நடக்கும் விதிவிலக்கான சம்பவங்களுக்கு மட்டுமா இது பொருந்தும்? நிம்மதியைத் தொலைத்து, தவறான பாதை நாடுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்துமே!

- எம்.பாலச்சந்திரன்படம்: வி.செந்தில்குமார்

--------------------------

இந்த செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள மறுமொழி இது:-
---------------------
//மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகி றார்கள்.//

ஆம் இந்த கட்டுரை நூத்துக்கு நூறு உண்மை... பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் "வரதட்சணை கொடுமை சட்டம்" போன்ற அப்பாவி பெண்களுக்கா இயற்றப்பட்டதை இது போல் பெண்கள் பயன்படுத்தி அணைவரையும் சிறையில் அடைப்பது போன்ற கொடுமைகள் தினம் தொறும் நடந்தேறிவருகின்றது...
இச்சட்டத்தால் நாட்டில் இதுவரைக்கும் சுமார் ஒருலட்சடத்தி ஐம்பதாயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்(எல்லாம் விசாரனை கைதிகள்தாம்) மற்றும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் தந்தையில்லா குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்... ஆனால் இதில் கொடுமை என்னவேன்றால் இது போல் பொய் கேசுகளில் 100 - க்கு 2 - மட்டுமே உண்மை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மீதி 98% சதவீதம் பொய் கேசுகள். இது அரசு கொடுத்துள்ள புள்ளி விவரம்!

இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போகும்... நம் நாட்டில் என்பது நிச்சயம்!

விட்டது சனி!

இது எப்படி இருக்கு!

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன். போலீஸ் முன்னிலையில் சமரசம். (வரதட்சணை கேசு போடாமல் இத்தோடு விட்டார்களே என்று புருஷன் வெட்டிவிட்டு ஓடிவிட்டான் போல!)

அந்தியூர், ஜுன்.26- 2009. செய்தி - தினத்தந்தி

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை கணவர் சேர்த்து வைத்தார். போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகள் நளினி(26). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நளினி கணவரை பிரிந்து அந்தியூர் சத்தியா நகரில் தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். அந்தப்பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நளினிக்கும், அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்த மாணிக்கம் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடி விட்டனர்.

இது குறித்து பழனியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிய மாணிக்கமும், நளினியும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தனர்.

இருவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பழனியம்மாளும், நளினியின் முதல் கணவர் கார்த்தியும் வந்தனர். போலீசார் அவர்களை அழைத்து பேசினர்.
அப்போது நளினி தான் வாழ்ந்தால் மாணிக்கத்துடன்தான் வாழ்வேன் என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் தனக்கு திருமணத்தின்போது அணிவித்த கால்கொலுசு மற்றும் நகைகளை நளினி தனது தாயாரிடம் ஒப்படைத்தார்.

நளினியை அவரது காதலன் மாணிக்கத்துடன் அனுப்பி வைக்க கார்த்தியும் சம்மதித்தார். பின்னர் அனைவரது ஆசியுடனும் மாணிக்கமும், நளினியும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

மனைவியரால் ஆண்களுக்கு புது ஆபத்து

வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் : ஆய்வில் வெளியாகும் தகவல்.

பெங்களூர், மே.29- 2009. செய்தி - மாலை மலர்

குடும்பங்களில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க கடந்த 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஏராளமான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து “சேவ் இந்தியா பேமிலி பவுண்டேசன்” (Save Indian Family Foundation) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியாகும் தகவல்கள் வருமாறு:-

வரதட்சணை ஒழிப்பு சட்டம் அல்லது குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாகவோ அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களாகவோ அல்லது தொழில் அதிபர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 24 ல் இருந்து 28 வயதுக்குட்பட்டவர்கள்.கடந்த ஆண்டு சுமார் 1,200 பேரிடம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இந்த சட்டம் ஒரு தலைபட்சமாகவே இருக்கிறது. இதனால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் ஏராளமாக பணம் இருப்பதால் அவற்றை அடைய வரதட்சணை கொடுமை அல்லது குடும்ப வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ் புகார் கொடுக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் வரதட்சணை தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு வரதட்சணை வழக்குகள் அதிகரித்து உள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு 50,703 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டம் பாய்ந்தது. இது 2007-ம் ஆண்டில் 75,930 ஆக உயர்ந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, வரதட்சணை ஒழிப்பு சட்டமும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டமும் யாருக்கும் பாதகமாக இருக்காத வகையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, சட்ட ஆணையம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டமானது ஒரு தலைபட்சமாக இருப்பதாக இந்திய சர்வதேச சட்ட மையத்தைச் சேர்ந்த எம்.ஜி.குமார் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ““நான் சந்தித்த பல வழக்குகளில் பெரும்பாலான ஆண்கள், அவர்கள் எந்த தவறும் செய்யாமலேயே புகாருக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது”” என்று தெரிவித்தார்.

மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ““எனக்கு தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கிட்டத்தட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணிடம், அவருடைய உறவினர்கள் சென்று கணவர் மீது வழக்கு தொடரும்படி கூறி உள்ளனர். இது முழுக்க முழுக்க பணம் பறிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கு என்பது எனக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கணவருக்கு நீதி கிடைப்பதற்காக நான் வாதாடினேன்”” என்றார்.

மிஸ்டு கால் விளையாட்டு!

3 பெண் குழந்தைகளுடன் மாயமான பெண் எங்கே?

செல்போனில் `மிஸ்டுகால்' கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார்

சேலம், ஜுலை.24- 2009. செய்தி - தினத்தந்தி

3 குழந்தைகளுடன் காணாமல்போன பெண், செல்போனில் மிஸ்டுகால் கொடுத்து விளையாட்டு காண்பித்து வருகிறார். அவரது தாய்மாமனிடம் விசாரிக்க போலீசார்
முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணப்பா `லே' அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தையல் தொழிலாளி. இவரது மனைவி உமா(வயது30). இந்த தம்பதிகளுக்கு ரம்யா(12), சூர்யா(12), தீபிகா(5) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் ரம்யாவும், சூர்யாவும் இரட்டையர்கள்.

கடந்த 11-ந் தேதி தனது குழந்தைகளான ரம்யா, சூர்யா ஆகியோரை சேலம் அடுத்துள்ள அயோத்தியாபட்டணத்தில் உள்ள தனியார் கிறிஸ்டியன் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்த்து விட்டு அங்கேயே விடுதியில் விடுவதற்காக உமா பஸ்சில் சேலம் வந்தார். உடன் இளைய மகள் தீபிகாவையும் அழைத்து வந்தார்.

சேலம் 5 ரோட்டில் பஸ்சில் வந்து இறங்கியதும், தனது கணவர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நல்லபடியாக பஸ்சில் வந்து சேர்ந்து விட்டோம். இனி நான் பள்ளியிலும், விடுதியிலும் ரம்யா, சூர்யா ஆகியோரை சேர்த்து
விட்டு தீபிகாவுடன் ஊருக்கு புறப்பட்டு வந்து விடுவேன் என உமா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி, உமா ஊர் திரும்பவில்லை. 2 குழந்தைகளை பள்ளியிலும் சேர்த்து விடவில்லை.

மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் மாயமானது குறித்து சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் கணவர் சுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடிவந்தார்.

`மிஸ்டுகால்' விட்ட உமா

மாயமான உமா, மகள்கள் ரம்யா, சூர்யா, தீபிகா ஆகியோரை தேடி நாமக்கல், தர்மபுரி ஆகிய இடங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு போலீசார் சென்று தேடுதல்வேட்டை நடத்தினார்கள். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் உமா, தனது கணவர் சுப்பிரமணியனின் செல்போனுக்கு,தன்னுடைய செல்போனில் இருந்து `மிஸ்டுகால்' விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அதே எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது நீண்ட `ரிங்' சென்றதே தவிர, அதை எடுத்து உமா பேச தயாராக வில்லை. மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்தபோது செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

ஏற்கனவே, சுப்பிரமணியன் கொடுத்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த உமாவின் தாய்மாமன் சிவா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து இன்று போலீசார் கிருஷ்ணகிரி சென்று, தாய்மாமனிடம் விசாரிக்க திட்டமிட்டு
இருப்பதாக இன்ஸ்பெக்டர் துரை தெரிவித்தார்.

வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

”பெண்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள். வன்முறை என்றால் அதை ஆண்தான் செய்வான். அதனால் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்கள்தான் குற்றவாளிகள். கணவனுக்கு எதிராக மனைவி தொடுக்கும் புகார் ஒன்றே போதும், வேறு சாட்சியங்கள் தேவையில்லை.” - இதுதான் இந்திய சட்டங்களின் மற்றும் அளிக்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படைக் கருத்தாக்கம்.

இந்தச் செய்தியை வாசித்து விட்டு அனைத்து பெண்களும் எவ்வளவு மென்மையானவர்கள்; அன்பே உருவானவர்கள், அவர்கள் எவ்வித வன்முறையையும் செய்யவே முனைய மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:-
-----------------

பத்தனம்திட்டை,ஜுன்.24- 2009 . செய்தி - தினத்தந்தி

பச்சிளம் குழந்தைக்கு வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.

தாய்மையின் பெருமையை பறைசாற்றுவதற்காக `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று சொல்வது உண்டு. ஆனால் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் சுமையாக நினைக்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.

அன்னையின் அரவணைப்பு இருக்க, எந்தவித அச்சமுமின்றி துள்ளி விளையாடிய ஒரு பச்சிளம் குழந்தைக்கு, பெற்ற தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பத்தனம்திட்டை மாவட்டம் பீருமேடு அருகே உள்ள ராஜமுடி காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி பாக்கியம் (வயது34). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

4-வதாக பிறந்த கார்த்திகா என்ற பெண் குழந்தைக்கு தற்போது 11/2 வயது ஆகிறது. படுசுட்டியான இந்தக்குழந்தை, நேற்று முன் தினம் இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாயில் இருந்து திடீரென நுரை- நுரையாக வெளிவந்தது.
இதனால் பாக்கியம் கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக் காரர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்களின் துணையுடன் தனது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பீருமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம் தான் தனது குழந்தைக்கு பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, நாடக மாடியது தெரியவந்தது.

இதையடுத்து பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப வறுமை மற்றும் பெண் குழந்தை என்ற காரண த்தால் இந்த கொலைக்கு துணிந்ததாகவும், நாயை கொல்வதற்காக பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை வாழைப்பழத்தில் கலந்து குழந்தைக்கு கொடுத்து கொன்றதாகவும், பாக்கியம் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.

கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனைக் கொளுத்திய காரிகை

ஆகா! இவளல்லவோ பாரதி கண்ட புதுமைப் பெண்!

பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!

33 சதம் என்ன, முழு ஒதுக்கீடும் இந்தப் பெண் திலகங்களுக்கே!

அய்யோ பாவம், அடங்காத வெறி, என்ன செய்வாள் பேதை! கணவன், குடும்பம், கற்பு, பண்பாடு என்று எத்தனை விலங்குகள் பெண்களுக்கு! அவள் ஆசைப்பட்டபடி உல்லாசமாக இருக்க வேண்டி கணவனைக் கொலை செய்யவேண்டியுள்ளதே. இது தகுமா?

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலை செய்வது தவறல்லவே. அந்தக் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மேல்தானே தவறு. அந்தக் குற்றத்திற்காக அவனைப் பெற்ற தாய், தந்தையரைத் தூக்கிலிட வேண்டுமல்லவா! (கணவனைத்தான் கொலை செய்தாகி விட்டதே!). இத்தகைய சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டுமே, எங்கே பெண்ணியவாதிகள், சமூக நல ஆர்வலர்கள், 498ஏ சிறப்பு வக்கீல்கள்!

இதோ இந்தச் செய்தியைப் படியுங்கள். இது அறிஞர் டோண்டு அவர்களுக்கு சமர்ப்பணம்!

--------------------

செய்தி: தினமலர். 25 ஜூன் 2009.

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஊராட்சி தலைவர் கொலையில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த 22ம் தேதி வீட்டில் தூங்கிய சுந்தரமூர்த்தி, வெடிவிபத்தில் உடல் கருகி இறந்தார்.

ஆரணி போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்ப பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

செந்தாமரையின் அக்காவுக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் நிச்சயம் செய்த நிலையில், அவரது அக்கா வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதனால் வேறு வழியின்றி, செந்தாமரைக்கும், சுந்தரமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.செந்தாமரைக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.

திருமணமான சில நாட்களில் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட அவர், தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (27) என்ற வாலிபருடன் செந்தாமரைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களுக்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் திட்டமிட்டனர்.

கடந்த 22ம் தேதி இரவு, திருவிழாவில் வெடிக்கும் உயர்ரக வகை பட்டாசுகள், ஐந்து லிட்டர் பெட்ரோலை மதியழகன் வாங்கி வந்து செந்தாமரையிடம் கொடுத்தார்.

பட்டாசு, பெட்ரோல் கேன் ஆகியவற்றை சுந்தரமூர்த்தி படுக்கையின் கீழ் அவரது மனைவி வைத்து விட்டார். சென்னை சென்று வந்த சுந்தரமூர்த்தி, இரவு 11 மணிக்கு படுக்கைக்கு சென்றார். அதிகாலை வேளையில் அவர் அயர்ந்து தூங்கிய போது, கேனில் இருந்த பெட்ரோலை, அவரது படுக்கை அறையில் மதியழகன் ஊற்ற, செந்தாமரை தீ வைத்துள்ளார். பின் மதியழகன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

தீ வைத்தவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தீ கரும்புகை மூட்டத்துடன் இருந்ததால் அறையிலிருந்து சுந்தரமூர்த்தி தப்பி வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிந்தது.

வெடிவெடித்ததில் அவர் இறக்கவில்லை என்பதும், பெட்ரோல் தீ விபத்தில் அவர் இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தாமரையையும், மதியழகனையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் செந்தாமரை கொடுத்த வாக்குமூலத்தில், "என் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை. மதியழகனுடன் எட்டு மாதமாக கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தேன். இந்த சந்தோஷத்துக்கு, சுந்தரமூர்த்தி தடையாக இருப்பார் எனக் கருதி, அவரை மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.

