இந்த செய்தியின்படி கைது செய்யப்பட்டிருக்கும் முத்தமிழ்ச் செல்வன், மல்லிகா மற்றும் கைது செய்யப்படப்போகும் ராமசாமி, கவிதா - இவர்களுடைய பெயருக்குப் பதில் உங்கள் பெயரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய கேசுகளுக்கு அரசும், வக்கீல்களும், பெண்ணியவாதிகளும் கொடுத்துவரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம். எல்லாம் தெரிந்த டோண்டு போன்றவர்களும், பெண்ணியவாதம் பேசும் செல்வன் போன்றவர்களும் பட்டபின் உணர்வார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும். இனி செய்தி:- ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் கணவர்-மாமியார் கைது ராமநாதபுரம்,ஜுன்.17- 2009. செய்தி - தினத்தந்தி ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவர் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளார்க் காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுளா(30) என்ப வருக்கும் கடந்த 9 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் முத்தமிழ் செல்வன் வேலூரில் சொந்த வீடு கட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மஞ்சுளா தனது பெற்றோரிடம் வசதி இல்லாததால் இவ் வளவு பெரிய தொகையை வாங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ் செல்வன் கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால் தான் உன்னோடு குடும்பம் நடத்துவேன் என்றும், இல்லா விட்டால் தீவைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதற்கு அவரது தந்தை ராமசாமி, தாய் மல்லிகா, தங்கை கவிதா ஆகியோர் உடந்தையாக இருந்தனராம். இதுகுறித்து மஞ்சுளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து முத்தமிழ் செல்வன், அவரது தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக தந்தை ராமசாமி, தங்கை கவிதா ஆகியோரை போலீ சார் தேடிவருகின்றனர்.
498A வார்ப்புரு
இப்படித்தான் ஜோடிக்கிறார்கள் IPC Sec 498A கேசுகளை!
குறிச்சொற்கள் 498a, advocates, arrest, harassment, husbands, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
கல்யாணத்துக்கு முன்னாடியே முன்ஜாமீன் எடுத்து வச்சிட்டு கல்லயாணம் பண்ணிக்கனும்னு ஒரு சட்டம் விரைவில் வரும் (கஷ்ட)காலம் வரும்
இதோ இன்னோரு தெய்வீக காதல் கதை...
http://www.dailythanthi.com/article.asp?NewsID=494780&disdate=6/18/2009
பத்தினிப்பெண்ணானல் ஒரு அப்பாவி கொலையாளி மறறும் ஒரு சுனாபான கொலை.. வாழ்க கள்ளக்காதல்... இந்த பொண்ணு சும்மா விவரம் புரியாம இருக்கு... பேசாம dowry case போட்டிருந்தா ஜல்சாவிற்கு ஜல்சாவும் ஆச்சி புருசன் கிட்ட இருந்து maintanace சும் வாங்கி சும்மா சுதந்திரமா ஊர்மேயலாம்.... இந்த பொண்ண என்னோடா 498ஏ darling கிட்ட அனுப்பி பாடம் கத்துக்க சொல்லனும்...
// உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம்.//
அது ஒரு பொன்னான நாள் !! உடனே நடக்க இயற்கையை வேண்டுகிறேன்
உங்கள் கருத்தைத் தெரிவிக்க