எங்கெங்கு பார்த்தாலும் 498A

பட்டணத்துப் பெண்கள்தான் படிக்கும்போதே முழு விடுதலை அடைந்து, ”மணமானபின் கணவனையும் மாமியார், மாமனாரையும் நான் ஏன் மதிக்க வேண்டும், என் இஷ்டம்போல் இருப்பேன்” என்று எக்காளமிட்டு, அது போதாதென்று அவ்ர்கள்மேல் 498A சட்டத்தையும் ஏவிவிட்டு, அவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்த்து தன் வாழ்க்கையில் பெரு வெற்றியடைந்து விட்டதாக இருமாந்து, பின் அவர்களிடமிருந்து ஒரு பெருந்தொகையை கொள்ளையடித்தபின் அந்தப் புகாரை வாபஸ் வாங்கும் (quashing the case or settling it otherwise) நடைமுறைதான் இதுகாறும் நிகழ்ந்து வந்தது.

தற்போது இந்த 498A சீக்கு நகர்ப்புறங்களைத் தாண்டி, இழுத்தடிச்சான்பட்டி, தெக்கனாம்பட்டி, ஊத்தாங்கால் மங்கலம் போன்ற பட்டி தொட்டி வரை வியாபித்து செழித்து வளர்ந்து வருகிறது. அந்தந்த ஊர்களில் வக்கீல்கள், தரகர்கள், புதுமைப் பெண்கள் கொண்ட குழுக்கள் உருவாகி, அப்பாவி கணவன்மார்கள் மேல் பொய் வழக்கு போட்டு நாலு காசு கொள்ளையடிக்க வேண்டாமா! இதுதானே காந்தி கனவு கண்ட கிராமப்புற வளர்ச்சி!
இனி செய்தி:

திண்டிவனம் அருகே கொல்லார் கிராமத்தில் உள்ள பள்ளத்தெருவை சேர்ந்தவர் ரதி (25). இவருக்கும் திண்டிவனம் ரோஷனை பொன்னையன் நகரை சேர்ந்த தாஸ் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 27.8.04 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக தாஸ் வீட்டார் 10 பவுன் நகையும், இரு சக்கர வாகனத்தையும் வரதட்சணையாக கேட்ட னர். அப்போது ரதியின் வீட்டார் 7 பவுன் நகையும் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 20 ஆயிரம் பணமும் கொடுத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தாசின் தந்தை நந்தன், தாயார் சந்திரா, சகோதரி செங்கேனி ஆகியோர் சேர்ந்து தாசை தூண்டிவிட்டு ரூ.50 ஆயிரமும், 10 பவுன் நகையும் வாங்கி வரும்படி ரதியை வரதட்சணை கொடுமை செய்தனர்.
இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரதி புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மறுமொழிகள்:

')) said...

ஐயோ! இந்த கொடுமை எப்போ தீரும்... இது போல பொய்கேசுல எத்தனையோபேரு தற்கொலை செய்து கொண்டதையும், தலைமறைவு வாழ்க்கை (ஏன் ஏற்றால் கொய்யால இந்த கேசு கோர்ட்டுக்க வர சுமார் 2 அல்லது 3 வருசம் ஆகும் இதுவரைக்கும்), வேலைஇழந்து நிம்மதி இழந்து சுந்திக்கொண்டிருக்னிறனர்..

என்னைக்கு விடியல்காலம் வரப்போகுதொ தெரியல!!!!!!!!!!!!!

')) said...

நாடு முழுவதும் பொய் 498A கேசுகள் கேன்ஸர் போல பரவவேண்டும். அப்பொழுது தான் இந்தியா முழு வளர்ச்சியடைந்த நாடாக சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கும். அதற்காக கலியுக கண்ணகிகள் முழு முயற்சி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

')) said...

எட்டு மாவட்டங்களில் ஒன்றரை ஆண்டில் 204 பேர் கொலை: கள்ளக்காதல், குடும்பத் தகராறு காரணம்....


http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11415

படிங்கய்யா இந்த நியுச

')) said...

இதொ இன்னொர நியுஸ்...


"எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர்" சென்னை ஐகோர்ட்டில் இளம் பெண் கதறல்

http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=3551

')) said...

1.கள்ளக்காதல் எதிரொலி; மனைவி கொலை: கணவன் கைது

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Chennai#198663

ஐயா புண்ணிவான்களே சட்ட மேதைகளே (??) ஒரு நாளைக்கு நலஞ்சி கேசாவது கள்ளக்காதல் கொலை, கணவன் ஒட்டம், மனைவி ஒட்டம் ன்னு பேப்பர்ல செய்தி வருது... தயவு செய்து டைவர்ஸ் போன்ற சட்டங்களை எளிதாக்குங்கள்... கொஞ்சமாவது உயர் பலி கொறைய வாய்புள்ளது...