பெருகும் கள்ளக் காதல் கொலைகள்

பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன?


ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ ஒரு பொருட்டாக மதியாமல் சிற்றின்ப சுகம்தான் முக்கியம் என்ற ஓயாத தேடலில் இறங்கிவிட்டனர்.

அதற்குத் தேவையான பணத்தை பெற்றுத் தருவதற்காக அரசு பல ஒருதலைப் பட்சமான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அதை கையிலெடுத்து ஒரு அப்பாவி கணவன் கிடைத்தானென்றால் அவன் மேல் பல பொய்க்கேசுகளைப் போட்டு அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷீனாக ஆக்கி தன் மனம் போன போக்கில் இன்பம் துய்த்து வருகின்றனர். மிருகங்களினும் கேடாய் நடந்து வருகின்றனர்.

இவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரபல நாட்டியப் பெண்மணி முத்து உதிர்த்திருக்கிறார், ” கற்பு, பண்பாடு என்று சொல்லி பெண்களை நம் சமுதாயத்தில் பெண்களை அடக்கி வைத்துவிட்டனர். அதையெல்லாம் உடைத்தெரிந்து இஷ்டப்படி அனுபவியுங்கள்” என்று. ஒரு பெண்கள் நல அமைச்சர் ”மணமான பெண்களை எப்பொதும் கைப்பையில் ஆணுறை ஒரு பக்கெட் வைத்திருங்கள். கணவன் என்ன எண்ணுவான் என்று கவலைப் படாதீர்கள். நமக்கு நம் சுகம்தன் முக்கியம். குடும்ப வாழ்வு அல்ல” என்று முழங்கியிருக்கிறார். இவர்கள் எவ்வளவு தூரம் நம் சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறார்கள் பாருங்கள்!

இனி செய்திகள்:-

சென்னை வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்இரும்பு கம்பியால் அடித்து நண்பன் படுகொலைமனைவியுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் வாலிபர் ஆத்திரம்

சென்னை, ஜுன்.18- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்தார்.

சென்னை வண்ணார்பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கும் சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. நிவேதா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு முன்பே அருண்குமாரும், அதே தெருவை சேர்ந்த பாலாஜி (24) என்பவரும் நண்பர்களாக பழகிவந்தனர். அருண்குமாரின் திருமணத்தின்போது, பாலாஜி தான் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தார்.

திருமணம் முடிந்ததும் புது மனைவியுடன் அருண்குமார் வாழ்க்கையை இனிமையாக தொடங்கினார். நண்பனை பார்ப்பதற்காக பாலாஜி அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது, சரண்யாவுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை, அருண்குமார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பனால் தான் தனது வாழ்க்கை சீரழியப்போகிறது என்று, அப்போது அருண்குமாருக்கு தெரியவில்லை.

அருண்குமார் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பாலாஜி வந்து சரண்யாவுடன் சிரிக்க... சிரிக்க... பேசியுள்ளார். நாளடைவில், அது இருவருக்குள்ளும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது. பலமுறை உல்லாசம் அனுபவித்தனர். இவர்கள் இருவரையும் பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியது அருண்குமாரின் காதுக்கும் எட்டியது. மனைவி மற்றும் நண்பனை அவர் கண்டித்தார்.

சரண்யாவும் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று கணவர் அருண்குமாரிடம் உறுதி அளித்தார். ஆனால், கள்ளக்காதலன் பாலாஜி மீது கொண்ட தீராத மோகம், கணவரிடம் கொடுத்த வாக்குறுதியை தூக்கி எறிய சரண்யாவை தூண்டியது.

உள்ளூரில் சுற்றினால் மாட்டிக்கொள்வோம் என்று, வெளியிடங்களில் பாலாஜியும், சரண்யாவும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். சந்திக்க முடியாத நேரங்களில் செல்போன் மூலமும் பேசிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமார், அவரது மனைவி சரண்யா, குழந்தை நிவேதா ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் கண் விழித்தார். அருகில் படுத்திருந்த மனைவியை தேடியபோது அவரை காணவில்லை.

இதனால், மனைவி சரண்யாவை தேடி அருண்குமார் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் அருகே உள்ள ஒரு சந்துப் பகுதியில் சரண்யாவும், நண்பன் பாலாஜியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

ஆத்திரம் அடைந்த அருண்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்றார். பாலாஜியின் தலையில் ஓங்கி அடித்தார். அவர் அலறியபடி கீழே விழுந்தார். ஆத்திரம் தீரும் வரை, பாலாஜியை அருண்குமார் தாக்கினார்.

பின்னர், அவரது ஆத்திரம் மனைவி சரண்யாவின் மீது திரும்பியது. ஆனால், அதற்குள் சரண்யா அங்கிருந்து ஓடிவிட்டார். சப்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக செத்தார்.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், திருவொற்றினிரில் பதுங்கி இருந்த அருண்குமாரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். "மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் நண்பனை கொன்றேன்'' என்று அருண்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளத்தொடர்பால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம், வண்ணார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று வயது பெண் குழந்தை இருந்தும் காமம் கண்ணை மறைத்த நிலையில் கணவன் அருகிலேயெ கள்ளக் காதலனுடன் இன்பம் துய்த்துள்ள புதுமைப் பெண் வாழ்க! ஆகா, பெண் விடுதலை என்பது இதுதானே!