-------------------------

இதையே அந்தக் கணவன் செய்திருந்தால் அதற்கு வரதட்சணைக் கொலை என்று நாமகரணம் சூட்டி அதற்கான சிறப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி ஏனைய குற்றவியல் சட்டங்கள் ஏதும் இதற்குப் பொருந்தாத வகையில் சாட்சியம் எதுவும் தேவையில்லை என்றும், தான் கொலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட கணவன்தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறும் அடாவடி சட்டங்கள் பேரில் தூக்கிலிடப் படுவான்.

ஆனால் இந்தப் பத்தினித் தெய்வத்தைப் பாருங்கள், ஏதோ, கடையில் கம்மர்கட்டு வாங்கித் தின்பதுபோல் கணவனை வெடி வைத்து எரித்துவிட்டு சர்வ சாதாரணமாக கள்ளக் காதலனுடன் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். (கணவனைக் கொலை செய்தவள் என்பதற்காக “ள்” விகுதி போடுவது தவறு “ர்” என்றுதான் குறிப்பிடவேண்டும் என்பார் சில அறிஞர்கள்!)

திருமணத்திற்கு மாற்று என்னென்ன என்பது பற்றி சிந்திப்போம்!

திருமணம் என்பது ஆண்களுக்கும் அவனது பெற்றோருக்கும் ஒரு பாம்புப் புற்றில் கைவிடுவது போன்றது.

இரண்டு மாத குழந்தைமீது வரதட்சணை புகார்!

”ஜோயா” (Zoya) என்னும் இரண்டே மாதக் குழந்தை (அதுவும் பெண் குழந்தை) மீது அக்குழந்தை தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக 498A வழக்கு பதிவு செய்துள்ளார் ஒரு பெண் குலத் திலகம். இதுவரை 3 வயதுக் குழந்தை மீதுதான் இத்தகைய புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதக் குழந்தை மேல் வரதட்சணைப் புகார் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் ஷகீலா என்னும் பெண் பேய்.


ஆனால் இன்னமும் இந்த 498ஏ சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், கிரிஜா வியாஸ் போன்ற அரசியல்வாதிகளும். ஏனெனில் இந்த சட்டத்தின் மூலம் இந்தப் பேர்வழிகளுக்கு நிறைய பகல் கொள்ளை அடிக்க முடிகிறது.

இந்த ஜோயாவும் அந்தக் குழந்தையின் தாயும் இவர்களுக்கு பெண்ணாகத் தெரியவில்லையா? தேசிய பெண்கள் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரும் என்ன செய்கிறார்கள்? வரதட்சணை புகார் கொடுத்து, கணவன்மாரையும் அவர்களது பெற்றோரையும், உற்றாரையும், நண்பர்களையும், சிறு குழந்தைகளையும் கைது செய்து சிறையிலடைத்து, அதன் பின் கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்களிடமிருந்து லட்சக் கணக்கில் பணம் கறந்த பின் வழக்கை சமரசத்தின் பேரில் முடிக்கும் நடைமுறைதான் அனைத்து 498ஏ கேசுகளிலும் நடந்து கொண்டு வருகிறது. இதில் நிறைய பணம் விளையாடுவதால் இந்த சட்டத்தின் நடைமுறைத் தவறுகளை நியாயப் படுத்திக் கொண்டு, இதைத் திருத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இனி இந்தச் செய்தியை வாசியுங்கள். இரண்டு மாதக் குழந்தை மீது 498ஏ புகார் கொடுத்துள்ள அந்தப் பெண் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லையெனில் நிச்சயம் நீங்கள் மலம் தின்னும் பன்றியிலும் கேடு கெட்டவர் என்பது திண்ணம்!

------------------------------

செய்தி - தினமலர் - ஜூன் 24, 2009

மும்பை:மும்பையில் வரதட்சணை கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தைக்கு, செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அந்தக் குழந்தை, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், (நீதிபதிகளின் அறிவுக் கொழுந்துகளைப் பார்த்தீர்களா - 2 மாத சிசு கையெழுத்திட வேண்டுமாம்!) 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தர வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தை சேர்க்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான்; இவரின் முதல் மனைவி ஷகிலா. முஸ்லிம் சட்டப்படி அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ரேஷ்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ஜோயா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி சம்சுதீன் கான், அவரின் இரண்டாவது மனைவி ரேஷ்மா, சம்சுதீனின் தாயார், சகோதரி மற்றும் இரண்டு மாத குழந்தை ஜோயா உட்பட, மொத்தம் எட்டுப் பேருக்கு எதிராக ஷகிலா வரதட்சணை கொடுமை புகார் ஒன்றைக் கொடுத்தார். மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நேரு நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார்.

உடன், குழந்தை ஜோயா உட்பட எட்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் குழந்தை ஜோயாவை தவிர்த்து மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஷகிலா கொடுத்த புகாரில் குழந்தையின் பெயர் இருந்தது.அதனால், மற்றவர்களுக்கு முன்ஜாமீன் பெறும் போது, குழந்தைக்கும் பெற வேண்டும் என, வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, ஜோயா உட்பட எட்டு பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சர்தேசாய் முன் மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மாத குழந்தை ஜோயாவுடன் அவரின் தாயாரும், மற்றவர்களும் ஆஜராகினர். ஜோயா உட்பட ஏழு பேருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.
---------------
குழந்தை ஜோயாவின் தாய் ரேஷ்மா கான் பகல் 1 மணியிலிருந்து இரவு 10 மணிவரை தன் கைக் குழந்தையுடன் காவல் நிலையத்தில் கழிக்க வேண்டியிருந்தது மிகக் கொடுமை.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியின் மேல் விவரங்களை இங்கு காணலாம்.

498A சட்டத்தின் கீழ் இரு நீதிபதிகள் கைது!

ஆந்திராவில் நரசிம்ஹ ராவ் என்னும் கூடுதல் மாவட்ட நீதிபதியும் அவருடைய மனைவியும், அனந்தபூரில் சிவில் நீதிபதியாகப் பணியாற்றும் அவருடைய மகன் கிரண் குமாரும் 498A சட்டத்தின் கீழ் சென்ற வாரம் கைதாகி சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீதிபதி கிரண் குமாரின் மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை. அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான் (அவன் எப்போது கைதாவான் என்று கேட்கிறீர்களா? என்ன அவசரமய்யா உங்களுக்கு; அவனுக்கு திருமண வயது வரவேண்டுமல்லவா; பிறகுதானே அவனுடைய மனைவித் தெய்வம் 498A புகார் கொடுப்பாள்!)

அந்தப் பெண் தெய்வம் இந்தப் புகாரில் இன்னும் மூன்று பேர்களையும் சேர்த்திருக்கிறார். அவர்களும் சீக்கிறமே கைதாவார்களாம். (கவனமாகப் பாருங்கள்- நம் வலைப்பதிவு நண்பர்கள் எவருடைய பெயரையாவது சேர்த்திருக்கப் போகிறார்கள்!)

