இரண்டு மாத குழந்தைமீது வரதட்சணை புகார்!

”ஜோயா” (Zoya) என்னும் இரண்டே மாதக் குழந்தை (அதுவும் பெண் குழந்தை) மீது அக்குழந்தை தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக 498A வழக்கு பதிவு செய்துள்ளார் ஒரு பெண் குலத் திலகம். இதுவரை 3 வயதுக் குழந்தை மீதுதான் இத்தகைய புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதக் குழந்தை மேல் வரதட்சணைப் புகார் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் ஷகீலா என்னும் பெண் பேய்.


ஆனால் இன்னமும் இந்த 498ஏ சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், கிரிஜா வியாஸ் போன்ற அரசியல்வாதிகளும். ஏனெனில் இந்த சட்டத்தின் மூலம் இந்தப் பேர்வழிகளுக்கு நிறைய பகல் கொள்ளை அடிக்க முடிகிறது.

இந்த ஜோயாவும் அந்தக் குழந்தையின் தாயும் இவர்களுக்கு பெண்ணாகத் தெரியவில்லையா? தேசிய பெண்கள் ஆணையமும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரும் என்ன செய்கிறார்கள்? வரதட்சணை புகார் கொடுத்து, கணவன்மாரையும் அவர்களது பெற்றோரையும், உற்றாரையும், நண்பர்களையும், சிறு குழந்தைகளையும் கைது செய்து சிறையிலடைத்து, அதன் பின் கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்களிடமிருந்து லட்சக் கணக்கில் பணம் கறந்த பின் வழக்கை சமரசத்தின் பேரில் முடிக்கும் நடைமுறைதான் அனைத்து 498ஏ கேசுகளிலும் நடந்து கொண்டு வருகிறது. இதில் நிறைய பணம் விளையாடுவதால் இந்த சட்டத்தின் நடைமுறைத் தவறுகளை நியாயப் படுத்திக் கொண்டு, இதைத் திருத்த எடுக்கப்படும் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

இனி இந்தச் செய்தியை வாசியுங்கள். இரண்டு மாதக் குழந்தை மீது 498ஏ புகார் கொடுத்துள்ள அந்தப் பெண் மேல் உங்களுக்குக் கோபம் வரவில்லையெனில் நிச்சயம் நீங்கள் மலம் தின்னும் பன்றியிலும் கேடு கெட்டவர் என்பது திண்ணம்!

------------------------------

செய்தி - தினமலர் - ஜூன் 24, 2009

மும்பை:மும்பையில் வரதட்சணை கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்ட இரண்டு மாத பெண் குழந்தைக்கு, செஷன்ஸ் கோர்ட் முன்ஜாமீன் வழங்கியது. அந்தக் குழந்தை, ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், (நீதிபதிகளின் அறிவுக் கொழுந்துகளைப் பார்த்தீர்களா - 2 மாத சிசு கையெழுத்திட வேண்டுமாம்!) 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தர வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்கில் இரண்டு மாத பெண் குழந்தை சேர்க்கப்பட்ட விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மும்பையைச் சேர்ந்தவர் சம்சுதீன் கான்; இவரின் முதல் மனைவி ஷகிலா. முஸ்லிம் சட்டப்படி அவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்து விட்டார். அதன்பின் ரேஷ்மா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு, ஜோயா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி சம்சுதீன் கான், அவரின் இரண்டாவது மனைவி ரேஷ்மா, சம்சுதீனின் தாயார், சகோதரி மற்றும் இரண்டு மாத குழந்தை ஜோயா உட்பட, மொத்தம் எட்டுப் பேருக்கு எதிராக ஷகிலா வரதட்சணை கொடுமை புகார் ஒன்றைக் கொடுத்தார். மும்பையின் புறநகர் பகுதியான குர்லாவில் உள்ள நேரு நகர் போலீஸ் நிலையத்தில் இந்த புகாரை அளித்தார்.

உடன், குழந்தை ஜோயா உட்பட எட்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர். பின்னர் குழந்தை ஜோயாவை தவிர்த்து மற்றவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இருப்பினும், ஷகிலா கொடுத்த புகாரில் குழந்தையின் பெயர் இருந்தது.அதனால், மற்றவர்களுக்கு முன்ஜாமீன் பெறும் போது, குழந்தைக்கும் பெற வேண்டும் என, வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, ஜோயா உட்பட எட்டு பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.நீதிபதி சர்தேசாய் முன் மனு விசாரணைக்கு வந்த போது, இரண்டு மாத குழந்தை ஜோயாவுடன் அவரின் தாயாரும், மற்றவர்களும் ஆஜராகினர். ஜோயா உட்பட ஏழு பேருக்கு மட்டும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.

சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.
---------------
குழந்தை ஜோயாவின் தாய் ரேஷ்மா கான் பகல் 1 மணியிலிருந்து இரவு 10 மணிவரை தன் கைக் குழந்தையுடன் காவல் நிலையத்தில் கழிக்க வேண்டியிருந்தது மிகக் கொடுமை.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியின் மேல் விவரங்களை இங்கு காணலாம்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

INDIAN POLICE, LAW, POLITICS EVERY THING IS IN PHSYCO STAGE. WHAT HAPPEND FOR THE JUDGES?. HOW THEY ACCEPT THIS CASE AGAINST 2 MONTH BABY. CRAZY INDIANS. HAA ...HAAA ....HAAAA..... INDIANS ARE NO BAD BOYS ALL OF THEM ARE MAD BOYS.....!

Anonymous said...

ennada ithu, antha baby paal kudiye maranthirukathu. pengalukana sattam kooduthal enbathukaha ipidiya???

')) said...

குழந்தை கடவுளுக்கு சமம் என்று சொல்லும் நாட்டில் பொய் கேசுகளில் குழந்தைகளைக் கூட காசுக்காக சிறையில் தள்ளும் கயவர்கள் பெருகிவிட்டார்கள். இந்த கயவர்களுக்கெல்லாம் சுனாமித்தாயும் அக்னித்தேவனும் தான் தண்டனை தரவேண்டும்.

இந்த செய்தியில் ஒன்று நன்றhகத் தெரிகிறது. பொய் கேசு எழுத ஒரு வக்கில் உதவியிருப்பான், அதை பதிவு செய்தது ஒரு போலிஸ். சட்டப்படி குழந்தை மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் எந்த வித வழிமுறையும் இல்லையென்றhலும் ஜhமின் எடுக்க வேண்டும் என்று கூறி குழந்தைக்கும் ஜhமின் பெற விண்ணப்பித்தது ஒரு வக்கில். அதையும் கண்முடித்தனமாக ஏற்றுக்கொண்டு 10 ஆயிரம் ஜhமினும் கையெழுத்தும் போட வேண்டும் என்று தீர்ப்பு கூறியது ஒரு நீதிபதி. இந்தியாவில் உள்ள 498A கூட்டணி வியாபாரிகளின் அடையாளம் கண்டுகொள்ள இது ஒரு நல்ல உதாரணம்.