கள்ளக்காதலன் கதையும் கந்தல்தான்!

தாம்பரத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த மோகன் என்பவரின் மகள் இளவரசி (வயது 25). இவரது கணவர் இஸ்ராத். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இளவரசி தாம்பரத்தில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த டிராவல்சுக்கு குரோம்பேட்டையை சேர்ந்த இன்சூரன்ஸ் ஏஜண்டான குருமூர்த்தி (வயது 29) அடிக்கடி வருவார். அப்போது இளவரசிக்கும், குருமூர்த்திக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதுபற்றி இளவரசியின் கணவர் இஸ்ராத் தட்டிக்கேட்டபோது குருமூர்த்தி அவரை அடித்து விரட்டிவிட்டு தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் இளவரசியுடன் வசித்து வந்தார்.

குருமூர்த்தி ஏற்கனவே தங்கலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டு சுபா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து அவருடன் குரோம்பேட்டையில் குடித்தனம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளன.

இந்த நிலையில், `பாலிசி' எடுக்க வருபவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளவரசியை குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளவரசி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணையின் போது இளவரசியின் `டைரி' சிக்கியது. அதில், "நான் பத்தினியாக இருந்தேன் (ஆகா! பத்தினிகள்தான் எத்தனை விதம்!!). என்னை கெடுத்து விட்டாய், உடலால்தான் கெட்டுள்ளேன், உள்ளத்தால் கெடவில்லை. சுபா மீதுதான் உனக்கு பாசம் உள்ளது. உன்னைவிட என் கணவர் இஸ்ராத் எவ்வளவோ நல்லவர். உனக்கு குழந்தைகள் உள்ளன. என் பாவம் உன்னை சும்மாவிடாது'' என்று எழுதப்பட்டு இருந்தது.

கள்ளக்காதலன் கைது

இதைத்தொடர்ந்து, இளவரசியின் தற்கொலைக்கு காரணமான குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

(செய்தி - தினமலர்)

11 மறுமொழிகள்:

')) said...

சார் இந்த கேஸ் தற்கொலையை தூண்டிய செக்‌ஷனில்தான் போடப்பட்டது. Sec 498A of IPC-யின் கீழ் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

எனக்குத் தெரியும் டோண்டு இதைச் சொல்வாரென்று!

இந்த வேற்றுமையை உடனே சுட்டிக் காட்டுவதில் அவர் என் இவ்வளவு வேகம் காட்டுகிறார்? இந்த வேகம் பல பெண் தெய்வங்கள் பொய்க் கேசு போட்டு குழந்தைகளையும் வயதான பெற்றோர்களையும் பாடாய்ப் படுத்துவதைப் பற்றி எழுதுவதில் காணோமே என்று யோசித்தால், அவர் தவரான வழியில் செல்லும் பெண்கள் பக்கம்தான் பேசுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது!

கள்ளக் காதலுக்கும் வரதட்சணைக் கொடுமை பொய்க்கேசுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இதுபோன்ற 498A பொய்க் கேசுகளில் கணிசமான சதவீதம் கேசுகள் கள்ளத் தொடர்பினால் விளைந்தவைதான்!

ஐயமிருந்தால் டி.வி நிகழ்ச்சியில் காட்டப்பட்ட கலைச்செல்வன் கேசை கேட்டுப் பாருங்கள்!

பொய்க் கேசு போட்டு காசைக் கொள்ளயடிக்க ஏதேனும் காரணம் வேண்டுமே? அதுதான் பெரும்பாலும் கள்ளக் காதல்!

')) said...

மறுபடி தவறாக புரிந்து கொண்டீர்கள். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிறதுதான். ஆனால் அதற்காக தவறான உதாரணங்களெல்லாம் தந்தால் உங்கள் கேசுதான் வீக்காகிறது.

இந்த கேசில் செக்‌ஷன் 498ஏ வர வாய்ப்பேயில்லை. அது சட்ட பூர்வமான திருமணத்துக்குத்தான். அது கூட உணராது இம்மாதிரி எழுதினால் என்ன செய்வது. நீங்கள் வக்கீலாக இருந்தால் இம்மாதிரியெல்லாம் ஆர்க்யூ செய்தால் கட்சிக்காரன் அம்போதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

ஐயோ பாவம், டோண்டு!

