ஏனெனில் இப்போதெல்லாம் பல பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன. பள்ளி செல்லும் நாட்களிலேயே காமக் களியாட்டங்கள் கோலாகலமாக நடக்கின்றன. இவைகளுக்குப் பெயர் காதலாம். இத்தகைய கலாசாரச் சீரழிவை சினிமாவும் ஊடகங்களும் திட்டம் போட்டுப் பரப்பி வருகின்றன. ஸ்கூல் யூனிஃபார்மிலேயே நடக்கும் கண்றாவிகளை ஊருக்கு ஒதுப்புறமான இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற பொது அரங்குகளிலும், பார்க்குகளிலும் தினமும் பார்க்க முடிகிறது.
தங்கள் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களையும் செக்ஸ் சார்ந்த நடவடிக்கைகளையும் பற்றி பெற்றோர்களுக்கு அறவே தெரியாது. அவர்கள் ஒரு கற்பனை உலகில் இருப்பார்கள். ஆகையால் அவர்கள் கொடுக்கும் உருவகத்தை வைத்துக் கொண்டு முடிவெடுக்காதீர்கள். "ரோஜா" படத்தில் வருவதுபோல் வெகு சிலர்தான் தகுந்த நேரத்தில் வெளியில் சொல்வார்கள். பல பெண்கள் கல்யாணம் ஒரு பக்கம், கள்ளக்காதல் ஒரு பக்கம் என்று இருந்து விடலாம் என்று திட்டமிட்டு கமுக்கமாக இருப்பார்கள். இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.
ஆகையால் ஆண்களும் அவர்களுடைய பெற்றோர்களும் திருமணம் பற்றிய முக்கிய முடிவெடுக்குமுன் உஷாராக நன்கு தீவிரமாக விசாரித்தபின் முடிவெடுக்க வேண்டும். ஜோசியக்காரர்களை நம்பாதீர்கள். ஜோசியம், ஜாதகம் என்பதெல்லாம் வெறும் புரட்டு. அதை வைத்து மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறது ஒரு கும்பல். அவர்களால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளம்.
இனி இந்தக் காதல் காவியத்தைப் படியுங்கள்:-
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.
2 மாதமாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்தார்
கோபிசெட்டிபாளையம், அக். 31 - 2009 - தினத்தந்தி
நாளை திருமணம் நடைபெற இருந்த இளம்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார். இவர் 2 மாதங்களாக தாலியை மறைத்து வைத்து பெற்றோருடன் வசித்து வந்து உள்ளார்.
இளம்பெண்
கோபியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். அவருடைய மகள் லட்சுமி (27) (பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது) 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
லட்சுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவருடைய பெற்றோர், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை தேடினார்கள்.
அப்போது பவானியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும், லட்சுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. லட்சுமி-குமாரின் திருமணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை லட்சுமியின் பெற்றோர்கள் தீவிரமாக செய்து வந்தனர். உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டு வந்தது.
மாயம்
இந்த நிலையில் வேலைக்கு சென்ற லட்சுமி கடந்த 26-ந் தேதி இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை.
எனவே லட்சுமியின் பெற்றோர் இது குறித்து கோபி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் லட்சுமியை தேடி வந்தனர். லட்சுமி வீட்டை விட்டு திடீரென்று மாயமான தகவல் மாப்பிள்ளையின் வீட்டாருக்கு கிடைத்ததால், அவர்கள் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.
காதலனுடன் தஞ்சம்
இந்த நிலையில் லட்சுமி நேற்று மாலை கோபி போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருடன் வந்தவரை, தான் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். இது தொடர்பாக லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை குறித்து போலீசார் கூறும் போது,
லட்சுமி வேலை செய்து வரும் பனியன் கம்பெனியில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். இவரும், லட்சுமியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்து உள்ளனர்.
இந்த நிலையில் லட்சுமிக்கு, அவருடைய பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதால், லட்சுமியும், முத்துப்பாண்டியும் கடந்த ஆகஸ்டு 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை வக்கீலின் மூலம் திருமண ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
தாலி மறைப்பு
லட்சுமி, தான் காதல் திருமணம் செய்து கொண்டது, பெற்றோருக்கு தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிற்கு வரும் போது தாலியை கழற்றி மறைத்து வைத்து உள்ளார். இதனால், அவருடைய காதல் திருமணம் பெற்றோருக்கு தெரியவில்லை என்று போலீசார் கூறினர்.
மகள் திருமணம் செய்தது கூட தெரியாமல், அவளுக்கு மாப்பிள்ளை தேடி நிச்சயம் செய்த பெற்றோர், மாயமான மகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து இருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது லட்சுமி பெற்றோரை பார்க்காமல் முகத்தை திருப்பி வைத்து கொண்டார். இதை பார்த்த அவருடைய பெற்றோர்கள், "உன்னை நம்பி கல்யாண ஏற்பாடு செய்தோம். இப்படி தலை குனிய வைத்து விட்டாயே!" என்று கூறி கதறி அழுதனர்.
