பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!

அனைத்து பென்ணியவாதிகளும், "பெண்களே, கற்பு, பண்பாடு, பாரம்பரியம், நன்னடத்தை என்ற சிறைகளில் உங்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவைகளை உடைத்துக் கொண்டு புறப்படுங்கள் புவியாள!" என்று ஓயாமல் முழக்கமிடுவதின் பலனாகத் தோன்றும் மனப் பிறழ்வு, பலவித சமூகக் கேடுகளுக்குக் காரணியாக அமைகின்றது. அவை கட்டிய புருஷனையும், அவனது பெற்றோரையும் மட்டும்தான் பாதிக்கும் என்று இதுகாறும் அந்தப் பெண்ணியவாதிகள் மனப்பால் குடித்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அத்தகைய கட்டுப்பாடில்லா மனவெழுச்சி மனப்பான்மை அப்பெண்ணின் பெற்றோர் மீதும் பாயும் என்பதை நாள் தோறும் பல இளம் பெண்கள் நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள்!

இந்தச் செய்தியை வாசியுங்கள்:-


"எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார் 17 வயதுப் பெண்.

மதுரை, ஜுலை.24- 2007 (தினத்தந்தி)

பெற்றோருக்கு தெரியாமல் காதலருடன் 17 வயது இளம்பெண்ணுக்கு இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மேலும் 18 வயது வரை அந்த பெண்ணை காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திருச்சி, லால்குடியை அடுத்த சிறுகாலப்பூரை சேர்ந்தவர் அறிவழகன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

என் மகள் பவளராணிக்கு தற்போது 17 வயது நடந்து வருகிறது. நான் விவசாய வேலை பார்த்து வருகிறேன். எங்கள் ஊரைச்சேர்ந்த லாலா முத்துச்சாமி என்பவரது மகன் கமலேஷ். நான் கடந்த 23.6.2009 அன்று வேலை காரணமாக வெளினிர் சென்று விட்டேன். அப்போது என் மகளை கமலேஷ் கடத்தி சென்று விட்டார்.

இதற்கு அவரது தந்தையும், உறவினர் அப்பாத்துரை என்பவரும் உதவி செய்துள்ளனர். என் மகளுடன் கமலேஷ் சென்னையில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்தேன். இதுகுறித்து நான் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகளை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

- இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பெற்றோருடன் செல்ல மறுப்பு

இந்த மனுவை விசாரித்து கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் பவளராணியை கண்டுபிடித்து ஆஜர்படுத்த ஏற்கனவே போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்பாக அந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லால்குடி போலீசார் பவளராணியை நீதிபதிகள் முன்பாக ஆஜர்படுத்தினர். கடத்தப்பட்டது குறித்து அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் "என்னை யாரும் கடத்தி செல்லவில்லை. என் விருப்பத்தின்பேரில் நான் காதலிக்கும் ஒரு வாலிபருடன் எனக்கு நாளை (இன்று) திருமணம் நடக்க உள்ளது. அதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அவர் பதில் அளித்தார்.

தொடர்ந்து கோர்ட்டில் இருந்த அந்த பெண்ணின் பெற்றோருடன் இந்த பிரச்சினை குறித்து பேசும்படி நீதிபதிகள் கூறியபோது, "எனது பெற்றோருடன் இதுகுறித்து பேசவோ, அவர்களுடன் வீட்டுக்கு செல்லவோ எனக்கு விருப்பம் இல்லை" என்றார்.

கண்ணீருடன் சென்றார்

பவளராணிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை அந்த பெண்ணை மதுரையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள் இன்று நடக்க இருந்த திருமணத்துக்கு தடை விதித்தனர். மேலும் இந்த 2 மாத காலத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களோ, அந்த வாலிபர் தரப்பில் இருந்தோ யாரும் காப்பகத்தில் அவரை சந்திக்கவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை காப்பகத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அந்த பெண்ணின் பெற்றோர் வேதனை அடைந்து கண்ணீருடன் அந்த பெண்ணிடம் அவர்களது கோபத்தினை வெளிப்படுத்தினர். அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

1 மறுமொழி:

')) said...

//கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்த அந்த பெண்ணின் பெற்றோர் வேதனை அடைந்து கண்ணீருடன் அந்த பெண்ணிடம் அவர்களது கோபத்தினை வெளிப்படுத்தினர். அந்த பெண்ணும் கண்ணீர் விட்டு அழுதபடியே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.//

இதற்குப் பெயர் தான் ஆனந்தக் கண்ணீரோ? பெண்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைத்து விட்டது. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற பூரிப்பில் வந்த ஆனந்தக் கண்ணீர்?