கொஞ்சம் இங்கு நான் எழுதுவதைப் படித்து, சிந்தித்துப் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வில் எந்த செக்ஷனில் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றோ, அது 498A செக்ஷன்தான் என்றோ நான் எங்கும் கூறவில்லை. இதன் மையக் கருத்து இந்தக் கேசை வாதாடும் ஒற்றை நேர்கோட்டில் அமைந்தது அல்ல.

ஆனால், இதுபோன்ற கள்ளக் காதல்கள்தான், பல 498A கேசுகளுக்கு ஆதாரக் கருவியாக, உந்துதலாக, எந்தவித கூச்சமோ, அச்சமோ, குற்றவுணர்வோ இன்றி கூசாமல் பொய்ப் புகார் கொடுக்கத்தூண்டும் மனப்பான்மையின் ஊற்றுக் கண்ணாக இந்த "கள்ளக் காதல் வெறி" அமைகிறது என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.

இதுபோன்ற கள்ளகாதல்கள் மிகவும் மலினமாகி ஊரெங்கும், வீதியெங்கும் பரவி ஒட்டு மொத்த சமூகமே கலாசாரச் சீரழிவை எட்டும்போது இத்தகைய பொய்க் கேசுகள் இன்னமும் பெருமளவில் பெருகி ஒரு குடும்பத்தில் குறைந்த பட்சம் இரண்டு பேராவது 498A டாலர் அணிந்து கொண்டு காவல் நிலையத்திற்கும், சிறைச்சாலைக்கும், கோர்ட்டுக்குமாய் நடையாய் நடந்து கொண்டிருக்கும் காலம் சீக்கிறமே வரும். அதிலிருந்து எந்த டோண்டுவும் தப்ப முடியாது.

ஆகையால் ஐயா, டோண்டு அவர்களே, நீங்கள் ஏதோ பெரிய மனது பண்ணி "ஆமாம், 498A கேசுகள் நடக்கின்றன" என்பதை ஒப்புக் கொள்ளவேண்டாம். உங்களைவிட பல மடங்கு தீவிர பெண்ணியவாதம் பேசிய பல எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் 498A -வால் தீண்டப்பட்டு பரிதாபமாக பல லட்சங்களைக் கொட்டி அழுத கேசுகளைக் கண்டிருக்கிறேன். எங்கள் Helpline டெலிஃபோன்கள் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கின்றன. துபாயிலிருந்தும், அந்தமானிலிருந்தும் பாதிக்கப்பட்டவர் ஓலமிடுக்க் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு இந்தக் கோலம் வரும் வரையில் இப்படித்தான் Nitpicking செய்து கொண்டு கெக்கேலி கொட்டிக் கொண்டிருப்பீர்கள்.

ஆகையால் உங்களை இது தீண்டாமலிருக்கட்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டு படுக்கைக்குச் செல்லுங்கள். ஏனெனில் இதில் வகை தொகை ஏதும் கிடையாது யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானலும் சிக்க வைக்கலாம்.

உஷாராயிருங்கள்!

')) said...

//இந்த இடுகையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வில் எந்த செக்ஷனில் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றோ, அது 498A செக்ஷன்தான் என்றோ நான் எங்கும் கூறவில்லை.//
அது 498ஏ செக்‌ஷனில் இல்லை என்றும்தான் கூறவில்லை.

//பாலிசி' எடுக்க வருபவர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளவரசியை குருமூர்த்தி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளவரசி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.//

இப்பதிவில் உள்ள கள்ளக்காதல் கேசில் சம்பந்தப்பட்ட ஆண் பெண் இருவருமே குற்றவாளிகள். பெண் இறந்து விட்டாள். அவளை உங்களால் தண்டிக்க முடியாது. போகும்போது ஆணை போட்டு கொடுத்து விட்டாள். அவ்வளவே. கள்ளக்காதல் அபாயகரமானது என்பது ஆணுக்கு தெரிந்திருக்க வேண்டும். இப்போது அவருக்கு தெரிந்திருக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

')) said...

