விட்டது சனி!

இது எப்படி இருக்கு!

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை சேர்த்து வைத்த கணவன். போலீஸ் முன்னிலையில் சமரசம். (வரதட்சணை கேசு போடாமல் இத்தோடு விட்டார்களே என்று புருஷன் வெட்டிவிட்டு ஓடிவிட்டான் போல!)

அந்தியூர், ஜுன்.26- 2009. செய்தி - தினத்தந்தி

அந்தியூர் அருகே கள்ளக்காதலனுடன் மனைவியை கணவர் சேர்த்து வைத்தார். போலீசார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சத்தியா நகரைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவரது மகள் நளினி(26). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக நளினி கணவரை பிரிந்து அந்தியூர் சத்தியா நகரில் தனது தாயார் பழனியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். அந்தப்பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நளினிக்கும், அங்குள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வந்த மாணிக்கம் (வயது 26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அவர்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு ஓடி விட்டனர்.

இது குறித்து பழனியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஊரை விட்டு ஓடிய மாணிக்கமும், நளினியும் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தனர்.

இருவரும் அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பழனியம்மாளும், நளினியின் முதல் கணவர் கார்த்தியும் வந்தனர். போலீசார் அவர்களை அழைத்து பேசினர்.
அப்போது நளினி தான் வாழ்ந்தால் மாணிக்கத்துடன்தான் வாழ்வேன் என்றும், இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் தனக்கு திருமணத்தின்போது அணிவித்த கால்கொலுசு மற்றும் நகைகளை நளினி தனது தாயாரிடம் ஒப்படைத்தார்.

நளினியை அவரது காதலன் மாணிக்கத்துடன் அனுப்பி வைக்க கார்த்தியும் சம்மதித்தார். பின்னர் அனைவரது ஆசியுடனும் மாணிக்கமும், நளினியும் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றனர்.

4 மறுமொழிகள்:

')) said...

கொடுத்து வச்ச மகராசன்! இந்த மாதிரி டார்லீங்ஸ் ஒன்னு கேச போடும் இல்லாட்டி அவன் கூட் சேந்துகிட்டு ஆளயே போடும்...

498ஏ:யாரு செஞ்ச புண்ணியமோ பயபுல்ல எங்கிட்ட இருந்து தப்பிச்சிறிச்சி... பொளச்சி போகட்டும்

')) said...

இன்னொரு பங்காளி மாட்டிக்கிட்டாரு...
வங்கய்யா வாங்க....
இவர புடிச்ச சனி இன்னயோட விட்டது..
ஒரு முனுமாசம் கழிச்சி இதெ பொண்டாட்டி இவருகூட சேந்து வாழ்றன்று சொல்லி அழுவாச்சி அடம் பண்ணி கூத்து கட்டும்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=497478&disdate=6/30/2009&advt=2

')) said...

நெஞ்சை உருக்கிய கள்ளக்காதல் ஜோடியின் கடிதம்.... படித்துப்பார்கவும்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=497427&disdate=6/30/2009&advt=2

Anonymous said...

Former Husband is a Lucky person , relieved from a prostitute .I pity upon her present & future husbands