மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தாய் கள்ளக்காதலனுடன் கைது

நெஞ்சை உறைய வைக்கும் கொடூர சம்பவம்:


மகனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த தாய் கள்ளக்காதலனுடன் கைது

மதுரை, ஜுலை.30- 2009. செய்தி: தினத்தந்தி.

கள்ளக்காதலை கண்டித்த மகனை கொலை செய்து பிணத்தை துண்டு, துண்டாக அறுத்து பிரிட்ஜில் வைத்து வெளியே வீசிய, தாய் கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு அவருடைய பிணம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல இடங்களில் வீசப்பட்டது. போலீசாருக்கு பெரும் சவாலாக விளங்கிய இந்த வழக்கில் சமீபத்தில் துப்பு துலங்கி கொலையாளி கைது செய்யப்பட்டான்.
சென்னை நகரையே உலுக்கிய இந்த கொடூர படுகொலை போல மதுரையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த தாய் தனது மகனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து ஒவ்வொரு பாகமாக வெளியே எறிந்துள்ளார்.
கேட்கும் போதே நெஞ்சை நடு, நடுங்க வைக்கும் இந்த பயங்கர கொலை தமிழகத்தையே அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
மதுரை மீனாட்சி நகர் முதல் தெருவைச்சேர்ந்தவர் மேரி (வயது 47). இவருடைய கணவர் துரைராஜ் 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் பார்த்து வந்த பினின் வேலை மேரிக்கு கிடைத்தது. பழங்காநத்தம் பகுதியில் உள்ள காதிகிராப்டில் மேரி பினினாக வேலை பார்த்து வந்தார்.
மேரிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்று விட்டனர். மேரியின் ஒரே மகன் கிருஷ்ண மூர்த்தி (வயது 24). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவனும் மனைவியும் சிவகாசியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணமான 2 மாதத்திலேயே இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவி தீக்குளித்து இறந்து விட்டார். இதனால் கிருஷ்ண மூர்த்தி மதுரைக்கு திரும்பி வந்து தாய் மேரியுடன் வசிக்க ஆரம்பித்தார்.
மேரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. மதுரை எஸ்.எஸ். காலனி பிள்ளையார் கோவில் தெருவில் எலக்ட்ரிக் கடை வைத்திருக்கும் பாட்சா (வயது 38) என்பவருடன் மேரிக்கு தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
மேரியின் வீட்டுக்கு பாட்சா அடிக்கடி வர ஆரம்பித்தார். இந்த விஷயம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வந்தது. அவர் தாயை கண்டித்தார். "இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கம் தேவையா? அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்டாலே அவமானமாக இருக்கிறது'' என்று சத்தம் போட்டார்.
ஆனாலும் மேரியால் தனது கள்ளத்தொடர்பை கை விட முடிய வில்லை. மகன் மீண்டும் மீண்டும் கண்டித்ததால், `இவன் உயிரோடு இருப்பதால்தானே இடைனிறாக இருக்கிறது. இவனை தீர்த்துக்கட்டி விட்டால் என்ன' என்று விபரீதமாக யோசிக்க ஆரம்பித்தார் மேரி. காதலர் பாட்சாவிடம் தனது திட்டத்தை கூறினார். அவரும் சம்மதம் தெரிவித்தார். சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருவரும் காத்திருந்தனர்.
தலையணையால் அமுக்கி கொலை
கடந்த சனிக்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சாப்பிட வந்தார். உடனே மேரி செல்போனில் பாட்சாவுடன் தொடர்பு கொண்டு, "என் மகன், வீட்டுக்கு வந்திருக்கிறான். அவனை கொலை செய்ய இதுதான் நல்ல நேரம் உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்று அழைத்தார். பாட்சாவும் மேரியின் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.

பாட்சாவை பார்த்ததும் கிருஷ்ண மூர்த்திக்கு கடும் கோபம் ஏற்பட்டது. "இங்கு வராதே என்று பல முறை சொல்லியும் ஏன் வந்தாய்'' என்று சத்தம் போட்டார். தாயையும் கண்டித்தார்.
உடனே மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ண மூர்த்தியை தாக்கினார்கள். தலையணையால் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் வைத்து அமுக்கினார்கள். மூச்சு விட முடியாமல் துடிதுடித்த அவர் சிறிது நேரத்தில் உயிர் இழந்தார்.