திருவாளர் டோண்டு அவர்களே,

1. //இந்த கேசில் செக்‌ஷன் 498ஏ வர வாய்ப்பேயில்லை. அது சட்ட பூர்வமான திருமணத்துக்குத்தான்.//

498A மற்றும் வரதட்சணை கேசுகள் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் வாழும் பெண்களும பயன்படுத்தும் உரிமை உள்ளதாக சமீபத்தில் கோர்ட்டில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.

2.//உன்னைவிட என் கணவர் இஸ்ராத் எவ்வளவோ நல்லவர்.//

அப்படி என்றhல் அந்த கணவருக்கு கிடைக்கப்போகும் நீதி என்ன? இதுவே அந்த பத்தினி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து கணவர் அதைக் தட்டிக் கேட்டிருந்தால் அவ்வளவு தான் 498A பாய்ந்திருக்கும் இது தான் இப்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

3. இது போன்ற அநீதிகளை வெளியே கொண்டுவருவதற்காகத் தான் இ.பி.கோ498A போன்ற சில தியாகிகள் தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டு இது போன்ற பிளாக்கை (Blog) எழுதி வருகிறhர்கள். ஏதோ சில பிளாக்கர்களைப் (Blogger) போல பொழுது போக்கிற்காக எழுதப்படுவதல்ல இந்த செய்திகள். சற்று சிந்தியுங்கள்.

4. உங்களைப் போன்ற மனப்பான்மையுடைய நீதிபதிகள் சிலர் இருப்பதால் தான் இது போன்ற தீவிரவாதம் கண்மூடித்தனமாக ஆதரிக்கப்படுகிறது.

5. எல்லா நீதிபதிகளும் இதே மனப்பான்மையுடன் இருந்திருந்தால் நாடு எப்பொழுதோ முன்னேறியிருக்கும். எப்படி என்கிறீர்களா? 50 சதவீத ஆண்கள் பொய் கேசுகளில் சிக்கி கண்மூடித்தனமான நீதிபதிகளின் ஒருதலைப்பட்சமான தீர்ப்புகளால் சிறையில் இருந்திருப்பார்கள். 25 சதவீத ஆண்கள் பொய் கேசு பயத்தால் திருமணமே வேண்டாம் என்று இருந்திருப்பார்கள். மீதி இருப்பது தவறhன சிந்தனைப் போக்குள்ள அரைகுறையான பெண்ணியவாதி அடிமைகள். பிறகென்ன நாட்டில் மக்கள் தொகை பெருகியிருக்காது. வேலையில்லா திண்டாட்டமும் இல்லை. நாடு நன்றhக சுபிட்சமாக இருக்கும் அல்லவா?

இவையெல்லாம் குறை கூறுவதற்காக எழுதப்பட்டதல்ல. உங்கள் சிந்தனைக்காக மட்டுமே.

தனி மனிதன் ஒருவனுக்கு இந்த சுதந்திர நாட்டில் உணவு கிடைக்கவில்லையென்றhலும் பரவாயில்லை, சரியான நீதி கிடைக்க வேண்டும் அது தான் இந்த செய்திகளின் நோக்கம்.

')) said...

கள்ளக்காதல் இருவர் சம்பந்தப்பட்டது என்பதாலும், வாதி தொடர்ந்திருக்கும் வழுக்கு பெண்ணின் மீது மட்டும் குற்றம் சுமத்துவதாலும், பெண் சொல்லி தான் ஆண் செய்தான் என்றால் ஆணுக்கு எங்கடா புத்தி போச்சு என்ற கேள்வி வருவதாலும்!

இந்த கேஷ் தள்ளுபடி செய்யப்படுகிறது!

')) said...

/
வால்பையன் said...

கள்ளக்காதல் இருவர் சம்பந்தப்பட்டது என்பதாலும், வாதி தொடர்ந்திருக்கும் வழுக்கு பெண்ணின் மீது மட்டும் குற்றம் சுமத்துவதாலும், பெண் சொல்லி தான் ஆண் செய்தான் என்றால் ஆணுக்கு எங்கடா புத்தி போச்சு என்ற கேள்வி வருவதாலும்!