ஆனால் இது போதாது. எம்.பிக்களும், அமைச்சர்களும், பெண்ணியவாதிகளும், இதுபோல் பொய் வழக்கு போட்டு கொள்ளையடிக்கும் கெடுமதி வக்கீல்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும், முதலமைச்சர்களும் பெருமளவில் இந்த 498A பொய் வழக்குகளில் கைதாக வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற முட்டாள்தனமான சட்டங்களைத் திருத்துவார்கள்; மேன்மேலும் அடுக்கடுக்காக இதுபோன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களை கட்டமைக்கமாட்டார்கள்.

அந்த நன்னாள் எப்பொது வரும்!

(Times of India செய்தி இங்கே)

90 சதம் 498A பொய்க் கேசுகள் - நீதிபதி

"கணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது." என்கிறார் சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம்.

இந்த நிதிபதியின் முன்னிலையில்தான் நாள் ஒன்றுக்கு சுமார் 30 விவாகரத்து கேசுகள் புதிதாக வருகின்றன. இவர் சாதாரண மாஜிஸ்டிரேட் அல்ல. முதன்மை நீதிபதி. இந்தக் கோர்ட்டில் தான் சுமார் 7000 குடும்ப வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த நீதிபதி அன்றாடம் இத்தகைய கேசுகளை விசாரிக்கும் அனுபவத்தில்தான் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். யாரோ ரோட்டில் போகிறவர் கூற்று அல்ல இது. இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் இந்த சட்ட துஷ்பிரயோகக் கூத்து நடப்பதற்கு!

இதையேதான் முன்பு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி. பாலகிருஷ்னன் அவர்களும் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாடில் அவர்களும் தெளிவுறக் கூறியிருக்கிறார்கள்.

இதையே என்னைப் போன்றவர்கள் கூறும்போது எல்லாம் தெரிந்தவர்களும், பெண்ணியவாதிகளும் மற்றும் பல அனானிகளும் “யாரோ ஏதோ பிதற்றுகிறார்கள்” என்றும் எங்கெங்கோ வரதட்சணைக் கொடுமை நடந்து கொண்டுதான் இருப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு இந்தப் பாம்பு இன்னும் தங்களைத் தீண்டாததால் இது எவனுக்கோ உள்ள பிரச்னைதானே என்று பண்டிதர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதி ராமலிங்கம் அவர்கள் மேலும் கூறியது:

குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சணை கொடுமைச் சட்டம், ஐ.பி.சி. 498 (ஏ), பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. சட்டங்கள் சரியானதாக இருந்தாலும், அதை கையாள்வதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. 10 சதவீதம்தான் அந்த சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்படுகின்றன.

கணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது. குடும்பநல கோர்ட்டுகளில் இந்த பாதிப்பைக் காணமுடியும். இந்த நிலை பற்றி சென்னை குடும்பநல கோர்ட்டின் முதன்மை நீதிபதி பி.ராமலிங்கத்திடம் பேசிய போது அவர் கூறியதாவது:-

மனநிலை மாறுகிறது

கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடால் சில பிரச்சினைகள் எழுவதுண்டு. அடிதடி கூட நடக்கும். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் வக்கீலிடமோ அல்லது போலீசிடமோ பெண் வீட்டார் செல்கின்றனர். அப்போது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தி கணவன் மற்றும் அவர் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

கருத்து வேறுபாடு எதற்கோ ஏற்பட்டு இருந்தாலும், அதை வரதட்சணை வழக்காக மாற்றிவிடுகின்றனர். கடைசியில் கணவன், அவரது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். அதன் பிறகு கணவனின் மனநிலை மாறி விடுகிறது.

அரசு ஆலோசனை மையங்கள்

எனவே இந்தச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதுதான், கணவன்-மனைவியை மீண்டும் இணைய தடையாக இருக்கின்றன என்பது தெளிவாகிறது. எனவே இந்த பிரச்சினையை தடுப்பதற்கு தமிழக அரசு, குடும்பநல ஆலோசனை மையங்களை உருவாக்க வேண்டும்.

வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கணவன்-மனைவி பிரச்சினை தொடர்பான புகார் மனுக்களை முதலில் இந்த மையங்களில் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் அவற்றை தீர விசாரித்து, புகாரில் ஓரளவு உண்மை இருப்பது தெரிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், புகாரை நிறுத்தி வைக்க வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சினை இருந்தால் கூட அவற்றை சரிப்படுத்த கணவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாம். மாறவில்லை என்றால் மட்டும் புகாரை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்ப அனுமதி தரலாம்.

25 சதவீதம் சேரும்

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது பிரியும் குடும்பங்களில் 25 சதவீத குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம். மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் மையங்களைத் தொடங்கலாம். தனியார் கவுன்சிலிங் மையங்கள் இருந்தாலும் அரசு நடத்தும் மையங்களே அதிகாரப்பூர்வம் உள்ளதாக இருக்கும்.

பெண்களை பாதுகாப்பதற்குதான் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன என்பதையும், பழிவாங்குவதற்கு அல்ல என்பதையும் மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பது போல் கடமைகளையும் தெரிந்து கொள்ள முயல பெண்கள் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

(செய்தி: தினமலர் 21-06-2009)
--------------------------------------

திருந்துவார்களா? சட்டங்களைத் திருத்துவார்களா?

அல்லது பணம் காய்ச்சி மரமாக இருக்கும் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டங்களை இன்னும் மேன்மேலும் கடுமையாக்கி, குடும்பங்களைச் சிதைத்து, வயதான தாய்மார்களையும் சிரார்களையும் அப்பாவி கணவன்மார்களையும் கைது செய்து கல்லா கட்டிக் கொண்டிருப்பார்களா?

திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்கு அனைத்து ஆண்களும் தள்ளப்படுவதற்கு முன்னால் இந்த சட்டங்கள் திருத்தப்படுமா!

தந்தையர் தினப் போராட்டம்

குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் தேவை என்னும் உரிமையைப் பெறப் போராடும் அமைப்பான Children's Rights Initiative For Shared Parenting (CRISP) என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா பெற்றோர்களின் கூட்டமைப்பு வரும் ஜூன் 20, 2009 அன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தர்னா ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

அன்றைய தினம் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தந்தையர்கள் பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே கூடி குழந்தைகளின் வாழ்வில் தந்தையருக்கு இருக்கும் முக்கிய பங்கு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.

மணமுறிவுகள் பெருகிவரும் இன்னாளில் குழந்தைகளின் காப்புரிமையை நிதிமன்றங்கள் மனைவியின் கையில் மட்டுமே அளிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தந்தையின் பாசமும் அன்பும் அரவணைப்பும் கிட்டுவதேயில்லை. அனைத்து தந்தைமார்களுக்கும் தங்கள் குழந்தைகளின் மேல் பாசமேயில்லாதது போல் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான, பயங்கரமான மற்றும் முட்டாள்தனமான கருத்தாக்கம் இன்று சமுதாயத்தில் பல பென்ணியவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநலம் தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தலும் அதில் அவர்களுக்கு அக்கரையுமில்லை. தகப்பனிடமிருந்து குழந்தையைப் பிரித்து வைப்பதை ஏதோ ஒரு போரில் வெற்றி வாகை சூடியது போன்ற களிப்பில் போதை கொண்டு, தஙகள் ஈகோவை திருப்தி செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டமும், நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு தந்தை, தாய் இருவரின் அன்பும் அரவணைப்பும் பங்களிப்பும் தேவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

இது பற்றிய விரிவான செய்தி இங்கே.