கிருஷ்ண மூர்த்தியின் உடலை என்ன செய்வது என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர். மூட்டையாக கட்டிவெளியே கொண்டு போனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகப்படுவார்களே என்று பயந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கிருஷ்ணமூர்த்தியின் உடல் வீட்டுக்குள்ளேயே இருந்தது. அன்று மாலை மேரியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து மேரியிடம் கேட்டனர். அதற்கு அவர் வீட்டில் எலி செத்துக்கிடக்கிறது, பூனை செத்துக்கிடக்கிறது என்று பொய் சொல்லி சமாளித்தார்.
திங்கட்கிழமை வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது துர்நாற்றம் அதிகமாகவே ஊதுபத்தி, சாம்பிராணி கொளுத்தி வைத்தார்.
உடலை துண்டு துண்டாக வெட்டினர்
இனிமேலும் துர்நாற்றத்தை மறைக்கமுடியாது என்பது தெரிய வந்ததும் அடுத்து என்ன செய்யலாம் என்று மேரியும் பாட்சாவும் யோசித்தனர்.
உலகத்தில் எந்த தாயும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு கொடூர எண்ணம் மேரியின் மனதில் உருவானது. மகனின் உடலை துண்டு துண்டாக வெட்டி யாருக்கும் தெரியாமல் பல இடங்களில் வீசி எறிந்து விடலாம் முடிவு செய்தார்.
திங்கட்கிழமை இரவு மேரியும் பாட்சாவும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் உடலை அரிவாளால் துண்டு துண்டாக வெட்டினார்கள். முதலில் கழுத்தை தனியாக அறுத்தனர். அதன்பிறகு 2 கைகளையும் வெட்டி எடுத்தார்கள். கால்களையும் தனித்தனியாக துண்டித்தனர்.
காய்கறிகளை தனித்தனி பிளாஸ்டிக் பைகளில் கட்டி வைப்பது போல 2 கைகளையும் தலையையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு பார்சலாக கட்டினார்கள். கால்களை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டினார்கள்.
உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு வீட்டில் இருந்த பிரிட்ஜை பார்த்ததும் புது யோசனை உதித்தது. உடலை எடுத்து பிரிட்ஜில் வைத்து மூடினார்கள்.
அதன் பிறகு மேரியும் பாட்சாவும் 2 பார்சல்களையும் எடுத்துக்கொண்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்களுடன் பாட்சாவின் நண்பர் ஜோசப் ஆண்டனி என்பவரும் சேர்ந்து கொண்டார். பார்சல்களை வீசுவதற்கு சரியான இடத்தை தேடி அலைந்தனர்.
மதுரை எல்லீஸ் நகர் ஆக்கி மைதானம் அருகே உள்ள கிருதுமால் நதி ஓடையில் தலை, கைகள் இருந்த பார்சலை வீசினார்கள். அங்கிருந்து பொன்மேனி பஸ் டெப்போவுக்கு எதிரே உள்ள கால்வாய்க்கு சென்றனர். கால்கள் இருந்த பார்சலை அங்கு வீசி விட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.
செவ்வாய்க்கிழமை மேரியின் வீட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. உடனே மேரி செண்ட் பாட்டில் வாங்கி வந்து வீடு முழுவதும் அடித்தார். அப்போதும் நாற்றம் போக வில்லை.
செவ்வாய்க்கிழமை இரவு கிருஷ்ணமூர்த்தியின் உடலை வெளியே வீச மேரியும் பாட்சாவும் முடிவு செய்தனர். உடலை பார்சலாக கட்டி எடுத்து சென்றால் குட்டு அம்பலமாகி விடும் என்பதால் பிரிட்ஜோடு தூக்கி செல்ல திட்டமிட்டனர். பாட்சா ஒரு டிரைசைக்கிளை எடுத்து வந்தார். பிரிட்ஜை ரிப்பேருக்கு எடுத்து செல்வதாக கூறிவிட்டு அதை டிரைசைக்கிளில் ஏற்றினார்கள். பிரிட்ஜில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகம் இருந்ததால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கவனித்தனர். ஆனாலும் அவர்களுக்கு உண்மை என்ன என்பது புரிய வில்லை.
கால்களை வீசிய அதே கால்வாய் பகுதிக்கு பிரிட்ஜை எடுத்து சென்ற இருவரும் உடலை வெளியே எடுத்து கால்வாய் ஒட்டி உள்ள செப்டிக் டாங்கில் போட்டனர். அதன்பிறகு மேரி தனது வீட்டுக்கு திரும்பி விட்டார். பாட்சா பிரிட்ஜை டிரைசைக்கிளில் எடுத்துக்கொண்டு தனது வீட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு பிரிட்ஜை இறக்கி அதை தண்ணீர் விட்டு கழுவி எதிர் வீட்டு முன் வைத்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
