செழித்து வளரும் 498A

ஜெய பேரிகை கொட்டடா!

குடும்ப வாழ்க்கையை 498A கொண்டு சிதைத்து விட்டோம் என்று!

எங்கெங்கு நோக்கினும் 498A கேசுகள். பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!!
-------------------------
1.

ராயபுரம், ஜுலை.30- 2009

ராயபுரத்தில், கூடுதலாக 60 பவுன் நகை கேட்டு, மருமகளை கொடுமைப்படுத்தியதாக மாமியார்-நாத்தனார் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயபுரம் காசிமாநகரை சேர்ந்த மாசிலாமணியின் மகள் பொற்செல்விக்கும் (வயது 28), ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்த ஜெலேந்திரனின் மகன் பரணி குமாருக்கும், கடந்த 13-7-2006-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டின் சார்பில், பொற்செல்விக்கு 40 பவுன் நகையும், ஒரு மோட்டார் சைக்கிளும், வீட்டு உபயோக பொருட்களும், மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர்.

திருமணம் நடந்த 3 மாதத்தில், பரணி குமார் வேலைக்காக குவைத் சென்று விட்டார். அவர் அங்கு ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், வண்ணார பேட்டை துணை போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனிடம், பொற்செல்வி ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், கூறப்பட்டு இருப்பதாவது:-

"எனக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் தான் எனது கணவர் ஊரில் இருந்தார். அந்த 3 மாதமும் அவரின் பெற்றோர்கள், எங்களை சந்தோஷமாக இருக்க விட வில்லை. எனது கணவரும், வேலைக்காக குவைத் சென்று விட்டார்.

தற்போது எனது மாமனாரும், மாமியாரும் என்னிடம், "நீ உன் கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், மேலும் 60 பவுன் நகையை உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும்'' என்று கூறி கொடுமைப்படுத்தினார்கள். மேலும், எனது கணவரின் சகோதரி இறந்ததற்கு நான்தான் காரணம் என்று கூறி அடிக்கடி என்னை, எனது கணவரும், நாத்தனார் ஜெயந்தியும் கடுமையாக திட்டினார்கள்.எனவே போலீசார் இது குறித்து நடவடிக்கை எடுத்து, என்னை எனது கணவருடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.''

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மாமியார்-நாத்தனார் கைது

இதைத்தொடர்ந்து, பொற்செல்வியின் மாமனார் ஜெலேந்திரன், மாமியார் அமுதா, கணவர் பரணிக்குமார், நாத்தனார் ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமுதா(52), ஜெயந்தி (30) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 2 பேரும் தேடப்பட்டு வருகிறார்கள்.

2.

ராமநாதபுரம், ஜுலை.30- 2009

ராமநாதபுரத்தில் கூடு தல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத் திய கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் கொத்த தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி வாசுகி(வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்களாகின்றன. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை கள் உள்ளனர். தியாகராஜன் வெளிநாடு சென்று விட்டு ஊருக்கு வந்து கட்டிட தொழி லாளியாக வேலை பார்த்து வருகிறார்.

திருமணத்தின் போது வாசுகிக்கு 35 பவுன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சீர் வரிசையாக கொடுக்கப்பட் டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தியாகராஜன் தனது மனைவியிடம் மேலும் 20 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகிய வற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி கொடுமைப் படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதற்கு தியாகராஜனின் பெரியப்பா கருப்பையா (67) உடந்தையாக இருந்தாராம்.

இதுகுறித்து வாசுகி ராம நாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து தியாகராஜன், கருப்பையா ஆகி யோரை கைது செய்தார்.

3.

சேலம்,ஜுலை.30- 2009

சேலம் அருகே 2-ம் திருமணம் செய்து மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.

