காதல் கசந்தால் 498A

விழுப்புரத்தில் மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவனுக்கு வலைவீச்சு

விழுப்புரம், ஜுன்.26- 2009. தினத்தந்தி.

விழுப்புரத்தில் மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த சண்முகத்தின் மகன் அசோக்குமார் (44). அதே பகுதியை சேர்ந்தவர் பவானி (32).
அசோக்குமாரும், பவானியும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அசோக் குமார் தனது மனைவி பவானியிடம், உனது பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி பவானியை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவானி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

1 மறுமொழி:

')) said...

//போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.//

நல்ல மீன் வலைய வீச சொல்லுங்க... கொய்யால நாட்ல டெய்ல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழப்பறின்னு ஆயிரம் பிரச்சணை... இது போல நாதா------- ங்க போடுற பொய்கேசுல இது வேற பெரிய தலைவலி