காதலனுடன் சென்றார்
காதல் திருமணம் செய்து கொண்ட லட்சுமி தன்னுடைய காதல் கணவன் முத்துப்பாண்டியுடன் வாழப் போவதாக உறுதிப்பட தெரிவித்ததால், போலீசார் முத்துப்பாண்டியுடன் லட்சுமியை அனுப்பி வைத்தனர். (சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!)
தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்
குறிச்சொற்கள் anti-male, biased laws, அப்பாவி ஆண்கள், ஆண்பாவம், எச்சரிக்கை, கயமை, கலாசாரச் சீரழிவு, வெறி
தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!
மனோரமாவும் கேப்டன் விஜயகாந்தும் தான் கவனிக்க வேண்டும்!
ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3- 2009. செய்தி - தினத்தந்தி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்சேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது35). இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்நத மாரிகுரு (29) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்தக் கள்ளக்காதலால் பழனியம்மாள் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் மாரிகுரு (கள்ளக் காதலன்) தனது அக்கா மகள் தாமரைச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பழனியம்மாள் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் பழனியம்மாள் குடும்ப நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பம் நடத்த பணம் கேட்டு மாரிகுரு வீட்டிற்கு பழனியம்மாள் வந்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிகுரு வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து பழனியம்மாள் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பழனியம்மாள் தனக்குதானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
இந்தசம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரிகுருவை கைது செய்தார்.
குறிச்சொற்கள் lust, manorama, paramour, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், சமூகம், மனோரமா, விஜயகாந்த்
தன் சுகம், தன் வெறி, பெற்ற குழந்தைகளின் கதியென்ன தாயே!
கணவனும் பெற்றோரும் கள்ளக்காதலைக் கண்டித்ததால் கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அந்தக் குழந்தைகளைப் பற்றி பெற்ற தாய் எண்ணிப் பார்க்கவில்லை.
தாய்மையின் பெருமையைப் பற்றியெல்லாம் பழைய பஞ்சாங்கம் போல் பேசித் திரியாதீர். இது பெண்விடுதலைக் காலம். அந்தப் பெண்ணின் பாலியல் ஆசைகள் முழுமையாக திருப்தி செய்யப்படவேண்டும். அதுதான் முக்கியம். அதை விடுத்து குழந்தைகள், தாய்மை, பண்பாடு, கற்பு போன்ற பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கூறி பெண்ணினத்தை அடிமைப் படுத்த விடமாட்டோம்!
மனோரமா அம்மையாரின் கூற்றுப்படி அனைத்து கள்ளக்காதல்களும் கணவன்மார்கள் ஆண்மையில்லாமல் இருப்பதால்தான் நிகழ்கிறதாம். ஆண்மையின் அளவுகோல் என்ன, சில பெண்களிடம் மேலோங்கி நிற்கும் பாலியல் வெறியின் அளவுகோல் என்ன, கட்டின் புருஷனையும், பெற்ற பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக் காதலனோடு ஓடும் பெண்கள் கணவன் தன்னைத் திருப்தி செய்யாததால்தான் ஓடுகிறார்களா, அல்லது எளிதில் திருப்தியாகாமல் வகை வகையான செக்ஸ் அனுபவங்களைத் தேடி ஓடுகிறார்கள, அல்லது திருமணத்திற்கு முன்பே இருந்த கள்ள உறவை விடமுடியாமல் தொடர்கிறர்களா என்பதெல்லாம் நாம் அறியோம். வேண்டுமானால் இந்த விஷயத்தைப் பற்றிப் போராட இயக்கம் தொடங்கியிருக்கும் மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இனி இன்றைய செய்தியைப் பார்ப்போம்.
பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை
பேரணாம்பட்டு, செப்.17- 2009. செய்தி - தினத்தந்தி.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல் ஜோடி
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (வயது 27). திருமணமாகாதவர். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள பரவைக்கல் மந்திரிபட்டி பகுதியை சேர்ந்த காஞ்சனா (27) என்பவர் திருமணமாகி, தனது கணவர் வரதராஜனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், காஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது காஞ்சனாவின் கணவர் வரதராஜுக்கு தெரிய வந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனும், காஞ்சனாவும் பெங்களூரில் இருந்து எருக்கம்பட்டுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியை காணாத வரதராஜன், வெங்கடேசனுடன் காஞ்சனா சென்றிருக்கலாம் என்று கருதி எருக்கம்பட்டு கிராமத்திற்கு வந்து வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். அதற்கு சுப்பிரமணி, அவர்கள் இருவரும் வந்ததும் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறியதை அடுத்து வரதராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனும், காஞ்சனாவும் எருக்கம்பட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சுப்பிரமணி, திருமணமான பெண்ணை அழைத்து கொண்டு வந்திருக்கிறாயே என்று வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்தி என்பவரது வீட்டிற்கு காஞ்சனாவுடன் சென்று உள்ளார்.
பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். அப்போது கார்த்தி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
தூக்கு போட்டு தற்கொலை
இந்தநிலையில் கள்ளக்காதல் ஜோடி வெங்கடேசன், காஞ்சனா இருவரும் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்று பார்த்த கார்த்தி, இருவரும் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சாரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குறிச்சொற்கள் lust, paramour, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், வெறி
அடங்கா வெறி
கட்டிலடங்கா வெறியுடன் திரியும் மனைவிகளின் கள்ளக் காதல்கள் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறதோ!