பெருகும் கள்ளக் காதல் கொலைகள்

பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன?


ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ ஒரு பொருட்டாக மதியாமல் சிற்றின்ப சுகம்தான் முக்கியம் என்ற ஓயாத தேடலில் இறங்கிவிட்டனர்.

அதற்குத் தேவையான பணத்தை பெற்றுத் தருவதற்காக அரசு பல ஒருதலைப் பட்சமான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அதை கையிலெடுத்து ஒரு அப்பாவி கணவன் கிடைத்தானென்றால் அவன் மேல் பல பொய்க்கேசுகளைப் போட்டு அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷீனாக ஆக்கி தன் மனம் போன போக்கில் இன்பம் துய்த்து வருகின்றனர். மிருகங்களினும் கேடாய் நடந்து வருகின்றனர்.

இவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரபல நாட்டியப் பெண்மணி முத்து உதிர்த்திருக்கிறார், ” கற்பு, பண்பாடு என்று சொல்லி பெண்களை நம் சமுதாயத்தில் பெண்களை அடக்கி வைத்துவிட்டனர். அதையெல்லாம் உடைத்தெரிந்து இஷ்டப்படி அனுபவியுங்கள்” என்று. ஒரு பெண்கள் நல அமைச்சர் ”மணமான பெண்களை எப்பொதும் கைப்பையில் ஆணுறை ஒரு பக்கெட் வைத்திருங்கள். கணவன் என்ன எண்ணுவான் என்று கவலைப் படாதீர்கள். நமக்கு நம் சுகம்தன் முக்கியம். குடும்ப வாழ்வு அல்ல” என்று முழங்கியிருக்கிறார். இவர்கள் எவ்வளவு தூரம் நம் சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறார்கள் பாருங்கள்!

இனி செய்திகள்:-

சென்னை வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்இரும்பு கம்பியால் அடித்து நண்பன் படுகொலைமனைவியுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் வாலிபர் ஆத்திரம்

சென்னை, ஜுன்.18- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்தார்.

சென்னை வண்ணார்பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கும் சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. நிவேதா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு முன்பே அருண்குமாரும், அதே தெருவை சேர்ந்த பாலாஜி (24) என்பவரும் நண்பர்களாக பழகிவந்தனர். அருண்குமாரின் திருமணத்தின்போது, பாலாஜி தான் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தார்.

திருமணம் முடிந்ததும் புது மனைவியுடன் அருண்குமார் வாழ்க்கையை இனிமையாக தொடங்கினார். நண்பனை பார்ப்பதற்காக பாலாஜி அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது, சரண்யாவுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை, அருண்குமார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பனால் தான் தனது வாழ்க்கை சீரழியப்போகிறது என்று, அப்போது அருண்குமாருக்கு தெரியவில்லை.

அருண்குமார் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பாலாஜி வந்து சரண்யாவுடன் சிரிக்க... சிரிக்க... பேசியுள்ளார். நாளடைவில், அது இருவருக்குள்ளும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது. பலமுறை உல்லாசம் அனுபவித்தனர். இவர்கள் இருவரையும் பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியது அருண்குமாரின் காதுக்கும் எட்டியது. மனைவி மற்றும் நண்பனை அவர் கண்டித்தார்.

சரண்யாவும் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று கணவர் அருண்குமாரிடம் உறுதி அளித்தார். ஆனால், கள்ளக்காதலன் பாலாஜி மீது கொண்ட தீராத மோகம், கணவரிடம் கொடுத்த வாக்குறுதியை தூக்கி எறிய சரண்யாவை தூண்டியது.

உள்ளூரில் சுற்றினால் மாட்டிக்கொள்வோம் என்று, வெளியிடங்களில் பாலாஜியும், சரண்யாவும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். சந்திக்க முடியாத நேரங்களில் செல்போன் மூலமும் பேசிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமார், அவரது மனைவி சரண்யா, குழந்தை நிவேதா ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் கண் விழித்தார். அருகில் படுத்திருந்த மனைவியை தேடியபோது அவரை காணவில்லை.

இதனால், மனைவி சரண்யாவை தேடி அருண்குமார் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் அருகே உள்ள ஒரு சந்துப் பகுதியில் சரண்யாவும், நண்பன் பாலாஜியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

ஆத்திரம் அடைந்த அருண்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்றார். பாலாஜியின் தலையில் ஓங்கி அடித்தார். அவர் அலறியபடி கீழே விழுந்தார். ஆத்திரம் தீரும் வரை, பாலாஜியை அருண்குமார் தாக்கினார்.

பின்னர், அவரது ஆத்திரம் மனைவி சரண்யாவின் மீது திரும்பியது. ஆனால், அதற்குள் சரண்யா அங்கிருந்து ஓடிவிட்டார். சப்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக செத்தார்.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், திருவொற்றினிரில் பதுங்கி இருந்த அருண்குமாரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். "மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் நண்பனை கொன்றேன்'' என்று அருண்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளத்தொடர்பால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம், வண்ணார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வயது பெண் குழந்தை இருந்தும் காமம் கண்ணை மறைத்த நிலையில் கணவன் அருகிலேயெ கள்ளக் காதலனுடன் இன்பம் துய்த்துள்ள புதுமைப் பெண் வாழ்க! ஆகா, பெண் விடுதலை என்பது இதுதானே!

இவள் என்னதான் செய்யமாட்டாள். அந்த கணவன்மீது வரதட்சணை வழக்குகூட போடுவாள்!(லேட்டஸ்ட் செய்தி: “அப்போது, "கணவர் பல முறை கண்டித்தும், பாலாஜியுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடியவில்லை.காமம் என் கண்ணை மறைத்து விட்டது. இப்போது எதிர்காலம் போய்விட்டது. இதற்கு, காரணமான எனக்கு தண்டனை கொடுங்கள். என் கணவரை காப்பாற்றுங்கள்,' என்று சரண்யா புலம்பினார்.”

ஆனால் அவளைத் தண்டிக்க இந்திய சட்டங்கள் எதிலும் இடமில்லை. கணவன் கொலைக் கேசில் தண்டனை பெறுவது உறுதி. இப்போது பசப்பு மொழி பேசி கண்ணீர் விட்டு அந்தப் பெண் எல்லோர் இரக்கத்தையும் சம்பாதித்து விட்டாள். கணவன் அருகிலேயே கள்ளக் காதலனைக் கட்டி அணைத்தவள் அவன் கம்பி எண்ணப் போனபின் என்னதான் செய்யமாட்டாள். சைடில் இன்னொருவனையும் வைத்துக் கொள்வாள்! பாவம் அய்யா, அந்தப் பேதை!)

