பரந்த மனப்பான்மையுடன் மாப்பிள்ளை தேவை!

இதை வாசிப்பவர்களில் யாரேனும் அதுபோல் "பரந்த மனப்பான்மை" கொண்டவர் மட்டுமின்றி, "மனைவி என்பவருக்கு எந்தக் கடமையும் கிடையாது; அவரிடமிருந்து எந்தவித "எதிர்பார்ப்பும்" இல்லை" என்ற கொள்கையும் உடையவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாமே!


ஆனால் இதுவரை நிகழ்ந்துள்ள மண முறிவுகளைக் காணும் போது, சினிமா நட்சத்திரங்களின் திருமணங்கள் பொதுவாக விரைவில் "அழுகும் பொருட்கள்" (They have a very low shelf life!) வகையைச் சார்ந்தவை ஆயிற்றே!

சரி. இப்போது செய்தியைப் பார்ப்போம்!

"'பரந்த மனப்பான்மையுடன்' எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மணமகன் வேண்டும்" - நடிகை சங்கவி பேட்டி


'அமராவதி' படத்தில், அஜீத் ஜோடியாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர், சங்கவி. `பொற்காலம்,' `ரசிகன்,' `கோயம்புத்தூர் மாப்பிள்ளை' உள்பட ஏராளமான தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து சங்கவி 100 படங்களை தாண்டி விட்டார். இவருக்கு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதுபற்றி நிருபரிடம் சங்கவி கூறியதாவது:-

"சினிமாவில் எனக்கு நிறைய தோழிகள் இருக்கிறார்கள். மீனா, ஸ்ரீதேவி, மகேஸ்வரி, விந்தியா, ரம்பா, சினேகா, சங்கீதா, சந்தியா ஆகிய அனைவரும் என்னிடம் நட்புடன் பழகி வருகிறார்கள். இவர்களில் ரம்பா, சினேகா, சந்தியா ஆகிய மூன்று பேர்களை தவிர, மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதனால் எங்க வீட்டில், எனக்கும் மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருக்கிறார்கள்.

எனக்கு வரப்போகிறவர், எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவராக இருக்க வேண்டும். நல்லவராக, என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராக இருக்க வேண்டும். "நான் ஒரு நடிகை'' என்று குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்காமல், பரந்த மனப்பான்மை உடையவராக இருந்தால் நல்லது.
அதோடு நிறைய படித்தவராக இருந்தால் ரொம்ப நல்லது. சினிமா உலகை சேர்ந்தவராக இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்து இருப்பவராக இருக்கக்கூடாது.

இவ்வாறு சங்கவி கூறினார்.
செய்தி: தட்ஸ்தமிழ்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

for details

http://498a.org/

Anonymous said...

eval palapearidam paduppal aanal evalukku nermaiyaan kanavan vendum, vetkkakedu evalaium kattikka oru muttaal erukkiraan enpathu thaan unmai.