இனி மெல்லச் சாகும் குடும்ப வாழ்க்கை முறை!
காம வெறி பிடித்தலையும் காரிகைகள் Black Widow spider போல் கண்டவனுடன் கலவை கொண்டு காரியம் முடிந்தபின் "என்னைக் கற்பழித்தான் இந்தக் காமுகன்" என்று கூக்குரலிட்டால் போதும், உடனே கொண்டு செல்வர் அந்த அசட்டு ஆணை காராக்கிரகத்திற்கு. அந்தப் பெண் பேதையோ தேடிச் செல்வாள் அடுத்த விட்டில் பூச்சியை நோக்கி. ஏன்? அவள் காமம் தான் இன்னும் தணியவில்லையே! கண்டிக்க வேண்டிய சமூகம்தான் அவளுக்கு சாதகமான சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் மூலம் கட்டவிழ்த்து விட்டதே!
பூதப்பாண்டி அருகே நிகழ்ந்த பயங்கரத்தைக் காணுங்கள்! குழந்தைகளை எண்ணிப் பார்த்தாளா அந்த வெறி விடித்த பேய்!
மனைவியுடன் என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை
கள்ளக்காதலன் கைது
அழகியபாண்டிபுரம், ஆக.10- 2009. செய்தி - தினத்தந்தி
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே என்ஜினீயரும் அவருடைய மனைவியும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப் பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடு பட்ட மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே உள்ள சைபன் ஏரியா காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 46). என்ஜினீயர். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்தார். இவ ருடைய மனைவி லீலா (40). இவர்களுக்கு அஜின் குமார் (14), விஜின்குமார் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில், ராஜேந்திர குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் பெங்களூரில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தடிக்காரன் கோணம் அருகில் உள்ள சைபன் ஏரியாவுக்கு குடும்பத்தோடு குடி வந்தார்.
காவலாளியுடன் தவறான உறவு
அப்போது அவரது வீட்டு தோட்ட காவலாளியாக தடிக் காரன்கோணம் குட்டி பொத்தை பகுதியைச் சேர்ந்த சார்லஸ்(46) என்பவரை வேலைக்கு அமர்த்தினார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் சார்லசின் மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாக தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இதனால், சார்லஸ் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ராஜேந்திரகுமாரின் வீட்டி லேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரகுமாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய மனைவி லீலா தனது வீட்டில் தங்கியிருந்த சார்லசுடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சார்லஸ் சொல்வதை யெல்லாம் லீலா கேட்டு வந்ததாக தெரிகிறது.
திருவிழாவுக்கு செல்வதில் பிரச்சினை
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு ராஜேந்திரகுமார் மற்றும் லீலா தங்களது மகன்களுடன் புறப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த சார்லஸ் லீலாவிடம், "நீங்கள் திரு விழாவுக்கு செல்லக்கூடாது " என்று கூறினார்.
ஆனால் லீலா அதை கேட்காமல் தனது கணவர் ராஜேந்திரகுமாருடன் ஆலய திருவிழாவுக்கு சென்றார். இதுவரை தனது பேச்சை கேட்டு நடந்த லீலா தற்போது தான் சொல்லியும் கேட்காமல் திருவிழாவுக்கு செல்கிறாளே என்ற ஆத்திரம் சார்லசுக்கு ஏற்பட்டது. இதனால் லீலாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவோடு கையில் அரிவாளுடன் சார்லஸ் வீட்டிலேயே காத்திருந்தார்.
சரமாரி வெட்டிக்கொலை
அப்போது கணவன்- மனைவி இருவரும் மகன்களை ஆலயத்தில் விட்டுவிட்டு, இரவு சுமார் 9.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்களை சார்லசும் அரிவாளுடன் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் சார்லஸ் லீலாவைப் பார்த்து, "நான் சொல்லச் சொல்ல கேட்க மாட்டாயா?" என்று கேட்டுக்கொண்டே அரிவாளால் லீலாவின் கழுத்தில் பலமுறை வெட்டியதாக தெரிகிறது.
இதில் பயங்கர சத்தத்துடன் லீலா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த ராஜேந்திரகுமார் ஓடிவந்து சார்லசை தடுக்க வந்தார். அவரையும் சார்லஸ் காது, கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதனால் ராஜேந்திரகுமாரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் கணவன்- மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண்
இதைத்தொடர்ந்து, சார்லஸ் அங்கிருந்து தப்பியோடி கழுவன்திட்டை பகுதியில் மறைந்திருந்தார். பின்னர் அவர் தெரிசனங்கோப்பு கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலையில் சரண் அடைந்து, மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
அதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி மருதநாயகம் புகாரின்பேரில் கீரிப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கொலை வழக் குப்பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கதறி அழுதனர்
கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் ராஜேந்திரகுமார்- லீலா ஆகியோரின் மகன்களில் அஜின்குமார் 9-ம் வகுப்பும், விஜின்குமார் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
அதிகாலையில் ஆலயத்தில் இருந்து திரும்பிய அவர்கள் பெற்றோர் பிணமாக கிடப்பதைப் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது
குறிச்சொற்கள் lust, கலாசாரச் சீரழிவு, செக்ஸ், தாய்மை, வெறி
கள்ளக்காதல் விபரீதம்...