இதோ இன்னொரு கேசு:-


(செய்தி: தினமலர் 19-06-2009)

கள்ளத் தொடர்பு தகராறில் கார் டிரைவர் கொலை

சென்னை : கள்ளத் தொடர்பு தகராறில், கார் டிரைவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வளசரவாக் கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(26). கார் டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்திராநகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை இரண்டு பேர் வழிமறித்து தாக்கினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற் கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கொலையுண்ட ஸ்ரீதரின் மனைவி கலா(23)விற்கும், விருகம் பாக்கம் காந்தி நகர் தமயந்தி தெருவைச் சேர்ந்த பிரியாணி கடை வியாபாரி மகேந்திரன்(27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.இது பற்றி அறிந்த ஸ்ரீதரன் சில தினங்களுக்கு முன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன், தனது தம்பி ராஜேந்திரனுடன் சேர்ந்து இந்த படுகொலையை நிகழ்த்தியதாக தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து கொலை செய்த விதம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தேடப்படும் மற்றொரு நபரான ராஜேந்திரன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெளியூருக்கு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

498A வார்ப்புரு

இப்படித்தான் ஜோடிக்கிறார்கள் IPC Sec 498A கேசுகளை!

இந்த செய்தியின்படி கைது செய்யப்பட்டிருக்கும் முத்தமிழ்ச் செல்வன், மல்லிகா மற்றும் கைது செய்யப்படப்போகும் ராமசாமி, கவிதா - இவர்களுடைய பெயருக்குப் பதில் உங்கள் பெயரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தகைய கேசுகளுக்கு அரசும், வக்கீல்களும், பெண்ணியவாதிகளும் கொடுத்துவரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம். எல்லாம் தெரிந்த டோண்டு போன்றவர்களும், பெண்ணியவாதம் பேசும் செல்வன் போன்றவர்களும் பட்டபின் உணர்வார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும்.

இனி செய்தி:- ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் கணவர்-மாமியார் கைது

ராமநாதபுரம்,ஜுன்.17- 2009. செய்தி - தினத்தந்தி

ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவர் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளார்க் காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுளா(30) என்ப வருக்கும் கடந்த 9 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார்.

இந்த நிலையில் முத்தமிழ் செல்வன் வேலூரில் சொந்த வீடு கட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மஞ்சுளா தனது பெற்றோரிடம் வசதி இல்லாததால் இவ் வளவு பெரிய தொகையை வாங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ் செல்வன் கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால் தான் உன்னோடு குடும்பம் நடத்துவேன் என்றும், இல்லா விட்டால் தீவைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதற்கு அவரது தந்தை ராமசாமி, தாய் மல்லிகா, தங்கை கவிதா ஆகியோர் உடந்தையாக இருந்தனராம். இதுகுறித்து மஞ்சுளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து முத்தமிழ் செல்வன், அவரது தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக தந்தை ராமசாமி, தங்கை கவிதா ஆகியோரை போலீ சார் தேடிவருகின்றனர்.

மாமியாரைக் கொடுமைப் படுத்தும் மருமகள்

இந்திய சட்டங்களின் அடிப்படையில் “குடும்ப வன்முறை” என்பது கணவணால் மட்டும் மனைவியின்மீது செய்யப்படுவது. ஆகையால் ஒரு மனைவி ஒரு தினசரி காலண்டரைக் கிழித்து, “என்னை கணவன், அவனது பெற்றோர், சகோதரி, அவளுடைய 3 வயது குழந்தை, சகோதரியின் கண்வன், கண்வனுடைய தம்பி, அண்ணன், அடுத்த வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் போன்ற அனைவரும் என்னைக் கொடுமை செய்தனர்” என்று கிறுக்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினால் அவளது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் யாதொரு விசாரணையும், முகாந்திரமுமின்றி கைது செய்யப்படுவர். இதுதான் இந்திய குற்றப் பிரிவு 498A சட்டம்.

தவிர Domestic Violence Act படி கணவன்தான் வன்முறை செய்வான். மனைவி செய்தால் அது வன்முறை அல்ல.

அப்படி ஒரு மனைவி உடல் நலமில்லாத தன் கணவனையோ, அவனது வயதான தாயாரையோ அடித்துத் துன்புறுத்தினால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்டமும் கிடையாது. ஆனால் அவள் அடிக்கவும் அடித்துவிட்டு, அவர்கள் மேல் பொய் புகார் கொடுத்தால் உடனே அவர்களைக் கைது செய்து விடுவார்கள். அவ்வாறு மனைவி கொடுத்த புகார் பொய் என நிருபிக்கப்பட்டால் கூட அந்த புகார் கொடுத்த மனைவிமேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என குறிப்பிட்டு அந்தச் சட்டத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது! என்ன விந்தயான சட்டங்கள்!!

அவ்வாறு மனைவியால் துன்புறுத்தப்படும் கணவனுக்கும், அவனது பெற்றோருக்கும் என்ன கதி? எங்கு நியாயம் கிடைக்கும்? தற்போதுள்ள சட்டங்களின்படி நிச்சயமாக இந்தியாவில் கிடைக்காது! சந்தேகமிருந்தல் உங்களுக்குத் தெரிந்த கிரிமினல் வக்கீலிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்!

இப்போது இந்த அவலச் செய்தியைப் படித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளப் போகும் அப்பாவி ஆண்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவர்கள் எத்தகைய புதைகுழியில் விழப்போகிறார்கள் எனப்தை!

-------------------

பணம் கேட்டு மருமகள் கணவனையும் மாமியாரையும் அடித்துக்
கொடுமைப் படுத்துகிறாள்.புறநகர் கமிஷனரிடம் மாமியார் புகார்

ஆலந்தூர், ஜுன்.16- 2009. செய்தி: 2009

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கங்காராம். இவருடைய மனவூவி சாந்தி (வயது 55). இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ``நாங்கள் பூ வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது ஒரே மகன் கண்ணனுக்கு ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுத்தோம். ஜீவா அடிக்கடி பணம் கேட்டு எனது மகனை அடித்து துன்புறுத்துகிறார். இதை தட்டி கேட்டதால் எங்களை செருப்பால் அடிக்கிறார். எனவே எனது மருமகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்ய கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.

புறநகர் கமிஷனரிடம் இதுவரை மாமியார் கொடுமைப்படுத்துகிறார் என்றே புகார்கள் வந்து உள்ளன. இந்த நிலையில் மருமகள் கொடுமைப்படுத்துகிறார் என்று முதல் முறையாக புகார் தரப்பட்டுள்ளது.

"கள்ளக்காதலை தட்டிக்கேட்டால் கொலை செய்வேன்"

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவி கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கப்பல் என்ஜினீயர் புகார் மனு அளித்துள்ளார்.

செய்தி: தினமலர்

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கிடையில் கீழ்கட்டளையை சேர்ந்த ராஜ்குமார் என்ற கப்பல் என்ஜினீயர் ஒரு புகார் மனு தந்தார்.

அதில், கடந்த 2000-ம் ஆண்டு சமதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில் கால் சென்டரில் எனது மனைவி வேலை செய்து வருகிறார். அங்கு உள்ள ஒருவருடன் எனது மனைவிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் உல்லாசமாக இருந்ததை நான் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதை நான் தட்டிக் கேட்டபோது கொலை செய்துவிடுவேன் என்று எனது மனைவி என்னை மிரட்டுகிறாள். எனது குழந்தையையும் பார்க்க அனுமதிப்பதில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்தி எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.

