வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்

”பெண்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபட மாட்டார்கள். வன்முறை என்றால் அதை ஆண்தான் செய்வான். அதனால் குடும்ப வன்முறை வழக்குகளில் ஆண்கள்தான் குற்றவாளிகள். கணவனுக்கு எதிராக மனைவி தொடுக்கும் புகார் ஒன்றே போதும், வேறு சாட்சியங்கள் தேவையில்லை.” - இதுதான் இந்திய சட்டங்களின் மற்றும் அளிக்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படைக் கருத்தாக்கம்.

இந்தச் செய்தியை வாசித்து விட்டு அனைத்து பெண்களும் எவ்வளவு மென்மையானவர்கள்; அன்பே உருவானவர்கள், அவர்கள் எவ்வித வன்முறையையும் செய்யவே முனைய மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்:-
-----------------

பத்தனம்திட்டை,ஜுன்.24- 2009 . செய்தி - தினத்தந்தி

பச்சிளம் குழந்தைக்கு வாழைப்பழத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற தாயை, போலீசார் கைது செய்தனர்.

தாய்மையின் பெருமையை பறைசாற்றுவதற்காக `பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று சொல்வது உண்டு. ஆனால் ஈன்றெடுத்த பிள்ளைகளையும் சுமையாக நினைக்கும் தாய்மார்கள் இருக்கத்தான் செய்வார்கள் போலும்.

அன்னையின் அரவணைப்பு இருக்க, எந்தவித அச்சமுமின்றி துள்ளி விளையாடிய ஒரு பச்சிளம் குழந்தைக்கு, பெற்ற தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

பத்தனம்திட்டை மாவட்டம் பீருமேடு அருகே உள்ள ராஜமுடி காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருடைய மனைவி பாக்கியம் (வயது34). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலை செய்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தன.

4-வதாக பிறந்த கார்த்திகா என்ற பெண் குழந்தைக்கு தற்போது 11/2 வயது ஆகிறது. படுசுட்டியான இந்தக்குழந்தை, நேற்று முன் தினம் இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாயில் இருந்து திடீரென நுரை- நுரையாக வெளிவந்தது.
இதனால் பாக்கியம் கூச்சலிட்டு, பக்கத்து வீட்டுக் காரர்களை உதவிக்கு அழைத்தார். பின்னர் அவர்களின் துணையுடன் தனது குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் அது இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவர்கள் இது குறித்து போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் பீருமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம் தான் தனது குழந்தைக்கு பழத்தில் விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, நாடக மாடியது தெரியவந்தது.

இதையடுத்து பாக்கியத்தை போலீசார் கைது செய்தனர்.
குடும்ப வறுமை மற்றும் பெண் குழந்தை என்ற காரண த்தால் இந்த கொலைக்கு துணிந்ததாகவும், நாயை கொல்வதற்காக பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்திருந்த விஷ மருந்தை வாழைப்பழத்தில் கலந்து குழந்தைக்கு கொடுத்து கொன்றதாகவும், பாக்கியம் போலீசில் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிகிறது.

1 மறுமொழி:

')) said...

இரண்டு மாத குழந்தையை வரதட்சணை கொடுமை புகாரில் இணைத்து விட்ட பெண்குள ம(ச)ணி விளக்கு அவருடைய அக்கா போல இவரு.... வாழப்பழத்துல ஊசியெத்துனமாதிரி இந்த குத்து விளக்கு விஷத்த ஏத்திரிச்சி....