ஜூனியர் விகடனில் வெளியான நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம்...
வணிகச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் என்பது போல் கள்ளக் காதல் செய்திகள் என்றுஊடகங்களில் இனி, தனிப் பகுதி வந்துவிடுமோ?அடுத்தடுத்து நடக்கும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் இப்படி ஒரு பயத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விட்டன!
கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மகனையே வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்த மதுரை கொடூரம் ஒரு பக்கம் என்றால், விருத்தாசலத்தில் நடந்திருக்கும் விபரீதம் விதிர்விதிர்க்க வைக்கிறது!
வசதியாக வாழ்வதற்குப் பணம் தேவை என்பதால், ஏழு வயது பையனைக் கடத்திக் கொலை செய்திருக்கிறது ரத்த வெறி பிடித்த கள்ளக்காதல் ஜோடி.
விருத்தாசலத்தை அடுத்துள்ள கார் குடல் கிராமமே கண்ணீர்க் கடலாகிக் கிடக்கிறது. தெருவில் ஓடி விளையாடி எல்லோரிடமும் அன்பாக பழகிய ஏழு வயதுச் சிறுவன் சுரேஷ் சாக்குமூட்டையில் பிணமாகக் கிடப்பதை எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?
கொளஞ்சிநாதன்-மகேஸ்வரி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு, தவமாகத் தவமிருந்து வரம் வாங்கிப் பிறந்த ஆண் குழந்தை சுரேஷ். அருகிலுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27-ம் தேதி காலையில் பள்ளிக்குப் போனவன் மாலை வரை வீடு திரும்பவில்லை.
அப்பா கொளஞ்சிநாதன் வெளி நாட்டில் இருப்பதால், அம்மா மகேஸ்வரி, சுரேஷை தேடி அலைந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து... 29-ம் தேதி மதியம் வயலாப் பாடி என்னும் கிராமத்தின் ஒடையில் சாக்குமூட் டையில் கட்டப்பட்டு பிணமாகத்தான் அவனைப் பார்க்க முடிந்தது.
கலங்கிப் போயிருந்த கார்குடல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரைச்செல்வன் நம்மிடம், ''ஸ்கூல் போன புள்ளைய காணோம்னு சொன்னதும், பதறிப்போய் தேடினோம். அன்னிக்கு ராத்திரி மகேஸ்வரி செல்லுக்கு பேசின ஒருத்தன், 'நாங்கதான் சுரேஷை கடத்தி வச்சிருக்கோம். அஞ்சு லட்ச ரூபா ரெடி பண்ணி வையி'னு மிரட்டியிருக்கான். உடனே, போலீஸ்ல புகார் கொடுத்துட்டோம். எஸ்.பி. விறுவிறுனு ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடையுற மாதிரி... போலீஸ் அவங்கள நெருங்குற நேரத்துல, இப்படி இதயமே இல்லாத அந்த பிஞ்சுப் பையனை கொன்னுட்டாங்களே... அந்த படுபாவிங்க!'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்.
போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.
"தகவல் கிடைத்ததும் கடலூர் எஸ்.பி-யான அஸ்வின் கோட் னிஸ் மூன்று தனிப் படைகளை அமைத்து, விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள், மகேஸ்வரியின் செல்லுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதில் இரண்டாவது முறையாகப் பணம் கேட்டு வந்த அழைப்பை, பதிவு செய்து விசாரித்தபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர். அங்கே செங்குனம் கிராமத்தில் மகேஸ்வரியின் சித்தி முறையான பாலாயி என்பவர் இருப்பதாகத் தெரிந்தது. உடனே, பாலாயியை தேடிச் சென்றோம். பாலாயியோடு உடனிருந்த சுந்தர்ராஜ் என்ற ஜே.சி.பி. டிரைவரையும் சேர்த்து அள்ளிக் கொண்டு வந்து விசாரித்த போதுதான், இந்த கொடுமைகள் வெளியே வந்தன!" என்றனர் போலீஸார்.
ஏன் சுரேஷை கடத்திக் கொலை செய்தார்கள்?
போலீஸில் பாலாயி கொடுத்த வாக்குமூலம் இதோ...
"மகேஸ்வரியின் பிறந்த ஊரான திட்டக்குடி பக்கம் கூடலூர்லதான் நான் வாக்கப்பட்டேன். மகேஸ்வரியோட சித்தப்பா புகழேந்திக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. அவரு வெளிநாட்டுல இருக்காரு. இங்க தனிமை என்னை ரொம்பப் படுத்தி எடுத்துசசு. அப்ப எங்க ஊருக்கு ஜே.சி.பி. ஓட்ட வந்த சுந்தர்ராஜுக்கும் எனக்கும் பழக்கமாச்சு. விஷயம் ஊர்ல தெரிஞ்சு, என் வீட்டுக்காரர் வரைக்கும் போயிடுச்சு. அவர் இங்க வந்து என்னைய கண்டிச்சாரு. ஆனா, அவரு திரும்பவும் வெளிநாடு போன பின்னாடி, என்னால சும்மா இருக்க முடியல. சுந்தர்ரஜைத்தான் தேடிப் போனேன். இது தெரிஞ்சதும் என் வீட்டுக்காரர் ஒரேடியா என்னை வெரட்டி விட்டுட்டாரு.
