தினமும் செய்தித்தாளைத் திறந்தால் கண்ணில் படும் செய்தி அன்புத் தாய்மார்களால் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட பச்சிளம் குழந்தைகளைப் பற்றியதுதான்!
நாளுக்குநாள் இத்தகைய நிகழ்வுகள் அதிகமாகிக்கொண்டே வருவது விசனத்துக்குறிய விஷயம்.
ஆனால் இல்லாத வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கிறேன் பேர்வழி என்று சட்டத்தின்மேல் சட்டமாக அடுக்கடுக்காய் பல சட்டங்களைப் போட்டு வக்கீல்களுக்கும் இடைத்தரகர்களுக்கும், பெண்ணியவாதிகள் நடத்தும் அமைப்புக்களுக்கும் வருமானத்திற்கு வழி செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறதேயன்றி, இளம் சிறார்கள் மேல் எய்யப்படும் கொடுமைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை.
ஏன் இந்த நிலைமை? பணம், ஐயா, பணம்!
“ஐயகோ, இந்த நாட்டில் ஆயிரக் கணக்கான “இளம்” பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிருடன் எரிக்கப்படுகிறார்களே” என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் UNIFEM போன்ற நிறுவனங்களிலிருந்தும், அரசு ஒதுக்கும் நிதியிலிருந்தும் பணம் கொட்டும். தவிர, மேன்மேலும் பல முட்டாள்தனமான சட்டங்களைப் போடவைத்து அதன்மூலம் குடும்பங்களைச் சிதைத்து திருமணம் செய்துகொண்ட அனைவரையும், வீட்டை விட்டுவிட்டு, காவல் நிலையங்களுக்கும், வக்கீல் வீடுகளுக்கும், நீதிமன்றங்களின் வராண்டாவுக்குமாக அலைய விடலாம். அதனால் சம்பந்தப் பட்டவர்கள் கொள்ளையடிக்கலாம். குழந்தைகள் நலனைப் பேணினால் அன்புள்ளம் கொண்ட மனிதர்கள்தானே நன்மையடைவார்கள்; இடைத்தரகர்கள் பணம் பண்ன முடியாதே!
இப்போது புரிகிறதா!
சென்ற வார குமுதத்தில் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதில் திருப்பதியில் ஏழைகளான பல இளம் ஆண்பிள்ளைகள் பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகி சீரழிகிறார்கள் என்று. இதைபற்றி எந்த அமைச்சரும் ஏதும் பேசவில்லை. ஆனால் கணவனிடமிருந்து கொள்ளையடித்து, அவனை இலவச ஏ.டி.எம் மெஷினாக்கி “இளம்” மனைவிக்கு பணம் கொடுக்கவைப்பதில்தான் அனைத்துத் தரப்புகளும் பிசியாக இருக்கின்றன.
இப்போது இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
-------------------------
ஆதரவற்ற குழந்தைகள் கடத்தல் : 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது
ஜூன் 12,2009, செய்தி: தினமலர்
திருநெல்வேலி : நெல்லை ஆதரவற்ற இல்லத்திற்கு குழந்தைகளை கடத்தி விற்பனை செய்ததாக 5 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ராஜன் என்பவர் "அன்பு சிறுவர் இல்லம்' என்ற பெயரில் அனாதைஇல்லம் நடத்திவந்தார். திருச்சி பகுதியில் குழந்தைகள் கடத்தப்பட்டது தொடர்பாக வந்த புகாரின்படி, திருச்சி போலீசார் வள்ளியூர் வந்து அனாதை மைய நிர்வாகி ராஜன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ராஜனின் இல்லத்தில் இருந்து பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்த கன்னியாகுமரி மாவட்டம் கீழசந்தையடியை சேர்ந்த மனோகரன்(38) என்பவரும், இதே மையத் தில் தமது 4 வயது மகள் மாரியை தத்துகொடுத்த தென்காசி குருவம்மாள் என்பவரும் போலீசில் புகார் கொடுத்தனர்.
விசாரணையில், அங்கு தற்போது 45 சிறுவர், சிறுமியர் இருப்பதும் தெரியவந்தது. ராஜன் பல்வேறு இடங்களில் உள்ள புரோக்கர்களுடன் தொடர்பு வைத்துக்குகொண்டு ஒரு குழந்தைக்கு 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து குழந்தைகளை வாங்கி 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். குழந்தைகளை வாங்கிச்செல்பவர்களுக்கு போலியான பிறப்பு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
ராஜனுக்கு குழந்தைகள் சப்ளை செய்ததாக தென்காசி கோட்டையம்மாள்(65), சாம்பவர்வடகரை பொன்னுத்தாய்(60), கடையநல்லூர் அருணாசலவடிவு(40), தென்காசி வேல்மயில்(38), உசிலம்பட்டி பூச்சியம்மாள்(50) ஆகிய ஐந்து பெண்களையும் உசிலம்பட்டியை சேர்ந்த கதிர் என்ற கோடாங்கி(58), திருவட்டை(67) ஆகிய ஆண்களையும் கைது செய்தனர். ராஜன் தற்போது திருச்சி சிறையில் இருப்பதால் அவரிடம் மேலும் விசாரித்து குழந்தைகள் கடத்தல் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளதாகவும் டி.ஐ.ஜி.,கண்ணப்பன் தெரிவித்தார்.
குழந்தைகள் படும் அவலத்தைக் கேட்பாரில்லை
குறிச்சொற்கள் 498a, advocates, harassment, husbands, misuse, ஆண்பாவம், ஏடிஎம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
The main reason for this is that the Indian laws are very weak and mostly 98% of the lawyers are liars.Their only aim is making money and nothing else.They make their homes bright by making the others houses dark.In India even the life time imprisoned culprit is released in some of the politicians birthday.Then how come we expect justice in this country.India is the country of rouges and rowdies
உங்கள் கருத்தைத் தெரிவிக்க