இவள் என்னதான் செய்யமாட்டாள். அந்த கணவன்மீது வரதட்சணை வழக்குகூட போடுவாள்!(லேட்டஸ்ட் செய்தி: “அப்போது, "கணவர் பல முறை கண்டித்தும், பாலாஜியுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடியவில்லை.காமம் என் கண்ணை மறைத்து விட்டது. இப்போது எதிர்காலம் போய்விட்டது. இதற்கு, காரணமான எனக்கு தண்டனை கொடுங்கள். என் கணவரை காப்பாற்றுங்கள்,' என்று சரண்யா புலம்பினார்.”

ஆனால் அவளைத் தண்டிக்க இந்திய சட்டங்கள் எதிலும் இடமில்லை. கணவன் கொலைக் கேசில் தண்டனை பெறுவது உறுதி. இப்போது பசப்பு மொழி பேசி கண்ணீர் விட்டு அந்தப் பெண் எல்லோர் இரக்கத்தையும் சம்பாதித்து விட்டாள். கணவன் அருகிலேயே கள்ளக் காதலனைக் கட்டி அணைத்தவள் அவன் கம்பி எண்ணப் போனபின் என்னதான் செய்யமாட்டாள். சைடில் இன்னொருவனையும் வைத்துக் கொள்வாள்! பாவம் அய்யா, அந்தப் பேதை!)

இதோ இன்னொரு கேசு:-


(செய்தி: தினமலர் 19-06-2009)

கள்ளத் தொடர்பு தகராறில் கார் டிரைவர் கொலை

சென்னை : கள்ளத் தொடர்பு தகராறில், கார் டிரைவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வளசரவாக் கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(26). கார் டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்திராநகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை இரண்டு பேர் வழிமறித்து தாக்கினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற் கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கொலையுண்ட ஸ்ரீதரின் மனைவி கலா(23)விற்கும், விருகம் பாக்கம் காந்தி நகர் தமயந்தி தெருவைச் சேர்ந்த பிரியாணி கடை வியாபாரி மகேந்திரன்(27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.இது பற்றி அறிந்த ஸ்ரீதரன் சில தினங்களுக்கு முன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன், தனது தம்பி ராஜேந்திரனுடன் சேர்ந்து இந்த படுகொலையை நிகழ்த்தியதாக தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து கொலை செய்த விதம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தேடப்படும் மற்றொரு நபரான ராஜேந்திரன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெளியூருக்கு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

4 மறுமொழிகள்:

')) said...

இதோ இன்னொரு கள்ளக்காதல் கொலை:-

அரியலூர் அருகே பயங்கரம்: கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை துண்டு, துண்டாக வெட்டி புதைத்தார். கணவர் கைது

அரியலூர், ஜுன்.19- 2009

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியின் கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி கொன்று புதைத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் அருகே உள்ள சீனிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து என்கிற முத்தமிழன் (வயது 40), விவசாயி. இவரது மனைவி வசந்தி (35). இவர்களுக்கு முகிலன் (16), சுதாகர் (14) என்ற மகன்களும், சூர்யா (13) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் வசந்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த முத்தமிழன் வசந்தியை கண்டித்தார். இருப்பினும் வசந்தி தொடர்ந்து அந்த வாலிபருடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்தார்.

தான் பலமுறை கண்டித்தும் மனைவி திருந்தாததால் வசந்தியின் மீது முத்தமிழனுக்கு மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. இனிமேலும் மனைவியை உயிருடன் விடக்கூடாது என்று முடிவு செய்த முத்தமிழன் கடந்த வாரம் வசந்தியின் கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்தார்.

பின்னர் கொலை செய்யப்பட்ட தனது மனைவியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி யாருக்கும் தெரியாமல் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்கு கொண்டு சென்றார். அங்கு குழிதோண்டி புதைத்து விட்டு வந்து விட்டார்.

இந்த நிலையில் வசந்தியின் உடல் புதைத்த இடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது வசந்தியை ஒரு வாரமாக காணவில்லை என்று அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் போலீசார் முத்துவிடம் உனது மனைவி எங்கே? என்று விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் முதலில் தயங்கி தயங்கி பேசிய முத்தமிழன் பின்னர் தனது மனைவிக்கும், ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அது தெரிந்த தான் மனைவியை கண்டித்ததாகவும், அப்படியும் தனது மனைவி திருந்தாததால் மனைவியை கொன்று ஏரிக்கரையில் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் முத்தமிழனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முத்தமிழனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை வசந்தியின் உடலை தோண்டி எடுத்து அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

')) said...

இந்த வாராம் கள்ளக்காதல் கொலைகள் வாராம்..............

அப்புறம் இன்னோரு குட் நியுஸ்

கொய்யால அந்திரா ல ரெண்டு ஜட்ஜேயே புடிச்சி 498ஏ கேசு வழிய உள்ள போட்டாங்கய்யா...
இந்த மாதிரி போட்டாதான் கஷ்டம் வந்தவன் வலி தெரியும..

')) said...

திருந்திவிட்டார் கற்புக்கரசி...

http://thatstamil.oneindia.in/comment/2009/06/84152.html

ஒரு உயிரையும் ஒருவனை கொலையாளியாகவும் ஆக்கிய இது போல் வேசி இப்பொழு திருத்தி என்ன பயன்... சேர்த்து வைத்தால் மறுபடியும் எவனோடயாவது ஜல்சா செய்ய கிளம்பி விடுவார்... இது போல் பெண்களை தண்டிக்க நாட்டில் சட்டம் கொண்டு வர வேண்டும்... இது போல் நீலிக்கண்ணீர் பெண்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்..

')) said...

ஆசிட்அடித்து ஒருவரின் கண்ணைப்பறித்த பெண்குல மணிவிளக்கு....

படித்து மகிழவும்.

http://thatstamil.oneindia.in/news/2009/06/19/tn-woman-throws-acid-on-farmer-eyesight-lost.html