அப்புறம் நானும் சுந்தர்ராஜும் ஒண்ணாவே இருக்கோம். இருந்த காச வச்சு கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்தோம். அது தீர்ந்ததும், காசு சம்பாதிக்க என்ன பண்றதுனு நாங்கபேசிக்கிட்டி ருந்தப்பதான்... சென்னையில ஒருத்தரை கடத்தி வச்சு காசு கேட்ட சம்பவத்தை டி.வி-யில பாத் தோம்...'' என்ற பாலாயி, அதற்குப் பிறகு நடந்த தையும் அழுத்தமான குரலில் கக்கியிருக்கிறாள்.
''டி.வி-யைப் பாத்ததுமே யாரையாச்சும் கடத்தி பணம் கேக்கலாம்னு தோணுச்சு. யாரைக் கடத்தறதுன்னு யோசிச்சப்பதான் சட்டுனு சுரேஷ் ஞாபகம் வந்துச்சு. ஏன்னா, அவன் எனக்கும் சுந்தர்ராஜுக்கும் நல்லா பழக்கமானவன். கூப்பிட்டாவே வந்துடுவான். அவங்க அப்பா வெளிநாட்டுல இருக்கிறதால, கேட்டதும் பணமும் சிக்கல் இல்லாமல் கிடைச்சுடும்னு முடிவெடுத்தோம்.
உடனே, போன 27-ம் தேதி சாயந்தரம் போய் சுரேஷை, சுந்தர்ராஜ் கூப்பிட்டிருக்கான். சிரிச்சுக்கிட்டே சுரேஷ் வந்துட்டான். அவனை எங்க வீட்லயே ஒரு ரூம்ல கட்டிப் போட்டுட்டு, மகேஸ்வரிக்கு போன் போட்டோம். இந்த தகவல் மறுநாள் பேப்பர்ல வந்ததும், எங்க ரெண்டு பேருக்கும் பயமாயிடுச்சு. 'இறங்கினது இறங்கிட்டோம்'னு தைரியம் சொன்ன சுந்தர்ராஜ், மறுபடியும் மகேஸ்வரிக்கு போன் பண்ணி பணம் கேட்டான். அப்பதான், நாங்க இருக்கற இடத்தை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சிட்டாங்க. இந்த நியூஸும் உடனே டி.வி-யில வர, எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. உடனே, சுரேஷை முகத்தில் துணியை வைத்து அழுத்தினோம். ரொம்பக் கத்தினவன், கொஞ்ச நேரத்துல அடங்கிட்டான். பிணத்தை வயலாப்பாடிக்கு எடுத்துக்கிட்டு போய், குளத்துல வீசிட்டோம்...'' என்றாளாம் பாலாயி.
அருமைப் பையனை பறிகொடுத்து நிற்கும் மகேஸ்வரி,
"புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கடின்னு சொல்லிட்டு வெளிநாடு போன எம் புருஷன், திரும்ப வந்து கேட்டா, நான் என்ன பதில்சொல்லுவேன்?'' என்று தன் மூன்று பெண் குழந்தைகளையும் கட்டிக் கொண்டு அழுத காட்சி இதயத்தைநசுக்கியது.
கள்ளக் காதல் ஜோடியிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக் கொண்ட போலீஸார், இருவரையும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டாமல் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
"ஏற்கெனவே போலீஸின் நடவடிக்கைகள்ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்ததால்தான் சிறுவன் கொல்லப் பட்டான். அதனால்தான் இந்த ஏற்பாடு..." என்கிறார்கள் போலீஸார். காலம் கடந்த எச்சரிக்கையல்லவா இது!
- கரு.முத்துபடங்கள்: ஜெமினி படமனை. நன்றி: ஜூனியர் விகடன்
குறிச்சொற்கள் lust, கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, வெறி
பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!
அனைத்து பென்ணியவாதிகளும், "பெண்களே, கற்பு, பண்பாடு, பாரம்பரியம், நன்னடத்தை என்ற சிறைகளில் உங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவைகளை உடைத்துக் கொண்டு புறப்படுங்கள் புவியாள!" என்று ஓயாமல் முழக்கமிடுவதின் பலனாகத் தோன்றும் மனப் பிறழ்வு, பலவித சமூகக் கேடுகளுக்குக் காரணியாக அமைகின்றது. அவை கட்டிய புருஷனையும், அவனது பெற்றோரையும் மட்டும்தான் பாதிக்கும் என்று இதுகாறும் அந்தப் பெண்ணியவாதிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அத்தகைய கட்டுப்பாடில்லா மனவெழுச்சி மனப்பான்மை அப்பெண்ணின் பெற்றோர் மீதும் பாயும் என்பதை நாள் தோறும் பல இளம் பெண்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்!
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
"எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார் 17 வயதுப் பெண்.