சாமியார் மோகம், தந்தையின் சோகம்

திருமணமான ஒரு சில நாட்களிலே கட்டிய கணவனை அம்போ என்று விட்டுவிட்டு ஏதோ ஒரு சாமியாரோடு சல்லாபம் செய்வதில் ஷோக்கு கண்டு ஓடிப்போகும் பல இளம் மனைவிகள் உள்ளனர். பிறகு அந்த சாமியாரின் போதனை மற்றும் செட்அப் படி நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு, அந்த அப்பாவிக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் 498A பொய் வழக்குப் போடும் அவலமும் நாள் தோறும் நடந்தேறுகிறது.

ஆகையால் திருமணத்தை நிச்சயம் செய்வதற்கு முன்னால் மணப்பெண் மற்றும் அவளுடைய குடும்பத்தினருக்கு ஏதேனும் சாமியார் பைத்தியம் உள்ளதா என்று விசாரியுங்கள். அவ்வாறு இருப்பதாக ஒரு இம்மியளவு ஐயம் தோன்றினாலும் எடுங்கள் ஓட்டம், அந்தப் பெண்ணை விட்டு! இல்லாவிடில் உங்கள் கதை கந்தல்தான்!

இனிவரும் செய்தியில் ஒரு பேஜாரான தந்தையின் குமுறலைக் காணுங்கள். பெண் மேஜராம், அதனால் அவள் இஷ்டப்படி ஒரு சாமியோடு சுற்றுவாளாம். அவளுடைய அப்பனுக்கு அதைக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம். இதுதான் சட்டமாம். அவள் என்ன சுயம்புவாக மேஜர் நிலையில் உண்டானாளா? அவளை வளர்த்து ஆளாக்கி அவள் தன் வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பாடுபடும் தந்தைக்கு அவளைத் தட்டிக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம்.

இந்தக் காலப் பெண்கள் பலர் பெற்ற அப்பனுக்கும் பெப்பே, கட்டின புருஷனுக்கும் பெப்பே என்கிறார்கள்!

இனி செய்தி:-

-----------------

பழநி-கொடைக்கானல் ரோட்டில் பாபா ஆசிரமம் வைத்துள்ளவர் அசோக்ஜி(46); திருமணமானவர். கொடைக்கானலைச் சேர்ந்த செல்வம் மகள் சுதாவை கடத்தியதாக இவர் மீது வழக்குள்ளது. நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார்.எஸ்.பி.,யிடம் புகார்: மேஜரான நான் ஆசிரமத்தில் எனது விருப்பப்படி உள்ளேன். அங்கு வரும் எனது தந்தை செல்வம் என்னை மிரட்டுகிறார். உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என சுதா, மாவட்ட எஸ்.பி., பாரியிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க டி.எஸ்.பி., விஜயரகுநாதனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். இதன்படி சுதா, அவரது தந்தையிடம் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார்.

சுதா கூறுகையில், "நான் ஆசிரமத்தில் தான் இருப்பேன். எனது தந்தை மிரட்டுவதற்கு ஆதாரம் தருமாறு டி.எஸ்.பி., கேட்டார். ஆதாரங்களுடன் அவரை சந்திப்பேன்' என்றார்.

செல்வம் கூறுகையில், "எனது மகளை அசோக்ஜி ஏமாற்றி ஆசிரமத்தில் வைத்துள்ளார். கல்லூரி செல்ல வேண்டிய அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டார். மேஜராகவே இருந்தாலும் திருமணமாகாத ஒரு பெண்ணை ஆசிரமத்தில் வைப்பது எப்படி நியாயம். எனது மகளை ஏதாவது காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளேன்' என்றார் கண்ணீருடன்.

டி.எஸ்.பி., கூறுகையில், "தன்னை தந்தை மிரட்டவில்லை என சுதா எழுதித் தந்துள்ளார். புகாரை திரும்ப பெற்று கொண்டார். மேஜர் என்பதால் அவர் ஆசிரமத்தில் இருப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அவரது தந்தை செல்வத்திற்கும் ஆலோசனை தந்துள்ளோம்' என்றார்.

குழந்தைகள் படும் அவலத்தைக் கேட்பாரில்லை

தினமும் செய்தித்தாளைத் திறந்தால் கண்ணில் படும் செய்தி அன்புத் தாய்மார்களால் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட பச்சிளம் குழந்தைகளைப் பற்றியதுதான்!

நாளுக்குநாள் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டே வருவது விசனத்துக்குறிய விஷயம்.

ஆனால் இல்லாத வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சட்டத்தின்மேல் சட்டமாக அடுக்கடுக்காய் பல சட்டங்களைப் போட்டு வக்கீல்களுக்கும் இடைத்தரகர்களுக்கும், பெண்ணியவாதிகள் நடத்தும் அமைப்புக்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறதேயன்றி, இளம் சிறார்கள் மேல் எய்யப்படும் கொடுமைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.

ஏன் இந்த நிலைமை? பணம், ஐயா, பணம்!

“ஐயகோ, இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான “இளம்” பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிருடன் எரிக்கப்படுகிறார்களே” என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் UNIFEM போன்ற நிறுவனங்களிலிருந்தும், அரசு ஒதுக்கும் நிதியிலிருந்தும் பணம் கொட்டும். தவிர, மேன்மேலும் பல முட்டாள்தனமான சட்டங்களைப் போடவைத்து அதன்மூலம் குடும்பங்களைச் சிதைத்து திருமணம் செய்துகொண்ட அனைவரையும், வீட்டை விட்டுவிட்டு, காவல் நிலையங்களுக்கும், வக்கீல் வீடுகளுக்கும், நீதிமன்றங்களின் வராண்டாவுக்குமாக அலைய விடலாம். அதனால் சம்பந்தப் பட்டவர்கள் கொள்ளையடிக்கலாம். குழந்தைகள் நலனைப் பேணினால் அன்புள்ளம் கொண்ட மனிதர்கள்தானே நன்மையடைவார்கள்; இடைத்தரகர்கள் பணம் பண்ன முடியாதே!

இப்போது புரிகிறதா!

சென்ற வார குமுதத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் திருப்பதியில் ஏழைகளான பல இளம் ஆண்பிள்ளைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகி சீரழிகிறார்கள் என்று. இதைபற்றி எந்த அமைச்சரும் ஏதும் பேசவில்லை. ஆனால் கணவனிடமிருந்து கொள்ளையடித்து, அவனை இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி “இளம்” மனைவிக்கு பணம் கொடுக்கவைப்பதில்தான் அனைத்துத் தரப்புகளும் பிசியாக இருக்கின்றன.

இப்போது இந்தச் செய்தியை வாசியுங்கள்:-

-------------------------
ஆதரவற்ற குழந்தைகள் கடத்தல் : 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது

ஜூன் 12,2009, செய்தி: தினமலர்

திருநெல்வேலி : நெல்லை ஆதரவற்ற இல்லத்திற்கு குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ராஜன் என்பவர் "அன்பு சிறுவர் இல்லம்' என்ற பெயரில் அனாதைஇல்லம் நடத்திவந்தார். திருச்சி பகுதியில் குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக வந்த புகாரின்படி, திருச்சி போலீசார் வள்ளியூர் வந்து அனாதை மைய நிர்வாகி ராஜன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

ராஜனின் இல்லத்தில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கீழசந்தையடியை சேர்ந்த மனோகரன்(38) என்பவரும், இதே மையத் தில் தமது 4 வயது மகள் மாரியை தத்துகொடுத்த தென்காசி குருவம்மாள் என்பவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.

