இவர்கள் பெண்கள் இல்லையா!

இந்தியாவில் இதுவரை 1,20,000 பெண்கள் Sec 498A IPC சட்டத்தின் கீழ் ஒரு விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணுக்கு ரத்த உறவினராக இருந்ததுதான்!

இவர்களைப் போன்ற வயதான தாய்மார்களையும், கைக்குழந்தைகளுடன் இருக்கும் இளம் தாய்மார்களையும், இன்னும் மணமாகமல் எதிர்காலக் கனவுகளுடன் இருக்கும் இளம் பெண்களையும் ஒரு விசாரணையுமின்றி, ஒரு கெடுமதியினள் கொடுத்த புகார் ஒன்றின் அடிப்படையில் மட்டுமே கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்வதெற்கென்றே ஒரு அமைச்சகம் செயல்படுகிறது. அந்த அமைச்சகத்தின் பெயர் தெரியுமா? “பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம்”!!

பிரிடிஷ் ஏகாதிபத்திய அரசே இந்தியாவில் மொத்தம் 17,000 பெண்களைத்தான் கைது செய்தது, அதுவும் தண்டி யாத்திரையின்போது. ஆனால் சுதந்திர இந்தியாவோ, சரித்திரம் படைத்துவிட்டது!

சிந்திப்பீர்!

2 மறுமொழிகள்:

')) said...

//அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணுக்கு ரத்த உறவினராக இருந்ததுதான்//

என் கதையில் ரத்த உறவு கூட இல்லாத என் தம்பி நண்பருடைய தாயர் கைது செய்யப்பட்டு 5ந்து நாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்... கொடுமைகள் தொடரட்டும்.. புழல் சிறை இன்னும் சில நாட்களில் 498ஏ சுற்றுலா மையமாக்கப்படும்...

')) said...

வறுமையால் வாழ்க்கையைத் தொலைத்திருக்கும் இந்த பெண்களுக்கு பெண்கள் நலத்துறை அமைச்சர் என்ன செய்திருக்கிறhர்?

//Dinamalar News: June 13,2009

மீட்கப்படும் பெண்களும், மிரட்டும் புரோக்கர்களும்

2004ம் ஆண்டு கணக்கெடுப் பின்படி, சென்னையில் 6,300 பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், 4,500 பெண்கள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டும், 1,360 பெண்கள் தெரு வீதிகளில் இருந்தும், 350 பெண்கள் விபச்சாரத் தையே தொழிலாகவும், மொபைலின் உதவி கொண்டு 90 பேரும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கல்வி அறிவற்ற கிராமத்து பெண்கள், நடிகை ஆக வேண்டும் என சினிமா ஆசையில் உள்ள மாடல்கள், கணவனால் கைவிடப்பட்ட மங்கைகள், போதைக்கு அடிமையானவர்கள், விதவைகள், வேலைக்கு போகாத கணவனின் மனைவி போன்றவர்களைக் குறிவைத்து, அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, பணம் சம்பாதிக்கும் தொழிலை, புரோக்கர்கள் நடத்துகின்றனர்.

மீட்கப்படும் பெண்கள், மயிலாப்பூர் மகளிர் காப்பகத்திற்கு அனுப் பப்பட்டு வருகின்றனர். இதில், 16 வயது மைனர் பெண் ஒருவரும் உண்டு.தங்களது செல்வாக்கின் மூலம் தண்டனையில் இருந்து தப்பிக்கும் புரோக்கர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்ட, காப்பகத்தில் உள்ள பெண்களை, மீண்டும் ஜாமீனில் எடுக்கின்றனர். சட்டத்தின் ஓட்டைகளை எளிதில் அடையாளம் காணும் இவர்கள், கோர்ட்டில் அபராதத் தொகையை கட்டிவிட்டு, காப்பகத்திலிருந்து மீட்கும் பெண்களை மீண்டும் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர்.//

நடத்தை கெட்ட 498A பெண்களுக்காக சட்டத்தை தவறhகப் பயன்படுத்தும் அரசாங்கம் இந்த அப்பாவி பெண்களைக் காப்பாற்ற ஏன் ஒரு சிறு நடவடிக்கையை கூட எடுக்கவில்லை?