கிருஷ்ணமூர்த்தியின் உடலை அப்புறப்படுத்திய பிறகும் மேரியின் வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம் போகவில்லை. இதனால் சந்தேகம் வலுத்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து மேரியிடம் விசாரித்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தனர். முதலில் எதுவும் சொல்ல மறுத்த மேரி பின்னர் நடந்த விவரங்களை தெரிவித்தார். அவர் கூறிய தகவலால் உறைந்து போன போலீசார் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினார்கள். முதலில் மேரியை கைது செய்தனர். அதன்பிறகு பாட்சாவை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்த பிரிட்ஜ் கைப்பற்றப்பட்டது. அவருடைய நண்பர் ஜோசப் ஆண்டனியும் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தியின் உடல் பாகங்கள் எங்கெங்கு வீசப்பட்டன என்பதை விசாரணையில் தெரிந்து கொண்டு அந்த இடங்களுக்கு சென்று உடல் பாகங்களை கைப்பற்றினார்கள்.
கிருஷ்ணமூர்த்தியின் உடல் இருந்த பிரிட்ஜை டிரைசைக்கிளில் ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாலிபர் உதவி செய்து இருப்பதாக தெரிய வந்தது அவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
10 மாதம் சுமந்து பெற்ற மகனை கள்ளக்காதலுக்காக கொலை செய்ததோடு அவன் உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு ஒரு தாய்க்கு எப்படி மனது வந்தது என்று மதுரை நகர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
மேரி வாக்குமூலம்
நடந்த சம்பவம் குறித்து மேரி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
"என் கணவர் துரைராஜ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 2 மகள்கள், ஒரு மகன். அவர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மதுரையில் தனியாக வசித்து வந்தேன். இந்த நிலையில் என் மகன் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா உள்பட போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆனான்.
இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த மனவருத்தத்தில் எனது மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள். அதன்பிறகு என் மகன் என்னுடன் தான் வசித்து வந்தான். அவனுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளதால் தினமும் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வான். நானும் அவன் கேட்கும் பணத்தை கொடுத்துவந்தேன்.
இந்த நிலையில் எனக்கும், எல்லீஸ் நகர் பகுதியில் கோழிக் கடை மற்றும் எலக்ரானிக்ஸ் கடை வைத்திருக்கும் பாட்சா இடையே இருந்த தொடர்பு, எனது மகனுக்கு தெரியவந்தது. இதற்கு அவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து தினமும் என்னிடம் சண்டை போட்டான்.
மேலும் அவன் என்னிடம் தினமும் ரூ.300 பணம் கேட்டு வற்புறுத்தி வந்தான். பணம் தராவிட்டால் எனக்கும், பாட்சாவுக்கும் இடையே உள்ள கள்ளக்காதலை அம்பலப்படுத்தி விடுவதாக கூறி மிரட்டினான். தொடர்ந்து அவன் எனக்கும், பாட்சாவுக்கு கொடுத்த வந்த தொல்லையால், நாங்கள் இருவரும் சேர்ந்து அவனை கொலை செய்ய திட்டமிட்டோம்.
அதன்படி கடந்த 25-ந் தேதி இரவு வழக்கம் போல் கிருஷ்ணமூர்த்தி கஞ்சா அடித்து விட்டு போதையில் வீட்டிற்கு சாப்பிட வந்தான். இது தான் தக்க சமயம் என்று நினைத்து பாட்சாவிற்கு செல்போனில் தகவல் கொடுத்தேன்.
துண்டு துண்டாக வெட்டினோம்
அவர் வந்த பிறகு இருவரும் சேர்ந்து தலையணையால் அமுக்கி கிருஷ்ணமூர்த்தியை கொன்றோம். உடலை துண்டு துண்டாக வீசி, பார்சலாக வெளியே கொண்டு சென்று வீசினோம். உடல் பகுதியை மட்டும் பிரிட்ஜில் வைத்து இருந்து பிரிட்ஜோடு வெளியே கொண்டு சென்று உடலை வீசி எறிந்தோம்.
ஆனால் என் வீட்டில் அடித்த துர்நாற்றம், பிரிட்ஜை வெளியே கொண்டு சென்ற போது ஏற்பட்ட துர்நாற்றம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகப்பட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டனர். உடனே போலீசார் என் வீட்டிற்கு வந்து விசாரணை செய்து என்னையும், பாட்சாவையும் கைது செய்தனர்.''
இவ்வாறு மேரி வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.
==============
"குடும்ப வன்முறைச் சட்டம்" மற்றும் 498A பிரிவு கொள்வது என்ன?
ஆண்கள் மட்டும்தான் வன்முறையைச் செய்வார்கள். ஒரு பெண் தன் கண்வனமீது எந்தப் புகார் கொடுத்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டு கணவனையும் அவனது பெற்றோரையும் உடன்பிறப்புக்களையும் தண்டிக்கவேண்டும்!
தூக்குத் தூக்கி என்னும் படத்தில் வரும் வசனம் "கொலையும் செய்வாள் பத்தினி". இன்னும் கொஞ்சம் நாட்களில் இதை "கொலை மட்டும் செய்வாள் பத்தினி" என்று மாற்றவேண்டிய கட்டாயம் வருமோ என்று பயமாக இருக்கிறது!