மதுரை, ஜுலை.24- 2007 (தினத்தந்தி)
பெற்றோருக்கு தெரியாமல் காதலருடன் 17 வயது இளம்பெண்ணுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் 18 வயது வரை அந்த பெண்ணை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
திருச்சி, லால்குடியை அடுத்த சிறுகாலப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
என் மகள் பவளராணிக்கு தற்போது 17 வயது நடந்து வருகிறது. நான் விவசாய வேலை பார்த்து வருகிறேன். எங்கள் ஊரைச்சேர்ந்த லாலா முத்துச்சாமி என்பவரது மகன் கமலேஷ். நான் கடந்த 23.6.2009 அன்று வேலை காரணமாக வெளினிர் சென்று விட்டேன். அப்போது என் மகளை கமலேஷ் கடத்தி சென்று விட்டார்.
இதற்கு அவரது தந்தையும், உறவினர் அப்பாத்துரை என்பவரும் உதவி செய்துள்ளனர். என் மகளுடன் கமலேஷ் சென்னையில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்தேன். இதுகுறித்து நான் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
- இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பெற்றோருடன் செல்ல மறுப்பு
இந்த மனுவை விசாரித்து கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் பவளராணியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்பாக அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லால்குடி போலீசார் பவளராணியை நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். கடத்தப்பட்டது குறித்து அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் "என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. என் விருப்பத்தின்பேரில் நான் காதலிக்கும் ஒரு வாலிபருடன் எனக்கு நாளை (இன்று) திருமணம் நடக்க உள்ளது. அதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் பதில் அளித்தார்.
தொடர்ந்து கோர்ட்டில் இருந்த அந்த பெண்ணின் பெற்றோருடன் இந்த பிரச்சினை குறித்து பேசும்படி நீதிபதிகள் கூறியபோது, "எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார்.
கண்ணீருடன் சென்றார்
பவளராணிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை அந்த பெண்ணை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த 2 மாத காலத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களோ, அந்த வாலிபர் தரப்பில் இருந்தோ யாரும் காப்பகத்தில் அவரை சந்திக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அந்த பெண்ணின் பெற்றோர் வேதனை அடைந்து கண்ணீருடன் அந்த பெண்ணிடம் அவர்களது கோபத்தினை வெளிப்படுத்தினர். அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
குறிச்சொற்கள் parents, victims, கலாசாரச் சீரழிவு, குடும்பம், வெறி
கன்னித்தன்மையாவது கத்தரிக்காயாவது!
அரசு செலவில் கூட்டு திருமணத்திற்கு வந்த பெண்களில் சிலர் திருட்டுத் திருமணம் செய்துகொள்ளவிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆம். அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாயிருந்தனர் (ஏனய்யா, அவர்கள் பாவம், யாருடனோ உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அவர்கள்மேல் என்ன தவறு? அவர்கள் ஆசைப் பட்டார்கள். எந்தப் பாவிகளோ அவர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களைக் “கற்பழித்து விட்டான்கள்”.)
அவர்கள் கர்ப்பமாக இருந்ததை மறைத்து பத்தினி வேடம் பூண்டு இன்னொருவனோடு அரசு சிலவில் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்ததை அரசு மருத்துவ சோதனை மூலம் கண்டு பிடித்து திருப்பி அனுப்பி விட்டது.
இதை எதிர்த்து நம் பெண்ணிய வியாதிகள் இப்போது கூச்சல் போடுகின்றன. அதுபோல் மருத்துவ சோதனைச் செய்தது தவறாம். அந்தப் பெண்களின் மனம் பாடுபடுமாம். அவர்களைக் கட்டிக்கொள்ளப் போகும் இளிச்சவாயர்களைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கரையுமில்லை.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
கூட்டு திருமண திட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு கற்பு பரிசோதனையா? ராஜ்யசபாவில் கடும் மோதல்
ஜூலை 14,2009. செய்தி - தினமலர்
புதுடில்லி : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது. பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
மத்திய பிரதேசத்தில், "முதல்வர் கன்னியாதானத் திட்டத்தின்” கீழ், ஏராளமான ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், ஏழைப் பெற்றோர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஷாதோல் மாவட்டத்தில் 151 ஜோடிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கூட்டுத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வந்த அனைத்து பெண்களுக்கும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து, திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார், ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சந்தோஷ் பக்ரோடியா கூறியதாவது:
ம.பி.,யின் கூட்டுத் திருமணத் திட்டம் பாராட்டத்தக்கது. அத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு, கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது; வெட்கப்பட வேண்டியது என்றார். ஆனால், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் கமிஷனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷாதோல் மாவட்ட கலெக்டர் மறுப்பு : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தில் கீழ், கடந்த மாதம் திருமணம் செய்ய வந்த பெண்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரை, ஷாதோல் மாவட்ட கலெக்டர் நீரஜ் துபே மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
கூட்டுத் திருமணத் திட்டத்தில் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனரா, இல்லையா என்பதைக் கண்டறிய சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
திருமணம் செய்ய வரும் பெண்களுக்கு, இதற்கு முன் திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கவும் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சில பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களை திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.
