"கள்ளக்காதலை தட்டிக்கேட்டால் கொலை செய்வேன்"

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் மனைவி கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கப்பல் என்ஜினீயர் புகார் மனு அளித்துள்ளார்.

செய்தி: தினமலர்

சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதற்கிடையில் கீழ்கட்டளையை சேர்ந்த ராஜ்குமார் என்ற கப்பல் என்ஜினீயர் ஒரு புகார் மனு தந்தார்.

அதில், கடந்த 2000-ம் ஆண்டு சமதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பின்னர் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில் கால் சென்டரில் எனது மனைவி வேலை செய்து வருகிறார். அங்கு உள்ள ஒருவருடன் எனது மனைவிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் உல்லாசமாக இருந்ததை நான் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இதை நான் தட்டிக் கேட்டபோது கொலை செய்துவிடுவேன் என்று எனது மனைவி என்னை மிரட்டுகிறாள். எனது குழந்தையையும் பார்க்க அனுமதிப்பதில்லை. எனவே இதுபற்றி விசாரணை நடத்தி எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுமீது மடிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.

2 மறுமொழிகள்:

')) said...

இதொ இன்னோரு லவ் ஸ்டொரி...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=494387&disdate=6/16/2009

')) said...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=494415&disdate=6/16/2009&advt=2

"படைக்கு பிந்து complaint கொடுக்றதுக்கு முந்து" ன்னு பழமொழிய மாத்திட வேண்டியதுதான்... இவர் உஷரான மாமியார் இல்லாட்டி அவரொட மருமக இன்னேரம் இவருக்கு புழல் சிறையை 498ஏ லக்கி நம்பர்(அதாங்க dowry case) உதவியோட சுத்தி காட்டிருக்கும்...