6 மறுமொழிகள்:

நண்பன் said...

கணவன் இறந்த பிறகு வேறொரு ஆடவனுடன் உறவு வைப்பதற்கு பெயர் கள்ளக் காதல் அல்ல. இயற்கையான உண்மையான உடல் சுகத்தினிற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான காதல் உறவே. இதன் பெயர் இயற்கை. இதற்காக எவரும் எவரிடத்திலும் எந்த ஒரு அத்தாட்சி பத்திரமோ, உத்தரவோ, சிறப்பு உரிமைகளையோ பெற வேண்டிய அவசியமும் தேவையும் இல்லை. ஆகையால், உங்கள் பதிவில் உள்ள இந்த 'கள்ளக்காதல்' எனும் பதத்தை நீக்கி எழுதுவதே சரி.

நண்பன் said...

தாயானவர் இப்படி செய்ததற்கு பதில், தன் வாழ்க்கையை ஆகிரமித்து தனது அந்தரங்க வாழ்க்கையில் அத்துமீறி குறுக்கிட்டு பிரச்சினைகள் ஏற்படுத்தியதற்காக காவல் துறையிடம் சட்டப்படி முறையிட்டு வேறுவிதமாக பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஆனாலும், இந்த பாழாய்ப்போன ஆண்திமிர் பிடித்த சமுதாயத்தில் 42 வயதாகும் விதவைத்தாயின் காதல் விவகாரத்தை எவன் காது கொடுத்து கேட்பான். எனவே, இந்த பரிதாபகர படுகொலைக்கு நம் முழு சமுதாயமும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

')) said...

தினமலரில் வெளிவந்துள்ள கூடுதல் செய்தி:-

மதுரைக்கு இது புதுசு: பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொடைக்கானலில் டாக்டர் ஓமனா என்பவர், தனது கணவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் கடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து அண்ணாமலை பல்கலையில் மாணவர் நாவரசுவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான ஜான் டேவிட், தற்போது ஆஸ்திரேலியாவில் பாதிரியாராக இருக்கிறார். சமீபத்தில் சென்னை கொருக்குபேட்டையில் நகை வியாபாரி சுரேஷ்குமார் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இன்னும் தலை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், மதுரையில் முதன்முறையாக இது போன்ற கொடூரம் தற்போது தான் நடந்துள்ளது.

மேரி, ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை.

')) said...

காதல் உறவு அல்ல நண்பரே, கள்ள உறவு வெறி! காதல் என்பதெல்லாம் காவியங்களிலும் கதைகளிலும் காணும் கற்பனைக் கருப்பொருள். இவையெல்லாம் வெறும் காம இச்சையினால் உந்தப்படு நிகழும் மனப் பிறழ்வு.

ஆமாம், முந்தைய செய்தியில் காணப்பட்ட தாய் தன் இரண்டு வயதுக் குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததையும் இதுபோல் சரியென்று வாதிப்பீர்களோ!

Anonymous said...

//கணவன் இறந்த பிறகு வேறொரு ஆடவனுடன் உறவு வைப்பதற்கு பெயர் கள்ளக் காதல் அல்ல. இயற்கையான உண்மையான உடல் சுகத்தினிற்கும் பாதுகாப்பிற்கும் தேவையான காதல் உறவே//
நண்பன் அவர்களே
இது போன்ற "காதல் உறவு " சமுதாயத்தால் ஏற்றுகொள்ளபட்டு அரசாங்கத்தால் விதவை மருமணமாக உதவி தொகை வழங்கப்படுகின்றது . ஏன் அந்த அம்மையார் தனது உறவை மறுமணம் என்ற போர்வையில் கொண்டு வரவில்லை?
இதை எதிர்த்த மகனை கொலை செய்ய அந்த அம்மையாருக்கு நீங்கள் வழங்கும் "கொலை செய்யும் உரிமை" நாம் ஒரு மிருக சமூகத்தில் உங்களை போன்றவர்களுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதை சராசரி மக்கள் உணரவில்லை என்பதை விளக்குகிறது.

')) said...

ஐந்து நிமிட சுகத்திற்காக அரிப்பெடுத்து வெறிபிடித்த குள்ளநரிகள் கள்ளத்காதல் என்ற பெயரில் கொலை செய்வதும் பொய்வழக்குப்போட்டு விட்டில் உள்ள எல்லாரையும் சிறையில் தள்ளுவதும் வாடிக்கையும் எல்லாருக்கும் வேடிக்கையாகிவிட்டது,..