கள்ளக் காதலனுடன் தனிக் குடுத்தனம்!

கள்ளத்தொடர்பால் கணவனுடன் சேர்ந்து வாழ மறுப்பு. நண்பனுக்கு மனைவியை விட்டுக்கொடுத்த கணவன்!

ஈரோடு, ஜுலை 24- 2009

காதலித்து திருமணம் செய்த மனைவியை, அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பனுக்கு கணவர் விட்டுக்கொடுத்தார். அவர்களுடன் தங்கள் இரு குழந்தைகளையும் அவர் அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் அருகே உள்ள கனிராவுத்தான் குளத்தைச் சேர்ந்தவர், கார்த்திக் (வயது 32). தறிப்பட்டறை தொழிலாளி. வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர், பார்வதிபிரியா (27).

அவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரேவதி (8), ரஞ்சிதாதேவி (3) என்று 2 மகள்கள் உள்ளனர்.

கார்த்திக்கின் நண்பன் மணிவாசகம் (32). இவர் அடிக்கடி கார்த்திக்கின் வீட்டுக்கு வந்து செல்வார். அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கார்த்திக் இல்லாத சமயத்தில் மணிவாசகம் அடிக்கடி வீட்டிற்கு வரத்தொடங்கினார்.

இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். இந்த தொடர்பு 2 ஆண்டுகளாக நீடித்தது. இதை அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மனைவியை கார்த்திக் கண்டித்தார். அதை மீறி அவர்கள் கள்ளத்தொடர்பு நீடித்ததால், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், பார்வதிபிரியா மணிவாசகத்துடன் தனிமையில் இருந்ததை ஒரு நாள் கார்த்திக் பார்த்துவிட்டார். அதனால் மனைவியை கடுமையாக கண்டித்தார். ஆனால், பார்வதிபிரியாவுக்கு கள்ளக்காதலனை மறக்க முடியவில்லை. அதனால் பார்வதிபிரியா காதலனுடன் தனிக்குடித்தனம் போக முடிவு செய்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர் மணிவாசகத்துடன் வசித்து வந்தார். அதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் செய்தார்

இந்த புகாரின் பேரில் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கார்த்திக் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவருடன் சேர்ந்து வாழ பார்வதிபிரியா மறுத்துவிட்டார். மணிவாசகத்துடன் தான் வாழ்வேன் என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
இதனால், மனைவியை நண்பனுக்கு விட்டுக்கொடுக்க கார்த்திக் முடிவு செய்தார். அதன்படி, கணவன்-மனைவி இருவரும் மணமுறிவு ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்திட்டு பிரிந்து சென்றனர். குழந்தைகள் இருவரையும் பார்வதிபிரியாவுடன் அனுப்பி வைத்துவிட்டு வருத்தத்துடன் கார்த்திக் வீடு திரும்பினார்.

============

அப்பாடி, விட்டது சனி, கார்த்திக்குக்கு! இல்லாவிடில் அந்த பெண் குலத்திலகம் அவன்மேல் வரதட்சணை வழக்கு (Sec 498A of IPC) போட்டிருப்பாள். உடனே அவன், அவனது பெற்றோர், உறவினர் என்று ஒரு பட்டாளமே கைது ஆகியிருக்கும்!

இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வ சாதாரணமாக நடக்கும். எனெனில் கிளர்ந்து எழும் செக்ஸ் உணர்வுகளை திருப்தி செய்து கொள்வதுதான் வாழ்வின் ஒரே மையக் குறிக்கோள் என்றும், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலம், பெற்றோர் நலவாழ்வு, உன்னதக் கோட்பாடுகள் கொண்ட வாழ்வு முறை என்பதெல்லாம் வெறும் குப்பை என்ற தீர்மானமான கருத்துக்கு நம் பெண்குலத்தை இழுத்துச் சென்று விட்டனர். மேலும் அத்தகைய மனப்பான்மையையும் அதுசார்ந்த செயல்பாடுகளையும் நியாயப்படுத்தும் வகையில் சட்டங்களையும் இயற்றிவிட்டனர்.

ஒரு மனைவி சோரம் போனால் அவளைத் தண்டிக்க சட்டமேயில்லை. ஆனால் ஒரு கணவன் தவறாகப் போனான் என்று ஒரு மனைவி சொன்னால் போதும் - எத்தகைய நிரூபணமும் தேவையில்லை. அவள் சொல் ஒன்றே போதும் - அந்த கணவன் குற்றவாளியாக தீர்மானிக்கப்படுவான். இதுதான் இந்திய சட்டங்களின் கண்ணோட்டம்.

மேலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்து ஏமாற்றி விட்டான் என்று ஒரு பெண் சொன்னால் போதும். உடனே அது உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த ஆணைக் குற்றவாளியாக பதிவு செய்து கைது செய்துவிடுவார்கள். வேறு எந்த சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. அந்த ஆணின் கூற்று எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில் இந்தியச் சட்டங்களின் பார்வையில் ஒரு ஆண்மகன் பிறந்தவுடனேயே குற்றவாளியாகி விடுகிறான்! அத்துடன் அவன் பிறந்த கணத்திலிருந்து அவனைப் பெற்றவர்களும் அவனது உடன் பிறப்புகளும் குற்றவாளியாகி விடுகின்றனர். எந்த நேரத்திலும் அவர்கள் கைது செய்யப்படலாம். எந்தக் குற்றமும் செய்யவேண்டியதில்லை. யாரோ ஒரு பெண் அவர்கள் மீது குற்றம் சுமத்தினால் போதுமானது.

நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய ஆண்கள் அனைவரும், "திருமணம்" என்று சொன்னாலேயே தெனலிராமன் வளர்த்த பூனையைப் போல் காத தூரம் ஓடும் நாள் வந்துவிடும்!

1 மறுமொழி:

')) said...

ஆம் இது அப்பட்டமான உண்மை... 3 பக்க வெள்ளப்பேப்பர்ல ஒரு குடும்பத்தையே அழிச்சி எல்லாரையும் உள்ள தள்ளி பக்கத்துவிட்டுக்காரன் அடுத்தவிட்டுக்காரன் எல்லாரையும் உள்ள புடிச்சி போடாலாம் 498ஏ என்கிர வரதட்சணை கொடுமை சட்டத்தால்... இதுல பெரிய காமடி என்னான்ன "குரங்கு கிட்ட பஞ்சாயத்துக்க போன பூணை கதையா" ஆகிவிடும்... இன்னும் கொஞ்ச நாட்களில் அப்பன் பேரு தெரியாம பல குழந்தைகள் நம் நாட்டில் வாழும் நிலை ஏற்படும்