இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தாய்

"குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்" (The Protection Of Women From Domestic Violence Act, 2005, or "DV Act") வரையறைத்திருப்பது இவ்வாறு:

"குடும்ப வன்முறை" என்பது கணவன் அல்லது அவனது உறவினர்களால் அவனது மனைவியின்மேல் செய்யப்படுவது மட்டுமே. இந்தச் சட்டப்படி அந்த மனைவி தன் மீது உடலாலோ, உள்ளத்தாலோ, உளவியல் ரீதியாகவோ, செக்ஸ் தொடர்பாகவோ, பொருளாதார ரீதியாகவோ வன்முறை செய்யப்பட்டதாகக் கருதினால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். எவ்வாறு? முதலில் அவளுடைய கணவன் மற்றும் கணவனுடைய பெற்றோர் உறவினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். யார் வீட்டை விட்டு? அவர்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டு!அவர்கள் செய்த குற்றம்? இத்தகைய பெண்ணை மனைவியாக (மருமகளாக) அடைந்ததுதான்!

இந்த முழுமுட்டாள் தனமான சட்டத்தைப் பற்றி பிறிதொரு இடுகையில் விவரமாக எழுதுகிறேன். தற்பொது இந்த சுட்டிகளில் இதைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள்:

http://mynation.net/study-report-dvact.htm

http://www.498a.org/domesticViolence.htm

சரி. இப்போது "வன்முறையே செய்யத் தெரியாத" ஒரு மெல்லியலாளின் செயல்பாடு பற்றிய இன்றைய செய்தியை வாசியுங்கள்:-
------------------

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற பெண் கைது

ஜூலை 29,2009, செய்தி: தினமலர்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதாக கூறி தனது இரண்டு வயது பெண் குழந்தையை அடித்துக்கொன்ற பெண், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகன்(40). அவர் மனைவி மாரீஸ்வரி(34), இரண்டு வயது பெண் குழந்தை புனிதாவுடன் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் வசித்து வந்தார். மாரீஸ்வரிக்கும், அதே ஊர் கட்டட தொழிலாளி காந்தாரிமுத்துவுக்கும்(43) கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மாரீஸ்வரியை பிரிந்து முருகன், அல்லம்பட்டி சென்றுவிட்டார்.

காந்தாரிமுத்துவுடன், மாரீஸ்வரி குழந்தையை வைத்துக் கொண்டு ஒரே வீட்டில் வசித்தார்.

அடித்துக் கொலை:

தங்களது (கள்ளக்காதல்) வாழ்க்கைக்கு குழந்தை புனிதா, இடையூறாக இருப்பதாக கருதிய இருவரும் கடந்த 26ம் தேதி மாலை வீட்டிலிருந்த புனிதாவை கையால் அடித்தனர். மயங்கி விழுந்த குழந்தை புனிதா, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது எப்படி இறந்தது என தெரியாதென இருவரும் நாடகமாடினர்.

பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. போலீசார் முறைப்படி விசாரித்ததில், குழந்தை புனிதாவை அடித்துக் கொன்றதை தாய் மாரீஸ்வரி, காந்தாரிமுத்து ஒப்புக்கொண்டனர். அதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
-----------------------------

வாழ்க தாய்க்குலம்! வெல்க கள்ளக் காதல்!!

(இதற்கும் 498A-க்கும் என்ன சம்பந்தம்? - Dr. டோண்டு)

1 மறுமொழி:

')) said...

//முதலில் அவளுடைய கணவன் மற்றும் கணவனுடைய பெற்றோர் உறவினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். யார் வீட்டை விட்டு? அவர்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டு!அவர்கள் செய்த குற்றம்? இத்தகைய பெண்ணை மனைவியாக (மருமகளாக) அடைந்ததுதான்!//

இதுபோல் கொடுமைதான் எனக்கு நடந்தது... பொய்வழக்கு போட்டது மட்டுமல்லாமல் என் வீட்டையும் அபகரித்தது