இந்த கேஷ் தள்ளுபடி செய்யப்படுகிறது!
/

கள்ள காதலோ கருமாந்திர காதலோ கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணி தொலைக்க வேண்டியதுதானே இல்ல டைவர்ஸ் செஞ்சிட்டு அந்த கருமத்தை பண்ண வேண்டியதுதானே.

')) said...

//கள்ள காதலோ கருமாந்திர காதலோ கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணி தொலைக்க வேண்டியதுதானே இல்ல //

சின்னபுள்ள தனமாவுல்ல இருக்கு!

முன்னாடி பண்ண அது எப்படி கள்ளக்காதல் ஆகும்!
டைவர்ஸ் பண்ணிட்டு பண்ணாலும் நல்லகாதல் தானே!

ஒன்னும் பண்ண முடியாது தலைவா!
புரிந்துணர்வு இல்லாத குடும்பங்கள் அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்!

பொண்டாட்டி கூட பத்து நிமிசம் உட்கார்ந்து பேச மாட்டாய்ங்க, ஃப்ரெண்ட்ஸ் கூட நாள் கணக்கா பேசுவாய்ங்க! அப்புறம் எவன் பேசுறானோ அவன் கூட தான் போவா பொம்பளை!

முடிவா சொல்ல வர்றது கள்ளக்காதல் வெறும் உடலுறவுக்காக மட்டும் ஆரம்பிப்பதல்ல!

')) said...

/
வால்பையன் said...

சின்னபுள்ள தனமாவுல்ல இருக்கு!

முன்னாடி பண்ண அது எப்படி கள்ளக்காதல் ஆகும்!
டைவர்ஸ் பண்ணிட்டு பண்ணாலும் நல்லகாதல் தானே!

ஒன்னும் பண்ண முடியாது தலைவா!
புரிந்துணர்வு இல்லாத குடும்பங்கள் அதிகரிக்க இதுவும் அதிகரிக்கும்!

பொண்டாட்டி கூட பத்து நிமிசம் உட்கார்ந்து பேச மாட்டாய்ங்க, ஃப்ரெண்ட்ஸ் கூட நாள் கணக்கா பேசுவாய்ங்க! அப்புறம் எவன் பேசுறானோ அவன் கூட தான் போவா பொம்பளை!

முடிவா சொல்ல வர்றது கள்ளக்காதல் வெறும் உடலுறவுக்காக மட்டும் ஆரம்பிப்பதல்ல!
/

அப்ப ஆபீஸ், வேலைன்னு இருக்க பெண்களின் கணவர்கள் இப்படி போலாமா?

எவ எவன்கூட வேணா போகட்டும் legal bond-ஐ அத்துவிட்டுட்டு போகலாமே அதுதான் சொல்ல வர்ற மேட்டர்.
:)

')) said...

//அப்ப ஆபீஸ், வேலைன்னு இருக்க பெண்களின் கணவர்கள் இப்படி போலாமா?

எவ எவன்கூட வேணா போகட்டும் legal bond-ஐ அத்துவிட்டுட்டு போகலாமே அதுதான் சொல்ல வர்ற மேட்டர்.//


மேலை நாடுகளில் இப்போ அந்த கலாச்சாரம் தான்! பிடிக்கலையா போய்கிட்டே இரு! ஆனா நம்ம சமூகம் அப்படி ஒரு பெண் போன அவளுக்கு குத்தும் முத்திரை தேவிடியா!

ஒரு சில நிமிடங்கள் போதும், பெண்ணின் மனதை ஆக்கிரமிக்க, ஆனால் புருஷனுக்கு அந்த ஒரு சில நிமிடங்கள் கிடைக்காத போது வேறு என்ன செய்ய முடியும்!

கல்யாணம் ஆன புதிதில் இருக்கும் அதே காதல் புருஷனுக்கு விட்டு போவதும் ஒரு காரணம் தான்!

வேலை செய்வது பெரிய காரணமல்ல!
பெண்கள் வீட்டிலும் வேலை தான் செய்கிறார்கள்!