அரசு செலவில் கூட்டு திருமணத்திற்கு வந்த பெண்களில் சிலர் திருட்டுத் திருமணம் செய்துகொள்ளவிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ஆம். அவர்கள் ஏற்கனவே கர்ப்பமாயிருந்தனர் (ஏனய்யா, அவர்கள் பாவம், யாருடனோ உல்லாசமாக இருந்திருக்கின்றனர். அவர்கள்மேல் என்ன தவறு? அவர்கள் ஆசைப் பட்டார்கள். எந்தப் பாவிகளோ அவர்களுடன் உல்லாசமாக இருந்து அவர்களைக் “கற்பழித்து விட்டான்கள்”.)
அவர்கள் கர்ப்பமாக இருந்ததை மறைத்து பத்தினி வேடம் பூண்டு இன்னொருவனோடு அரசு சிலவில் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்ததை அரசு மருத்துவ சோதனை மூலம் கண்டு பிடித்து திருப்பி அனுப்பி விட்டது.
இதை எதிர்த்து நம் பெண்ணிய வியாதிகள் இப்போது கூச்சல் போடுகின்றன. அதுபோல் மருத்துவ சோதனைச் செய்தது தவறாம். அந்தப் பெண்களின் மனம் பாடுபடுமாம். அவர்களைக் கட்டிக்கொள்ளப் போகும் இளிச்சவாயர்களைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கரையுமில்லை.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
கூட்டு திருமண திட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு கற்பு பரிசோதனையா? ராஜ்யசபாவில் கடும் மோதல்
ஜூலை 14,2009. செய்தி - தினமலர்
புதுடில்லி : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தின் கீழ், திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது. பா.ஜ., காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது.
மத்திய பிரதேசத்தில், "முதல்வர் கன்னியாதானத் திட்டத்தின்” கீழ், ஏராளமான ஏழைப் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதுவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமான பெண்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் ஒவ்வொரு ஜோடிக்கும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டு 5,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், ஏழைப் பெற்றோர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி ஷாதோல் மாவட்டத்தில் 151 ஜோடிகளுக்கு, இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கூட்டுத் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள வந்த அனைத்து பெண்களுக்கும், கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 13 பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து, திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித் தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார், ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. காங்கிரஸ் மற்றும் பா.ஜ., எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் சந்தோஷ் பக்ரோடியா கூறியதாவது:
ம.பி.,யின் கூட்டுத் திருமணத் திட்டம் பாராட்டத்தக்கது. அத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு, கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது; வெட்கப்பட வேண்டியது என்றார். ஆனால், பா.ஜ., கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பெண்கள் கமிஷனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஷாதோல் மாவட்ட கலெக்டர் மறுப்பு : ம.பி.,யில் கூட்டுத் திருமணத் திட்டத்தில் கீழ், கடந்த மாதம் திருமணம் செய்ய வந்த பெண்களிடம் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரை, ஷாதோல் மாவட்ட கலெக்டர் நீரஜ் துபே மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:
கூட்டுத் திருமணத் திட்டத்தில் திருமணம் செய்ய வந்த பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுவது தவறு. அவர்கள் கர்ப்பமாக இருக்கின்றனரா, இல்லையா என்பதைக் கண்டறிய சில மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
திருமணம் செய்ய வரும் பெண்களுக்கு, இதற்கு முன் திருமணம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யவும், தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்கவும் இத்தகைய சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சில பெண்கள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களை திருமணத்தில் பங்கேற்க அனுமதிக்கவில்லை என்றார்.
கன்னித்தன்மையாவது கத்தரிக்காயாவது!
குறிச்சொற்கள் husbands, lust, victims, ஆண்பாவம், கலாசாரச் சீரழிவு, கள்ளக்காதல், வெறி
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
கொஞ்ச நாளில் அரசாங்கமும் "அவலப்" பெண்கள் நல்வாழ்வுத் துறையும் சேர்ந்து புதிய IPC சட்டத்தை உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது - கருவுற்று (PRE-IMPREGNATED) தயாராக இருக்கும் பெண்களை திருமணம் செய்ய மறுக்கும் ஆண்களுக்கு சிறைத்தண்டனை..........
இந்தியாவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்......
ஏனென்றhல் ஆண்களுக்கு மானம் என்பதே கிடையாது என்று முடிவு கட்டிவிட்டார்கள். பொய் 498A கேசு போட்டு ஜெயிலில் அடைக்கலாம், பிறகு கேசு பொய் என்றவுடன் அவர்கள் தங்களது அவமானத்தையெல்லாம் மறந்து விட்டு வாழவேண்டும். பொய்கேசு போட்ட சண்டாளிக்கு எந்த தண்டனையும் கிடையாது. இது தானே நாட்டில் இன்றைய நிலவரம்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க