கல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை

மற்றுமொரு கள்ளக் காதல் கொலை.

கோகுல் என்பவர் மறுமொழியில் கூறியுள்ளதுபோல் விவாகரத்தை சுலபமாகப் பெற முடிந்தால் இத்தகைய கொலைகளையாவது தடுக்கலாம். ஆனல் விவாகரத்து சட்டங்கள் தெளிவாக இல்லை. தற்கால சமூக அமைப்பு, மனநிலை, கண்ணோட்டம், ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டும்.

தவிர நீதிபதிகளும் மனத்தளவில் விவாக ரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.

இதில் உள்ள மற்றுமொரு பிரச்னை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பொறுப்பை யார் கையில் ஒப்படைப்பது போன்றவை. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து சீராக்கினல் இந்த கள்ளக் காதல் கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.

ஆனால் நம் அரசியவாதிகளும் பெண்ணிய அமைப்பாளர்களும் வேறு வேலை இருக்கிறதே! ஆண்களையும் அவனைப் பெற்றவர்களையும் கைது செய்து பணம் கறப்பதிலேயே அவர்கள் குறியாயிருப்பதால் முறையான செயலாகத்திற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, முனைப்பும் இல்லை!

இனி செய்தி:-

-----------------------

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி கள்ளக் காதலனுடன் கைது.

ஆப்பிள் ஜுசில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்

ஓசூர், ஜுன்.29- 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை. செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பக்கம் உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் முனிரத்தினம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பிணமாக கிடந்தவர் முனிரத்தினம்தான் என்று உறுதி செய்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

இதையடுத்து அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்திய போது
இந்த கொலையில் துப்பு துலங்கியது. முனிரத்தினம் சொந்தமாக வேன் வாங்கி அதை அவரே ஓட்டி வந்தார். இந்த வேனை வாங்குவதற்கு கிருஷ்ணகிரி-சென்னை ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து இருக்கும் கிருஷ்ணன் என்கிற முத்து (வயது 29) உதவி செய்துள்ளார்.

அப்போது முனிரத்தினத்தின் வீட்டுக்கு கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றார். இந்த வேளையில் அவருக்கும் முனிரத்தினத்தின் மனைவி காயத்ரிக்கும் (32) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

இதை அறிந்த முனிரத்தினம் தனது மனைவி காயத்ரியை கண்டித்தார். இதனால் தங்களது கள்ளத் தொடர்புக்கு இடைனிறாக இருக்கும் கணவர் முனிரத்தினத்தை தீர்த்துக்கட்ட காயத்ரியும், கிருஷ்ணனும் திட்டம் போட்டதாக தெரிகிறது.

இதன்படி 17.6.09 அன்று இரவு முனிரத்தினத்தை கிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 4 தூக்க மாத்திரையை ஆப்பிள் ஜுசில் கலந்து முனிரத்தினத்துக்கு கொடுத்தார்.

அதை குடித்த முனிரத்தினம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரை கிருஷ்ணன் தனது பட்டறையில் இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டிற்கு சென்றார். தூங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் தலை மற்றும் கை பகுதியில் பெரிய பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொலைக்கு காயத்ரியும் உடந்தையாக இருந்தார்.

பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காயத்ரியிடம் , போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவரை இழந்து துயரப்படுவதாக கூறி அழுது புலம்பினார். இருந்த போதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எப்படியும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்த காயத்ரி தனது கள்ளக் காதலன் கிருஷ்ணனுடன் திடீரென தலைமறைவாகிட்டார். இதையடுத்து அவர்கள் பெங்களூர், மும்பை, பூனா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர்.

காயத்ரி திடீரென தலைமறைவு ஆனதால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூருக்கு திரும்பி வந்த காயத்ரி மற்றும் கிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேர்ந்து முனிரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் நடந்ததை போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தனர்.

5 மறுமொழிகள்:

')) said...

இரண்டு போலீசார் சஸ்பெண்ட்

ஜூலை 03,2009,Dinamalar

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில், இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், பணியாற்றிய ஏட்டு ராஜபாண்டி. இவர் திருட்டு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மனைவியிடம் கள்ள தொடர்பு வைத்துள்ளதாக புகார் வந்து, விசாரணையில் உண்மை என தெரியவந்தது. கமுதி ஆயுதப்படையில், பெண் போலீசாக பணியாற்றி வரும் வெங்கடேஸ்வரி தனது கணவர் மணிகண்டனுடன் சேர்ந்து, மாமியார் லெட்சுமியம்மாளை, தற்கொலைக்கு தூண்டியதில் அவர் இறந்தார். உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர். கமுதி போலீசார் பெண் போலீஸ் மீது வழக்குபதிவு செய்தனர். ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமார், இரண்டு போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

')) said...

இதோ இன்னோரு புது செய்தி...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=498122&disdate=7/3/2009&advt=2

')) said...

இதோ இன்னொரு வரதட்சணை கொடுமை சாவு சென்னையில்...

http://www.dailythanthi.com/article.asp?NewsID=498815&disdate=7/6/2009&advt=2

')) said...

புரட்சி விரைவில் வெடிக்கட்டும்...

இப்போழுது ஒரின சேர்கையாளர்களை தண்டிக்க இருந்த 377 என்ன சட்டம் நீக்கப்பட்டுள்ளது, விரைவில் இவர்கள் திருமணம் செய்ய சட்டம் வந்தாலூம் ஆச்சரியப்படுவதிற்கில்லை.. இதில் இரு பெண்கள் திருமணம் செய்துகொண்டு பிரியநேரும் பொழுது வரதட்சணை கொடுமை சட்டம் இந்த இரு பெண்களில் யார்மீது பாயும்..?

முதலில் வருபவருக்கே முன்னுரிமை இதை நிலைநாட்டுவதுதான் பெண்ணுரிமை...
தொடரட்டும் புரட்சிகள் நம் நாட்டில்...

')) said...

சி.பரமகுரு, மதுரை: திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை முற்று பெறாது என்கின்றனரே...

* கப்ஸா! திருமணமான ஆண்கள் படும் அவஸ்தைகளைத் தான் கண் எதிரே பார்க்கிறோமே... அவர்கள் என்ன முழுமை பெற்று விட்டனரா? முடிந்தால், "பேச்சுலரா' இருந்து வாழ்க்கையை அனுபவியுங்கள்!

----------
வாரமலர் இதழலில் (5/7/2009)வெளியாண அந்துமணி கேள்வி-பதில் பகுதியல வெளியான கேள்வி