90 சதம் 498A பொய்க் கேசுகள் - நீதிபதி

"கணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது." என்கிறார் சென்னை குடும்பநல கோர்ட்டு முதன்மை நீதிபதி பி.ராமலிங்கம்.

இந்த நிதிபதியின் முன்னிலையில்தான் நாள் ஒன்றுக்கு சுமார் 30 விவாகரத்து கேசுகள் புதிதாக வருகின்றன. இவர் சாதாரண மாஜிஸ்டிரேட் அல்ல. முதன்மை நீதிபதி. இந்தக் கோர்ட்டில் தான் சுமார் 7000 குடும்ப வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த நீதிபதி அன்றாடம் இத்தகைய கேசுகளை விசாரிக்கும் அனுபவத்தில்தான் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். யாரோ ரோட்டில் போகிறவர் கூற்று அல்ல இது. இதைத் தவிர வேறு என்ன ஆதாரம் வேண்டும் இந்த சட்ட துஷ்பிரயோகக் கூத்து நடப்பதற்கு!

இதையேதான் முன்பு இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு கே.ஜி. பாலகிருஷ்னன் அவர்களும் குடியரசுத் தலைவர் திருமதி பிரதீபா பாடில் அவர்களும் தெளிவுறக் கூறியிருக்கிறார்கள்.

இதையே என்னைப் போன்றவர்கள் கூறும்போது எல்லாம் தெரிந்தவர்களும், பெண்ணியவாதிகளும் மற்றும் பல அனானிகளும் “யாரோ ஏதோ பிதற்றுகிறார்கள்” என்றும் எங்கெங்கோ வரதட்சணைக் கொடுமை நடந்து கொண்டுதான் இருப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு இந்தப் பாம்பு இன்னும் தங்களைத் தீண்டாததால் இது எவனுக்கோ உள்ள பிரச்னைதானே என்று பண்டிதர்கள் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீதிபதி ராமலிங்கம் அவர்கள் மேலும் கூறியது:

குடும்ப வன்முறைச் சட்டம், வரதட்சணை கொடுமைச் சட்டம், ஐ.பி.சி. 498 (ஏ), பெண்கள் கொடுமைத் தடுப்புச் சட்டம் என்று பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. சட்டங்கள் சரியானதாக இருந்தாலும், அதை கையாள்வதில் பல முரண்பாடுகள் நிலவுகின்றன. 10 சதவீதம்தான் அந்த சட்டங்கள் சரியாக பயன்படுத்தப்படுகின்றன.

கணவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டங்களை கையில் எடுத்துக் கொள்வதுதான் 90 சதவீதம் நடக்கிறது. குடும்பநல கோர்ட்டுகளில் இந்த பாதிப்பைக் காணமுடியும். இந்த நிலை பற்றி சென்னை குடும்பநல கோர்ட்டின் முதன்மை நீதிபதி பி.ராமலிங்கத்திடம் பேசிய போது அவர் கூறியதாவது:-

மனநிலை மாறுகிறது

கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடால் சில பிரச்சினைகள் எழுவதுண்டு. அடிதடி கூட நடக்கும். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் வக்கீலிடமோ அல்லது போலீசிடமோ பெண் வீட்டார் செல்கின்றனர். அப்போது பெண்கள் பாதுகாப்புச் சட்டங்களை பயன்படுத்தி கணவன் மற்றும் அவர் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விடுகிறது.

கருத்து வேறுபாடு எதற்கோ ஏற்பட்டு இருந்தாலும், அதை வரதட்சணை வழக்காக மாற்றிவிடுகின்றனர். கடைசியில் கணவன், அவரது பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர். அதன் பிறகு கணவனின் மனநிலை மாறி விடுகிறது.

அரசு ஆலோசனை மையங்கள்

எனவே இந்தச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதுதான், கணவன்-மனைவியை மீண்டும் இணைய தடையாக இருக்கின்றன என்பது தெளிவாகிறது. எனவே இந்த பிரச்சினையை தடுப்பதற்கு தமிழக அரசு, குடும்பநல ஆலோசனை மையங்களை உருவாக்க வேண்டும்.

வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான கொடுமை மற்றும் கணவன்-மனைவி பிரச்சினை தொடர்பான புகார் மனுக்களை முதலில் இந்த மையங்களில் கொடுக்க வேண்டும். இந்த மையங்களில் அவற்றை தீர விசாரித்து, புகாரில் ஓரளவு உண்மை இருப்பது தெரிந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், புகாரை நிறுத்தி வைக்க வேண்டும்.

