மனைவியரால் ஆண்களுக்கு புது ஆபத்து

வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் : ஆய்வில் வெளியாகும் தகவல்.

பெங்களூர், மே.29- 2009. செய்தி - மாலை மலர்

குடும்பங்களில் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்க கடந்த 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஏராளமான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து “சேவ் இந்தியா பேமிலி பவுண்டேசன்” (Save Indian Family Foundation) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியாகும் தகவல்கள் வருமாறு:-

வரதட்சணை ஒழிப்பு சட்டம் அல்லது குடும்ப வன்முறை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குபதிவு செய்யப்படும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களாகவோ அல்லது தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்களாகவோ அல்லது தொழில் அதிபர்களாகவோ இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 24 ல் இருந்து 28 வயதுக்குட்பட்டவர்கள்.கடந்த ஆண்டு சுமார் 1,200 பேரிடம் நடத்திய ஆய்வில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. இந்த சட்டம் ஒரு தலைபட்சமாகவே இருக்கிறது. இதனால் அப்பாவி ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் மற்றும் தொழில் அதிபர்களிடம் ஏராளமாக பணம் இருப்பதால் அவற்றை அடைய வரதட்சணை கொடுமை அல்லது குடும்ப வன்முறை ஆகிய சட்டங்களின் கீழ் புகார் கொடுக்கப்படுகின்றன.

நாடு முழுவதும் வரதட்சணை தொடர்பான வழக்குகள் ஆண்டுக்கு ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இவ்வாறு வரதட்சணை வழக்குகள் அதிகரித்து உள்ளன.

கடந்த 2003-ம் ஆண்டு 50,703 பேர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டம் பாய்ந்தது. இது 2007-ம் ஆண்டில் 75,930 ஆக உயர்ந்தது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, வரதட்சணை ஒழிப்பு சட்டமும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டமும் யாருக்கும் பாதகமாக இருக்காத வகையில் தகுந்த மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி, சட்ட ஆணையம் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே குடும்ப வன்முறை ஒழிப்பு சட்டமானது ஒரு தலைபட்சமாக இருப்பதாக இந்திய சர்வதேச சட்ட மையத்தைச் சேர்ந்த எம்.ஜி.குமார் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில் ““நான் சந்தித்த பல வழக்குகளில் பெரும்பாலான ஆண்கள், அவர்கள் எந்த தவறும் செய்யாமலேயே புகாருக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது”” என்று தெரிவித்தார்.

மூத்த வக்கீல் ஒருவர் கூறுகையில், ““எனக்கு தெரிந்த ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஒரு பெண்ணை திருமணம் செய்தார். கிட்டத்தட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த அந்த பெண்ணிடம், அவருடைய உறவினர்கள் சென்று கணவர் மீது வழக்கு தொடரும்படி கூறி உள்ளனர். இது முழுக்க முழுக்க பணம் பறிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கு என்பது எனக்கு தெரியவந்தது. இதைதொடர்ந்து அந்த பெண்ணின் கணவருக்கு நீதி கிடைப்பதற்காக நான் வாதாடினேன்”” என்றார்.

1 மறுமொழி:

')) said...

//வரதட்சணை கொடுமை வழக்கில் சிக்கும் ஆண்களில் 56 சதவீதம் பேர் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் : ஆய்வில் வெளியாகும் தகவல்.//


இந்த மாதிரி பசங்க "பழம்" மாதிரி... படிப்பு படிப்பு ன்னு படிச்சிட்டு ஒரு மண்ணும் தெரியாது... கைகால்ல உழுந்து கட்டிக்கொடுத்துட வேண்டியது(என்னோட மாமியார் நிச்சிதார்தத்துக்கு முன்னாடியே என் கால்ல உழுந்து ஆசிர்வாதம் வாங்குச்சின்னா பாத்துக்கங்களேன்) அப்புறம் நாதாரித்தனமா வளத்து ஊர்மேய உட்ட அருமை மகளுக்கு அடங்கி போகலன்னா அல்லக்கைைளையும் கட்டப்பஞ்சாயத்து நீதிபதிகளையும் வைத்து முதல் விரட்ட வேண்டியது அதுக்கு மசியலன்ன கொய்யால இருக்கவே இருக்கு இந்த மாதரி பெண்கள காக்க தமிழ்நாடு தாவல் நிலைய ஆபிசருங்களவச்சி மிரட்ட வேண்டியது அதுக்கு படியலன்ன நம்ம லக்கி நம்பர் ஏ.கே.498ஏ வச்சி சும்மா சுட்டு தள்ள வேண்டியதுதான்.... அதுக்கப்புறம் கோர்ட்டு கேசுன்னன ஆடிமாச நாய் மாதிரி வக்கில் கோர்டு கேசுன்னு அலையவேண்டியதுதான்...

இதவிட கொடுமை இது மாதிரி புள்ளைய பெத்த அப்பவி வயசான அம்மா அப்பாவை புடிச்சி புழல் சிறை சுற்றுலா சாலையை சுத்திகாட்ட வேண்டியதுதான்... (என்ன கொடுமை சரவணன் இது!)

எல்லாம் அனுபவம் பேசுது தலைவா! அனுபவி ராஜா அனுபவி!