குறிச்சொற்கள் husbands, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், வெறி
கண்டவனோடு ஓடுவதற்கு வழி காட்டிய நல்லாசிரியை
கணவர்களுடன் வாழப்பிடிக்காததால் ஆசிரியை-மாணவி தப்பி ஓட்டம். சென்னை சென்று வேறு நபர்களை திருமணம் செய்தது அம்பலம்
அந்தியூர், ஜுலை.9- 2009. செய்தி: தினத்தந்தி
பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளைகளுடன் வாழப்பிடிக்காததால், அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவி, சென்னைக்குச் சென்று தங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்து கொண்ட விவரம் அவர்களை போலீசார் மீட்டபோது தெரியவந்தது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மருப்பூரான். லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 27). படிப்பை பாதியில் விட்டவர்களுக்காக அந்தியூர் அருகே நகலூர் முனியப்பன்பாளையத்தில் செயல்படும் அன்னை இந்திரா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இதுபோல் அந்தியூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி கவிதா (17). இவரும் அதே இந்திரா பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். இதனால் ஆசிரியை சரஸ்வதியும், மாணவி கவிதாவும் தோழிகள்போல் பழகி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 23-5-09 அன்று பள்ளிக்கூடம் சென்ற சரஸ்வதியும், கவிதாவும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் 2 பெண்களின் வீட்டாரும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து சரஸ்வதியைக் காணவில்லை என்று அவரது கணவர் மருப்பூரான் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாணவி கவிதாவைக் காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உத்தரவின் பேரில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலும், பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஆசிரியை சரஸ்வதியையும், கவிதாவையும் தேடி வந்தார்கள்.
இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சரஸ்வதி சென்னையிலும், கவிதா திருவாரூரிலும் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்கள்.
"மிஸ்டுகாலால்'' வந்த பழக்கம்
இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தீவிர விசாரணை நடத்தினார்.
சரஸ்வதிக்கும், மருப்பூரானுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு அவரது செல்போனில் ஒரு "மிஸ்டுகால்" வந்தது. சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அந்த மிஸ்டு காலில் பேசியிருக்கிறார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகிக்கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதல்மொழி பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.
கணவனை பிடிக்கவில்லை
இதுபோல் மாணவி கவிதாவும் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர். இதை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலனிடம் இருந்து கவிதாவை பிரித்து வந்து முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அவர்களும் தங்களுக்குள் பிரியம் இல்லாமல் இருந்தனர்.
இதுபற்றி சரஸ்வதியும், கவிதாவும் அடிக்கடி பேசி வந்தனர்.
இதில் தங்களுக்கு பிடிக்காத கணவர்களுடன் ஏன் வாழவேண்டும் என்று அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அப்போது சரஸ்வதி, தனக்கு சென்னையில் பாலாஜி என்ற காதலர் இருக்கிறார், நாம் இருவரும் சென்னை செல்வோம். நான், பாலாஜியை திருமணம் செய்துகொள்கிறேன். உனக்கும் பாலாஜி மூலமாக வேறு ஒரு நல்ல பிடித்தமான வாலிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறேன் என்று கவிதாவிடம் கூறினார்.
இதை கவிதாவும் ஏற்றுக்கொண்டார். அதன்படி கடந்த 23-5-09 அன்று வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்வதாக இருவரும் அவரவர்கள் வீட்டில் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் சென்னைக்கு சென்றனர். அங்கு சென்றதும் கவிதாவை சரஸ்வதி, தனது காதலன் பாலாஜிக்கு அறி முகப்படுத்திவைத்தார்.
ஏற்கனவே திட்டமிட்டபடி சரஸ்வதியும், பாலாஜியும் திருமணம் செய்து கொண்டார்கள். பாலாஜி, திருவாரூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கவிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களும் திருமணம் செய்து கொண்டார்கள்.
மேற்கண்ட விவரங்களை சரஸ்வதியும், கவிதாவும் போலீசாரிடம் தெரிவித்தர்கள்.
இதன்பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து அவர்களையும் வரவழைத்து பேசினார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியையும், கவிதாவையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.
மாணவி கவிதாவை தனது நண்பர் பாலாஜி மூலம் திருமணம் செய்த வாலிபர் பிரபாகரன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். (கற்பே இல்லாத கேசு இது. “கற்பழிப்பு எங்கேயிருந்து வந்தது! இருந்தால் தானே அழிக்க முடியும்!) அவரை நேற்று மாலையில் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
--------------
பார்த்தீர்களா கொடுமையை!
1. மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டால் உடனே அவன் கைது செய்யப்படுவான். ஆனால் மனைவி “கணவனைப் பிடிக்கவில்லை” என்று சொல்லி இன்னொருவனை இழுத்துக்கொண்டு போகலம். அவள் கைது செய்யப்படமட்டாள்
2. அந்தப் பெண் இன்னொருவனோடு ஓடிவிட்டாள். ஆனால் கைது செய்வது அந்த ஆணைத்தான். அதுவும் “கற்பழிப்பாம்”! கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கண்டவனோடு ஓடியவளுக்கு “கற்பு” எங்கிருந்து வந்தது? அதை எப்படி ஒருவன் “அழித்தானாம்”!
விந்தையான சட்டங்கள், நடைமுறைகள்!
மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு முழுமையாக நடந்து முடிந்து விட்டது!
ஆகையால் ஆண்களே, திருமணம் என்னும் பாம்புப் புற்றில் கை வைக்காதீர்கள்!