சேலம் அருகே உள்ளது வீராணம். இங்குள்ள ஆச்சாங்குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 30). கூலி தொழிலாளி. இவரதுமனைவி மகாலட்சுமி (26). கணவன் - மனைவி ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் மகாலட்சுமியின் வாழ்வில் வரதட்சணை என்னும் புயல் வீச தொடங்கியது.

அவரிடம் வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உறவு பெண்ணை 2-ம் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து மகாலட்சுமி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனிடம் புகார் செய்தார்.

அவர் இது குறித்து விசாரிக்க வீராணம் போலீசுக்கு உத்தரவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் விசாரணை நடத்தி ஆறுமுகத்தையும், உடந்தையாக இருந்த தாய் செல்லம்மாளையும் (55) கைது செய்தனர். ஆறுமுகம் மீது வரதட்சணை கொடுமை, 2-ம் திருமணம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

4.

தேனி,ஜுலை.28- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை தேனி மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

தேனி மாவட்டம், சின்ன மனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது35). இவரது மனைவி பிச்சையம்மாள் (27). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கருப்பையா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தியதாக கூறப் படுகிறது. மேலும் பிச்சையம்மாளிடம் ரூ.3 லட்சம் வரதட் சணை கொண்டு வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என கருப்பையாவும், அவரது உறவினர்கள் 5 பேரும் கூறி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பிச்சையம்மாள் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்கணவரின் குடும்பத்தினர் மீது வரதட் சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக கருப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 மறுமொழிகள்:

')) said...

இதோ இன்னொன்று:-

கூடுதல் வரதட்சணையாக
வீடு, மோட்டார் சைக்கிள், நகை கேட்டு கொடுமைப்படுத்தியாக மனைவி புகார்
கணவன் உள்பட 4 பேர் மீது வழக்கு

மதுரை, ஜுலை.31- 2009. தினத்தந்தி

கூடுதல் வரதட்சணையாக வீடு, மோட்டார் சைக்கிள், நகை கேட்டு கொடுமைப்படுத்தியாக மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமை

மதுரை தெற்குவெளிவீதி காஜியார்தோப்பு 6வது தெருவை சேர்ந்தவர் அப்துல் கரீம். இவரது மனைவி அனிஸ்பாத்திமா(வயது 22). இவர் களுக்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 1 லட்சம் பணம், 70 பவுன் தங்க நகை, திருமண செலவுக்காக ரூ.2 லட்சம், சீர்வரிசையாக 11/2 லட்சம் ரூபாய் அப்துல்கரீமுக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

இனிதே சென்ற இவர்களது வாழ்க்கையில் திடீரென்று புயல்வீச தொடங்கியது. இந்த நிலையில் அனிஸ்பாத்திமாவிற்கு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 10 பவுன் நகை, தொழில் தொடங்க ரூ.4 லட்சம், மோட்டார் சைக்கிள், புது வீடு கேட்டு அனிஸ்பாத்திமாவை அப்துல்கரீம் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்தினார்கள்.

4 பேர் மீது வழக்கு பதிவு

சிறிது காலம் பொறுத்துக்கொண்ட அனிஸ்பாத்திமா, கொடுமை தாங்காமல் சமுக நலத்துறையினரிடம் புகார் செய்தார். அவர்கள் பரிந்துரையின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் அனிஸ்பாத்திமாவிடம் புகார் மனுவை பெற்று கொண்டனர்.

அவர் கொடுத்த மனுவில் அப்துல்கரீம், அவரது தங்கை சுமிதா, தந்தை சையது, தாய் ஹையுருனிஷா ஆகிய 4 பேரும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியிருந்தார். அதை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீசார் அப்துல்கரீம் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

')) said...

அவசர கதியில் கைது செய்யக்கூடாது டவுரி அபிசர்(ருங்கோ) தான் விசாரிக்கனும் (இதுபோல் புருடாக்களை) ன்னு நிதிபதிகள் சொல்லியும் பல கைது படலங்கள் தொடர்கின்றன...

என்னைக்கு இந்த எழவு நிக்கபோதொ....