சாமியார் மோகம், தந்தையின் சோகம்

திருமணமான ஒரு சில நாட்களிலே கட்டிய கணவனை அம்போ என்று விட்டுவிட்டு ஏதோ ஒரு சாமியாரோடு சல்லாபம் செய்வதில் ஷோக்கு கண்டு ஓடிப்போகும் பல இளம் மனைவிகள் உள்ளனர். பிறகு அந்த சாமியாரின் போதனை மற்றும் செட்அப் படி நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டு, அந்த அப்பாவிக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் 498A பொய் வழக்குப் போடும் அவலமும் நாள் தோறும் நடந்தேறுகிறது.

ஆகையால் திருமணத்தை நிச்சயம் செய்வதற்கு முன்னால் மணப்பெண் மற்றும் அவளுடைய குடும்பத்தினருக்கு ஏதேனும் சாமியார் பைத்தியம் உள்ளதா என்று விசாரியுங்கள். அவ்வாறு இருப்பதாக ஒரு இம்மியளவு ஐயம் தோன்றினாலும் எடுங்கள் ஓட்டம், அந்தப் பெண்ணை விட்டு! இல்லாவிடில் உங்கள் கதை கந்தல்தான்!

இனிவரும் செய்தியில் ஒரு பேஜாரான தந்தையின் குமுறலைக் காணுங்கள். பெண் மேஜராம், அதனால் அவள் இஷ்டப்படி ஒரு சாமியோடு சுற்றுவாளாம். அவளுடைய அப்பனுக்கு அதைக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம். இதுதான் சட்டமாம். அவள் என்ன சுயம்புவாக மேஜர் நிலையில் உண்டானாளா? அவளை வளர்த்து ஆளாக்கி அவள் தன் வாழ்க்கையை செவ்வனே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று பாடுபடும் தந்தைக்கு அவளைத் தட்டிக் கேட்க எந்த உரிமையும் கிடையாதாம்.

இந்தக் காலப் பெண்கள் பலர் பெற்ற அப்பனுக்கும் பெப்பே, கட்டின புருஷனுக்கும் பெப்பே என்கிறார்கள்!

இனி செய்தி:-

-----------------

பழநி-கொடைக்கானல் ரோட்டில் பாபா ஆசிரமம் வைத்துள்ளவர் அசோக்ஜி(46); திருமணமானவர். கொடைக்கானலைச் சேர்ந்த செல்வம் மகள் சுதாவை கடத்தியதாக இவர் மீது வழக்குள்ளது. நிபந்தனை ஜாமீனில் வெளியே உள்ளார்.எஸ்.பி.,யிடம் புகார்: மேஜரான நான் ஆசிரமத்தில் எனது விருப்பப்படி உள்ளேன். அங்கு வரும் எனது தந்தை செல்வம் என்னை மிரட்டுகிறார். உயிருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என சுதா, மாவட்ட எஸ்.பி., பாரியிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரிக்க டி.எஸ்.பி., விஜயரகுநாதனுக்கு எஸ்.பி., உத்தரவிட்டார். இதன்படி சுதா, அவரது தந்தையிடம் டி.எஸ்.பி., விசாரணை நடத்தினார்.

சுதா கூறுகையில், "நான் ஆசிரமத்தில் தான் இருப்பேன். எனது தந்தை மிரட்டுவதற்கு ஆதாரம் தருமாறு டி.எஸ்.பி., கேட்டார். ஆதாரங்களுடன் அவரை சந்திப்பேன்' என்றார்.

செல்வம் கூறுகையில், "எனது மகளை அசோக்ஜி ஏமாற்றி ஆசிரமத்தில் வைத்துள்ளார். கல்லூரி செல்ல வேண்டிய அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டார். மேஜராகவே இருந்தாலும் திருமணமாகாத ஒரு பெண்ணை ஆசிரமத்தில் வைப்பது எப்படி நியாயம். எனது மகளை ஏதாவது காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு செய்ய உள்ளேன்' என்றார் கண்ணீருடன்.

டி.எஸ்.பி., கூறுகையில், "தன்னை தந்தை மிரட்டவில்லை என சுதா எழுதித் தந்துள்ளார். புகாரை திரும்ப பெற்று கொண்டார். மேஜர் என்பதால் அவர் ஆசிரமத்தில் இருப்பதை நாங்கள் தடுக்க முடியாது. அவரது தந்தை செல்வத்திற்கும் ஆலோசனை தந்துள்ளோம்' என்றார்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

இதையடுத்து மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து சுருட்டு சாமியார் பழனிச்சாமியை போலீசார் விசாரித்து வருகின்றனர்....

உல்லாசம்

என்னிடம் குறி கேட்டு வரக்கூடிய பெண்களிடம் உல்லாசமாக இருந்து உள்ளேன். ஆனால் யாரையும் அவர்கள் விருப்பமின்றி தொடமாட்டேன். நான் தவறு செய்து இருக்கிறேன். இப்போது என் குழந்தைகள் தான் பாதிக்கிறார்கள் என்பதால் மனவேதனைப்படுகிறேன்.

எனது முதல் மனைவி சந்திரா என் மீது பாசம் வைத்துள்ளார். யாரோ அவரை தூண்டிவிடுகின்றனர். என்னை பார்த்தால் மனம் மாறிவிடுவார் என்பதால் அவரை சிலர் தங்கள் பாதுகாப்பில் வைத்து உள்ளனர். மேலும் நான் நடத்தி வரும் அறக்கட்டளையில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டுமென அங்குள்ள சிலர் கேட்டனர். நான் மறுத்துவிட்டதால் பொய்யான பிரசாரத்தை பரப்புகின்றனர். என்னிடம் உண்மை உள்ளது. விரைவில் தர்மத்துடன் வெளி வருவேன். எனது 3-வது மனைவி திவ்யாவை பார்க்கவேண்டும் என்ற ஆசை மேலோங்கி உள்ளது.

இவ்வாறு சுருட்டு சாமியார் கூறினார்.

http://nitharsanam.net/?p=11521#more-11521

')) said...

இதொ இன்னொரு கதை நம்ம தினத்தந்தியில...! என்னக்கொடுமை சார் இது?

http://www.dailythanthi.com/article.asp?NewsID=493891&disdate=6/14/2009&advt=2

')) said...

"சாமியார் மோகம், தந்தையின் சோகம்"

எல்லாம் ஒரு தாகம் தான்