விசாரணையில், அங்கு தற்போது 45 சிறுவர், சிறுமியர் இருப்பதும் தெரியவந்தது. ராஜன் பல்வேறு இடங்களில் உள்ள புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்குகொண்டு ஒரு குழந்தைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து குழந்தைகளை வாங்கி 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தைகளை வாங்கிச்செல்பவர்களுக்கு போலியான பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

ராஜனுக்கு குழந்தைகள் சப்ளை செய்ததாக தென்காசி கோட்டையம்மாள்(65), சாம்பவர்வடகரை பொன்னுத்தாய்(60), கடையநல்லூர் அருணாசலவடிவு(40), தென்காசி வேல்மயில்(38), உசிலம்பட்டி பூச்சியம்மாள்(50) ஆகிய ஐந்து பெண்களையும் உசிலம்பட்டியை சேர்ந்த கதிர் என்ற கோடாங்கி(58), திருவட்டை(67) ஆகிய ஆண்களையும் கைது செய்தனர். ராஜன் தற்போது திருச்சி சிறையில் இருப்பதால் அவரிடம் மேலும் விசாரித்து குழந்தைகள் கடத்தல் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் டி.ஐ.ஜி.,கண்ணப்பன் தெரிவித்தார்.

இவர்கள் பெண்கள் இல்லையா!

இந்தியாவில் இதுவரை 1,20,000 பெண்கள் Sec 498A IPC சட்டத்தின் கீழ் ஒரு விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணுக்கு ரத்த உறவினராக இருந்ததுதான்!

இவர்களைப் போன்ற வயதான தாய்மார்களையும், கைக்குழந்தைகளுடன் இருக்கும் இளம் தாய்மார்களையும், இன்னும் மணமாகமல் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் இளம் பெண்களையும் ஒரு விசாரணையுமின்றி, ஒரு கெடுமதியினள் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்வதெற்கென்றே ஒரு அமைச்சகம் செயல்படுகிறது. அந்த அமைச்சகத்தின் பெயர் தெரியுமா? “பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம்”!!

பிரிடிஷ் ஏகாதிபத்திய அரசே இந்தியாவில் மொத்தம் 17,000 பெண்களைத்தான் கைது செய்தது, அதுவும் தண்டி யாத்திரையின்போது. ஆனால் சுதந்திர இந்தியாவோ, சரித்திரம் படைத்துவிட்டது!

சிந்திப்பீர்!

498A உங்களை நெருங்கி விட்டது!

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதைகணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு. கோபிசெட்டிபாளையம், மே.29- 2009. செய்தி - தினத்தந்தி

வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.


ஈரோடு மாவட்டம் நம்பினிர் அருகில் உள்ள எலத்தூர் செம்மாண்டம்பதியைச் சேர்ந்தவர் குமார்(வயது28) விவசாயி. அவருடைய மனைவி செல்வி(வயது27). இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது செல்வியின் பெற்றோர் வரதட்சணையாக 7 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.


இந்தநிலையில் செல்வி கோபி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்தப்புகாரில், கணவர் குமார் மற்றும் அவருடைய தாய் சரஸ்வதி, தம்பி பிரகாஷ், அக்காள் சத்திய பாமாவாசு மற்றும் உறவினர்கள் பொன்மணி, சம்பூரணம் ஆகியோர் சேர்ந்து தலை பொங்கலுக்கு பெற்றோரின் வீட்டிற்கு சென்ற தன்னை, பெற்றோர் வீட்டில் இருந்து ஏன் மோதிரம் வாங்கி வரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தனர்.


மேலும் 15 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்தப்புகார் மனுவில் கூறி இருக்கிறார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----------------------------

எந்தவித முகாந்திரமோ தொடர்போ இல்லாமல் யாரை வேண்டுமானாலும் 498A புகாரில் சேர்த்து குற்றவாளியாக்கலாம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் நிலை.

இப்படியே போனால் இந்த லிஸ்டில் செந்தழல் ரவி, டோண்டு போன்ற அப்பாவிகள் பெயர்களும் சேர்க்கப்படும் நாள் தொலைவில் இல்லை. அதற்குள் நம் அரசு இந்தப் பொல்லாங்கு சட்டத்தை துஷ்பிரயோகம் (இதற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்று பரிந்துரைத்தால் நன்றியுடையோனாயிருப்பேன்!) செய்து பொய் வழக்கு போடமுடியாத வகையில் ஏதேனும் திருத்தம் கொண்டுவந்தால் நல்லது. இல்லையெனில் சீக்கிறமே தமிழ்மணத் திரட்டி முழுதும் 498A ஒப்பாரிதான் கேட்கும்!

தாயைக் கொலை செய்த தையல்!

பெற்றதாயை கொன்ற ஆசிரியை, நண்பருடன் டில்லியில் கைது

ஜூன் 03,2009. செய்தி: தினமலர்

புதுடில்லி : பெற்ற தாயை திட்டமிட்டு கொலை செய்த பள்ளி ஆசிரியை, நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

மேற்கு டில்லி, பஷ்சிம் விகார் பகுதியில் வசித்தவர் கிரண் கபூர்(55). சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில், கொல்லப்பட்டார். கொலையை இரு கொள்ளையர்கள் செய்ததாக, கிரணின் மகள் சாக்ஷி கபூர் (26) தெரிவித்திருந்தார். இது குறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்த போது, சாக்ஷிக்கு, சன்னி பாத்ரா(21) என்ற நண்பர் இருப்பது தெரியவந்தது.

மேலும் போலீசார், அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின்னாக பதிலளித்தார். சம்பவத்தன்று கிரணின் அறையில் "டிவி'யின் சத்தம் கேட்டதாகவும், கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாகவும் தெரிவித்தார்.சாக்ஷி கபூருக்கு பலரிடமும் நட்பு இருந்தது. இதற்கு வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக சன்னியுடனும் நட்பாகப் பழகியுள்ளார்.

சம்பவத்தன்று, கோவிலுக்கு சென்று வந்த கிரண் வீட்டில் சன்னி இருப்பதைப் பார்த்து கோபம் கொண்டார் . இதனால், சாக்ஷியையும், சன்னியையும் கடுமையாக திட்டியுள்ளார் கிரண். இதில் ஆத்திரமடைந்த இருவரும் பீர் பாட்டில் மற்றும் கத்தியால் கிரணை தாக்கினர். நிலைக்குலைந்த கிரண் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

கொலையை மறைக்க முயன்ற சாக்ஷி, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பாட்டில்களை, சன்னியிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். அதன்பின் அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளார். இரு மர்ம நபர்களால், தனது தாய் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து தப்பவும் திட்டமிட்டார்.இது தொடர்பாக சன்னி மற்றும் சாக்ஷியை கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.