வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதைகணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு. கோபிசெட்டிபாளையம், மே.29- 2009. செய்தி - தினத்தந்தி
வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பினிர் அருகில் உள்ள எலத்தூர் செம்மாண்டம்பதியைச் சேர்ந்தவர் குமார்(வயது28) விவசாயி. அவருடைய மனைவி செல்வி(வயது27). இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது செல்வியின் பெற்றோர் வரதட்சணையாக 7 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் செல்வி கோபி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்தப்புகாரில், கணவர் குமார் மற்றும் அவருடைய தாய் சரஸ்வதி, தம்பி பிரகாஷ், அக்காள் சத்திய பாமாவாசு மற்றும் உறவினர்கள் பொன்மணி, சம்பூரணம் ஆகியோர் சேர்ந்து தலை பொங்கலுக்கு பெற்றோரின் வீட்டிற்கு சென்ற தன்னை, பெற்றோர் வீட்டில் இருந்து ஏன் மோதிரம் வாங்கி வரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தனர்.
மேலும் 15 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்தப்புகார் மனுவில் கூறி இருக்கிறார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----------------------------
எந்தவித முகாந்திரமோ தொடர்போ இல்லாமல் யாரை வேண்டுமானாலும் 498A புகாரில் சேர்த்து குற்றவாளியாக்கலாம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் நிலை.
இப்படியே போனால் இந்த லிஸ்டில் செந்தழல் ரவி, டோண்டு போன்ற அப்பாவிகள் பெயர்களும் சேர்க்கப்படும் நாள் தொலைவில் இல்லை. அதற்குள் நம் அரசு இந்தப் பொல்லாங்கு சட்டத்தை துஷ்பிரயோகம் (இதற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்று பரிந்துரைத்தால் நன்றியுடையோனாயிருப்பேன்!) செய்து பொய் வழக்கு போடமுடியாத வகையில் ஏதேனும் திருத்தம் கொண்டுவந்தால் நல்லது. இல்லையெனில் சீக்கிறமே தமிழ்மணத் திரட்டி முழுதும் 498A ஒப்பாரிதான் கேட்கும்!
498A உங்களை நெருங்கி விட்டது!
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, misuse, அராஜகம், பொய் வழக்கு, வரதட்சணை
Subscribe to:
Post Comments (Atom)
6 மறுமொழிகள்:
//அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----------------------------
எந்தவித முகாந்திரமோ தொடர்போ இல்லாமல் யாரை வேண்டுமானாலும் 498A புகாரில் சேர்த்து குற்றவாளியாக்கலாம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் நிலை.//
மறுபடியும் பொதுப்படையாகவே பதிவிட்டுள்ளீர்கள். இந்த குறிப்பிட்ட வழக்கில் மனைவி பொய் வழக்கு போட்டார் என்பது உங்கள் எண்ணமா? அதற்கு அடிப்படை என்ன? இந்த கேஸ் பற்றி மேலதிகத் தகவல்கள் ஏதேனும் தெரியுமா? அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லையே?
நீங்கள் கூறுவதையேதான் வன்கொடுமை சட்டத்திற்கும் கூறுகின்றனர். அதை முதலில் ஏற்கிறீர்களா? ஏனெனில் அதிலும் பொய்யாக குற்றம் சாட்டுவது சர்வசாதாரணமாக நடக்கிறது.
அவன் ஆம்பிளை இப்படி அப்படித்தான் இருப்பான் எனக்கூறி இளம் மனைவியை சித்திரவதை செய்த கேஸ்களே இல்லையா? அதற்கெல்லாம்தானே இச்சட்டமே வந்தது? எந்த கேசாக இருந்தாலும் டீஃபால்ட்டாக இளம் மனைவிதான் குற்றம் செய்திருப்பாள் என்ற ஊகத்தில்தானே உங்களது முக்கால்வாசி பதிவுகள் வருகின்றன?
சற்றே சமநிலையில் இருந்து எழுதவும். குறிப்பிட்ட கேசில் இளம் மனைவி வேண்டுமென்றே கேஸ் போட்டது தெரிந்தால் அதை தாராளமாக எடுத்து கூறவும்,. மற்றப்படி வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதக் கூடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆண்களைப் பழிவாங்கும் சட்டமாகத்தான் இது பயன்படுத்தப்படுகிறது.
டோண்டு,
//அவன் ஆம்பிளை இப்படி அப்படித்தான் இருப்பான் எனக்கூறி இளம் மனைவியை சித்திரவதை செய்த கேஸ்களே இல்லையா? //
இதுதான் பொத்தாம்பொதுவான கூற்று.
எங்கே உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்த, சமீப காலத்தில் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்திய உண்மை நிகழ்வு ஒன்றை விவரமாக சொல்லுங்கள் பார்க்க்கலாம். நேரில் விசாரித்து தகவல் அறியலாம்.
அன்பு ஐயா டொண்டு அவர்களுக்கு,
என்னுடைய வழக்கில் எனது திருமணத்திற்கு வந்த எனது தம்பி நண்பருடைய தாயரையும் பொய்வழக்கி சேர்த்து ஐந்து நாட்கள் புழல் சிறையில் அடைத்தார்கள்... இவர் என்ன பாவம் செய்யதார்?...
இது போல் கொடுமைகள் ஏராளம் ஏராளம்...
என் மகளை ஒன்றும் கொடுக்காமல் எவன் தலையிலாவது கட்ட வேண்டும் என்ற ஆணாதிக்க வெளிப்பாடு தான் "வரதக்ஷணை என்பது குற்றம்" என்கிற பிரசாரம் . கணவனின் எந்த ஒரு செயலும் மனைவிக்கு மன ரீதியான வேதனை அளிக்கிறது என்று அவள் கருதினால் குற்றம் என்கிற சட்டம் .
ஏன் கைது செய்ய வேண்டும் ? வழக்கை நிருபித்த பின் கைது செய்யலாமே ?
நீங்கள் எந்த ஒரு முதல் தகவல் அறிக்கையையும் படித்து பார்த்ததில்லை என்பது தெரிகிறது . நீங்கள் வாய் புளித்ததோ என்று எழுதுவதாக கருதலாமா ?
உங்களுக்கு தெரிந்த வரை மனைவிக்கு எதாவது சட்ட ரீதியான கடமை உண்டா ?
//சற்றே சமநிலையில் இருந்து எழுதவும். குறிப்பிட்ட கேசில் இளம் மனைவி வேண்டுமென்றே கேஸ் போட்டது தெரிந்தால் அதை தாராளமாக எடுத்து கூறவும்,. மற்றப்படி வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்றெல்லாம் எழுதக் கூடாது//
ஐயா டொண்டு அவர்களே,,,
தயவுசெய்து தங்கள் மின்அஞ்சல் முகவரியை எனக்கு தெரியப்படுத்தவும்... எங்கள் மீது சுமத்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்... நேரமிருந்தால் படித்து பார்கவும். மனித உறவுகளை கொச்சைப்படுத்தி வக்கிர வெறிபிடித்து கூட்டம் பெண்உருவில் சுற்றித்திறிகின்றது 498ஏ என்னும் சட்ட உதவியோடு...
உங்கள் கருத்தைத் தெரிவிக்க