குடும்பத்தில் பிரச்சினை இருந்தால் கூட அவற்றை சரிப்படுத்த கணவனுக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாம். மாறவில்லை என்றால் மட்டும் புகாரை போலீஸ் நிலையங்களுக்கு அனுப்ப அனுமதி தரலாம்.

25 சதவீதம் சேரும்

இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், தற்போது பிரியும் குடும்பங்களில் 25 சதவீத குடும்பங்களை மீண்டும் சேர்த்து வைத்துவிடலாம். மாவட்டத்துக்கு ஒன்று என்ற அளவில் மையங்களைத் தொடங்கலாம். தனியார் கவுன்சிலிங் மையங்கள் இருந்தாலும் அரசு நடத்தும் மையங்களே அதிகாரப்பூர்வம் உள்ளதாக இருக்கும்.

பெண்களை பாதுகாப்பதற்குதான் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன என்பதையும், பழிவாங்குவதற்கு அல்ல என்பதையும் மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும். உரிமைகளை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பது போல் கடமைகளையும் தெரிந்து கொள்ள முயல பெண்கள் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

(செய்தி: தினமலர் 21-06-2009)
--------------------------------------

திருந்துவார்களா? சட்டங்களைத் திருத்துவார்களா?

அல்லது பணம் காய்ச்சி மரமாக இருக்கும் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டங்களை இன்னும் மேன்மேலும் கடுமையாக்கி, குடும்பங்களைச் சிதைத்து, வயதான தாய்மார்களையும் சிரார்களையும் அப்பாவி கணவன்மார்களையும் கைது செய்து கல்லா கட்டிக் கொண்டிருப்பார்களா?

திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்கு அனைத்து ஆண்களும் தள்ளப்படுவதற்கு முன்னால் இந்த சட்டங்கள் திருத்தப்படுமா!

6 மறுமொழிகள்:

')) said...

செவிடன் காதில் ஊதிய சங்க போல்... பாவம் இவர் என்னத்ததான் ஊதினாலூம் நம்ம தமிழ்நாடு மகளிர் காவல் நிலையத்திற்கும் கெடுமதிப்பெண்களுக்கும் கேட்கவா போகின்றது...

உதாரணத்திற்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கணவனின் பெற்றோரை கைதிசெய்து சிறையில் அடைத்த கூட்டம் அல்வா நாங்கள்.. நீ என்ன அறிக்கை... ஆர்டர் வேண்டுமானாலூம் உட்டுக் துட்டு இருந்தா கொய்யால எவனாஇருந்தாலூம் உள்ள புடிச்சி போடுவோம்...
அது இரண்டு மாதக்கொழந்தைய இருந்தா என்ன செத்த பிணமாக இருந்தால் எங்களுக்கு என்ன... எங்களுக்கு லஞ்சக்காசுல வயிறு நிறைஞ்சா போதும்...

')) said...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=495671&disdate=6/22/2009&advt=2

கள்ளக்காதல் ஜோடியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்போம்...

இது மாதிரி உயிர விட்டாலும் பரவாயில்லை... புருஷனை போட்டுத்தள்ளுரது.. இல்லாட்டி புருஷன் பொண்டாட்டி லவ்வர போட்டு தள்ளுரது அதவிட கொடுமை நம்ம லக்கி நம்பர் 498ஏ டவுரி கேசு போட்டு எல்லரையும் உள்ள போடுறதுக்கு பதிலா இது மாதிரி ஜல்சா பண்ணிகிட்டு விசத்தை குடிச்சிட்டு செத்து போயிடலாம்...

')) said...

அண்ணே... இதையும் கொஞ்சம் படிங்க....என்ன கொடுமை சார் இது...

')) said...

அட இதப்பார்ரா இன்னொரு பத்தினியோட திருவிளையாடல...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=495676&disdate=6/22/2009&advt=2

இந்த வாரம் கள்ளக்காதல் கொலைகள் வாராம்...

Anonymous said...

http://thatstamil.oneindia.in/news/2009/06/26/tn-mother-and-daughter-burnt-to-death-by-inlaws.html

idhu kuda indhiyaviladhan nadakkudhu.
-aathirai

')) said...

நீதிபதியின் கருத்து நெத்தியடியா அல்லது செருப்படியா?