குறிச்சொற்கள் husbands, lust, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், குடும்பம், செக்ஸ், வெறி
பள்ளி மாணவிகளின் முழு விடுதலை
தற்போது இணையத்திலும், செல்ஃபோன்களிலும், சிடி மூலமாகவும் அதிகம் கண்டு களிக்கப்ப்டும் ஜிலுஜிலு காட்சிகள் பள்ளி மாணவிகள் தங்கள் யூனிஃபார்முடன் ஒரு பயமுமில்லாமல் உல்லாச ஜல்சாக்களில் ஈடுபடும் இயற்கை வீடியோக்கள்தான்! இவை தன்னிச்சையாக அவர்கள் இன்பம் துய்க்கும்போது மறைவிலிருந்து எடுக்கப்படுவதால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெண்கள் பல ஆண் பையன்களுடன் பகிரங்கமாக கலவையிலும் மற்றும் வாய்ப் புணர்வில் ஈடுபடும் காட்சிகளை பார்க்குகளிலும், பீச்சிலும், இன்னும் ஆளரவம் அதிகமில்லாத பாழடைந்த இடங்களிலும், வள்ளுவர் கோட்டம் போன்ற விஸ்தாரமான மண்டபங்களிலும் காணலாம்.
(இது போன்ற ”முழு விடுதலை” பெற்ற பெண்கள் ஒவ்வொருவரையும் ஒரு பைத்தியக்காரன் பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகிறான்! அவன் கதி என்ன!! இது போன்ற பெண் திலகங்கள்தான் மணமானவுடன் கணவனிடம் பணம் கறக்க 498A பொய்க் கேசு போடுவார்கள்!)
வேலூர் போன்ற ஊர்களில் இன்னொருவர் பார்க்கிறார்களே என்பதைப் பற்றிக்கூடக் கொஞ்சமும் கவலைப் படாமல் அவர்கள் பாட்டுக்கு ஜல்சாக்களில் ஈடுபடுவதைப் பற்றி பல பத்திரிக்கைகளில் எழுதியிருந்ததைப் படித்திருப்பீர்கள்.
இந்த லிஸ்டில் இப்போது விழுப்புரமும் சேர்ந்திருக்கிறது.
இந்தச் செய்தியை வாசியுங்கள் (நன்றி - தினமலர்):-
விழுப்புரம் பகுதியில் பள்ளிக்கு செல்வதாக கூறி ஊர் சுற்றும் மாணவிகள். பெற்றோர்களே உஷார்!
விழுப்புரம் நகரத்தை சுற்றி ஏராளமான நகர்கள் உருவாகியுள்ளன. இதற்கு காரணம் கிராமப்பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக விழுப்புரம் நகரத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் குடியேறியுள்ளது தான்.
விழுப்புரம் நகரத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளதால் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் தங்களது மகள்களை படிக்க வைக்க பஸ் மூலமாகவோ அல்லது சைக்கிள் மூலமாகவோ அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அவர்களின் மகள்கள் பள்ளிக்கு செல்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணிப்பது கிடையாது.
இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில மாணவிகள் பள்ளிக் கூடத்திற்கே செல்லாமல் விழுப்புரம் நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் உதாரணத்திற்கு மக்கள் நடமாட்டம் இன்றி போக்குவரத்து இன்றி சாலைகளான பானாம்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம் மற்றும் விழுப்புரம் நகராட்சி பூங்கா போன்ற இடங்களில் பள்ளி சீருடையிலேயே மாணவிகள் சுற்றித் திரிவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
அதேபோல் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவிகளில் ஒரு சிலர் டியூசனுக்கு செல்வதாக கூறி டியூசனுக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.
இன்றைக்கு ஒரு சில மாணவிகளிடத்தில் செல் போன்கள் உள்ளது. செல்போன் இல்லாத மாணவிகளை பார்ப்பதே அரிதாக உள்ளது.அந்த செல்போன்களை அவர்களது பெற்றோர்கள் தான் வாங்கிக் கொடுத்தார்களா அல்லது வேறு யாராவது வாங்கி கொடுத்தார்களா என்பது தெரியவில்லை.
இப்படி பள்ளிக்கு, டியூசனுக்கு செல்லாமல் சுற்றித்திரியும் மாணவிகள் தங்களது வாழ்க்கையை பற்றி எண்ணிப் பார்க்காமலும் பெற்றோர்களை பற்றி சிறிதும் கவலைப்படாமலும் எல்லையை மீறி உலா வருகின்றனர்.
இதற்கு சாட்சியாக மேற்சொன்ன இடங்களில் மாணவிகளின் அந்த அத்துமீறிய காட்சிகளை காணலாம். ஆதலால் பெற்றோர்கள் தங்களது மகள்கள் தினமும் பள்ளிக்கு செல்கிறார்களா, டியூசனுக்கு செல்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
ஒரு சில மாணவிகளின் பாதை மாற்றத்தினால் மற்ற மாணவிகளும் பாதை மாற நேரிடும். ஆதலால் ஒவ்வொரு பெற்றோரும் உஷாராக இருந்து தங்களின் மகள்களுக்கு நல்லதொரு அறிவுரையை கூறி அவர்களின் வாழ்க்கையை நெறிமுறைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஒரு சில மாணவிகளின் நீண்ட நாள் கண்காணிப்புக்கு பின்னர் தான் இதை சுட்டிக்காட்டு கிறோம்).